Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

Monday, April 25, 2011

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும் சாப்பிடப் படுவதில்லை. சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம்.



நீங்கள் விரும்பும் படியான ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டுமானால், நீங்கள் சமையலுக்காக வாங்கும் பொருட்கள், அதை நறுக்கும் முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை, சாப்பிடும் முறை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

*

1. ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை உணவை சாப்பிடுங்கள்.

*

2. ஆற, அமர உட்கார்ந்து சாப்பிடுங்கள். மென்று விழுங்குகள். நொறுங்கத் தின்றால் நூறு வயது.

*

3. மிக வேகமாகவோ, ரெம்பவும் மெதுவாகவோ சாப்பிடாதீர்கள். சாப்பிடும்போது பேசுவதும் நல்லதில்லை.

*

4. கோபம், மனவருத்தம், தன்னிரக்கம் என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

*

5. பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

*

6. சாப்பிட்டதும் படுக்காதீர்கள். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துத் தூங்குவதுதான் நல்லது.

*

7. எப்போதும் உணவை வீணாக்காதீர்கள்.

*


8. காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக ஒரு போதும் நறுக்கக்கூடாது. சிறிதாக நறுக் கும் போது, அவைகளில் இருக்கும் சாறு வெளியேறி சத்துக்கள் குறையும்.

*

9. சமையலுக்கு தரமான எண்ணையை பயன்படுத்தவேண்டும். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி சூடாக்குவதற்கு பதில், பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிவிட்டு, அதன் பின்பு எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணையை ஊற்றிய பின்பு அடுப்பில் எரியும் தீயின் அளவை குறைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால், எண்ணையில் இருந்து வெளி யேறும் ரசாயனத்தன்மையின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.

*

10. எலுமிச்சை பழம், நேந்திரம் பழம், பால் போன்ற மூன்றையும் சேர்த்து ஒன்றாக எந்த உணவும் தயாரித்து சாப்பிடக்கூடாது. பாலும், எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்து போகும். ஏத்தன் பழமும் (நேந்திரன்) பாலும் சேர்த்து சாப்பிட்டால், சளித்தொல்லை அதிகரிக்கும்.

*

11. நெய் சேர்க்கும் உணவில் சிலர், தனிச்சுவை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு எண்ணையும் சேர்ப்பார்கள். அப்படி சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

*

12. பாகற்காய், வெந்தயம் போன்றவைகளில் இருக்கும் கசப்பு தன்மையை போக்க எந்த பொருளையும் அதனுடன் சேர்க்காதீர்கள். ஏன் என்றால் அவை இரண்டின் மூலமும் உடலுக்கு தேவையானதே கசப்புதான். அந்த கசப்பை நீக்கிவிட்டு அவைகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லை.

*

13. முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டீன் மிக அதிகமாக இருப்பதால், ஜீரணம் ஆக மிகவும் தாமதமாகும்.

*

14. காய்கறிகளை ஒரு போதும் அதிகமான அளவு எண்ணை சேர்த்து வறுக்கக்கூடாது. காய்கறிகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படும் சூடு அவைகளில் இருக்கும் வைட்டமின், தாதுச்சத்துகளை போக்கிவிடும்.

*

15. தினமும் ஒவ்வொரு நேரமும் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா?

காலையில் பாதி வயிற்றுக்கு உணவும் அதாவது 50 சதவீதம், மதிய உணவு 30 சதவீதம், நான்கு மணிக்கு 10 சதவீதம், இரவில் 20 சதவீதம் என்ற அளவிற்கு உணவு உண்ணவேண்டும்.

*

16. ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்க்கப்படவேண்டும். இதிலிருந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கொழுப்பு, தாதுசத்துக்கள் போன்று உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.

*

17. மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடையில் 7-8 மணிநேரம் இடைவெளி இருந்தால் மாலை நேரத்தில் எலுமிச்சை சாறு, பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிபருப்பு போன்றவைகளை சாப்பிடலாம்.




***
THANKS google
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்'!

நியூயார்க், அக். 24: அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் துர்நாற்ற வாயு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



முட்டை என்றாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதுவும் அழுகிய முட்டை என்றால், கேட்கவே வேண்டாம், யாராக இருந்தாலும் பல மைல் தூரத்துக்கு அப்பால் ஓடி விடுவார்கள்.

*

ஆனால் அந்த "கூமுட்டையில்' ஏராளமான மருத்துவக் குணம் இருப்பதாக கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

*

அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் வாயு, மனித ரத்த நாளங்களைத் தளர்வாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள் ரூய் வாங், சாலமோன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

*

எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்டநாள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த உண்மையை கண்டறிந்திருப்பதாக அவர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

*

எனவே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை மாற்றிவிட்டு தங்களது அழுகிய முட்டை மருத்துவத்தை கடைபிடிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

*

அவர்களது கண்டுபிடிப்பின்படி, அழுகிய முட்டையை வைத்து ரத்த அழுத்தத்துக்கு மருத்துவம் மேற்கொள்ளும் காலமும் வரலாம். அப்போது, வாந்தி, குமட்டல், தலைசுற்றல், மயக்கத்துக்கும் மருந்து, மாத்திரைகளை நாம் தயாராக வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.


***

thanks dinamani
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்

நமது உடல் பாகங்களில் நமது முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். இவை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நாம் உணர்கிறோம்.



ஆனால், கால்கள் என்ன செய்கிறது என்பதை நாம் உணர மறந்து விடுகிறோம். நம் உடலின் பாகம் மூளையை விட்டு எவ்வளவு தள்ளி இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் அவற்றின் செயல்களைப் பற்றி அறியாமல் இருந்து விடுகிறோம்.

*

சிலர் `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல முகத்தை மாற்றி வைப்பார்கள்.

*

ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். கால்கள் தொடர்ந்து தாளமிட்டுக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடுவதற்கு தயாராக உள்ள மனோபாவத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். முகத்தை மட்டும்
நடிக்கப் பழக்கியவர்கள், கால்கள் என்ன செய்கிறது என்பதை கவனிப்பதில்லை.

**

நடக்கும் விதம்

இளமையாக ஆரோக்கியமாக நடப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்பதைக் காட்டவே இப்படி நடக்கிறார்கள். ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் தங்களது செயல்திறனின் வேகத்தைக் காட்ட இவ்வாறு நடக்கிறார்கள்.

**

கால்கள் சொல்லும் உண்மைகள்

பால் எல்க்மேன் என்ற உளவியல் அறிஞர் ஒருவர் பொய் பேசும்போது ஒருவரது கால்கள் எவ்வாறு காட்டிக்கொடுக்கின்றன என்பது பற்றி ஆராய்ச்சி செய்தார். இதற்காக சில நிர்வாகிகளை அழைத்து அவர்களைப் பொய் பேச வைத்தார். அவர்கள் பொய் சொல்லும்போது, பாதங்களை உணர்வின்றி வேகமாக அசைத்தனர்.

*

இன்னும் பலர் முகபாவங்களை பொய்யாக மாற்றி, கை அசைவுகளையும் கட்டுப்படுத்தி நடித்தனர். ஆனால், அவர்கள் அனைவருமே தங்கள் பாதங்கள் என்ன செய்கின்றன என்பதை அறியாமல் இருந்தனர். பொய் பேசுபவர்களின் முழுஉடலையும் பார்த்தோமானால், அவர் பொய் சொல்வதைக் கண்டுபிடித்து விடலாம்.


***

கால்களை ஒன்று சேர்த்தல்

ஒரு இடத்தில் தங்கலாமா அல்லது வேண்டாமா என்று எந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தாமல் நடுநிலையான மனநிலையை வெளிப்படுத்தும் இந்த நிலையில், சம்பந்தப்பட்டவருக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறது.

*

ஆண்-பெண் சந்திப்புகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்த நிலையில் நிற்பார்கள். மேலதிகாரிகள் முன்னால் இளம் அதிகாரிகளும், ஆசிரியர்கள் முன்னால் மாணவர்களும்
இவ்வாறு நிற்பார்கள்.

***

கால்களை விரித்து நிற்பது

சிலர் ஆங்கில எழுத்தான `வி' வடிவில் கால்களை விரித்து நிற்பார்கள். இவர்கள் தரையில் கால்களை வலுவாக ஊன்றி தாங்கள் எண்ணத்திலிருந்து எப்போதும் விலகிச் செல்வதில்லை என்பதை வெளிப்படுத்துவர். ஆண்மையை வெளிப்படுத்திக் காட்டுவதால், விளையாட்டு வீரர்களும், திரைப்படத்தில் கதாநாயகர்களும் இதுபோன்ற நிலைகளில் நிற்பதைக் காணலாம்.

***

பாதத்தை முன் வைப்பது

ஒருவர் உடனடியாக என்ன செய்யப்போகிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நாம் எந்தத் திசையில் செல்லப் போகிறோம் என்பதை முன்னிருக்கும் காலின் திசை தான் காட்டுகிறது. இது நம் மனம் எந்தப் பக்கம் செல்ல விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது.




***
நன்றி - மாலை மலர்.
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நுண்ணுயிர் கொல்லியும் அதன் தாக்கங்களும்!

இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம்.



நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன.

*

பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன?

பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதனால், நோய் ஏற்படுத்தகூடிய பக்ரீரியாக்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பெருகுவதை கட்டுப்படுத்துகிறன. அத்துடன் சமிபாட்டு செயற்பாடுகளும் , உடலின் நோய் எதிர்ப்பு செயற்பாட்டையும் சரியாக நடைபெற தூண்டுகிறன.


*

நுண்ணுயிர்கொல்லிகளின் பயன்பாடு

மனிதனை பல்வேறு தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதில் நுண்ணுயிர் கொல்லிகள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. இவற்றின் கண்டுபிடிப்பின் பின்பே பல தொற்று நோய்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன எனபது கவனத்திற்கு உரியது. இவை மனிதனை மட்டுமன்றி மிருக வளர்பிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறன.


அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் மொத்த நுண்ணுயிர் கொல்லி பாவனையில் பாதிக்கும் மேற்பட்ட அளவு விலங்கு வேளாண்மைக்கும், பயிர் செய்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளில் நோயை நீக்க மட்டுமன்றி அவற்றின் வளர்ச்சியை கூட்டவும் விலஙகுணவுகளில் இவை பயன்படுத்தப்படுகிறன. ஸ்ரெப்றோமைசின் , ஒட்சி ரெற்ற சைக்கிளின் (streptomycin, oxytetracycline) ஆகியவை மரக்கறிகளிலும், பழங்ளிலும் பக்ரீரியாக்களினால் ஏற்படும் நோயை கட்டுப்படுத்தப்பயன் படுத்தப்படுகிறன.


மனிதன், விலங்குகளுக்கு மருந்தாக பயன் படுத்தபடும் நுண்ணுயிர் கொல்லிகளில் ஒருபகுதி உடலில் அனுசேப செயற்பாடுகளால் பிரிந்தழிவுக்கு உள்ளனாலும், பெரும்பகுதி மனித, விலங்கு கழிவுகளுடன் சூழலுக்கு வெளியேற்றப்படுகிறன.


கடந்த சில பத்தாண்டுகளில் மட்டும் 12500 தொன் நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் பாவனை வரும் காலத்தில் அதிகரிக்கும். உடலியல் செயற்பாட்டால் பிரிந்தழிந்தவை பொக மிகுதியான பல ஆயிரம் தொன் நுண்ணுயிர் கொல்லிகள் சூழலுக்கு மனித / விலங்கு கழிவுகளுடன் வெளியேற்றப்பட்டுள்ளன. அண்மைய சோதனைகளின் படி இவற்றை நகர கழிவுகள், விவசாய கழிவுகள் என்பவற்றில் மீந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இவ்வாறு கழிவு பொருட்களில் மீந்திருக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் ஆறுகள், நீர்தேக்கங்கள், நிலத்தடி நீர் நிலைகளை சென்றடைவதில் ஆச்சரியபட ஏதுமில்லை.


ஐக்கிய அமெரிக்க நாடுக்ளில் மட்டும் ஆறுகளில்: 170,750 miles, நீர் தேகங்களில் 2,417,801 acres , கண்டல் நிலங்களில் 1,827 square miles விவசாய நடவடிக்கையால் மாசாக்கம் அடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறன. ( இக்கணிப்பு தனியே நுண்ணுயிர் கொல்லி மாசாக்கத்தை மட்டும் கருதவில்லை. ஆனால் விவசாய நடவடிக்கை எனும் போது அதற்குள் நுண்ணுயிர் கொல்லிகளின் மாசாகமும் அடங்கும்.)
இவை எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறன.


இயற்கை சூழலில் பல்வேறு பக்ரீரியாக்கள் ஒன்றாக காணப்படுகிறன. இவை ஒரு சமனிலையை தமக்குள் பேணி வருகிறன. சில நுண்ணங்கிகள் நுண்ணுயிர் கொல்லிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தமக்கு பொட்டியான நுண்ணங்கிகளை அழித்து தாம் சூழலில் நிலைத்திருக்க முயற்சிக்கும். அதே நேரம் மற்றைய நுண்ணங்கிகள் நுண்ணுயிர் கொல்லிகளை செயல் இழக்க செய்யும் பொருட்களை சுரந்து அவற்றில் இருந்து தப்பிவாழ முயற்சி செய்யும். இயற்கையில் இது ஒரு சமநிலையில் பேணப்படுவதால் பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் கழிவுகள் மூலம் சூழலை அடையும் நுண்ணுயிர் கொல்லிகள் இச்சமனிலையை குழப்பி, நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பு உள்ளவை போக ஏனைய நுண்ணங்கிகளை அழிக்கிறன. இதனால் நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பான நுண்ணங்கிகள் அசாதாரணமாக பெருக்கமடைய ஆரம்பிக்கிறன.



இவற்றில் மனிதனுக்கு நோய் விளைவிக்கும், நோய் விளைவிக்காத நுண்ணங்கிகளும் அடங்கும். இவ்வகை பக்ரீரியாக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் பெருக்கம் அடைந்தாலும் ( அதாவது நுண்ணுயிர் கொல்லிகள் கழிவகற்றப்படும்/ மாசாக்கப்படும் இடங்கள்) இலகுவில் பல்லாயிரம் கிலோமீற்றர் தூரத்துக்கு காற்று, நீர், உணவு, விலங்குகள், மனிதன் மூலம் கடத்தப்படக்கூடியவை.

*

உதாரணமாக

Cefotaxime எனும் நுண்ணுயிர் கொல்லிகளிற்கு எதிராக தொழிற்படும் நொதியங்கள் (Enzyme) Cefotaximases (CTX-M என்ற குறிட்டு பெயரை கொண்டவை) உற்பத்தி செய்கின்ற நுண்ணங்கிகள் பல நாடுகளிலும் அறியப்பட்டுள்ளன. இவற்றில் CTX-M 15 எனுன் குறியீட்டு பெயர் உடைய நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகள் 1999 ஆண்டு இந்தியாவின் புது டெல்லியில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பாட்ட நோயாளிகளில் முதன் முதல் கண்டரறியப்பட்டன. இதற்கு 3 ஆண்டுகளின் பின் 2002 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் இதே நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகள் நோயளிகளில் கண்டறியப்பட்டுள்ளன.



இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டாண்டு காலத்துக்குள் இதே நொதியத்தை உற்பத்தி செய்யும் நுண்ணங்கிகள் போலந்து, கனடா, பல்கேரியா, இத்தால், ரஸ்யா, ஐக்கிய இராச்சியம், தாய்வான் என உலகெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளன. கனடாவில் ஆரம்பத்தில் CTX-M 14 எனும் நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகளே அதிகளவில் இருப்பதாக அறியப்படிருந்தன. ஆனால் தற்போது CTX-M 15 ஐ சுரக்கும் நுண்ணங்கிகளின் அளவு வைத்திய சாலை நுண்ணங்கிகளில் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.


மிக முக்கியமாக கருத்தில் எடுக்க வேண்டிய விடயம் இந்த நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான நொதியத்தை சுரப்பதற்கு காரணமான பரம்பரை அலகுகள் (Genes) ஒரு நுண்ணங்கியில் இருந்து இன்னுமொரு நுண்ணங்கிக்கு பிளஸ்மிட்டுக்கள் (Plasmids) எனும் பொருட்கள் மூலம் கடத்தப்படக்கூடியவை. இதனால் இவற்றை கொண்டிருக்காத சாதாரண நுண்ணங்கிகளும் இலகுவில் இவற்றை தமது பரம்பரை அலகுகளில் சேர்த்துகொண்டு நுண்ணுயிர் கொல்லிகளில் இருந்து தம்மை காத்துகொள்ள ஏதுவாகிறது

***


இதனால் ஏற்படுக்கூடிய பாதிப்புக்கள்



மனிதனில் பாதிப்பை ஏற்படுத்தாத பக்ரீரியாக்களில் இருந்து இவ்வகையான பரம்பரை அலகுகள் மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியாக்களுக்கு கடத்தப்படலாம். இவ்வாறு நிகழும் போது இப்பக்ரீரியாக்கள் சாதாரணமாக பாவிக்கும் நுண்ணுயிரி கொல்லிகளுக்கு கட்டுப்படாது உடலில் பெருகி கொள்ளகூடிய சூழல் ஏற்படும்.

Staphylococcus aureus, Mycobacterium tuberculosis, Escherichia coli நோய் விளைவிக்கும் சில பக்ரீரியாக்கள் இவை நுண்ணுயிர் கொல்லிக்கான எதிர்ப்பு திறனை கொண்டுள்ளன.

இவ்வாறு ஏற்கனவே இருந்த நுண்ணுயிர் கொல்லிகளுக்கு கட்டுப்படாத நுண்ணங்கிகள் பெருக்கத்தொடங்கியதால் 1ம் ,2ம், 3ம் 4ம் என பல சந்ததி?? (Generation) நுண்ணுயிர் கொல்லிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.



ஆனால் என்ன இவற்றுக்கும் எட்டிக்கு போட்டியாக பக்ரீரியாக்களும் நொதியங்களை உருவாக்கிய வண்ணம் தான் இருக்கிறன.



மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. இவ்வகை பக்ரீரியாக்கள் (எதிர்புள்ள) மனித குடல்களிலும் காணப்படுகிறன. ஒருவர் பல நாடுகளுக்கும் பயணம் செய்வாராக இருந்தால அவர் பயணம் செய்யும் அனைத்து நாடுகளிலும் இவ்வகை பக்ரீரியாக்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு தான் தன் நாட்டுக்கு திரும்புவார்.



அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் பயனாக கழிவு நீரை சுத்திகரிக்குக் புதிய படிமுறைகளின் மூலம் இன் நுண்ணுயிர் கொல்லிகளை அகற்ற முடியும் என அறியப்பட்டுள்ளது.



இம்முறை உலக நாடுகளில் பாவனைக்கு வர எவ்வளவு நாட்கள் எடுக்கும், பொதுவாக இவை மனித, குடிசார் கழிவு நீரே சுத்திகரிப்புக்கு உடபடுத்தப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிப்புக்கு உட்படாது நீர் நிலைகளை அடையும் கழிவு நீர், அபிவிருத்தி அடந்து வரும் நாடுகளில் எந்த பரிகரிப்புமே சரியாக நடைபெறாமல் அகற்றப்படும் கழிவு நீர் என்பவை எல்லாம் பிரச்சனைக்குரிய விடயங்களாகவே இருக்க போகிறன.


***
thanks விரியும்சிரகுகள்
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உணவகம் செல்லும் போது கவனிக்க வேண்டிய 10 விடயங்கள்

உறவுகளின் நெருக்கம் அதிகரிக்க அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணும் வாய்ப்பு நகர்ப்புற வாசிகளுக்கு வாய்ப்பதில்லை. அவசரகதியில் இயங்கும் வாழ்க்கை விடியலில் புறப்பட்டு, நள்ளிரவுக்கு சில மணி நேரம் மட்டுமே இருக்கும் போது வீடு வந்து சேரும் மனிதர்களையே தயாரித்திருக்கிறது.



விலைவாசியின் உயர்வும், தாரளமயமாக்கலால் அதிகரித்திருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் இன்றைக்கு மனிதனின் உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்தியிருப்பதுடன், கணவன் மனைவி இருவரும் உழைத்தால் மட்டுமே ‘சமாளிக்க’ முடியும் எனுமளவுக்கு சூழலை இறுக்கப்படுத்தியும் இருக்கிறது.

*

குடும்பத்தினருடன் செலவிடக் கிடைக்கும் ஒரு சில மணி நேரங்களைக் கூட ஊடகங்களின் மலினமான நிகழ்ச்சிகள் வலுக்கட்டாயமாய் பிடுங்கிக் கொள்வதால் குடும்பத்தினருடனான அன்னியோன்னியம் அகன்று கொண்டே வருகிறது.

*

இந்த வெற்றிடத்தை சிறிதளவேனும் நிரப்ப வேண்டும் எனும் ஆவலில் வார இறுதிகளிலோ, மாதம் ஒருமுறையோ ஏதேனும் ஒரு உணவகத்தில் சென்று உணவருந்தும் பழக்கம் இன்று நகர்ப்புற வாசிகளிடையே வெகுவாகப் பரவி வருகிறது.

*

வீடுகளில் பார்த்துப் பார்த்து சமைத்து, ஆரோக்கியமானதை மட்டுமே உண்டு வரும் பலரும் உணவகங்களுக்குச் சென்றால் ஒரு பிடி பிடித்து உபாதைகளை உபரியாகப் பெற்று வந்து விடுகின்றனர்.

*

உணவகங்களுக்குச் செல்லும் போது கீழ்க்கண்ட பத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டால், உறவு பலப்படுவதுடன் ஆரோக்கியமும் சிதையாமல் காத்துக் கொள்ள முடியும்.

*

1. பரபரப்பான உணவகம் எனில் முன் கூட்டியே முன் பதிவு செய்து கொள்ளுங்கள். நேரம், நபர்களின் எண்ணிக்கையை தெளிவாய் சொல்லுங்கள். முன்பதிவு செய்யும்போதே ஏதேனும் கூப்பன் உள்ளதா போன்ற செய்திகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்துவிட்டால் தாமதம் ஏற்படுத்தாமல் குறித்த நேரத்தில் கண்டிப்பாக செல்லுங்கள். ஒருவேளை முன்பதிவு இல்லாமல் இருந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஒரு மெனு அட்டையை வாங்கி என்ன உண்ணலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

*

2. உணவுக்கு முன் சூப், ஸ்டார்டர் சாப்பிடும் போது அதிக அடர்த்தியான சூப் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அடர்த்தியான சூப் பொதுவாக அதிக கொழுப்பு உடையதாக இருக்கும். ஸ்டார்டர் உண்ணும் போது பொரித்த வகையறாக்களை விடுத்து அவித்த பொருட்களைத் தேர்வு செய்து உண்ண வேண்டும். உதாரணமாக நன்றாக பொரித்த கோழியை விட தந்தூரி வகையறாக்கள் நல்லது.

*

3. ஏதேனும் ஒரு சாலட் தருவியுங்கள். அதிக கிரீம்கள் பூசப்படாத, ஒரு சாலட் உண்பது பின்பு உண்ணப்போகும் உணவின் அளவை ஆரோக்கியமாகக் கட்டுப்படுத்தும்.

*

4. பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை அறவே தவிருங்கள். அவை உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை செய்வதில்லை. தண்ணீர் தவிர்த்து ஏதேனும் பானம் அருந்த வேண்டுமென்று விரும்பினால் எலுமிச்சை சாறு குடிக்கலாம், அல்லது ஒரு தேனீர் அருந்தலாம்.

*

5. உணவு குறித்தோ, அதன் தயாரிப்புப் பொருட்கள், தயாரிக்கும் விதம் குறித்தோ ஏதேனும் தெரியவேண்டுமெனில் தயங்காமல் கேளுங்கள். முழு திருப்தி தராத உணவுகளை உட்கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை உண்டெனில் அதற்குத் தக்க உணவுகளை கவனமாய் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

*

6. அசைவப் பிரியர்கள் லிவர், சிறுநீரகம் போன்றவற்றை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். தோலில் அதிக கொழுப்பு இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். வறுத்த ‘கொழுப்பு’ போன்றவற்றின் பக்கம் சாயவே சாயாதீர்கள். முட்டை உண்ணும்போது அவித்த முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்ண முடிந்தால் அற்புதம்!உங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகள் அதிகக் கொழுப்புள்ளவையாக இருந்தால் அதை முழுமையாய் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. உண்ணும் அளவையேனும் குறைத்துக் கொள்ளுங்கள்.

*

7. பீட்ஸா சாப்பிடக் கிளம்புகிறீர்கள் எனில் ‘மெல்லிய’ (திந்cருச்ட்) பீட்சாவை தேர்ந்தெடுங்கள். கூடவே அசைவப் பீட்சாவையும், அதிக சீஸ் (பாலாடை) உள்ள பீட்சாவையும் தவிர்க்க வேண்டுமென்று முடிவெடுங்கள். வாங்கிய எல்லாவற்றையும் தின்று முடிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. போதும் எனுமளவுக்கு உண்ணுங்கள், மிச்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

*

8. உண்டு முடித்தபின் ஐஸ்கிரீமை ஒரு கட்டு கட்டுவது எல்லாவற்றுக்கும் பிரச்சனையாய் முடியும். எனவே கடையில் உண்ண பழங்களையே தேர்ந்தெடுங்கள். ஐஸ்கிரீமை தவிர்க்கவே முடியாது என உங்கள் மனம் உங்களை நச்சரித்தால் பழங்களுடன் கலந்து சிறிதளவு உண்ணுங்கள்

*

9. உங்களுக்கு உணவு பரிமாறுபவர் மீது உங்கள் எரிச்சல்களைக் காட்டாதீர்கள். அன்புடன் பேசுங்கள். நன்றாக உங்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கு தயங்காமல் நிறைய டிப்ஸ் கொடுங்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் 15 முதல் 25 விழுக்காடு வரை டிப்ஸ் வைப்பது மேஜை நாகரீகமாகக் கருதப்படுகிறது.

*

10. அவசரப்பட்டு உண்ணாதீர்கள். கைப்பேசிகளை அணைத்து வையுங்கள். மெதுவாக, சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே உண்ணுங்கள். நன்றாக மெல்லவேண்டும் என்பதை நினைத்துக் கொண்டே உண்ணத் துவங்குங்கள். உணவு அருந்த அதிக நேரம் செலவிடுவது உங்கள் ஆரோக்கியம் பலப்படவும், உறவு பலப்படவும் பேருதவியாய் இருக்கும்.


*

அடிக்கடி அனைவரும் கூடி ஒன்றாய் நேரத்தைச் செலவிடும் நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உலகில் உறவுகள் தரும் மன நிறைவையும் அர்த்தத்தையும் வேறேதும் தந்துவிடாது என்பதை மனதில் ஆழப் பதியுங்கள்


***
thanks xavi

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பாலை பற்றி மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உன்மைகளும்

பால் குடிங்க ஆனால் அதை பற்றி சில விஷயம் தெரிந்து குடிங்க !



பாலில், புரதச்சத்து, கால்சியம், மாக்னீசியம் மற்றும் வைட்டமின் பி உட்பட பல்வேறு ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இந்த பாலில், யூரியா, தரம் குறைந்த கொழுப்பு, சோப்புகள், ஸ்டார்ச், பேக்கிங் சோடா போன்ற சிலவற்றை கலப்படம் செய்வதால், இது, பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது.

*

அதுமட்டுமல்லாமல், கலப்படமற்ற பாலை பற்றியும் மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உலவுகின்றன.

*

அவை பற்றி சில உண்மைகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.


*

கட்டுக்கதை: காய்ச்சிய பாலை விட, காய்ச்சாத பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

*

உண்மை:

பாலை காய்ச்சும் போது, அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் எதுவும் குறைவதில்லை. பாலில் காணப்படும் சில நுண்ணுயிர்களை கொல்வதற்காக, 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கப்படுகிறது.

எனவே, காய்ச்சிய பாலை குடிப்பதால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், அவை மிகவும் பாதுகாப்பானது.

***

கட்டுக்கதை: பாலில் தண்ணீர் சேர்ப்பதால், அதில் காணப்படும் கொழுப்புத் தன்மை குறைக்கப்படுகிறது.


உண்மை:

பாலில் தண்ணீர் சேர்ப்பதால், அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் நீர்க்கின்றன. இதனால், ஊட்டச்சத்து அடர்த்தியும் குறைகிறது.

***

கட்டுக்கதை: கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் ஊட்டச்சத்து இல்லை.


உண்மை:

கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறைந்த கலோரிகளுடன், சிறப்பு ஊட்டச்சத்துகள் நிறைந்த தாக உள்ளது.


***


கட்டுக்கதை: பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பால் பொருட்கள் தீங்கு விளைவிக்கும்.


உண்மை:

பால் ஒவ்வாமை இருப்பவர்கள், பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால், வெண்ணெய், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றை சாப்பிடலாம்.

***

கட்டுக்கதை: பிற பொருட்களிலும், கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், பால் பொருட்களை கைவிடலாமா?


உண்மை:

பாலில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இதை தவிர, புரதச்சத்து, மாக்னீசியம், பாஸ்பரஸ், சிங்க் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய முக்கிய சத்துக்களும் காணப்படுகின்றன.


தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கீரைகளில் காணப்படும் கால்சியம் சத்தை விட பாலில் இருக்கும் கால்சியம் சத்து சிறப்பாக கிரகிக்கப்படுகிறது.



கட்டுக்கதை: பால் ஒரு முழுமையான உணவு.

உண்மை:

பாலில் இரும்புச்சத்து, வைட்டமின் சி,டி,இ மற்றும் கே ஆகிய சத்துக்கள் பற்றாக்குறை நிலவுவதால், பாலை முழுமையான உணவாக கூற முடியாது.


***

கட்டுக்கதை: குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பாலை விட, பசும்பால் சிறந்தது.


உண்மை:

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலே சிறந்தது. ஏனென்றால், பசும்பாலில் காணப்படும் கொழுப்பு சத்து, சரியாக ஜீரணம் ஆகாது.


மேலும், பசும்பாலில், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் சில முக்கிய கொழுப்புச் சத்துகள் பற்றாக்குறை உள்ளது.

***

கட்டுக்கதை: பால் குழந்தை பருவத்தில் மட்டுமே தேவை. பெரியவர்களானதும் தேவையில்லை.


உண்மை:

வாழ்நாள் முழுவதும், கால்சியம் சத்தை பூர்த்தி செய்ய பால் உதவுகிறது. எனவே, குழந்தைகள் மட்டுமல்லாது, அனைத்து பருவத்தினரும் பால் குடிப்பது நல்லது.


பால், குடிப்பதால், வயது காரணமாக ஏற்படும் பிரச்னைகளான எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு போன்றவை தவிர்க்கப்படுகிறது.

***

கட்டுக்கதை: பால் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்.


உண்மை:

பாலில் காணப்படும் சில புரதச் சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவற்றுக்கு, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் தன்மை உண்டு.


***

கட்டுக்கதை: பால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.


உண்மை:

பாலில் அதிகளவு கால்சியம் சத்து காணப்படுகிறது. இது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.


எனவே, உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு, முக்கிய உணவாக பால் பரிந்துரைக்கப்படுகிறது.



***

நன்றி தினமலர்!
February 2010

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாம் தூங்கும் போதுநமக்குள் என்ன நடக்கிறது!



1 .தூங்கும் போது நடப்பது என்ன

மூளை தன்னை Recharge செய்கிறது
கலங்கள் தம்மை Repair செய்கின்றன
உடல் முக்கிய Hormones ஐ சுரக்கிறது

*

2 .வயதும் தேவையான தூக்கமும்

00 -02 ------- 16 மணித்தியாலம்
03 -12 -------- 10 மணித்தியாலம்
13 -18 -------- 08 மணித்தியாலம்
19 -55 -------- 08 மணித்தியாலம்
56 -85 -------- 06 மணித்தியாலம்

*

3 .யாரை பற்றி கனவு

ஆண்களின் 70 % ஆன கனவு ஒரு ஆணை பற்றி இருக்கும்
பெண்களின் 50 % ஆன கனவு ஒரு பெண்ணை பற்றி இருக்கும்
ஏற்கனவே பார்த்த முகங்களையே கனவில் காண முடியும்

*

4 .தூக்க நோய்

Parasomnia என்பது தூக்கத்தில் உள்ள போது செயற்படல்
இதன் போது புரியப்படும் குற்றங்கள்
கொலை,கற்பழிப்பு,வாகனம் ஓட்டல்

*

5.கனவின் தன்மை

12 % ஆன கனவு கருப்பு வெள்ளை
கனவு காணாதவர்கள் மன நோய் உடையவர்கள்

*

6.கணவன் மனைவி

நான்கில் ஒரு தம்பதியினர் தனி தனி கட்டிலில் தூங்குகின்றனர்

*

7 .உச்சா போதல்

50 பேரில் இல் ஒரு டீன்ஏஜ் கட்டிலில் சிறுநீர் கழித்து விடுகிறார்

*

8.கனவை மறத்தல்

முழித்து 5 நிமிடத்தில் 50 % கனவு மறந்து விடும்
முழித்து 10 நிமிடத்தில் 90 % கனவு மறந்து விடும்

*

9 .முக்கியம்

உண்ணாமல் 2 வாரம் இருக்கலாம்
தூங்காமல் 10 நாள் இருந்தால் மரணம் தான்

*

10 .கண்பார்வை அற்றோர்

இவர்கள் கனவில் பார்க்கமுடியும்
Born Blind பார்க்க முடியாது
அனால் தொடுகை,மணம் என்பவற்றை உணர்வார்கள்

*

11 .தூங்கும் விதம் - குணம்

சரிந்து உடலை முற்றாக வளைத்து (41 %) - இளகிய திறந்த மணம்

*
சரிந்து சற்று உடலை வளைத்து (13 %) - சந்தேகபடுபவர்கள்

*

சரிந்து படுத்து முழுஉடலும் நேராக தூங்குவோர் (15 %) - சமூக பறவைகள்

*

நீட்டு நிமிந்து மல்லாக்க(8 %) - Reserved type

*

நேராக குப்புற படுத்து (7 %) - ஜாலி யான பேர்வழிகள்

*

மல்லாக்க படுத்து சற்று உடலை வளைத்து (5 %) - மறவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பர்


***
by nis on Friday
thanks nis on
***



"வாழ்க வளமுடன்"


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நீச்சல் குளத்திர்ற்கு போறிங்களா ஒரு நிமிஷம் !



சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீச்சல் அடிக்க விருப்பம். பல்கலைகளகங்களிலே இணைந்த ஆரம்பத்தில் தண்ணீர் இல்லாத வெறும் தரையிலே உங்களிள் Seniors இன் வேண்டுதலால் நீச்சல் அடித்திருப்பீர்கள்.

*

பலர் நீச்சல் குளங்களில் (Swimming Pools) நீச்சல் மட்டுமல்லாது வேறு சில நல்ல விடயங்களையும் சத்தமில்லாது செய்து வருகிறார்கள்.இவற்றால் பல நோய் கிருமிகள் பரவி கால போக்கிலே பல உயிர் கொல்லி நோய்களை உண்டாக்கின்றது.

*

ஐந்து பேரில் ஒருவராவது நீச்சல் குளங்களில் சிறுநீர் (Urine) அடிக்கிறாங்க.இது ஒன்றே நோய் பரப்ப முக்கிய காரணியாகிறது.

*

20% மக்கள் பொது நீச்சல் குளங்களின் பராமரிப்பையோ,சுத்தத்தையோ கருத்தில் கொள்வதில்லை.30% மக்கள் குளிக்காமலே நீச்சல் குளங்களிற்குள் இறங்குகிறார்கள்.

*

இவையெல்லாம் தோல் சம்பந்தமான நோய்களையும்,காதுடன் தொடர்புடைய நோய்களையும் ஏற்படுத்துகின்றது.

*

நீரில் தோன்றும் பக்ரீரியாக்களால் பிறப்பு உறுப்புகளை பாதிக்க செய்வதோடு மட்டுமல்லாது மிகவும் விரைவாகவே வயது முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

*

chlorine ஐ சேர்ப்பதற்கு முதல் புதிய நீரை மாற்றுவதற்கு நீச்சல் குளங்களை பாராமரிப்பவர்களிற்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இவர்கள் நீரை மாற்றுவதாக தெரியவில்லை.

*

சில நீச்சல் குளங்களிற்கு சூரிய ஒளி பட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும்.இவற்றை தான் கூடிய கவனம் எடுத்து பாராமரிக்க வேண்டி உள்ளது.

*

சிறுபிள்ளைகளுடன் நீச்சல் குளங்களிற்கு செல்வதாயின் நீச்சல் குளங்களின் தரத்தை அறிந்த பின் செல்வதே நல்லது.

*

சிலவற்றில் இருந்து 10 அடி தூரத்தில் நின்றாலே ஒருவிதமான மணமும்,நீர் தெளிவற்ற நிலையிலும் இருந்தால் தவிர்து கொள்வதே நல்லது.


***
by nis on Tuesday
thanks nis on Tuesday
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.



1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.

*

முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

*

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

*

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

*

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

*

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

*

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்பியாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

*

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

*

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.


***
நன்றி - தினகரன்.
***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, April 16, 2011

வண்ணங்கள் மனிதனின் முக்கிய வரம்

வண்ணங்கள் மனித வாழ்வில் மிக முக்கியமான அங்கம். வண்ணங்களில் இருந்து மனிதனை தனியாக பிரிக்க முடியாது. வண்ணங்களை நாம் பார்த்து ரசிக்க நமக்கு உதவி செய்வது சூரியன் தான். சூரியன் இல்லை என்றால் நாம் வண்ணங்களை பார்க்க முடியாது.




நிலவின் ஒளியில் நாம் பார்க்கும் எல்லாப் பொருளும் சாம்பல் நிறமாகவே தெரியும். போதுமான ஒளி இல்லை என்றாலும் பார்வை தெரியும். ஆனால் இயற்கையான நிறங்களை உணர முடியாது. சூரியன் தான் வண்ணங்களை ரசிக்க உதவுகிறது. முழு இருட்டில் நம்மால் எதையுமே பார்க்க முடியாது.

*

ஆந்தைக்கும் சில வன விலங்குகளுக்கும் நம்மை விட இருட்டில் நன்றாக பார்க்கும் திறன் உண்டு. ஆனால் நிறங்களை பிரித்துப் பார்க்கும் திறன் மனிதனுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும், ஒரு சில பறவைகளுக்கும் மட்டுமே உண்டு. மற்ற எல்லா உயிரினங்களுக்குமே அந்த காலத்து சினிமாப் படம் மாதிரி எல்லாமே கறுப்பு வெள்ளையில் தான் தெரியும்.

*

மனிதன் கொடுத்து வைத்தவன். அதனால் தான் அவனால் வண்ணங்களை உணர முடிகிறது. வண்ணங்கள் இல்லாத மனித வாழ்வு கொடுமையான ஒன்று. அந்த அளவுக்கு வண்ணங்கள் மனிதனோடு இணைந்து இருக்கின்றன.

*


நிறங்களை பிரித்து உணர உதவும் செல்கள் சரியாக செயல்படவில்லை என்றால், மனிதர்களாலும் கலர் பார்க்க முடியாது. இந்த செல்கள் ஓரளவு செயல் இழந்திருக்கும் போது சில வண்ணங்கள் மட்டும் தெரியாது. இதை நிறக்குருடு என்கிறார்கள்.

*

கண்ணின் அதிசயம் அதன் லென்சில் தான் இருக்கிறது. புரதம் நிரம்பிய ஓவல் வடிவில் இருக்கும் இந்த சின்ன உறையான லென்சை சுற்றி தசைகள் உள்ளன. மிகவும் உறுதியான இந்த தசைகள் மிகக்கடுமையான உழைப்பாளிகள்.

*

இவை கெட்டிபடும் போது லென்ஸ் பருத்து, தடிமனாகி பக்கத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்க உதவுகிறது. தசைகள் ரிலாக்ஸ் ஆகும் போது தட்டையாகி லென்ஸ் மெலிதாகி விடும். இதனால் தூரத்தில் இருக்கும் பொருட்களை சுலபமாகப் பார்க்க முடிகிறது.

*

ஆதி மனிதனுக்கு விலங்குகளிடம் இருந்து தப்பிக்க, இரையை தேடி ஓட மட்டுமே பார்வை தேவைப்பட்டது. அதனால் குறைந்தபட்சம் 20 அடிக்கு அப்பால் உள்ள பொருட்களைச் சுலபமாக பார்க்க முடிந்தாலே போதும். இதனால் அக்கால மனிதனின் கண் தசைகள் ஓய்வாகவே இருந்தன. ஆனால் இன்றைய மனிதனின் நிலைமை வேறு.

*

இன்றைய சூழ்நிலையில் படிப்பது, டேபிளில் கணக்கு எழுதுவது, கம்ப்யூட்டர் பார்ப்பது என்று எப்போதுமே அருகில் இருக்கும் பொருட்களை உற்றுப்பார்ப்பதே வேலையாகிப் போய் விட்டது. தொடர்ந்து ‘குளோசப்‘ வேலைகளையே அதிகம் செய்ய வேண்டியிருப்பதால் கண்தசைகள் எப்போதும் இறுக்கமாகவே இருக்கின்றன. கண்கள் விரைவில் களைப்படைந்து சோர்வடைய இதுவே காரணம்.

*

லென்சின் முன்னும் பின்னும் திரவம் நிரம்பிய இரண்டு பகுதிகள் உள்ளன. முன்னால் இருக்கும் திரவம் தண்ணீர் போலவும், பின்னால் இருப்பது முட்டையின் வெள்ளைக்கரு போலவும் இருக்கும். ஒரு பொருளை நாம் பார்க்கும் போது இந்த இரு திரவப்பகுதிகளையும் நடுவில் இருக்கும் லென்சையும் கடந்து ரெடினா என்ற திரையில் பதியும் ஒளி தான் மூளைக்குப் போகிறது.

*

தலையின் பின்பக்கத்தில் பலமான அடிபட்டால் அங்கிருக்கும் மூளையின் பார்வை பகுதிகளை தாக்கும். அதனால் நிரந்தரமாக பார்வை பறிபோகும் வாய்ப்பும் நிறைய இருக்கிறது. அதனால் தான் டூவீலரில் போகும் போது ஹெல்மெட் அணிவது தலைக்காயத்தில் இருந்து மட்டுமல்ல பார்வையை காப்பாற்றும் கவசம் என்பதும் உண்மையாகிறது.


***
by- raja
thanks raja
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உயிர் காக்கும் முதலுதவி :)

உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்
(நாம் ஒவ்வொருவரும் தெரிந்துவைத்து கொள்ள வேண்டிய விஷயம்)



CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.

***

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்



1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது


2. இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது


3. உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது


4. விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது


5. தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது


6. அதிர்ச்சியின் போது ( in a state of shock)


7. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது


8. மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)


9. இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )


10. CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.



1. 1ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)



12. இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)



13. நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்



14. சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்



15. உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.


***


சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது. இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை




அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)


ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.


இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.


CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation


*


முதலில்-Airway




சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.


நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.


*

பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)


**


இரண்டாவதாக-Breathing




சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.


**


மூன்றாவதாக-Circulation






ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.


நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

**

Chest Compressions எப்படி அளிப்பது

விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.

**

1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.



இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.


***
thanks இணையம்
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிரிட்ஜ் பராமரிப்பு!



1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

*

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

*

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

*

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

*

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

*

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

*

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

*

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

*

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

*

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.




11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

*

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

*

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

*

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

*

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

*

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

*

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

*

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

*

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

*

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.


***
thanks keetru
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நம் உடலில் உள்ள முக்கிய தகவல்கள்!



1. இதய நோய் அறிய ஒரு துளி இரத்தம் போதும்.

*

2. இதயம் துடிக்கும் போது ஏற்படும் அழுத்தத்தைக் கொண்டு 30 அடி தூரத்திற்கு இரத்தத்தைப் பீய்ச்சி அடிக்கலாம்.

*

3. இரத்தத்தில் உப்பு குறைந்தால் வயிற்றுச் சதை பிடித்து வலி ஏற்படும். இரத்த அழுத்தம் குறையும். இரத்தத்தில் கழிவு பொருள்களின் அளவு அதிகரிக்கும், இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழந்து விடுகின்றன.

*

4. விக்கலை நிறுத்த ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் போகும். விக்கலுக்கு மருந்து, மாத்திரை சாப்பிடத் தேவையில்லை.

*

5. நமது உடலிலேயே மிகவும் வலிமை மிகுந்த தசையை நாக்கு தான் பெற்றிருக்கிறது.

*

6. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான பாக்டரியாக்கள் நம் வாயில் உள்ளன.

*

7. நம் உடலிலேயே மிகவும் உறுதி வாய்ந்த உறுப்பு நமது பற்களின் மேற்புறம் உள்ள எனாமல் (Enamel) என்ற பற்கூடு ஆகும்.

*

8. நமது உடலிலே மிகுந்த பரப்பளவை உடைய, பெரிய உறுப்பு தோல்.

*

9. காப்பி அருந்துவது பல் சொத்தையைத் தவிர்க்கும். காப்பியில் க·ப்பீயின் (Caffeine) என்ற உற்சாகப் பொருள் இருப்பது அனைவருக்கும் தொ¢ந்த ஒன்று. காப்பியில் உள்ள பொருள்களில் டிரைகொனெல்லன் Triconelline என்ற ஒரு கசப்பான பொருளும் உள்ளது.
காப்பியின் கசப்புக்கு இது தான் காரணம்.

*

10. இப் பொருளைக் கண்டால் வாய் மற்றும் பற்களில் வளரும் சொத்தை உண்டாக்கும் பாக்டரியாவுக்கு சிம்ம சொப்பனம். எனவே காப்பியை பால் கலக்காமல் (Black Coffee) மிதமான அளவில் அருந்துவது பல் சொத்தையை உண்டாக்கும் பாக்டரியாவின் Strepto coccus mutans வளர்ச்சியைத் தடுக்கிறது என்று கார்லா ப்ருஸ்ஸோ என்னும் அறிஞர் கூறுகிறார். (Carla Pruzzo University of Anncone, Italy)

*

11. ஒரு மனிதனின் மூக்கு 10,000 வகையான வாசனைகளின் வேறுபாட்டை உணரும் ஆற்றல் கொண்டது.



***
thanks Dr. S. முரளி, M.D.S.,
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நோய்சில கசப்பான உண்மைகள் (பொது அறிவு )



1. ஆண்டொன்றுக்கு 15 லட்சம் அமெரிக்கர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறது.


*

2. உலகமுழுதும் ஆண்டொன்றுக்கு 140 லட்சம் பேர் அந்த மாரடைப்பு நோயினால் சாகின்றனர்.


*

3. உலகிலேயே இந்தியர்களுக்கே அதிகமாக மாரடைப்பு நோய் வருகிறது!


*

4. இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் அமெரிக்கர்களைவிட 3 அல்லது 4 மடங்கு அதிகம்!


*

5. இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் சீனர்களைவிட 6 அல்லது 7 மடங்கு அதிகம்!


*

6. இந்தியாவில் 4 கோடி பேருக்கு மாரடைப்பு நோய் உள்ளது! ஆண்டு ஒன்றுக்கு மேலும் 10 லட்சம் பேருக்கு இந்நோய் ஏற்படுகிறது!


*

7. 100 இந்தியர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால்,அதிகம் 7 முதல் 10 பேருக்கு மற்ற பிரச்சனைகள் வருகின்றன, உதாரணம் இருதயம் பலவீனம் அடைதல் (heart failure),இருதயம் சீராக துடிக்கமுடியாமை (cardiac arrythmias) அல்லது திடீர் மரணம்!


*

8. ஆனால் 100 அமரிக்கர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால், அதில் 3 பேருக்கே பின் வளைவு(complication) வருகிறது!


*

9. 100 ஜப்பானியர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால், அதில் 0 அல்லது ஒருவருக்கே பின் விளைவு(complication) வருகிறது!


*

10. அமெரிக்கர்களுடன் ஒப்பிடுகையில், பிரெஞ்சுக்காரர்களுக்கு மாரடைப்பு நோய் குறைவாகவே ஏற்படுகிறது!


*

11. அரேபியர்களுக்கும் மாரடைப்பு நோய் மிக குறைவாகவே ஏற்படுகிறது!


காரணங்கள்:இந்தியர்களுக்கு இந்நோய் வர தேங்காய் எண்ணெய்யும், தேங்காய் பாலும், "பால்ம் கேனரல் எண்ணெய்யும் (palm kernal oil)" அதிகமாக பாவிப்பதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

*

12. ஜப்பானியர்களிடம் இந்நோய் குறைவாக காணப்படுவதற்கு, அவர்கள் அதிகமாக உட்கொள்ளும் கொழப்பு மீன்களே காரணம் என்று சொல்கிறார்கள்.

*

13. பிரெஞ்சுக்காரர்களோ சிவப்பு வைன் அதிகம் சாப்பிடுவதால்தான் என்று சொல்கின்றனர்.


*

14. அரேபியர்கள் உணவே உலகில் சிறந்தது என்கின்றனர் காரணம் அவர்கள் உணவில் நிறைய நார்ச் சத்து (fibre) இருக்கும்.

*

15. (பழம் , காய்கறிகள் போன்றவை) மற்றும் அவர்கள் பயன்படுத்தும் எண்ணெயோ ஒலிவ் ஆகும்!!!


***
நன்றி Shakana
***



"வாழ்க வளமுடன்"


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க...

காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும்.




இதைத் தவிர்க்க:


1. மூதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.


*

2. அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

*

3. சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்` செய்து கொள்ளலாம்.


***

சில யோசனைகள்:


1. இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.

*

2. நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.


*

3. செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.


*

4. அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.


*

5. கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

*

6. பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.


*

7. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.


*

8. அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான்.

*

9. வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை.

*

10. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.


***
thanks tamilulakam
***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

டீன்-ஏஜ் பெண்களை கையாள்வது எப்படி?

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா?


நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?

*

ஆம். நிச்சயம் செய்யத் தான் வேண்டும்.

*

இதற்கான சிகிச்சை தேவைப்படுவது உங்கள் குழந்தைகளுக்கு அல்ல; பெற்றோர்களாகிய உங்களுக்குத் தான்.


***

1. அன்பாக இருங்கள்:

உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம்.

*

நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம்.அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள்.

*

அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன் வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம்.


***

2. கட்டாயப்படுத்தாதீர்கள்:


உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.

*

உதாரணமாக, "இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும்` என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங் களில் நீங்கள் தலையிடாதீர்கள்.

*

அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.


***


3. சந்தேகப்படாதீர்கள்:


இந்த பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம்.

*

எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள்.

*

இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்.


4. கோபப்படாதீர்கள்:

குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். இந்த பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது.

*

அன்பால் மட்டுமே அவர்களை திருத்த முடியும். நீங்கள் கோபப் பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர்.

*
உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும்.

*

எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள்.

***

5. உற்று நோக்குங்கள்:


உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள்; தூங்க மாட்டார்கள்.

*

இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

*

என்றாலும், பிரச்னை அளவுக்கு அதிகமாக போகும் போது, மருத்துவரை அணுகுவது நல்லது.


***
thanks ர.ஹரிணி
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, April 9, 2011

பெர்ஃப்யூம் பிரியரா நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களும்?

பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள்.. கலர் கலராய் கவர்ந்திழிக்கும் அழகு பாட்டில்கள்.. அதன் பேக்கிங்கை பார்த்தவுடனே வாங்க தூண்டும் அழகு. இதனையெல்லாம் பார்த்து மயங்கி பெர்ஃப்யூம் வாங்குபவரா நீங்கள்.



கொஞ்சம் யோசியுங்கள் ;

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. அழகாய் இருக்கும் பாட்டில் எல்லாம் நல்ல பெர்ஃப்யூமில்லை.

***

சரி அப்ப எப்படி தான் பெர்ஃப்யூம் வாங்குவது என்று கேட்கிறிங்களா?

1. நல்ல தரமான கம்பெனி பெர்ஃப்யூமை மட்டுமே வாங்கவும்.

*

2. பேக்கிங்கை பார்த்து செலக்ட் செய்யாதிங்க.அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கனு கண்ட கண்ட பெர்ஃப்யூம் வாங்க வேண்டாம்.எக்ஸ்பயரி டேட் பார்த்து வாங்கவும்.

*

3. கடைகளில் வாங்கும் பொழுது ஸ்மெல் எப்படியிருக்குனு பாட்டில் முடியில் அடித்து முகர்ந்து பார்க்கவும்.

*

4. எந்த வகை பெர்ஃப்யூமாக இருந்தாலும் உங்கள் கை மணிக்கட்டு பகுதியில் அடித்து பின்பு தேர்வு செய்யுங்கள். அலர்ஜி இல்லை என்றால் வாங்கவும்.

*

5. இப்ப பெர்ஃப்யூம் வாங்கியாச்சு அதனை எப்படி பயன்படுத்தனும் என்று பார்ப்போம்.

*

6. நல்ல தரமான பெர்ஃப்யூம் என்றால் உடைகளின் மீதும் அக்குள், முதுகு பகுதியிலும் போடலாம்.

*

7. ஆனால் பாடி ஸ்ப்ரே போல் நேரதியாக உடலில் படவேண்டாம். இது உடலில் பட்டால் நிச்சயம் அலர்ஜி ஏற்படும்.

*

8. பட்டு புடவையின் ஜரிகையில் மற்றும் விலை உயர்ந்த வெர்க் சேலையில் நேரடியாக பெர்ஃப்யூம் செய்ய வேண்டாம்.

*

9. தங்க நகைகள் மீதும் படாமல் ஸ்ப்ரே பண்ணவும்.

*

10. பாட்டிலில் போட்டுயிருக்கும் பயன்படுத்தும் முறையினை படித்துவிட்டு பயன்படுத்துவது நலம்.


***
thanks tamilulakam
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...



1. கண்தானம் செய்வதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆண், பெண், சிறியவர், பெரியவர் என வயது வரம்பின்றி யாரும் மரணத்துக்குப் பின் கண்தானம் செய்யலாம்.

*

2. கண் புரை அறுவை சிகிச்சை செய்தவராக இருந்தாலும் கண் தானம் செய்யலாம்.

*

3. கண்ணாடி அணிந்திருப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம். ஆனால் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் பி ஆகிய நோயால் இறந்தவர்களின் கண்களைப் பயன்படுத்த முடியாது.

*

4. இறந்தவுடன் 6 முதல் 8 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்தால்தான் அடுத்தவர்க்குப் பொருத்த முடியும்.

*

5. கண்தானம் செய்ய பதிவு செய்தவர் இறந்தால், அவரது உடலுக்கு மேலே மின்விசிறி இயங்கிக் கொண்டிருக்குமேயானால், அதை நிறுத்தி விடுங்கள்.

*

6. இறந்தவரின் கண்கள் மீது நீரில் நனைக்கப்பட்ட பஞ்சை வைக்க வேண்டும்.

*

7. கண்களை எடுப்பதால் இறந்தவரின் முகம் விகாரமாகி விடும் என்பது அறியாமையே.

*

8. கண்தானம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே கண் வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும்.


***

நன்றி "கீற்று"

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இரத்தம் பற்றிய தகவல்கள் ( பொது அறிவு )

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?



ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே "ஹீமோகுளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.


**


ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

**

ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

**

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

**

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

**

ரத்தத்தில் உள்ள "பிளேட்லட்' அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி "பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

**


பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

**


ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் "பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

**

ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

**

உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

**

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

**


உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

**

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

**

24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?

24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

**

தலசீமியா என்பது தொற்று நோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.

**

மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

**


ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

**

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. "‘O' பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு "யுனிவர்சல் டோனர்' என்று பெயர்.

**

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.


**


ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

**

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் - மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

**

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

**

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

**

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

**

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

**

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

**

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant - recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

**

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

**

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

**

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

**

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

***

நன்றி தினமணி!

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நம் வாழ்நாளை உணர்ந்து, உயர்த்தும் பழக்கவழக்கங்கள்


1. காற்று நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது நன்கு வீட்டினுள் வர ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். குறிப்பாக படுக்கை அறையில் பாதுகாப்பையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

*

2. நன்கு ஆழ்ந்து சுவாசியுங்கள். குறிப்பாகக் காலையில் ஆழ்ந்து மூச்சுப் பயிற்சி செய்யவும். இளமையைப் புதுப்பிக்கும் எளிய வழி இது.


*

3. கடும் குளிரும் கடுமையான வெப்பமும் இடர்களை உண்டாக்கும். முடிந்தவரை இவையிரண்டையும் தவிர்த்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தி வாழுங்கள்.


*

4. தூய்மையான இடத்தில் வாழுங்கள். அசுத்தமான வீடுகளில்வசிப்பதால் உடல் நலத்திற்கு எளிதில் தீங்கு உண்டாகும்.


*

5. வாழ்வதற்காக உணவு உண்ணுங்கள். உண்பதற்காக வாழ்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள்.ஈக்களும் பிற பூச்சியினங்களும் தூய்மையைக் கெடுக்கும். கொசுக்கள் நோய் நுண்மங்களை காற்றில் பரப்பும். இந்த இரண்டும் உங்கள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

*

6. அதிகாலையில் எழுந்துவிடுங்கள். இதனால் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆர்வத்துடன் தொடங்கி வாழலாம்.

*

7. உடலுக்கு நன்கு ஊட்டம் தரத்தக்கவை மூலிகைகள், பழங்கள், காய்கறிகள் அதாவது இயற்கை உணவையே உட்கொள்ளுங்கள். செயற்கை உணவைத் தவிருங்கள்.

*

8. பெரும்பாலும் கவனமின்மையால்தான் நோய்கள் தாக்குகின்றன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ செக்கப் செய்து கொள்வது நல்லது.

*

9. காலையோ அல்லது மாலையோ மெல்லோட்டம் செல்வது உடற்கட்டை நன்கு பராமரிக்க உதவும்.( மெல்லோட்ட நேரம்: 30 நிமிடங்கள்)

*

10. உலகில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடியது தூய்மை. தினமும் குளியுங்கள். தூய்மையான ஆடைகளையே எப்போதும் அணியுங்கள். சுத்தமாக வாழுங்கள்.

*

11. மகிழ்ச்சியாக வாழுங்கள். கஷ்டங்களின்போது தன்னம்பிக்கையுடன் மனம் விட்டுச் சிரியுங்கள். சிரிப்பு கஷ்டங்களைத் துரத்தும்.

*

12. ஆழ்ந்து சிந்தித்து வெல்லவும், உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கவும். தினமும் தவறாமல் தியானம் செய்யவும்.

*

13. ஒரு போதும் புகை பிடிக்காதீர்கள். சிகரெட்டினால் ஒரு சிறு நன்மையும் இல்லை, வலிந்து நச்சு வலையில் விழாதீர்கள்.

*

14. அதிக எடை ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான உணவு, உடற்பற்சி முதலியவற்றால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மாரடைப்பைத் தவிருங்கள்.

*

15. இறைச்சி உணவுகள் உங்கள் உணவுத் தட்டி இடம்பெறவே கூடாது. இவை நஞ்சு மிகுந்த உணவு கள்.

*

16. ஒரு நாளில் இருபது நிமிடங்களாவது பரபரப்பு இல்லாமல் அமைதியாகவும் ஓய்வாகவும் இருங்கள். இதனால் நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்க போதுமான அளவு ஓய்வும் இணக்கமும் நரம்புகளுக்கு கிடைக்கின்றன.

*

17. மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்போதும் சீராக இருக்கும். எப்போதும் நேர்மையான செயல்களை மட்டுமே கவனமாகச் செய்து வந்தால் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். குறுக்கு வழிகள் தான் மன அமைதியைக் கெடுக்கின்றன.

*

18. நம்மிடம் உள்ள செல்வத்தைவிட உயர்ந்தது நமது உடல்நலம்தான். எனவே உங்கள் உடல் நலம் பற்றி சிந்தித்து அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப வாழுங்கள்.

*

19. மதுபானங்கள் அருந்தாதீர்கள்.

*

20. மருத்துவ ஆலோசனைகளின் மதிப்பை உணர்ந்தால் அவற்றைப் பின்பற்றினால் எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

*

21. உண்மையான அறிவு நமக்குத் தேவை. இதுவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும்.

*

22. உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் பிரச்சினைகளையும் நோய்களையும் எக்ஸ்ரேயும் உங்களின் இரத்தம், சிறுநீர் போன்ற பரிசோதனைச்சாலை முடிவுகளும் தெள்ளத் தெளிவாக வெளியே காண்பித்தருளும். எனவே இது போன்ற நவீன பரிசோதனைகளைத் தவிர்க்காதீர்கள்.

*

23. உங்கள் வேலைகளுக்குச் சமமாக தூங்கும் நேரமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடின உழைப்புத் தேவை அதற்காக அடிப்படை ஓய்வைத் தவிர்க்க வேண்டும்.

*

24. உடல் நலத்தில் அக்கறை கொள்ளாவிடில் எதையும் செய்யாது "பிறந்தோம் வாழ்ந்தோம் என்று ஒன்றுமே இல்லாத பூஜ்யமாக நம் வாழ்க்கை முடிந்துவிடும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

***

நன்றி: வுமன்ஸ்

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net