Wednesday, November 17, 2010

காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ? - எழுத்துச்சித்தரின் பதில்கள்



ஐயா, உங்கள் பார்வையில் …..

1) அழகு என்பது என்ன ?


கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு .அறிவும் , அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல.மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.

2) காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ?

மிக மிக அவசியம். வேறு செய்வதற்கு இங்கு என்ன இருக்கிறது. ஆண்-பெண் நேசிப்பில் தான் உலகம் இயங்குகிறது. நேசிப்பை கொஞ்சம் கவித்துவமாக்கினால் ஏற்படுவது காதல். உடல் இச்சையை நெறிப்படுத்தி உள்ளத்தை அறிய முற்படுவது தான் காதல். நேர்மையாக இருப்பின் காதல் மிகுந்த பலம் தரும்.

3) கடவுள் உண்டா ?

உண்டு . நிச்சயம் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் எல்லா அசைவுகளையும் பார்க்கும் போது அதை இயக்குகின்ற சக்தியை கவனிக்க நேரிடுகிறது. அறிய வேண்டியது அதிகமிருக்கிறது என்பதை உணர்ந்தால் கடவுள் தோன்றுகிறார். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை கடவுளை மறைக்கும்.

4) பணம் முக்கியமா ?

முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.

5) அரசியலில் ஈடுபடுவீர்களா ?

அரசியலில் ஈடுபட எதையும் தாங்கும் இதயம் வேண்டும். என்னால் சிலவற்றைத் தான் தாங்க முடியும். சில விஷயங்களிலிருந்து விலகியிருக்கத் தான் விருப்பம். உதாரணத்திற்கு மேடைப் பேச்சு எனக்கு விருப்பமில்லாத
விஷயம். பேசாத அரசியல்வாதி எங்கேனும் உண்டா.

6) படிப்பு என்று எதைச் சொல்வீர்கள்?

வெறும் ஏட்டுக் கல்வி எதற்கும் உதவாது. அனுபவ அறிவும், ஆன்றோர் வாக்கும் எழுதப் படிக்கத் தெரிந்தவரை நன்கு உயர்த்தும். ஏட்டுக் கல்வியும், அனுபவ அறிவும், ஆன்றோர் சொல்லும் ஒன்று கலந்து உள்ளே ஏற்படுத்தும் தெளிவே படிப்பு. இந்தத் தெளிவு தான் வாழ்க்கைக்கு கைவிளக்கு.

7) வரலாறு பாடமாக படிப்பது அவசியமா?

அவசியம். பாடமாகப் படிக்க ஆரம்பித்து , வரலாறு அறிவதில் ருசி ஏற்பட்டு, அதன் மூலம் ஏற்படும் பிரமிப்பை அனுபவிப்பது நல்லது. என் தகப்பன்,நான், என் பிள்ளை, பேரன் இவர்கள் மட்டுமே உலகம் என்று கொள்வது பேதமை. பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு மனிதர் மிக நாகரிகமாக வாழ்ந்ததற்கு அடையாளங்கள் உள்ளன. வரலாறு புரியும் போது இனி வருவது பற்றி கவலையும் ஏற்படும். இந்த கவலையே அடுத்த தலைமுறையினரின் மீது அக்கறையாக மாறும்.


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை

ஆனாலும் நம்ம கட்சித் தொண்டர்களோட
விசுவாசத்துக்கு அளவே இல்லாம போச்சு!
ஏன் என்னாச்சு?
தலைவர் தூக்கத்துலே உளறினாக்கூட. விசிலடிச்சு
கை தட்டறாங்க…!     
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மணமக்களை வாழ்த்திப் பேச, போதையிலே
இருந்த தலைவரை  அழைச்சது தப்பாப் போச்சா,
ஏன்?
'திருமணம்'ங்கிறது ஆயிரம் காலத்து 'ஒயின்'ங்கறாரே!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னது..என் தொகுதியிலே தண்ணீ கஷ்டமா?
ஆமா தலைவரே…ஏழைகள் வாங்கிக் குடிக்க
முடியாதபடி அதிக ரேட் சொல்றாங்க..!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

''நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே
போய் கேட்கணும்?''
எனக்கு வந்திருக்கிறது
பரம்பரை வியாதின்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க''
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
''அதோ போறது தலைவரோட தசாவதாரம்!''
''என்ன சொல்றே?''
''தலைவரோட பத்தாவது தாரம்!''
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

''படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்…கடைசியில் ஹீரோ
அந்தக் காரை உடைக்கிறார்!''
'ஏன்?''
''சஸ்பென்ஸை உடைக்க வேண்டாமா?''
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கபாலிக்குத் திமிர் அதிகமாயிடுச்சுன்னு எப்படி சொல்றே?
அவனோட கேஸை ஓய்வு பெற்ற நீதீபதிதான் விசாரிக்கணுமாம்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உன புருஷன் மகா குடிகாரன்னு எப்படிச் சொல்றே?
மனுஷன் படைச்சதிலேயே உருப்படியான ரெண்டு விஷயம்…
ஒண்ணு சரக்கு, இன்னொன்னு ஊறுகாய்'னு வசனம் பேசறாரே..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹைய்யா…! …ஜாலி…தேர்தல் ரத்தாயிடுச்சுன்னு நினைக்கிறேன்..!
தலைவரே, மழைக்கு எல்லாம் கிரிக்கெட் விளையாட்டு மாதிரி தேர்தலை ரத்து செய்யமாட்டாங்க..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டார்லிங்! நம்ம மேரேஜ் இப்ப வேணாம்.
ஆடி போய் ஆவணி வந்தா…நான் 'டாப்'பா
வந்துருவேன்!
ம்ஹூம்..அதுக்குள்ளே நமக்கு 'பாப்பா'
வந்திடும் டியர்…!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கபாலி மேல நம்ம கான்ஸ்டபிடள்ங்க ரொம்ப
பிரியமா இருக்காங்கன்னு எப்படி சொல்றே?
அவனோட பிறந்த தினத்தை 'திருடர்கள் தினம்' னு
அறிவிச்சிருங்காங்களே..!
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை

ஐயா சாமிகள , இந்த மடல் ஏற்கனவே வந்துடுச்சுன்னு நினைக்கறவங்க , பார்த்தவுடனே அழிச்சிடுங்க ...

1. "தலைவர்  ரொம்ப  நேர்மையானவர்னு  எப்படி  சொல்றே?"

"கோர்ட்ல  சத்தியப்  பிரமாணம்  எடுக்கறப்ப  நான்  சொல்வதெல்லாம்  பொய்; பொய்யைத்  தவிர  வேறில்லைன்னு  சொன்னாரே?"



2. "கேஸ் (GAS) கம்பெனி  இண்டர்வ்யூல  ஏன்  செலக்ட்  ஆகலை?"

"என்னைப்  பற்றி  ஸ்பெஷலா  ஏதாவது  சொல்லச்  சொன்னப்ப  எனக்கு  கற்பூரபுத்தின்னு  சொன்னேன்.  அய்யய்யோ!  கம்பெனி  பத்திக்குமோனு  பயந்துட்டாங்க"



3. "இப்போதெல்லாம்  தெருக்கூத்துக்  கலை  முற்றிலும்  அழிந்து  விட்டது.  இதைக்  காப்பாற்ற  நமது  தலைவர்  முன்  வர  வேண்டும்னு  தலைவர்கிட்ட  சொன்னது  தப்பா  போச்சு"

"ஏன்?"

"எங்க  கட்சில  செயற்குழு  கூட்டம்  நடக்கறப்ப  வாங்க.  ஏகப்பட்ட  கூத்து  நடக்கும்னு  சொல்றார்!"



4. "ம்ன்னர்  எப்படி  எதிரிப்படையை  பின்  வாங்க  செய்தார்?"

"நம்  நாட்டில்  அனைவருக்கும்  சிக்குன்குன்யா.  இங்கு  வந்தால்  உடனே  பரவிக்  கொள்ளும்  என்று  புரளி  கிளப்பினார்"



5. "பெரிய  கட்சித்  தலைவரா  வரப்போறான்னு  இப்பவே  எப்படி  ஆரூடம்  சொல்றீங்க?"

"100/100னு ( நூத்துக்கு நூறு) சிலேட்ல  இவனே  மார்க்  போட்டுக்கிட்டானே?"



6. "நைட்  10.30  மணிக்கு  தலைவரோட  மேடை  பேச்சு  லைவ்-லேபோடுறாங்க"

"அது  காமெடி  டைமாச்சே?"

"இது  மட்டும்  என்ன?"



7. "என்  மனைவி  சமையல்  பண்ணினா  வாசம்  கமகமன்னு  ஆளையே தூக்கிடும்"

"இல்லையே!  அதைச்  சாப்பிட்டாத்தான்  ஆளைத்  தூக்க  வேண்டிவரும்னு  சொன்னாங்க"



8. "மன்னா!  தங்கள்  மெய்க்காப்பாளர்  கல்யாண  மண்டபத்தில்  மொய்  எழுதுற  இடத்துல  எதுக்கு  நிற்கறாரு?"

"அமைச்சரே!  அவர்தான்  இப்போதைய  மொய்க்காப்பாளர்"



9. "நண்பர்களாகப்  பிரிகிறோம்னு  அறிக்கை  விட்டது  தப்பாப்  போச்சு"

"ஏன்  தலைவரே?"

"அப்போ...  இத்தனை  நாளா  எதிரிகளா  சேர்ந்து  இருந்தீங்களா?ன்னு  நிருபர்கள்  கேட்கறாக்க!"



10. "தலைவரே!  மேடைல  பேசறப்ப  'அன்புக்கு  நான்  அடிமை'ன்னு  சொன்னீங்களே?"

"ஆமா...  அதுக்கென்ன?"

"உங்க  சம்சாரம்  பேரு  அம்புஜம்தானே?  அன்பு-ன்னு  பேரை  மாத்திட்டாங்களா?"



11. "காமெடி  படத்தைப்  பார்த்து  ஏன்  அவர்  அழறாரு?"

"அவரு  அந்தப்  படத்தின்  புரொடியூஸர்"



12. "அரசு  விழாவில்  அரசியல்  பேச  மாட்டேன்னு  அறிக்கை  விட்டேன்!"

"என்ன  ஆச்சு  தலைவரே?"

"பிரஸ்காரங்க  அதை  எடிட்  பண்ணி,  இனி  விழாவில்  பேச  மாட்டேன்னு  சொன்னதா  போட்டுட்டாங்க!"



13. "நீயும்,  உன்  ஆள்  மோஹனாவும்  டெய்லி  பீச்சுல  3  மணி  நேரம்  இருக்கீங்க.  அப்படி  என்னதான்  பேசுவீக்க?"

"நாங்க  பேசுறோம்னு  யார்  சொன்னது?"



14. "என்  மனைவி  கோபமா  இருக்கறப்ப,  ஒரு  வரி  பேசுனா  போதும்.  அடங்கிடுவா."

"வாயை  மூடுனு  சொல்வியா?"

"ம்ஹூம்.  பேசாம  இருந்தா  ஒரு  நெக்லஸ்  வாங்கித்  தர்றேன்  என்பேன்."



15. "வரும்  முன்  காப்போம்  திட்டத்தை  தலைவர்  ஆதரிக்கறாராமே?"

"ஆமாம்!  இன்கம்  டாக்ஸ்  ரெய்டு  வரும்முன்  சொத்துக்களைக்  காப்போம்  திட்டமாம்  அது!"



16. நடிகை   - "காய்கறியை  என்  கையால  வாங்கலாம்னு  மார்க்கெட்  போனேன். ஆட்டோகிராஃப்  வேணும்னு  யாரும்  என்கிட்டே  கேட்கலை.  யாரும்  கண்டுக்கலை."

"மார்க்கெட்  போனா  கண்டுக்க  மாட்டாங்க."

டிஸ்கி 1  - டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 2- மார்க்கட் போன நடிகை ஜோக் தனி,தலைவர் ஜோக் தனி.ரெண்டையும் சேர்த்து  ஏதோ கிசு கிசு என வந்து ஏமாந்து கோபப்பட்டாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. ( டேய்,பருப்பு,எதுக்குமே நீ பொறுப்பு இல்லைன்னா எதுக்கு உனக்கு

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இதய நோய்க்கான முக்கிய மருந்துகள்

இதய நோயளிகளுக்கு, அவர்களுக்கு ஏற்படடுள்ள நோயைக் குணப்படுத்துவதற்கான பல்வேறு சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன. இதய நோய்களைக் குணப்படுத்த எத்தனைவிதமான கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில மருந்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட சில மருந்துகளை இங்கே பார்ப்போம்.
இந்த மருத்தின் பெயர், அதில் உள்ள மருந்துப் பொருள்கள் , எந்தெந்த இதய நோய்களுக்கு இம்மருந்து பயன்படுகிறது என்பது உள்ளிட்ட பல தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

டில்டியாஸெம்:
இது மாத்திரைகளாகவும், ஊசி மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது.இந்த மருந்து, செல்களுக்குள் கால்சியம் அயனிகள் கடத்தலைத் தடுக்கிறது. இதயத்திலும் ரத்த நாளங்களிலும் இந்த மருந்து செயல்படும். இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, ரத்த  நாளங்களை விரிவடையச் செய்வது, போன்ற பல பணிகளைச் செய்கிறது இந்த மருந்து.மேற்கூறிய பண்புகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்கப்ப பயன்டுத்துவடன், மாரடைப்புக்கான முக்கியமான மருந்தாகவும் இது பயன்படுகிறது.

அட்டார்வஸ்டேட்டின்:
இது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய மருந்து. இந்த மருந்து, உடலில் ஒரு நொதியின் செயல்பாடு மூலம் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.இந்த மருந்து ஆஸ்பிரின் மருந்தோடு சேர்ந்தும், பிற ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளோடு சேர்ந்தும் தயாரிக்கப்படுகிறது.இது, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிற காரணங்களால் ஏற்படும் மிகை ரத்த கொலஸ்ட்ராரைக் குறைக்கவும் பயன்படுகிறது.

டிசாக்ஸின்:
இது, இதய செயலிழப்பைத் தடுக்கப் பயன்படும் ஒரு முக்கியமான மருந்தாகும்.இதய 'டானிக்' என்று இந்த மருந்து அழைக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் ஏற்படும் இதய செயலிழப்பைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, இதய வால்வு நோய்கள், மாரடைப்பு, இதயத் தசை நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் இதய பாதிப்பையும் அதனால் உண்டாகக்கூடிய இதய செயலிழப்பையும் தடுக்கிறது. மேலும், இதயம் சீரில்லாமல் துடிப்பதையும் இம் மருந்து கட்டுப்படுத்துகிறது.

ஸிம்வாஸ்டேட்டின்:
இந்த மருந்து, உடலில் செயல்படும் ஒரு முக்கிய நொதியின்  செயல்பாட்டைத் தடுக்கிறது. இதன் மூலம் விணிக்ஷிகிலிளிழிமிசி என்ற அமிலம் சுரக்காது. இதன் காரணமாக, ரத்தத்தில் 'கொலஸ்ட்ரால்' அதிகமாக ஏற்படுவது தடுக்கப்படும். மேலும், ரத்தத்தில் டிரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கிறது.மேற்கூறிய பண்புகளால், ரத்ததில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு, கொலஸ்ட்ராரைக் குறைக்கத் தரப்படுகிறது. இது தனியாகவோ, பிற மருந்துகளோடு சேர்த்தோ கொடுக்கப்படுகிறது.

அமைலோடீப்பின்:
இந்த மருந்து, கால்சியம் அயனிகளைத் தடை செய்யக்கூடிய ஒரு முக்கியமான மருந்தாகும். இந்த மருந்தால், இதய நாளங்கள் விரிவடையும். இதயத்தின் பளு குறையும். ரத்த அழுத்தமும் குறையும்.இந்த மருந்தின் செயல்பாட்டல், மிகை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்தாகப் பயன்படுகிறது. இதய ரத்தநாளம் திடீரென சுருங்கி ஏற்படும் இதய பாதிப்புக்கும், நெஞ்சு வலிக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது.

அட்டினாலால்:
இந்த மருந்து, உடலில் உள்ள பீட்டர் ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும்.
இந்த மருந்து, அட்ரீனல் சுரப்பி ஹார்மோன் செயல்பாட்டைத் தடுக்கும். இந்த மருந்தின் செயல்பாட்டால் இதயத் துடிப்பு குறையும். இதயத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு குறையும். இதன் காரணமாக, இதயத் சுமையும் (வேலைப்பளுவும்) குறையும். ரத்த அழுத்தமும் குறையும்.இதய நோயாளிகளுக்கு, குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, மிகை இதயத் துடிப்பு உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும், இதயத்தசை நோய்கள், அட்ரீனல் சுரப்பி நோய்கள், கை, கால் நடுக்கத்துக்கும் சிறந்த மருந்து இது.

ஃபலோடீபைன்:
இது, கால்சியம் அயனிகளை செல்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கக்கூடிய ஒரு முக்கியமான மருந்தாகும். இந்த மருந்து, இதயத்திலும், ரத்த நாளங்களிலும் செயல்படுகிறது. இதனால், இதயம் சீராகச் செயல்பட முடியும். ரத்த அழுத்தமும் குறையும்.
இதய நோய்களால் ஏற்படும் இதய செயலிழப்புக்கு மருந்தாக பயன்படும் இது, இதய பாதிப்பால் ஏற்படும் நெஞ்சு வலியைக் குறைக்கப் பயன்படுகிறது.

லேபீட்டலால்:
இந்த மருந்து, ஆல்பா மற்றும் பீட்டா ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தும் மருந்தாகும். இவ்வாறு, இதயத்தில் உள்ள நரம்பிழை ஏற்பிகளில் இந்த மருந்து செயல்படுவதால், இதயத் துடிப்பு குறைகிறது. இது, ரத்த அழுத்தையும் குறைக்கிறது.ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். இது, குறிப்பாக கர்ப்பிணிகளுக்குப் பயன்படுகிறது.

அம்யோடரோன்:
இந்த மருந்து, இதயத் துடிப்பு தொடர்பான நோய்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இது, இதய மின்னோட்டத்தை ஏற்படுத்தும் நரம்பிழைகளில் செயல்பட்டு, அங்கு மின்னோட்டக் கடத்தலைக் குறைக்கிறது. இதனால், இதய மின்னோட்டத்தில் தாமதம் ஏற்படும். இதன் காரணாக, இதய மின்னோட்டத்தில் தாமதம் ஏற்படும். இதன் காரணமாக, இதயத் துடிப்பு குறைந்து, இதயம் சீரில்லாமல் துடிப்பது கட்டுப்படுத்தப்படும்.
இதய மேல் அறை சீரில்லாமல் துடிக்கும் இதய பாதிப்புக்கும், கீழ் அறை சீரில்லாமல் துடிக்கும் இதய பாதிப்புக்கும் சிறந்த மருந்து இது.

கிளிசரைல் டிரைநைட்ரேட்:
இது, 'நைட்ரேட்' வகையைச் சேர்ந்த மருந்தாகும். இது, இதய ரத்த நாளங்களில் செயல்படும். ரத்த நாளங்களின் மெல்லிய தசையை விரிவடையச் செய்யும். இதன் மூலம், ரத்த நாளத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கி, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும், இது ஆவி மருந்தாகவும், தோலில் பூசும் களிம்பு மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது. இதய ரத்த நாள அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு, உடனடியாகக் கொடுத்து ரத்த அடைப்பை நீக்குவதற்கு இந்த மருந்து பயன்படுகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.

குயூனீடின்:
இது, நீண்ட காலமாகவே இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, இதய மின்னோட்டத்தைத் தடை செய்கிறது. இதன் மூலம், இதயம் சீரில்லாமல் துடிப்பது தடுக்கப்படுகிறது.இதய மேல் அறை சீரல்லாமல் துடிப்பது, கீழ் அறை சீரில்லாமல் துடிப்பது, தன்னிச்சை இதயத் துடிப்புகள் போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்து.

டிஸ்ஸோபைரமைட்:
இதுவும் இதய நோயாளிகளுக்கான ஒரு முக்கியமான மருந்து. இது, இதயத்தைப் பாதித்துஅங்கு மின்னோட்டத்தை நீட்டிகிறது. இதன் மூலம், இதயத்தின் மேற்பகுதியில் தொடங்கும் மின்னோட்டம் இதய கீழ்ப்பகுதிக்கு வருவதற்குத் தாமதமாகும். இதனால், இதயம் சீரில்லாமல் துடிப்பது தடுக்கப்படும். இதயம் சீரில்லாமல் துடிக்கும் பாதிப்புக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

ஸ்டிரப்டோகைனேஸ்::
ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரல் படிந்து அதனால் ஏற்படும் அடைப்பைக் கரைக்க உதவும் முக்கியமான மருந்து இது.ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளில் உள்ள 'பிளாஸ்மினோஜின்' என்ற பொருளை 'பிளாஸ்மின்' என்ற பொருளாக மாற்றுகிறது. இந்த பிளாஸ்மின் தனித்தனியாகப் பிரிந்து பல்வேறு புரதப் பொருளாக மாறிவிடுவதால், அடைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இதனால் இதயத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்படுகிறது.இந்த, மருந்து, ரத்த நாளங்களில் உறைந்த ரத்தத்தைக் கரைத்த உதவுகிறது. குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, உடனடியாக இதய றாள அடைக்பைக் கரைக்க இது ஊசி மருந்தாகப் போடப்பபடுகிறது. இதய அவசர சிகிச்சைப் பிரிவில் (மி.சி.சிஹி.) சேர்க்கப்படும் நோயாளிக்குப் போடப்பட்டு உயிர்காக்க உதவும் முதல் ஊசி இதுதான். மேலும், நுரையீரல் ரத்த நாள அடைப்பு, கால் பகுதி ரத்த நாள அடைப்பு ஆகியவற்றைக் கரைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.

விரப்பமில:
இந்த மருந்து, கால்சியம் அயனிகளை செல்லுக்குள் செல்லவிடாமல் தடுக்கக்கூடியது. இது, இதய மின்னோட்ட செல்களிலும் தடையை ஏற்படுத்தும். இதன் மூலம், ரத்த நாளங்களில் ஏற்படும் சுருக்கம் தடுக்கப்படுகிறது. இந்த மருந்து இதயத் துடிப்பைக் குறைப்பதுடன், இதயத்துக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்தும்.மாரடைப்பு, இதயம் சீரில்லாமல் துடிப்பது உள்ளிட்ட பல இதயப் பாதிப்புகளுக்கும் மருந்தாகப் பயன்டுகிறது.

நிப்பீடிபைன்:
இது, இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, கால்சியம் அயனிகளின் வினைகளைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதனால், தசைப் பகுதியில் உள்ள செல்களுக்குள் கால்சியம் சத்து நுழைவது தடுத்து நிறுத்தப்படும்.இந்த செயல்பாட்டல், இதயத்தின் ஆக்ஸிஜன் தேவையும் குறைகிறது. மேலும், இதயத்துக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும் ஏற்படுத்தும். தகட்டணுக்களின் சேர்க்கையையும் கட்டுப்படுத்தும்.

மெட்டோபுரலால்:
இந்த மருந்து, பீட்டர்&1 நரம்பிழை ஏற்பிகளில் மின்னோட்டத்தைத் தடை செய்யும் உதவும் மருந்தாகும். இந்த மருந்து ரத்தத்தில் 'ரெனினின்' அளவையும் குறைக்கிறது. மேலும், இதயத் துடிப்பையும், இதயத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவையும் குறைக்கிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிற மருந்துகளோடு சேர்த்து இதயப் பாதிப்பைக் குறைக்கப் பயன்படுகிறது.

புரோபுரானாலல்:
இந்த மருந்து, பீட்டா நரம்பிழை ஏற்பிகளில் மின்னோட்டத்தைத் தடை செய்கிறது. இத்துடன், ரத்தத்தில் 'ரெனினின்' என்ற பொருளின் அளவையும் குறைக்கிறது. இது தவிர, ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும், கை, கால், நடுக்கத்தையும் தடுக்க உதவுகிறது.

நிகோரான்டீல்:
இது, இதய நோயளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்து. ரத்தக் குழாய்களின் மெல்லிய தசைகளை விரிவடையச் செய்யும் இந்த மருந்து, இதயத்துக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவற்றுக்குச் சிறந்த மருந்து. இதய ரத்த நாளப் பாதிப்பால் ஏற்படும் நெஞ்சு வலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

புரவாஸ்டாட்டின்:
இந்த மருந்து, ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கப் பயன்படும் ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, ஒரு நொதியின்  செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம், ரத்தத்தில் 'கொலஸ்ட்ரால்' அதிகமாவதைத் தடுத்துவிடும்.

குளோபிடோக்ரீல்:
ஆஸ்பிரின் மருந்தைப் போல் செயல்படக்கூடிய மருந்து இது. ரத்தத்தில் உள்ள தகட்டணுக்களின் சேர்க்கையைத் தடுத்து, ரத்த உறைதலைத் தடுத்து நிறுத்துகிறது.இந்த மருந்து தனியாகவோ அல்லது ஆஸ்பிரின் மருந்துடனோ சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்கப்பயன்படும் இது, இதய நோயாளிகளுக்கான சிறந்த மருந்து. இந்த மருந்து ரத்த உறைதலைத் தடுப்பதால், மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்டாமல் தடுக்கிறது. இந்த மருந்தையும், ஆஸ்பிரின் மருந்தையும் பயன்படுத்தும் போது, வயிற்றில எரிச்சல் ஏற்படும். ஆகவே, குடற்புண் .... பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஜெம்ஃபைட்ரோஸில்:
இந்த மருந்து, இதயத்தில் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கிய மருந்தாகும். இது, ரத்தத்தில் எல்.டி.எல் டிரைகிளிசரைடு போன்ற கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. அதே நேரம் இதயத்துக்கு தன்மை விளைவிக்கும் ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.இதன் மூலம், ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, இதய நோய்கள், ரத்தக் குழாய் நோய்கள் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன.இந்த மருந்தை, தனியாகவோ அல்லது பிற கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளுடனோ சேர்த்துக் கொடுக்கலாம். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

ஆஸ்பிரியன்:
நீண்ட காலமாவே, பல்வேறு நோய்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைவலிக்கு அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சிலர் உடல் வலிக்குப் பயன்படுத்துவார்கள். இது, ரத்தத்தில் உள் தகட்டணுக்களின் சேர்க்கையைத் தடுத்து நிறுத்துகிறது.கெட்ட அணுக்களின் சேர்க்கையைக் குறைப்பதில் சிறந்து விளங்கும் இது. இதய நோய்க்கான மருந்துகளில் மிக முக்கியமானது. மேலும், வாதக் காய்ச்சலால் ஏற்படும் வலியைக் குறைக்கவும் இந்த மருந்து பயன்படுகிறது.

அஸிநோகாவ்மாரோல்:
இதுவும், இதய நோய்க்கான ஒரு முக்கியமான மருந்து. இந்த மருந்து, ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. மேலும், இதய வால்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், செயற்கை வால்வு பொருத்தியவர்களுக்கு ரத்தம் உறைய வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு முக்கிய மருந்தாக இது கொடுக்கப்படுகிறது. மேலும், நுரையீரல் ரத்த நாள அடைப்பு நோய் ஏற்பட்டவர்களுக்கு அது மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.

புதிய மருந்துகள்:
இதய நோய்க்கான பல்வேறு முக்கி மருந்துகளைப் போலவே, மிகச் சமீபமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்ககப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில புதிய மருந்துகளும் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

போஸன்டான்:
இது, ரத்தத்தில் உள்ள உள்சுவர் ஏற்புகளில் செயல்பட்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.நுரையீரல் ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடர்ந்து பல வாரங்கள் சாப்பிட வேண்டி இருக்கும்.இந்த மருந்தை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுக்கக்கூடாது.பின் விளைவுகள் இந்த மருந்தால், தலைவலி, தொண்டை அழற்சி, தோலில் அதிக ரத்த ஓட்டம், கால் வீக்கம், குறை ரத்த அழுத்தம், வயிற்றுத் தொந்தரவுகள், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

கவனம் இந்த மருந்த படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். உடனே நிறுத்தக்கூடாது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது,  மருந்துகளைத் தவிர்த்து விட வேண்டும்.

டோஃபிடிலைட்:
இது, இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய முக்கிய மருந்து. சீரில்லாமல், முறையில்லாமல் ஏற்படும் இதயத் துடிப்புக்கு இது சிறந்த மருந்து. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக்கூடாது. மேலும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கம் கொடுக்கக்கூடாது.பின் விளைவுகள் இந்த மருந்தால், சிலருக்குத் தலைவலி, நெஞ்சு வலி, சுவாசக் கோளாறுகள், தலை கிறுகிறுப்பு, குமட்டல், காய்ச்சல், உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதைப் பயன்படுத்தும்போது,  மருந்துகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

அஸிபியூட்டலால்:
பீட்டா அட்ரீனல் ஏற்புகளில் தடையை ஏற்படுத்தப் பயன்படும் மருந்து இது. இந்த மருந்தால், ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், இதயம் சீரில்லாமல் துடிக்கும் இதய நோயாளிகளுக்கும் இம்மருந்தைக் கொடுக்கலாம். இந்த மருந்து 24 மணி நேரமும் செயல்படுவதால், இதை ஒருநாளைக்கு ஒரு மாத்திரையாகச் சாப்பிட்டாலே போதும். மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.பின் விளைவுகள் இந்த மருந்தால் சிலருக்கு, ஒவ்வாமை, அசதி, தலைவலி, தலைச்சுற்றல், தூக்கமின்மை, தோல் பாதிப்புகள், உடல் வலி, சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.
இந்த மருந்தை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா, இதய செயலிழப்பு, இதய மின்னோட்டத் தடை உள்ளவர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் இந்த  மருந்தைத் தவிர்க்க வேண்டு. இந்த மருந்தை, கல்லீரல், சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

அனாகிரீலைட்:
இது, ரத்த தகட்டணுக்களுக்கு  எதிராகப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, ரத்தத்தில் புதிய தகட்டணுக்கள் அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதனால், ரத்தத்தில் தகட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை ஒன்றோடு ஒன்று சேர்த்து ரத்தத்தை உறையச் செய்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் இதய பாதிப்பு, பக்கவாதம், தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கப்படுகிறது.இந்த மருந்தை, தகட்டணுக்கள் மிகையாக உள்ளவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனையை பெற்று இரண்டு நேரமும் கொடுக்க வேண்டும்.

பின் விளைவுகள் இந்த மருந்தால், சிலருக்கு படபடப்பு, வயற்றோட்டம், வயிறுவலி, குமட்டல், தலைவலி, அசதி, உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
மற்ற மருந்துகளைப் போலவே, இதையும் ஒவ்வாமை உள்ளவர்களுக்குத் தரக்கூடாது. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும்கூட தரக்கூடாது.
இந்த மருந்தை கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

திருமணதோஷம் போக்கும் திருமணஞ்சேரி

சிவம் என்றாலே மங்கலம். மங்கலகரமான இறைவன் மாங்கல்ய வரம் அருளும் இடம் தான் திருமணஞ்சேரி.

மணமாகாதவர்கள் மணவாழ்வு வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு உடனேயே திருமணம் கைகூடுகிறது. அம்மையும், அப்பனும் அருள்புரியும் இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மணமாலை வேண்டி வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் பெயர் உத்வாக நாதர், இறைவியின் பெயர் கோகிலாம்பாள். தலவிருட்சமாக ஊமத்தை, வன்னி, கொன்றை மற்றும் கருஊமத்தை ஆகியவை உள்ளன.

தலவரலாறு

ஒருமுறை கைலாயத்தில் பார்வதிக்கும், சிவபெருமானுக்கும் சிறு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியை பசுவாக பிறக்குமாறு சபித்தார். சாபவிமோசனமாக ஆடுதுறையில் உன்னை இடது பாகத்தில் சேர்த்துக் கொள்வேன் என்றும் அருளினார்.    பிறகு, "திருத்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி உன்னை மகளாக அடைய தவம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் செய்யும் யாகத்தில் பெண் குழந்தையாக நீ அவதரிப்பாய். பருவ வயதை அடைந்ததும் நான் அங்கு வந்து உன்னை மணப்பேன்'' என்றும் அருளினார் சிவபெருமான்.

அதன்படி, அம்பாளும் பசு உருவத்தை எடுத்ததாகவும், திருமால் பசு மேய்ப்பவராகி சகோதரியான அம்பாளை பராமரித்ததாகவும் இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

தொடர்ந்து, அம்பாள் குத்தாலத்தில் பரத மகரிஷி செய்த யாக குண்டத்தில் மகளாகத் தோன்றியருளினார். தேவி வளர்ந்து சிவபெருமானை மணம் செய்வதற்காக தவம் புரிந்தார்.

அவரது தவத்தை மெச்சிய இறைவன், அவர் முன்தோன்றி, தேவியின் திருக்கரத்தைப் பற்றினார். அப்போது, உமாதேவி, "சுவாமி... நான் உங்களுக்குத் தான் சொந்தம். என்றாலும், ஒரு வேண்டுகோள். என் தாய் தந்தையர் அறிய என்னை மணம் செய்து கொள்ள வேண்டும்'' என்றாள். இறைவனும் அதை ஏற்றுக் கொண்டு அவ்வாறே செய்தார்.

உமையாளின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் அம்மையாரின் விதிமுறைப்படி அவரது இல்லத்திலேயே மணம் செய்து கொண்டார். அதனால் அவர் `சொன்னவாறறிவார்' என்றும் திருநாமத்தைப் பெற்றார் என்கிறது இக்கோவில் தலவரலாறு.

திருமணம் நடைபெற வேண்டி இங்கு வரும் பக்தர்கள் 2 மாலை, 2 தேங்காய், மஞ்சள், குங்குமம், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, சர்க்கரை ஆகிவற்றை கொண்டு கல்யாணசுந்தரர்-கோகிலாம்பாளுக்கு கல்யாண அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்து விட்டு, ஒவ்வொருவருக்கும் பிரசாதமாக ஒரு மாலையையும், மற்ற பொருட்களையும் அளிக்கிறார்கள்.

வீட்டிற்கு வந்தவுடன் மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு பூஜை செய்து முடிக்க வேண்டும். பின்பு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் குடிக்க வேண்டும். தினமும் அவர்கள் கொடுத்த பிரசாதமான விபூதியையும், குங்குமத்தையும் அணிந்து வர வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைகூடிவிடும் என்பது ஐதீகம்.

இப்படி திருமணம் நடந்த பின், தம்பதியர் சகிதம் மீண்டும் இக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து, ஏற்கனவே இங்கு தந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும்.

அமைவிடம் : மயிலாடுதுறையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருமணஞ்சேரி அமைந்துள்ளது.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net