Sunday, April 24, 2011

ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!



புருஷன்: டாக்டர்...என் பொண்டாட்டி அவசரத்துல "பெப்சி"ன்னு நினைச்சிட்டு "பெப்சி" பாட்டில்ல இருந்த "பெட்ரோல" குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர்?

டாக்டர்: ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..


புருஷன்: ?????????????????

****************************************
டீச்சர்: டாய். நான் இங்க நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், கடைசி பென்ச்ல உக்காந்து இருந்த மனோ எங்கடா காணோம்?
மாணவன்: உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர்..
டீச்சர்: ????????????

*****************************************
அப்பா அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..
அப்பா: ஏன்டா அழுதுட்டு இருக்கே?மகன்: அம்மா அடிசிட்டாங்கப்பா...


அப்பா: அதுக்கு போய்யா அழுவற...
மகன்: போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..
அப்பா: ????????????

****************************************
பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...

****************************************
எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...
எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...
"ஒங்கையால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?"

***************************************
பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்...

வாத்தியார்: ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்: 4
வாத்தியார்: Total?
மாணவன்: 5
வாத்தியார்: Stupid
மாணவன்: 6
வாத்தியார்: What
மாணவன்: 4வாத்தியார்: Nonsense
மாணவன்: 8

வாத்தியார்: ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்: அது..

********************************************
ஆர்யா: 24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..

சந்தானம்: அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்..

********************************************
பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...

நியுட்டன் தன்னோட மூன்று
 விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
"An object continue to moves, unless it's stopped"

நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..

"F = M A"

சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

"Every action has equal and opposite reaction"

*************************************************
தத்துவம்:

தேங்காய்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு..

அதுக்காக தேங்காயில போர் போட முடியாது..


பூமியில ஸ்ட்ரா போட முடியாது...

****************************************************
என்ன மக்கா! நம்ம காமெடி பஜார்ல சரக்கு எப்படி? இங்க மொத்த விலையிலும், சில்லறை விலையிலும் காமெடி கிடைக்கும். ஹி...ஹி...ஹி...


--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net