ஒரு சித்தாந்தத்திற்கு எதிராக இன்னொரு சித்தாந்தம் கிளம்புகிறது.ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதம் போர் முரசு கொட்டுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே அழிந்து போவது மக்கள் தான்.
இயேசுநாதரை சிலுவையில் அறைந்தவர்கள் பிரியமான கணவராகவும்,அன்பான அப்பாக்களாகவும் தான் இருந்திருப்பார்கள்.ஒரு மதத்தை அல்லது ஒரு சித்தாந்தத்தை காப்பாற்றுவதற்காகத்தான் இவர்கள் கொடூரமாக நடந்து கொண்டார்கள்.
தத்தம் மதங்களின் தர்க்க நியாயங்கள் சொல்வதைவிட தங்கள் இதயம் சொல்வதை சமயவாதிகள் பின்பற்றி இருந்தால்,மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை உயிரோடு கொல்லும் கொடூரக் காட்சிகளைப் பார்க்க நேரிட்டிருக்காது.பெண்கள் உடன்கட்டை ஏறி எரிந்து சாம்பலானதையும்,கடவுளின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களில் அப்பாவி மக்கள் கொலை செயப்பட்டதையும் நாம் பார்த்திருக்க மாட்டோம்.
பரிவு காட்டுவதற்கு எந்த சித்தாந்தமும் தேவையில்லை.
--------அந்தோணி டி மெல்லோ.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment