ஒருவன் தினசரி காட்டுக்குச் சென்று கடுமையாக உழைத்து விறகு வெட்டி வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான்.இது இந்த நிலையில் எப்படி உயிர் வாழ்கிறது என ஆச்சரியப்பட்டான்.அப்போது ஒரு புலி ஒரு மானை அடித்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்தது.விறகுவெட்டி பயந்து மரத்திலேறி நடந்ததைக் கவனித்தான்.புலி மானை உண்டு சென்ற பின் அது விட்டுச் சென்ற மிச்சத்தை நரி தவழ்ந்து சென்று உண்டது.''இரண்டு கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவு வழங்கும் போதுநமக்கு உணவு கொடுக்க மாட்டாரா?''என்று எண்ணிய அவன் மறுநாள் முதல் விறகு வெட்டச் செல்லாது வீட்டிலேயே சோம்பிக் கிடந்தான்.ஆனால் அவன் எதிர் பார்த்தது போல் உணவு கிடைக்க வில்லை.காரணம் கேட்டு இறைவனை வணங்கி வேண்டினான்.இறைவன் கூறினான்,'நீ நரியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.புலியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.'
இப்படித்தான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நமக்கு சாதகமான விசயங்களை மட்டும் தவறாக எடுத்துக் கொள்கிறோம்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment