Wednesday, October 27, 2010

ஜோக் மாதிரி இருந்தால் மட்டும் சிரிங்க...

ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து "ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்" 
"என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?" 
"சரி சரியான நம்பர் எது?" 
"ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?" 
"யாரு கிட்ட?" 
"நான் தான் இந்த கம்பெனியோட CEO" 
"நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?" 
"தெரியாது,யார் கிட்ட?" 
தெரியாதா அப்பாடா...ரொம்ப நல்லது" 
டொக்... 


ஜோக் மாதிரி இருந்தால் மட்டும் சிரிங்க...


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அழகோ அழகு...

மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான்.  உடலிலும், உள்ளத்திலும் குறை  ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும்.  இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம்.  அதன் வருவாய் ஒவ்வொரு நாட்டிலும் 25 விழுக்காட்டிற்கு குறையாமல் உள்ளது.  முன்பெல்லாம் மேல்தட்டு மக்களையும், நகர வாசிகளையும் முன்வைத்து சந்தைப் படுத்திய இந்த அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனங்கள் இப்போது நடுத்தர மக்களையும், கிராமவாசிகளையும் நோக்கி தன் விளம்பர உத்தியைத் தொடர்ந்துள்ளது.

இந்த வகையான அழகு பொருட்களால் முகம் பொலிவுறுகிறதா, உண்மையான அழகு கிடைக்கிறதா என்றால் அது என்னவோ பூஞ்ஜியத்தில்தான் முடியும்.  இதனால் மேலும் பல சரும நோய்களின் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.  இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களின் பகட்டு விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை.

காசு கொடுத்து கர்மத்தை வாங்காதே என்பர் நம் முன்னோர்கள்.  அதுபோல் இந்த முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும் அழகையும் இழப்பதுதான் மிச்சம்.

ஆனால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.

முகத்தில் வறட்சியோ, எண்ணெய் வடிதல், வெள்யைõக தோன்றுதல், பரு தோன்றுதல், முகக்கருப்பு, கருவளையம், கரும்புள்ளி என எந்தவகையான பாதிப்பு தோன்றினாலும் இதற்கு வேண்டிய மருந்துகளை பயன்படுத்தும் முன் மலச்சிக்கல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.  ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும்.  இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும்.

வறண்ட சருமத்திற்கு

வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.  15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.

முகம் பொலிவு பெற

தேன்        - 1 ஸ்பூன்

ஆரஞ்சு பழச்சாறு    - 1 ஸ்பூன்

ரோஸ் வாட்டர்    - 2 ஸ்பூன்

இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.

எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு


இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான்.

எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும்.

இதற்கு நிரந்தரத் தீர்வு

தேன்     - 1 ஸ்பூன்

முட்டை வெள்ளை கரு    - இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும்.

எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும்.

மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி  குளித்து வந்தால்  தோல் சுருக்கங்கள் மாறும்.  மார்பகங்களில் பூசி வந்தால் மார்பகச் சுருக்கங்கள் நீங்கும்.

அழகான பாதங்களுக்கு

பெண்கள் அழகான முகத்தை விரும்புவது போல் அழகான பாதங்களையும் விரும்புவர்.

எலுமிச்சை சாறு     - 20 மிலி

ஆலிவ் எண்ணெய்    - 2 ஸ்பூன்

பால்            - 50 மிலி

ஏலக்காய்        - 1 கிராம்

பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் மென்மையடைந்து, அழகு பெறும்.

அழகான உதடுகளுக்கு

பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்.

வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால்  வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும்.http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்!

பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. குடும்பம், உறவுகள் போன்றவற்றை பாதுகாப்பதிலேயே அவர்களின் நேரம் கரைந்து விடுகிறது. குடும்பத்தை கவனிக்க கூடாது என்று கூற வரவில்லை. தங்களுக்காகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட நேரம் இல்லையென்றால் குறைந்தபட்சம் பாதாம் போன்ற பருப்புகளையும், வாழைப்பழத்தையுமாவது சாப்பிட வேண்டும்.
*  வயிறு மற்றும் இடுப்புச் சதையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. கை, கால் போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் நம் உடம்பில் சரியான இரத்த சர்க்கரை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. மாறாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல், பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. வறுப்பது, பொரிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு, வேக வைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
*  அதிகப்படியாக ஈஸ்ட் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் உற்சாகமின்மை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வினிகர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
*  மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது முகத்தில் வெயிலினால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜனும் நம்முடைய உதவிக்கு வராது. அதனால் கண்டிப்பாக சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இந்தியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தினமும் கீரை, <உலர்ந்த திராட்சை, வெல்லம் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த குறைபாட்டை நீக்க முடியும், அல்லது இரும்புசத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
*  ஹை ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து உ<பயோகிப்பது முதுகு வலி, முட்டி வலி போன்ற பிரச்னைகளைக் கொடுக்கும். வாரத்தில் இரண்டு நாட்களாவது கோலாப்பூரி செருப்புகள் போன்ற தட்டையான அடிப்பாகத்தை கொண்ட செருப்புகளை உபயோகிப்பது கால்கள் மூச்சுவிடுவதற்கு வழிவகுக்கும்.
*  தினசரி வாழ்க்கையில் சுலபமான யோகாசனங்களை நடைமுறைப்படுத்தலாம். கீழே விழுந்த பொருட்களை எடுப்பதற்கு முதுகை வளைத்து நன்றாக குனிந்து எடுக்கலாம். உட்காரும்போது நன்றாக சம்மணமிட்டு <உட்காரலாம். ஐம்பதுகளில் இருந்தாலும் இதை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
*  அதிகப்படியான புரதச்சத்து புற்றுநோயை உண்டாக்கும்.
புரதச்சத்தானது நம்முடைய உணவில் 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக சைவ பிரியர்கள் இந்த 20 சதவீதத்தைக் கூட முழுமையாக சாப்பிடுவதில்லை. இதனால்தான் நம்முடைய உணவு நிபுணர்கள் அதிகப்படியான புரத சத்துள்ள உணவை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.
* பெண்களில் 80 சதவீதத்தினர் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவறான அளவிலான உள்ளாடைகளை உபயோகிப்பதால் மார்பு பகுதியில் கட்டிகள், வலி போன்றவை ஏற்படும். மேலும் முதுகுவலி, தோள்வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும். அதனால் சிரமம் பார்க்காமல் சரியான அளவு உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.
* பெண்களுக்கு சோயா மிகவும் நல்லது. அதிகப்படியாக அருந்தப்படும் பசும்பால், எருமைப்பால் போன்றவை கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும். இதற்கு பதிலாக சோயா பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகவும் நல்லது. மேலும் சோயாவில் புரதச்சத்து உள்ளது. இதை உட்கொண்டால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கும்.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net