Sunday, October 24, 2010

சிரிக்கலாம் வாங்க !

ஒரு வகுப்பறையில்...

ஆசிரியர்: மரியா.. இந்த உலக மேப்புலே தென் அமெரிக்கா எங்கே என்று சரியாக காட்டு
மரியா: சரியாக காட்டி, இங்கே இருக்கு டீச்சர்
ஆரிசியர்: வெரி குட் மரியா...

ஆசிரியர் மாணவர்களை பார்த்து யாராவது பதில் சொல்லுங்க, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு

மாணவன்: மரியா...! டீச்சார்..

ஆசிரிய‌ர்: ????..!!!

----------------------------------------------------------

கணித ஆசிரியர்: ஜான்.. ஏன் கால்குலேசனை தரையிலே(கீழே) வைத்து போடுறே

ஜான்: சார் நீங்கதானே சொன்னீங்க மேசை (TABLE)  இல்லாமல் போடசொல்லி...

----------------------------------------------------------

வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?

ஜோசப்: அது வந்து H I J K L M N O

வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ

ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.

----------------------------------------------------------

ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌

----------------------------------------------------------

முதலாளி வேலைகாரரைப்பார்த்து
டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று

வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது

முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???

----------------------------------------------------------

தேர்வு நிலை ஆசிரியர்: அட்டெண்டர் உடனே போய் பிளம்பரை வரசொல்
அட்டெண்டர்: எதுக்கு சார்
ஆசிரியர்: நிறைய கொஸ்ட்டீன் பேப்பர் லீக் (leakage) ஆகுதுனு கேள்விப்பட்டேன், தரோவாக செக் பண்ணனும்

----------------------------------------------------------

ஒரு இன்டெர்வியூவில், கார் ஓட்டுனருக்கு ஆள் சேர்ப்பு

பாஸ்: உன்னுடைய ஸ்டார்டிங் சேலரி 2500 ருபீஸ்

டிரைவர்: ஒஹ் ரொம்ப நன்றி சார், ஒவ்வொரு ஸ்டார்டிங்க்கும் 2500 ரூபாய், அப்போ கார் ஓட்டுவதற்கு எவ்வளவு சார்?--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்


1.மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)


2. கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

    காதல் என்பது வயசு கொழுப்பு


3. ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10,  நைலான் சேலை ரூ8,  காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.


4. சிங்கம் ரீ மிக்ஸ் டயலாக் - என்னை ரோட்ல பாத்திருப்பே,காலேஜ்ல பாத்திருப்பே,ஆனா ஒயின் ஷாப்ல உக்காந்து தண்ணி அடிச்சு பாத்திருக்கியா?வெறித்தனமா சரக்கு அடிப்பேண்டா,உக்காந்து அடிச்சா ஒரே டைம்ல ஒன்றரை ஃபுல்டா,பாக்கறியா?


5.வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள் 

1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு  3.இரவு சாப்பாடு.


6.மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் "இனிஷியல் உன்னுது,பேபி என்னுது."


 

7. காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
     நனைந்தபின்பு ஜலதோஷம்.


8. அன்பர்களே,100 கோவில்கள் கட்டுவதை விட ஒரு காலேஜ் கட்டுவது சிறந்தது,ஏன் தெரியுமா? கோவிலை விட காலேஜ்லதான் நிறைய ஃபிகரை பாக்க முடியும்.


9.என்னோடு அவள் இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள்,பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்.


10.என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ,  ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000.


11.தீபாவளிக்கு டாஸ்மாக் கடைல பட்டாசு விக்கப்போறாங்களாம்.

அப்போ   பட்டாஸ்மாக் கடைனு சொல்லுங்க.


12.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)

13.நட்புக்கும்,காதலுக்கும்  என்ன வித்யாசம்?

வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கற்ப மூலிகை -கண்டங் கத்திரி

ரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற ஔவையாரின் கூற்றுப்படி மனிதனாய் பிறப்பதே ஒரு மாபெரும் தவமாகும்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த உடலை நோயின்றி பாதுகாப்பது நம் கடமையாகும்.

உடலை நோயின்றி பாதுகாக்க சித்தர்கள் கண்ட வழிமுறைதான் காயகற்பம்.  அதாவது கற்பமென்பது உடம்பினை நோயுறாதபடி நன்னிலையில் வைத்திருந்து நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு நீக்கி பாதுகாப்பது.

இந்த வகையான கற்ப மூலிகைகளில் ஒன்றான கண்டங்கத்திரி பற்றி தெரிந்து கொள்வோம்.

கண்டங்கத்திரி, செடி வகையைச் சார்ந்தது.  எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது.  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகுதியாக காணப்படுகிறது.

இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்

வீசுசுரஞ் சன்னி விளைதோடம் - ஆகறுங்கால்

இத்தரையு ணிற்கா எரிகாரஞ் சேர்க்கண்டங்

கத்திரியுண் டாமாகிற் காண்

(அகத்தியர் குணபாடம்)

பாடல் விளக்கம் - கண்டங்கத்திரி காசம், சுவாசம், அக்கினிமந்தம், தீச்சுரம், சன்னி வாதம், ஏழுவகைத் தோடங்கள், வாத நோய் ஆகியவற்றைத் தீர்க்கும்.

காச சுவாசம் குணமாக

இன்றைய நவீன யுகத்தில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளது.  மேலும் உணவுப் பழக்கங்களாலும் மனித உடல் நோய் எதிர்ப்பு சக்தி குன்றி காணப்படுகிறது.  இதனால் முதலில் மனிதன் பாதிக்கப்படுவது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால்தான்.

உடலில் ஒவ்வாமை உண்டாகி அது நுரையீரலை அடைந்து இரத்தத்தில் கலந்து மூக்கில் நீரேற்றம், நீர் வடிதல், தலைவலி, சைனஸ் போன்றவற்றை உண்டு பண்ணுகிறது.  நாளடைவில் காச சுவாச நோயாக மாறிவிடுகிறது.

கண்டங்கத்திரி சமூலத்தை (இலை, பூ, காய், பழம், விதை, வேர்) நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து அதனுடன் தேன் கலந்து காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் காச சுவாசத்தின்  பாதிப்பு குறைந்து நாளடைவில் குணமாகும்.  அல்லது இதன் பொடியை கஷாயமாக்கி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வரலாம்.  இதனால் தலைவலி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும்.  சைனஸ் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட இது சிறந்த மருந்தாகும்.

சளியைப் போக்க

இருமல், ஈளை, சளி, தொண்டைக்கட்டு நீங்கவும், உடலில் உள்ள சளியைக் குறைக்கவும் கண்டங்கத்திரி கஷாயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.  இந்திய மருத்துவ முறைகளில் இதன் பயன்பாடு அதிகம். இரத்தத்தில் உள்ள சளியை மாற்றும் தன்மை கொண்டது.  ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இருதயக் குழாய்களில் ஓடும் ரத்தத்தின் ஒட்டும் தன்மையை மாற்றி அடைப்புகளை  நீக்கும்.

ஈளை இழுப்பு இருமல் சுவாசகாசம்
மாறும்தானும் கண்டங்கத்திரியாலே..

என்று அகத்தியர் வர்ம காண்டத்தில் கூறியுள்ளார்.  மேலும் காயகற்பமான வாசாதி லேகியம் என்ற திருமேனி லேகியத்தில் கண்டங்கத்திரி முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. ஆஸ்துமா மற்றும் ரத்த அழுத்தத்தையும், நுரையீரல் சளியையும், சுவாசக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளையும் நீக்கும் தன்மை கண்டங் கத்திரிக்கு உள்ளதால்  வாசாதி லேகியத்தில்   சேர்க்கப்படுகிறது.  இதனால் தான்  சித்தர்கள் கண்டங்கத்திரியை காயகற்ப மூலிகை  என்று  அழைக்கின்றனர்.

பசியைத் தூண்ட

மலச்சிக்கலும், அஜீரணக் கோளாறும் நீங்கினாலே மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். இவை நீங்கினால்தான் உடல் புத்துணர்வு பெறும்.

நன்கு பசியெடுக்க குடலில் செரிமான சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.  கண்டங்கத்திரி, செரிமான சக்தியைத் தூண்டும் தன்மை கொண்டது.   கண்டங்கத்திரியின் பழத்தை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால் நல்ல செரிமான சக்தி கிடைக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

பல் வலி நீங்க

பல் வலி, பல் ஈறுகளில் வீக்கம், பூச்சிப்பல், இவற்றால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்க கண்டங்கத்திரி வேரை நிழலில் உலர்த்தி அதனுடன் காயவைத்த புதினா இலைகளைச் சேர்த்து நன்கு பொடியாக்கி அதைக்கொண்டு தினமும் பல் துலக்கினால், அல்லது பல் துலக்கிய பின் இந்த பொடியை பற்களிலும் ,ஈறுகளிலும்  நன்கு தேய்த்து வந்தால் பல்வலி, பல் ஈறு நோய்கள் நீங்கும்.

கண்டங்கத்திரி சமூலத்தை பொடித்து வைத்து அதை கஷாயமாக்கி அருந்தி வந்தால் கழுத்து வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் மூட்டுகளில் உள்ள வலிகளைப் போக்கி , அதன் இறுக்கத் தன்மையைக் குறைக்கும்.

வியர்வை நாற்றம் நீங்க

கண்டங்கத்திரி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து நன்றாக கொதித்த பின் வடிகட்டி ஆறவைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உடலெங்கும் பூசி வந்தால், வெயில் காலங்களில் உண்டாகும் வியர்வை நாற்றம் நீங்கும்.

வெண்புள்ளிகள் மறைய

கண்டங்கத்திரியின் பழத்தை குழைய வேக வைத்து  நன்றாக கடைந்து வடிகட்டி எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி  உடலில் உள்ள வெண்மை நிறப் புள்ளிகள் மீது தடவி வந்தால், வெண்புள்ளிகள் மறையும்.  இது சித்த மருத்துவத்தில் வெண்குஷ்ட நோய்க்கு மருந்தாகச் சேர்க்கப்படுகிறது.

கண்டங்கத்திரி வேரை காயவைத்து பொடித்து, கஷாயம் செய்து அதில் திப்பிலி பொடியும், தேனும் கலந்து அருந்திவந்தால் நீரின் மூலமாக உண்டாகும் தொற்று நோய்கள் விரைவில் குணமாகும்.

கண்டங்கத்திரியை முள் செடி என்று ஓரங்கட்டி விடாமல், அதன் பயனறிந்து தேவைக்கு உபயோகித்து சிறந்த பலனை அடைந்து ஆரோக்கியம் பெறலாம்.--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிக்கலாம் வாங்க !


ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்று எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்ததை அப்படியே தருகிறேன். என்னமா யோசிக்கிறாங்கப்பா! கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு.


1.வாழ்க்கை என்பது பனை மரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!
2. லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். உதாரணம்.
நமீதா எவ்வளவு பெரிய நடிகை ஆனா அவுங்க இவ்வளவு பாப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தானே காரணம்.
3. வகுப்பறை என்பது ரயில் மாதிரி முதல் இரண்டு பெஞ் வீ ஐ பி (VIP) நடுவில் இரண்ட பெஞ் பொது (General) கடைசியில இரண்டும் தூங்கும் பெஞ்!(Sleeper)

கவிதை வடிவில் அதுவும் ஹைகூ வடிவில் யோசித்திருக்காங்க பாருங்க!
4. அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை – எக்ஸாம் ஹாலில்……!
5. 3 G A P A 6 = ?....
யோசிங்க ……
என்னா எடிசனுக்கு போட்டியா யோசிப்பீங்களே! இது கூட தெரியாதா?
விடை: மூஞ்சிய பாரு……
6. வாழ்கையில வெற்றி ன்னா என்னனு தெரியுமா?
அடைமழை பெயும் போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான்,
இன்னுமா புரியலை அட WET TREE!
7. தினந்தோரும் என் பிராத்தனை
எனக்கு எதுவும் வேண்டாம் கடவுளே! என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும் - அது போதும் எனக்கு.

குறிப்பு:-
என்ன செய்ய!, ஒன்னுமே செய்ய முடியாத போது பைத்தியம் போல சரி சிரிச்சிக்கிட்டு இருப்போம்;--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net