Showing posts with label கேலி. Show all posts
Showing posts with label கேலி. Show all posts

Sunday, June 19, 2011

பிட்டு - 8

1. பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்.==========2. பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ?உள்ளே டிபன் வாசமே வரலியே==========3. மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ?என்னவாம் ?பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்==========4. வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. .அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை.==========5. நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ?எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..==========6. டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸைடேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை==========7. டாக்டர் மோசமா... எப்படி ?பேஷண்ட்டைப் பார்த்து, நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்கறாரே ?இதிலென்ன தப்பு ?அதை ரொம்ப ஆச்சரியமாகக் கேட்கறாரே==========
இன்றைய மெகா பிட்டு ஜோக்கு8. திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 6

1. எந்த சூழ்நிலையிலும் அந்த டாக்டர் ஆபரேஷனை நிறுத்தமாட்டார்பேஷண்ட் இறந்துட்டாகூட ஆபரேஷனை முடிச்சுட்டுத்தான் வருவார்==========2. நான் போனவாரம் மெகா சீரியல் பார்த்துகிட்டு இருக்கும்போது என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதுஐயோ அப்புறம் ?அநியாயமா அந்த ஒரு நாள் என்னால சீரியல் பார்க்க முடியாமப் போச்சு!==========3. போன வருஷம் டைரி தரலைன்னு வருத்தப்பட்டீங்களே ..!ஆமாம் சார் இந்த வருஷம் கிடைக்குமா ?இந்தாங்க... போன வருஷத்து டைரி!==========4. எதுக்காகடா திருடன் கிட்டே கல்லாப்பெட்டி சாவியைக் கொடுத்தே ?நீங்கதானே முதலாளி புத்தாண்டு அன்னிக்கி யார் என்ன கேட்டாலும் இல்லை-ன்னு சொல்லக் கூடாதுன்னீங்க!==========5. உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட ஒரு பொண்ணு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம்.ஐயையோ... அப்புறம்...?உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்களாம்==========6. அந்தாளு செருப்பு வாங்கறதுக்குக்கூட ஜோசியரை அழைச்சிட்டுப் போவாரு.எதுக்கு..?ஜோடிப் பொருத்தம் பார்த்து வாங்கறதுக்குத்தான்.==========7. எதுக்குய்யா ஒருத்தன் போட்டோவை மட்டும் இவ்ளோ சின்னதா ஒட்டி வெச்சிருக்கே...?அவன் கரெக்டா மாமூல் கொடுத்துடறான் சார்.==========அப்புறம் இன்றைய மெகா பிட்டு ஜோக்:8. என் மனைவி நான் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஒடி வந்துடுவாஇப்ப எங்க இருக்காங்க ?குளிச்சுகிட்டு இருக்காகூப்பிடுங்களேன் பார்ப்போம்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 5

இது நவநாகரீக யுகம். மேட்சிங் மோகம் ஆண்களை விட பெண்களையே அதிகமாக ஆட்டிப் படைக்குது.சிவப்புக் கலர்ல புடவையும் அதே கலர்ல ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு கிச்சன்லே உட்கார்ந்திருச்சி. புருஷன்காரன் பயந்து போயிட்டான்.இப்படி உட்காராதேடி எம்ப்டி கேஸ் சிலிண்டர்-னு நினைச்சி சிலிண்டர் கொண்டு வர்றவன் தூக்கிட்டு போயிடப்போறhன் அப்படின்னுட்டான்.அந்தம்மாவுக்கு கோபம் வந்திருச்சி. கேஸ் சிலிண்டர்னு சொன்னதுக்குக் கூட இல்லை. எம்ப்டி சிலிண்டர்-னு எப்படிச் சொல்லலாம்-னுதான்.அன்னைக்கு ஒரு வீட்டிலே கணவனும், மனைவியும் சினிமாவுக்குப் புறப்பட்டாங்க.அந்த அம்மா பச்சை சாத்துற படலத்திலே மூழ்கிட்டாங்க. புடவை பச்சை, ஜாக்கெட் பச்சை, வளையல் பச்சை, கம்மல் பச்சை, ரிப்பன் பச்சை, நெக்லஸ் பச்சை கைப் பை பச்சை.திருப்தி ஏற்படலை செருப்பு பச்சையா அமையலை. நல்லவேளை அவரோட ஹவாய் செருப்பு வார் கொஞ்சம் பச்சை அதைக் கொடுத்து சமாளிச்சு நிம்மதியா பெருமூச்சு விட்டார் கணவர்.பஸ் ஸ்டாப்புக்கு வந்ததும் பிரச்சினை பெரிசாயிடுச்சி. சிவப்பு கலர்லே டவுன் பஸ் வந்திச்சி. ஏறுவோம்னார் அவர். வேணாம், பச்சை கலர் பஸ் வரட்டும்-னாங்க அந்தம்மா.அந்த பஸ் நாம போற தியேட்டருக்குப் போகாதும்மாஅப்போ தியேட்டரை மாத்துங்க அப்படின்னாங்களே பார்க்கலாம்இந்த மேட்சிங் மோகம் வந்ததினாலே தான் ஜிமிக்கி எல்லாம் இப்போ அமுக்கியா மாறிடுச்சி. புடவைக்கு மேட்சா ஒண்ணை வாங்கி காதுலே அமுக்கிடறாங்க.புடவை எடுத்து முடிக்கவே ஒரு யுகம் ஆகும். அதுக்கு மேட்சா ஜாக்கெட் பிட் எடுக்க அலைவாங்க. அது அதைவிடக் கொடுமையானது. கடைக்காரர் அந்தப் புடவையைக் கையிலே வச்சிகிட்டு ஜாக்கெட் துணி இருக்கிற பீரோவிலே தீபாராதனை காட்டுற மாதிரி வச்சி வச்சி எடுப்பார் பாருங்க ரொம்ப வேடிக்கையா இருக்கும்.இப்படித்தான் ஒரு ஜாக்கெட் பிட் எடுக்க புருஷனும், பெண் ஜாதியும் கடை கடையா ஏறி இறங்கினாங்க.கட்டியிருக்கிற புடவைக்கு மேட்சா ஒரு ஜாக்கெட் துணி கொடுங்கன்னு அந்த அம்மா கேட்க, கடைக்காரர் ஒவ்வொரு பிட்டா எடுத்து இந்த அம்மா மேலே வச்சி வச்சி பார்க்க, புருஷன்காரன் மனசு படபடன்னு துடிக்க ஆரம்பிச்சது.கடைசியிலே கடைக்காரர், அம்மா உங்களுக்கு எதுவுமே மேட்ச்சா அமையலை-ன்னு சிம்பாலிக்கா சொல்ல, ஆமா அது சரிதான்னு சொல்லி அந்தம்மா புருஷனைத் திரும்பிப் பார்த்து பெருமூச்சு விட ஒரே ரகளைதான் போங்க.ஒரு நடிகையிடம் ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார்.உங்களுடைய கூந்தல் கருமையாக, பளபளவென்று நீளமாக இருக்கிறதே, நீங்கள் உங்கள் கூந்தலை எப்படி பராமரிக்கிறீர்கள் ?ஓ... அதுவா. காலையில் குளிக்கும்போது நன்றாக ஷாம்பூ போட்டு கூந்தலைக் கழுவுகிறேன். பிறகு ஃபேன்லே காய வைக்கிறேன். பகலெல்லாம் தூசு தும்பு படாமல் பத்திரமாகப் பாதுகாக்கிறேன். இரவு படுக்கப் போகும்போது மட்டும் கழட்டி ஆணியிலே மாட்டி விடுகிறேன்.நிருபர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். பின்னே சவுரி முடி அப்படித்தானே இருக்கும். அதுக்கு அந்தப் பெயர் வந்ததே பொருத்தம்தான். சவுரியம்னே வச்சிக்கலாம், சவுரியமில்லாட்டி கழட்டி ஆணியிலே மாட்டிரலாம்.ஓரு வீட்டிலே புருஷன் தன் பெண்டாட்டிகிட்டே, இந்தாடி இந்த சவுரி முடி நானே என் கையாலே தயாரிச்சது வச்சுக்கோ என்றார்.அதுக்கு அந்த அம்மா இவ்வளவு முடி வச்சி எப்படி தயாரிச்சீங்கன்னு ஆச்சரியமா கேட்டுது.தினம் நீ போடுற சாப்பாட்டிலே கிடக்கிற தலைமுடியை எடுத்து கலெக்ட் பண்ணித்தான் இது செஞ்சேன் அப்படின்னார் அவர்.இப்போ சவுரி முடி எதுக்கெல்லாம் பயன்படுது தெரியுமா ? நாமெல்லாம் பஸ்சிலே இடம் பிடிக்க கைக்குட்டையைப் போடுவோம். துண்டைப் போடுவோம். ஒரு அம்மா சவுரிமுடியைப் போட்டு வச்சிருந்திச்சி. அப்புறம் கூட்டத்திலே முண்டியடிச்சி பஸ்சுக்குள்ளே ஏறிப் போய் சீட்டிலே உட்காரப் போனா பக்கத்து சீட்டு அம்மா உட்கார விடலை. ஏன்னா அடையாளம் மாறிப்போச்சே.பஸ் பயணத்திலே இன்னொரு சம்பவம். ஆணும், பெண்ணுமா பல பேரு பஸ்சிலே கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க ஸ்டாப் வந்ததும் டிரைவர் சடன் பிரேக் போட்டார். பஸ் குலுக்கத்திலே பலபேரு தடுமாறி மேலே கம்பியைப் பிடிச்சிக் கிட்டாங்க. சிலபேர் குழப்பத்திலே முன்னாடி நின்ன பொண்ணுங்களோட ஜடைகளைப் பிடிச்சிக்கிட்டாங்க. ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்க. ஜடைகளெல்லாம் அவங்க கையிலே இருக்க, பொண்ணுங்க இறங்கிப் போயிட்டே இருக்காங்க.ஒரு காலத்தில் பெண்களோட கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா இல்லையான்னு ஆராய்ச்சி நடந்துச்சாம். இப்போ கூந்தலே இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி நடத்த வேண்டியிருக்கலாம். அந்த காலத்திலே பெண்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டா தரை வரைக்கும் வந்து விழுமாம். இப்போ தரையிலே விழுந்துடுதாம்.முடி மட்டுமா போலி ? ஒரு காதலன் தன்னோட காதலியோட பல் அழகிலே மயங்கி உனக்கு முத்துப் போல் பல்லு-ன்னு மூச்சுக்கு மூச்சு சொல்ல ஆரம்பிச்சிட்டான். அவள் ஒருநாள், அட இருய்யா-ன்னு கழட்டி கையிலே கொடுத்துட்டா.பெண் பார்க்கப் போன இடத்துல பையனோட அம்மா சீக்கிரம் பொண்ணைக் கூப்பிடுங்க-ன்னு சொன்னதும் பெண்ணோட அப்பா படபடன்னு சொல்ல ஆரம்பிச்சார்.கொஞ்சம் பொறுங்க. சாயந்தரமா வர்றோம்னு சொல்லிட்டு இப்படி காலையிலேயே வந்துட்டீங்க. அவள் கண் டாக்டரையும், பல் டாக்டரையும் கன்சல்ட் பண்ணிட்டு, அப்படியே பியூட்டி பார்லர்லே ஹேர்டையும் பண்ணிட்டு வந்துடறேன்னு போனா. இப்ப வந்திடுவா. மறுநிமிடம் பொண்ணு பார்க்க வந்தவங்க அந்த இடத்திலே இல்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 3

1. பாடகர் முன்னாலே ஒருத்தர் டபரா செட்-டைக் காட்டுறாரே... ஏன் ?காபி ராகத்துலே பாட்டு வேணுமாம்==========2. புது வருஷ தள்ளுபடி விற்பனைல உங்க மனைவிக்கு ஏதாவது வாங்கி கொடுத்தீங்களா...?மிக்ஸி வாங்கினேன்...உங்களுக்கு சரி, உங்க மனைவிக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கலையா.. ?==========3. இன்றைய டான்ஸ் புரோக்ராமுக்கு அந்த அரசியல்வாதியைத் தலைமை தாங்கக் கூப்பிட்டது தப்பாப் போச்சு.ஏன் ?ஜதி ரொம்ப முக்கியம்னு சொல்றதுக்குப் பதிலா ஜாதி ரொம்ப முக்கியம்னு சொல்றார்.=========4. சின்ன ஆபரேஷன்தான்... பயப்பட வேண்டாம்.டாக்டர் பெரிய ஆபரேஷன்னு சொன்னாரே...?டாக்டருக்கு இது பெரிய ஆபரேஷன்!==========5. நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு!==========6. டாக்டர், பயங்கர முதுகுவலி... என்ன பண்ணலாம்...?தைலம் அப்ளை பண்ணுங்க...அப்படியும் வலி போகலேன்னா...?லீவுக்கு அப்ளை பண்ணுங்க.==========7. அந்த டாக்டர் பேஷண்ட்டுகிட்டே நைஸh பேசி, ஐஸ் வெச்சு ஆபரேஷனுக்கு முன்னாடி ஃபீஸை வாங்கிடுவாரு!ஏன் அப்படி..?ஆபரேஷனுக்கு அப்புறம்னா, அவரால ஐஸ் மட்டும்தான் வைக்க முடியும்... ஃபீஸை வாங்க முடியாதே!==========
இன்றைய மெகா ஜோக்:
8. ஒருத்தரோட மனைவி தன் கணவர்கிட்டே, "எதிர்த்த வீட்டுக்காரரு அவரோட மனைவிக்கு தினமும் ஒரு புடவை வாங்கித் தரார். நீங்களும் இருக்கீங்களே" ன்னு சலிச்சிக்கிட்டாங்க.அதுக்கு அவர், "எனக்கும் வாங்கிக் குடுக்கலாம்னு ஆசைதான். ஆனா அவங்க வாங்கிக்குவாங்களோ மாட்டாங்களோன்னுதான் பயமாயிருக்கு" அப்படின்னிருக்கார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 1

1. கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?என்ன வித்தியாசம் ?மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது==========2. நகை போடாம இருக்கிறதே மேல்ஏன் ?நகை போடுவது ஃபீமேல்==========3. தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?என்ன செய்வாங்க ?முழிச்சிருப்பாங்க==========4. தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?ஏன் ?அதைச் சுடுகிறார்கள்==========5. ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?என்ன ?இறங்கி==========6. ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடுநீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?==========7. உங்க ஃபேமிலி பேக்ரவுண்டைப் பத்திச் சொல்லுங்க...எனக்கு ஃபேமிலியே கிடையாதுங்க... பேக் க்ரவுண்டும் இல்லை ஃபிரண்ட் க்ரவுண்டும் இல்லை வாடகை வீட்ல இருக்கேன்.==========இன்றைய மெகா பிட்டு ஜோக்:8. இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...அவ்வளவு கஷ்டமான கதையா ?ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்...

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net