Tuesday, June 7, 2011

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!


* கணடங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.


* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
***********************
* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
***********************தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.
அவை,
1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4. புதுக்கோட்டை அரண்மனை
5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6. சிவகங்கை அரண்மனை
7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9. பத்மனாபுரம் அரண்மனை
10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை
***********************


* ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை. 300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

***********************

* தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
* ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.
நன்றி தினமணி!

***********************


* தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
* இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
நன்றி தினமணி!
***********************


* 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
* 1927 - அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
* 1959 - அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.
* 1966 - கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய 'மகசேசே' விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.
* 1970 - ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.
* 1972 - இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.* 1989 - முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதிவியேற்றார்.
* 1997 - கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.
* 2005 - பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
* 2007 - இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.
நன்றி தினமணி!
***********************


* நாம் உபயோகப்படுத்தும் 'டை' 3300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.
* இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் பேங்க்.
நன்றி தினமணி!
***********************


* ஆண்டுதோறும் உலகில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. புவியின் உட்புறத்தில் ஏற்படும் நிலநடுக்கம் 'வல்கானிக்' என்றும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவுடன் தோன்றும் சிலநடுக்கம் 'டெக்டானிக்' என்றும், கடலுக்கடியில் உருவாகி கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ' சம்மாரின்' என்றுஇம் அழைக்கப்படுகிறது.
* 1906 - ம் ஆண்டு பசிபிக் கடலில் கொலம்பியாவிற்கு அருமே ஏற்பட்ட நிலநடுக்கம் தான் உலகின் மிகக் கடுமையான நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8.9 ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
* ஜூன் 19 - ம் தேதி உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.* அமெரிக்காவில் வேர்க்கடலையை விட பாதாம் பருப்பின் விலை மலிவு. இதனால் அங்குள்ள இந்துக் கோயில்களில் பாதாம் பருப்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
* ஏப்ரல் 23 - ம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.
* ஏப்ரல் 7 - ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நன்றி தினமணி!


* இந்தியாவில் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸாண்டர்.
* தாமோதர் நதி வங்காளத் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
* அண்டார்டிகா வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
* சாக்பீஸின் வேதிப் பெயர் கால்சியம் கார்பனேட்.
* ரைட்டர்ஸ் பில்டிங் என்ற கட்டடம் கொல்கத்தாவில் உள்ளது.
* ஹெபடைடிஸ் - பி என்ற வைரஸ் ஏற்படுத்தும் நோய் மஞ்சள் காமாலை.
* மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது. பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும். பறக்கும் போதுதான் மின்மினி பிரகாசிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மின்மினிப் பூச்சிகள் வெளியிடும் ஒளியில் புத்தகம் கூட படிக்க முடியுமாம். மின்மினியின் பிரதான உணவு நத்தைகள் தான்.
* இந்தியாவின் பூங்கா நகரம் பெங்களூரு.
* ப்ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.
* தங்க உரோம நாடு என்பது ஆஸ்திரேலியா.
* சாசுவதமாகன நகரம் என்று ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.
* இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
* வெளவால்களில் மொத்தம் 2000 வகைகள் உள்ளன.
* கொசுவில் 2700 வகைகள் உள்ளன.
* யானையின் தும்பிக்கையில் 40000 தசைகள் உள்ளன.
* குரங்குகளில் அழகானது மர்மோசைட் என்ற வகை குரங்கு.
* நம் கண்களில் லாக்ரிமல் கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.
நன்றி தினமணி!
***********************


* ஆந்தையில் மொத்தம் 133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்க்குள் இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இந்த குறையை ஈடு செய்ய தன் தலையை 180டிகிரி வரை சுற்றி பார்க்க முடியும்.
* மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்துவயதிற்கு மேற்பட்டது.
* எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழக்கின்றனர்.
* ரிசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.
* பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.
* கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் கொட்டுக்கள் வரை இருக்கும்.
* ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காணமுடியாதாம்.
* ஆஸ்திரேலிய மலரான கேண்டில் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.
நன்றி தினமணி!

***********************


* இந்தியாவில் வீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது மகாவீர் சக்ரா விருது.
* ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால் மக்களின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.
* இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை முதன் முதலாகப் பெற்ற இந்தியர் சல்மான் ருஷ்டி.
* ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.
* இந்தியா பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுன்ட் பேட்டன்.
* நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.
* தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.
* 22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.
* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
* பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
* இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.
நன்றி தினமணி!

**********************************************நன்றி தினமணி!
************************லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிகிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.*தென் அமேரிக்காவைச் சேர்ந்த நஞ்சற்ற பாம்பான அனகொண்டா ஒன்பது மீட்டர் நீளம் கூட வளரும். இது ஒரு மானையே முழுமையாக விழுங்கும் வலிமை கொண்டது.
*பாம்புகளின் நுகர்ச்சி உறுப்பு மூக்கல்ல. அதன் பிளவுபட்ட நாக்கு போன்ற உறுப்பே மூக்காகச் செயல்படுகிறது.
*பாம்பு குளிர்ந்த ரத்தம் கொண்ட உயிரி.
*பாம்பின் நஞ்சில் பலதரப்பட்ட நச்சுப் பொருள்கள், புரதங்கள் மற்றும் என்சைம்மன்கள் நிறைந்துள்ளன.
*ம்மபாள், பூம்சிலாங், பஃப் ஆடர்ஸ் ஆகியவை கொடிய விஷமுள்ள ஆப்பிரிக்க பாம்புகள்.*நச்சுப் பாம்புகளில் மிகச் சிறியது சுருட்டை விரியன்.


மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30நிமிஷங்கள் மட்டுமே தூங்கும்.

ஒவ்வோரு மிருகத்திலும் பல்வேறு இனங்கள் உள்ளன.
ஆனால் சிங்கம் மட்டுமே ஃபெலிஸ் லியோ என்ற ஒரே இனத்தை உடையது.

இப்போது கிரிக்கேட் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டை முதன்முதலாக பயன்படுத்தி ஆடியவர் ராபர்ட் ராபின்சன் என்பவர் தான். இவர் 1792 மற்றும் 1819 ம ஆண்டுகளில் இன்றைய பேட்டை முதன்முதலாகப் பயன்படுத்தி விளையாடினார்.

சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகிலே அதிக வேகத்தில் பாயும் ஆறு அமேசான் ஆறு தான். இது ஒரு நொடிக்கு 63 லட்சத்து 50 ஆயிரம் கன அடிகள் வீதம் பாய்கிறது.
பக்ராநங்கல் அணையைக் கட்டிமுடிக்க 15ஆண்டுகள் ஆயின. இதன் உயரம் 740 அடி.

அமெரிக்காவின் முத்ல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 200 ஆண்டுகளுக்கு முன்பு எந்த பைபிள் மீது கை வைத்து ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ அதே மைபிளின் மீதுதான் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.


Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

டீ கடை நகைச்சுவை !!!

மளிகை கடைக்காரரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு?
ஏன்?
கிஸ் கேட்டா எத்தனை கிலோன்னு கேட்கிறார்...!


அவர் ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா, யார் அவர்?
டீ கடையில் டீ ஆற்றுபவர்.
நான் எப்பவும் சீப்பாதான் வியாபாரம் பண்ணுவேன்.
எப்படி கட்டுபடியாகும்?


கட்டுபிடியாகுங்க வாழைப்பழத்தை சீப்பாதானே கொடுத்தாகணும்.
டீ குடிச்சதும் டம்ளரை கழுவறீங்க?
டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதி ரி தான் சார்...!
ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி.
ஏன்.
எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்.


ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை -5

இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன?
உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன்.
என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண் டு இருக்க முடியாது.
உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?
நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத் தை விட்டு ஓடிடுவேன்.


குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க
வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான்.


மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார்.
அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களிடம் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பொரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவோ அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.


பால் எப்போது வெட்கப்படும்?
அதன் ஆடையை எடுத்தப்பின்.


காலில் சுத்தின பாம்பு கடிக்குமா? கடிக்காதா?
ஏன் கேட்கிறே?
உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கேன்னு கேட்டேன்...!


இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு
ஆமா சரியா சொன்னீங்க...
தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...!


நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?
பாபுஸ் பேஸ்ட்
நீ என்ன சோப் யூஸ் பண்ற?
பாபுஸ் போப்
அது என் புது பிராண்டா?
அட பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா.


ஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொனார்.
இரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா? என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன? என்றார் ஜோதிடம் சொல்பவர்.


கோயில் உண்டியலை திருடியது உண்மையா?
உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகி ட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.


ஹேலா நான் குமார் பேசுகிறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?
சீத்தோட்ல மூன்று குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரே ரட்டுல 3 குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். பெருந்துறையில் 6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரே இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.


ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு
சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை
ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறே ன்.


பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?
முதல்ல பூட்டை பூட்டணும்...!


எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்
எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்.


சாப்பிட முடியாத மீன் எது?
விண்மீன்

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை - 4

தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபிஸ் லியா, வீட்டிலியா....?
மாப்பிள்ளை பையன் நடத்தை எப்படி?
அதென்ன அப்படி கேட்டு விட்டீர்கள்?
ஜெயிலில் இருந்த போது வார்டனிடம் வாங்கின நன்னடத்தை சர்டிபிகேட்டைக் காட்டச் சொல்லவா?


இந்த வீட்டை இடிச்சுட்டு வேறு வீடு கட்டலாம்னா தடங்கலாகவே இருக்கு
இதில என்ன தடங்கல்?
இந்த வீடு என்னோடதில்லை, அதான் தடங்கல்.


எங்க தாத்தா கடி ஜோக் சொல்ல மாட்டார்...
ஏன்?
அவருக்குத்தான் பல் இல்லையே.


கம்பி மேல நடந்து காட்றதாச் சொல்லி பந்தயம் கட்டிட்டு அந்த ஆள் என்னை ஏமாத்திட்டான்.
எப்படி?
கம்பியை கீழே போட்டுட்டு அது மேலே நடந்து காட்டினான்.


போர் அடிக்கடி நடக்கும் ஊர் எது?
போரூர்


கை உள்ள மரம் எது?
முருங் கை மரம்


இந்தகாலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு
ஆமா சரியா சொன்னீங்க...!
தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வச்சீங்க...!


நான் நீச்சல் கத்துக்கிறேன்...!
எங்கே?
தண்ணியிலதான்...!


நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன்.
அப்படியா...? நீங்க கராத்தே வீரர்னு சொல்லவே இல்லியே
அட போங்க சார்... பேண்ட் லூசா இருந்துச்சேன்னு பெல்ட் வாங்கினேன்.


எதுக்காக தூங்கும் போது கேன்வாஸ் போட்டுக்கிறே?
எனக்கு தூக்கத்துல ஓடற வியாதி


அவர் ஏன் தனது குடையில் ஓட்டை போட்டு உள்ளார்?
மழை நின்று விட்டதா என்று பார்க்க.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பில் கேட்ஸ் !!!

பில் கேட்ஸ் இறந்தபின் 'எமனுடைய' அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்..,"நல்லது, பில்!" , எமன்.

"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்..,"

"அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.""நல்லது கடவுளே!, ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" , பில்." ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!""அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"பில் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி, .. .

"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." , பில் "வா சொர்கத்தை பார்க்கலாம்..," , எமன்.அங்கே,

நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்லுக்கு, நரகத்தை போல கவரவில்லை..,

நீண்ட யோசனைக்குப்பின், "தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" ."உன் விருப்பம்", எமன்.இரண்டு வாரங்களுக்குப்பின், முன்னாள் கொடிஸ்வரனின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்லை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்."எப்படி இருக்கே பில்?", எமன்.பில் கடுமையான வேதனையோடு ஈனமான குரலில் " முடியல..., நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?""அட நான்னாரி பய புள்ள , அது SCREEN SAVER. டா என் டுமுக்கு !...,"

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை - 3

பிக்பாக்கெட் ரங்காவின் கல்யாண வீட்டில் ஒரு சௌகரியம் இருக்கு?
என்னது?
மொய்ப்பணத்தை அவங்களே எடுத்துப்பாங்க.
ஒரு பெண் குளத்தில் நீர் எடுப்பதற்காக 4 தெரு தாண்டி வந்து கொண்டிருக்கிறாள்.
திடீரென்று வீட்டிற்கு திரும்புகிறாள் ஏன்?
குடத்தை கொண்டு போகவில்லை.


அதென்ன மாடில மேகக்கூட்டம் மாதிரி மேடை செட் அப்?
அது நிச்சயதார்த்தமேடை.

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்டுவது இல்லையா.

டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?
அதை அடமானம் வைக்க முடியாதே


அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?
ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.


நாய் ஏன் குரைக்குது?
அதுக்கு கூட்டத் தெரியாது.


ஒரு நாள் இரவு வாக்கிப் பாய் கொண்டிருந்த ஜியை திருடன் வழி மறிக்க, இருவரும் கட்டிப் புரண்டார்கள்.
நீண்ட நேர சண்டையிறுதியில் திருடன் ஜியை தரையில் கிடத்தி அவர் பையிலிருந்த பர்சை எடுத்தான். அதில் 25 பைசா நாணம் மட்டுமே இருந்தது. இந்த 25 பைசாவுக்கா இப்படி சண்டை போட்டாய்? என்று ஜியை திருடன் ஆச்சிரியத்துடன் கேட்டான்.
இதற்காகவா நீ என்னுடன் சண்டை போட்டாய்? நான் என் ஷுவிற்குள் ஒளித்து வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுக்கா


மாப்பிள்ளை தனியா தொழில் பண்றவருங்க
தனியா எப்படி தொழில் செய்ய முடியும்.
கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.
மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.
மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்.


ஏர்போர்டில் ரிசீவ் பண்ண வந்தவர் இருவரின் உரையாடல்
நபர்.எ - யாரை அழைத்து செல்ல வந்திருக்கீங்க.
நபர் ஏ - 40 வருடத்திற்கு பிறகு என் தம்பி வருகிறான். அவனை அழைத்து செல்ல வந்திருக்கிறேன்.
நபர். எ - எப்படி அவரை அடையாளம்.
இந்த ஸ்பின் பௌலர் பிரமாதமா போடறாரே?
இதுக்கு முன்னே என்ன பண்ணிட்டு இருந்தார்?
ஒரு முறுக்கு சீடை கம்பெனியிலே முறுக்கு சுத்தி சுத்தி கொடுத்தாராம்.


என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு?
இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.
24 மணி நேரமும் திறந்தே இருக்கும் கடை எது?
சாக்கடைMost of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை - 1

நூல் வியாபாரிக்கு பெண்ணை தரமாட்டேன்னு சொல்றீங்களே ஏ ன்?
அதுல பல சிக்கல்கள் இருக்கு...!


சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.


நேத்து திருடன் வந்து உங்கள் வீட்டு கதவை தட்டினானா, ஏன்,
காலிங் பெல் இல்லை. அதனால் தான்.அவர் ஏன் அந்த பொண்ணை அப்படி முறைச்சி பார்க்கிறார்?
அவர் தான் முறை மாப்பிள்ளையாம்.எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்கேள
ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா?
இல்லை. அவருக்கு வயலின் வாசிக்கத் தெரியாது.வீரப்பன் உபேயாகிக்கும் சோப்?
மைசூர் சாண்டல்சோப்...!மரியாதை இல்லாத பூ எது
வாடா மல்லி.டாக்டர் நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது.
சரி, அந்த சோபாவில் போய் உட்காருங்க.
இரண்டு சோபா இருக்கே டாக்டர் எதுல உட்காரனும்?நீச்சல் கற்றுக் கொடுக்கும் நிறுவனத் ஏன் அவர் ஆடி விட்டாரா?
ஏகப்பட்ட கடனில் மூழ்கிவிட்டார்.ஏன் குடிச்ச?
ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன்
அப்படி என்ன கவலை?
நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.டென்சன் அதிகமானால் என்னவாகும்?
லெவன் சன் ஆகும்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எழுத்தாளர் நகைச்சுவை !!!

எழுத பயன்படாத மை எது?
எருமை.

இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததில்லை
அப்படியா...! வெரிகுட்.
என் அட்ரஸை எழுதினாத்தானே...!

நீங்க எழுதிட்டு வர்ற கிரைம் தொடர் பற்றி நீங்களே புகார் கொடுக்கனுமா? ஆச்சர்யமா இருக்கே...!
ஆமா சார், உண்மைக் கொலையாளி, யாருன்னு எனக்கே தெரியவில்லை... சீக்கிரம் கண்டு பிடிச்சு சொல்லுங்க கதையை முடிக்கனும்.

அந்த எழுத்தாளர், கதை எழுதலைன்னா கூட பத்திரிக்கைகாரங்க பணம் அனுப்பி வெச்சிடுவாங்க
எப்படி?
இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்...!

மேட்டூர் அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்தன்னு கட்டுக்கதை விடறாங்க பேப்பர்ல...!
எப்படி சொல்ற
நான் தினமும் அணையை பார்க்கிறேன். கொத்தனார் அணை எப்படி கட்டினாரோ, அப்படி தான் இருக்கு.

உங்க படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா?
எதுங்க?
உங்க நாலாவது பெண் மேனகாதான்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!!

ஒரு காலத்தில் சதானிகள் என்ற அரசன் ஆண்டு வந்தான். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தான்.

ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்பப்படுத்தி வந்தான்.


அரசன் இறந்தான். நரகத்திற்கு போனான்.


ஒரு சமயம் பார்க்கவ முனிவர் நரகத்தைக் காணச் சென்றார். அங்கே அரசனை எம தூதர்கள் செக்கிலிட்டு ஆட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அதைக் கண்ட முனிவர், அரசனிடம் சென்று, எனக்குத் தெரிந்து எவ்வளவோ அறங்களையும், வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய், அப்படி நீ செய்த பாவம்தான் என்ன? ஏன் நரகத்திற்கு வந்துள்ளாய்…? என்று கேட்டார்.தவ முனிவரே!

என்னிடம் அற உணர்வு இருந்ததே தவிர, அன்புணர்வு கொஞ்சமும் இல்லை. மக்களுக்கு வரி மேல் வரி போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறேன். அதற்குத்தான் இந்தத் தண்டனை என்று தன் குற்றத்தை உணர்ந்து திருந்தி பேசினான்.

அன்பில்லாத அறத்தால் எப்பயனுமில்லை!

தாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…பள்ளியில் - இரசாயனப் பாடத்தில் ஒரு செய்தியைப் படித்தார் எடிசன்.

அதாவது ஒரு குறிப்பிட்ட உப்பையும், ஒரு அமிலத்தையும் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தினால் அதிலிருந்து லேசா வாயுக்கள் வெளிப்படும் என்பே அச்செய்தி. மற்றொரு சமயம், லேசான வாயுக்கள் அடைக்கப்பட்ட பலூன்கள் ஆகாயத்தில் பறந்து செல்லும் என்ற தகவலையும் படித்தார்.

உடனே ஆராய்ந்து பரிசோதிக்கும் அவருடைய சிறிய மூளையில் ஒரு புதிய எண்ணம் உதயமாகியது. உடனே அதனைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.

தம்மோடு படித்த ஒரு சிறுவனைத் தோட்டத்துக்குக் கூட்டிக் கொண்டு அவர் பாடத்தில் படித்த அந்தக்குறிப்பிட்ட உப்பையும், அமிலத்தையும் கொடுத்தி விழுங்கச் சொன்னார் அவனும் அதுபோலவே செய்தான்.

சிறிது நேரம் சென்றது. அவன் எப்போது பறந்து செல்வான்? என்று பார்த்தவர், அப்படி ஏதும் நடக்காததால், மேலே பறந்து செல்வதுபோல் உனக்குத் தோன்றவில்லையா? என்று கேட்டார் எடிசன்.

அப்படி ஒன்றுமில்லையே! என்று சொன்ன அந்தச் சிறுவன் வாந்தி எடுத்தப்படியே மயங்கி கீழே விழுந்தான்.

உப்பும், அமிலமும் அச்சிறுவனின் வயிற்றுக்குள் போய் இரசாயன விளைவை உண்டாக்கி அதன் மூலம் லேசான வாயு உருவாகும். அப்போது அவன் பலூனைப் போல பறப்பான் என எதிர்பார்த்தார். ஆனால், பரிசோதனைக்கு ஆளான சிறுவன் பிழைப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாக தன் பெற்றோரிடம் அடியும்,உதையும் வாங்கினார், எடிசன். இப்படி இளம் வயதிலேயே ஆராய்ச்சி எண்ணத்தோடு இருந்ததால்தான் பிற்காலத்தில் அவரால் ஆயிரக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது.Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வெற்றி இரண்டு விதம்

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப்பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.


பாறைகள் குவிந்துகிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்பகலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.
ஆள்நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிட.ம்,சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத்தெரிகிறது.மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில்என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம். எதிர்காலத்தில் என்னவாக வளரும்என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும்வரை காத்திருக்காமல்,விலகிச் செல்லும் வாய்ப்புகளைக்கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்புஇருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும்.இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை…

விமர்சனங்கள். ஆர்வமாய்ப்புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள்கூட, விமர்சனங்கள் வந்ததும்துவண்டுவிடுவார்கள்.அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும்போதாது, துணிவும் அவசியம்” என்று. சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாததண்ணீர் என்று பார்த்து ஆதிகாலத்தில் அநேகம்பேர் அலட்சியம்செய்திருப்பார்கள்.


அதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான்,முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான். மீன்பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.


காலகாலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப்பரப்பு என்று விலகிநடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன்தான் இந்தப் புதுமைகளையெல்லாம்பூமிக்குக் கொடுத்தான்.இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்றுமட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது. புதுமைக் கண்ணோட்ட வழிகள்வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.

கண்ணில்படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறநம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக்கூட சுவாரசியமாய்மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை. படைப்பாற்றல் என்கிறகண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல்வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கானமூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரையில்பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.

இந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமானவெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள்.
உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர்நீங்கள்தான். அது பெருநெருப்பாக உருவம்பெறும்வரை உங்களால்தான் அதைக்காப்பாற்ற முடியும். அதுவரையில் அதன் வெளிச்சம் ஊருக்குத் தெரியாது.
உங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகையதீப்பொறிகள்தான்.உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்உங்களால் முடியும்….

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முத்துக்கள் !!!

காலண்டரில் கண்ட முத்துக்கள்


திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை.

செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும்.

புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை.

வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது?

வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதனைச் தேடிச் செல்.

சனி- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதென்பது எளிது. ஆனால்,
உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.

ஞாயிறு- காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா?…அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்குத் தெரியும்.கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.


படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!


பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.


காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!


விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.


அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான்.அளவுக்கு அதிகமானபணிவை ஒருபோதும் நம்பக் கூடாது


தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!


எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!


விதை எப்படியோ, பழமும் அப்படியே!


பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!


பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து மகிழ முடிவதுதான்!


நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான்.


தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்!


மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம்.


உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.
உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து.


உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.


இருக்கிற செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தால், நம்முடைய நாட்டின் வறுமை எப்போதும் தீராது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, நியாயப்படியும் தர்மப்படியும் நிறைய செல்வம் சேர்ப்பதுதான்!


தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன!


எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.

இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.

உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.

உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

சிப்பாய் தன் துப்பாக்கியைப் போற்றுவது போலவும் இசைக் கலைஞன் வீணையைப் போற்றுவது போலவும் ஒரு பெண் தன் காதலனைப் போற்றுகிறாள்.

சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்தவேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நேல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.

திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.

வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும்.
லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம்.


காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.

எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன முறையில் வைத்திருக்கிறானோ… அந்தந்த அளவு அவனுக்குகடவுளின் கருணை கிடைக்கிறது.

உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான்.
வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும்.

கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா!

ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம்.

மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு.

தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு.

எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.
லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.

மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.
உறுதி… உறுதி… இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.


உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்!

குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.

தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது!

நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்.

எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நீங்க லவ் பண்றீங்களா??

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம்தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.

09: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.

08: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்குதெரியவே மாட்டாங்க

06: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.

05: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.

04: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க

03: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -லஇருந்துட்டேயிருந்துருப்பாங்க

02: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.

01: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக்பண்ணிட்டு...........s

ilent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க..

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கல்லறை வாசகங்கள் !!!

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:

“”உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள்.இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரிராஜ்ஜியம் தூங்க வேண்டியதாகி இருக்கும்”


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :
சாமியார் ரஜினிஷ் கல்லறையில் எழுதப்பட்டிருப்பது:


ரஜினிஷ் பிறக்கவுமில்லை # இறக்கவுமில்லைஅவர் இந்த உலகத்தைப் பார்வையிட வந்தார்.சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!!

ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது.

அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே.

அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும்.


தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும். இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள்.

எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அறிஞர்களின் முத்துக்கள்...!!!

கற்றறிந்த அறிஞர் பெருமக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூர்மையான அம்புகள் போல.. கேட்பவர்களின் மனதை தைய்க்காமல் இருக்காது. இதோ சில அறிஞர்களின் முத்துக்கள்...

ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு.
-விவேகானந்தர்.


நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில் கெட்டடிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும் கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-ப்ராங்கின்.
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-தாகூர்.
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
-கண்ணதாசன்.
மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ, ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.
-பிளாட்டோ.
தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி விடுங்கள்.
-யாரோ.
நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
-கன்பூஷியல்.


பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும். -கவிஞர் கண்ணதாசன்.
கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்.
-பல்கேரியப் பழமொழி.
எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும், எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு.
-சிங்சௌ.என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
-மாவீரன் நெப்போலியன்.
உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான். உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
-யங்.

பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.
-யாரோ.


நூலறிவு பேசும்- மெய்யறிவு கேட்கும்.
-ஹோம்ங்.
நிச்சயமாகவே, நெருப்பு விறகை சாப்பிடுவது போல, பொறாமை நன்மைகளை சாப்பிட்டுவிடும்.
-நபிகள்.


பணக்காரனாக வேண்டுமென்று விரும்புகிறவன் கஞ்சனாக இருக்கிறான். நான் பணக்காரன் என்று நினைத்து செலவு செய்பவன் ஏழையாகின்றான். -ஷேக்ஸ்பியர்.
நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஓரே மதம்தான்.
-வால்ட்டேர்.
கடினமான செயலின் சரியான பெயர் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் கடினம்.
-செஸ்டர்ன்.
துன்பம் வந்து விடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் இருக்கிறதே இவை துன்பத்தை விட துயரமானவை.
-ஹைஸாடிக்.

எப்போது நீ வணங்கத் தொடங்குகிறாயோ அப்போதிலிருந்து நீ வளரவும் தொடங்குகிறாய்.
-ஸ்டர் பீல்டு.

பிறருடைய நம்பிக்கையை காப்பாற்றுங்கள். பிறர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாலும் நீங்கள் பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.
-முகம்மது நபி.நானும் குறைகள் நிறைந்த மனிதனாக இருப்பதாலும், எனக்கும் பிறருடைய அனுதாபம் தேவைப்படுவதாலும், நான் பிறருடைய குறைகளை கண்டுபிடிக்க அவசரப்படுவதில்லை. -காந்தியடிகள்.


விலைவாசிகள் இறக்கப்படுவது ஓன்றே உண்மையான வாழ்க்கைத்தர உயர்வுக்கு வழிகோலும்.
அறிஞர் அண்ணா.


மலரைப் பார், கொடியைப் பார், வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதை பார்க்க் முயன்றால் நீ மலரையும், கொடியையும் பார்க்க முடியாது.
கண்ணதாசன்.


நான் என்ற உணர்வு நிச்சயமாக தவறில்லை. நான் மாத்திரம் தான் என்ற உணர்வு தான் தவறு.
டாக்டர் எஸ். மனோகர் டேவிட்.

உங்கள் கூடாரங்கள் பிரிந்திருக்கட்டும். உங்கள் இதயங்கள் சேர்ந்திருக்கட்டும்.


கடந்த காலம் பற்றிய நினைவு மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை. வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு அடையாளம்.
பெர்னாட் ஷா.


கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.
கன்பூசியஸ்.


உனது துயரங்களை பிறரிடம் கூறாதே. பலர் அதற்காக வருத்தப்படமாட்டார்கள். சிலரோ அதில் மகிழ்ச்சியும் அடைவர்.
யாரோ.


அவதூரை அடக்குவதற்கு அதை அலட்சியமாக தள்ளிவிடுவதே முறை.
யாரோ.

மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்காமல் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது சாபக்கேடாய் அமையும்.
ஹெர்மன் எல். லேலேண்ட்.


முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடுப்பதுதான்.
யாரோ.


எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
ஹிட்சாக்.


நீங்கள் முன்னுக்கு வர பணம் தேவையில்லை. மற்றவரின் பணத்தை பயன் படுத்தியே முன்னுக்கு வரலாம். அதற்கு தேவை நேர்மை, துணிவு, கடின உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.


நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பைப் போல இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால் அது நம் காலைக் கடிக்கும். பெரியதாக இருந்தால் நாம் இடறி விடுவோம்.
கோல்டன்.


வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து என்று வேலை செய்பவன் அடிமை. வேலை செய்வதுதான் சுகம் என்று வேலை செய்கின்றவன் கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்கின்றவன் முட்டாள்.
ஆண்ட்ரூ.


உனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
தந்தை பெரியார்.


கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை குழந்தைகளின் கல்விக்கு செலுத்துங்கள்.
டாக்டர் அம்பேத்கார்.

நல்லவர்களுக்கு தனிமை என்பது கிடையாது. அவர்களைச் சுற்றி எப்போதும் பத்து பேர் கூடிவிடுவார்கள்.
சுந்தர ராமர்.


ஓருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில் பணமோ, பலமோ அவனுக்குப் பலன் தராது.
-அரிஸ்டாட்டில்.நீங்கள் செய்யும் எந்த குற்றத்திற்காகவும் சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவற்றை காரணம் காட்டாதீர்கள்.
-பெர்னாட்ஷா.


சோம்பேறி இரண்டு முட்களுமில்லாத கடிகாரம் அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை.
-கௌப்பர்.


பழிவாங்க விரும்பினால் முதலில் அலட்சியம் செய்து விடு. அது ஆரம்பம். மன்னித்து விடு. அது முடிவு.
-பெர்னாட்ஷா.


உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டுமே தேவை. நிறைய பொருமை, வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தும் திறமை. தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை, தவறு செய்தவர்களை அணைத்துச் செல்லும் கணிவுடைமை.
-மாத்யூ ஆர்னால்ட்.


மக்களின் வறுமையை போக்க வேண்டுமானால் முதலில் அவர்களுடைய அறியாமையை கட்டாயக்கல்வி மூலம் நீக்குங்கள். சிக்கனமாக வாழக் கற்றுக்கொடுங்கள்.
விஸ்வேஸ்வரய்யா.


ஓரு நாடு நல்ல சட்டங்களால் ஆளப்படுவதை காட்டிலும் நல்ல மனிதனால் ஆளப்பெறுவது மேலாகும்.
-அரிஸ்டாட்டில்.


சிலர் பணத்தை வெறுப்பாக கூறுவர் அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே.
-கோல்ட்டன்.


ஓரு காரியத்தை ஏன் தவறாக செய்தோம் என்று விளக்கம் சொல்வதற்குள் அதை சரியாக செய்து விடலாம்.
-யாரோ.பணம் என்பது ஓரு சாதனைப் பொருள். அதுவே சுகமன்று. முடிவன்று. அவரவர்களுக்கு ஓரு வரம்புண்டு. அந்த வரம்புக்கு மேல் மிஞ்சின பின் அது ஓரு பாரமும் கவலையும் தான்.
-ராஜாஜி.


ஓற்றுமையாக இருங்கள் ஆனால் மிக நெருக்கமாக இருக்காதீர்கள்.
-கலீப் இப்ரான்.


அனுபவம் என்பது புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களை கற்றுத் தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.
-கவிஞர் கண்ணதாசன்.கடமையைச் செய்கின்றவனுக்கு கடமை இருந்து கொண்டே இருக்கும். கவலைப்படுகின்றவனுக்கு கவலை இருந்து கொண்டே இருக்கும்.
-யாரோ.


விவாதம் செய்வது நிழல்களுடன் போராடுவதற்கு சமம்.
-வெஸர்மாஸ்.


பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி. - யாரோ

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?

பல சுயதொழில் புரிபவர்கள் தங்களது நிறுவன வெற்றிகளைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்க மட்டுமே சாத்தியமா? அதை அடைய முடியாதா?
முடியும்! அதற்குத் தேவை மாற்றம்.மாற்றம் கொண்டுவரத் தயாராக இருப் பவர்கள் சாதித்துக் கொண்டு இருக்கின்றனர். மாற்றத்திற்கு தயாராகாதவர்கள் தோற்றுக் கொண்டு இருக்கின்றனர்.
Mascot, Mphasis, Sasken Communication Tech, ஆகிய மூன்று கம்ப்யூட்டர் துறை நிறுவனங்கள் தங்களது வெற்றிகளை நிலைப்படுத்திக் கொண் டுள்ளன. அதுவும், இத்துறை மிக மோசமாக இருந்த 2001-ம் ஆண்டில்!
தொழில் சூழ்நிலைகளைக் காரணம் காட்டிக் கொண்டிருப்பதை விட அதற்குத் தேவையான வகையில் நமது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம் (Better to light a candle than curse darkness).இதற்கு சில மனோதத்துவக் கோட்பாடுகளை (Psychological) புரிந்து கொள்ள வேண்டும்.1. பிரச்சினைகளைத் தீர்க்க, நீங்கள் வழக்கமாக கையாளும் முறை விஞ்ஞானப் பூர்வமானதாக இருக்க வேண்டும் (Scientific Approach).2. மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு (Pre Conceived Idea) அதன் மூலமாகவே சூழ்நிலைகளை ஆராயக்கூடாது. திறந்த மனதுடன் சூழ்நிலைகளை ஆராய்ந்து எது நிஜமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கையாள வேண்டும்.3. மிக மிக குறைவாக அனுமானம்
(Assumption) செய்ய வேண்டும். விளம்பரம், செய்தி ஆகியவற்றைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்து அனைத்தும் புரிந்துவிட்டதாக நினைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவரை அணுகி ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திக் கொள்வதற்குக் கூட EGO பார்க்கி றோம். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய மனப்போக்கு ஒரு மாற்றம் கொண்டு வர தடையாக செயல்படும். நமது EGO விற்கு எடுத்துக்காட்டு - “நேரம் இல்லை”, “எனக்குத் தெரியும்” போன்ற எண்ணங்கள்.4. தொழில் மோசமான நிலையில் இருக்கும் பொழுது, ஆலோசனை (Consultation) பெற முனைப்பு காட்ட வேண்டும்.


ஒரு நிறுவன வளர்ச்சிக்கு மைய அச்சாக
(Central axis) இருப்பது விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறை - பொருளாதாரம் (Economics) மனோதத்துவம் (Psychology) இவையும் விஞ்ஞானம் என உணர வேண்டும்.தொழில் சூழ்நிலை சரியில்லாமைக்கு ஆலோசகர் (Consultant) என்ன செய்து விட முடியும்? என தவறான அனுமானித்தல் கூடாது. அதே போல், தொழில் சரியில்லாத வளர்ச்சியில் போய்க் கொண்டிருக்கும் போது, ஆலோசகர்களை அணுக தயக்கம் காட்டுவது ஆபத்தானது.5. தொழில் நலிவுறுவதற்கு சுய தொழில் புரிபவர்தான் முதல் காரணம் என்பதை உணர வேண்டும். If the ship sinks, the captain is responsible.6. பிறர் கொண்டுள்ள பொதுவான கருத்து களைத் தானும் அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக, தொழில் சூழ்நிலை சரியில்லை என்பது பொதுவான கருத்து. அதனாலேயே தமது நிறுவனமும் அதிக லாபம் பெற முடியவில்லை என நினைப்பது தவறு. அறிவுப்பூர்வமான சுய ஆய்வுக்கு (Logical self analysis) இத்தகைய மனப்பான்மை தடையாக இருக்கும்.
இத்தகைய மனப்பான்மை கொண்டிருந்தால், முதலில் சொன்ன மூன்று நிறுவனங்களும், மோசமான தொழில் சூழ்நிலையிலும், சாதித்திருக்க முடியுமா?
7. தொழில் சூழ்நிலை முன்பு இருந்தது போல் சாதகமாக இல்லை என்று பலர் நினைக்கின்றனர். சூழ்நிலை என்பது மாற்றத்திற்குரியது என்பது அடிப்படை அறிவு (Common sense ). இதில் சாதகமாக உள்ளது என்றோ அல்லது சாதகமாக இல்லை என்றோ நினைப்பது தவறு.உண்மையில்,
இத்தனை காலம் கையாண்ட அணுகு முறை என்பது தற்போது மாறியுள்ள தொழில் சூழ்நிலைக்கு பொருந்தவில்லை என்ற அளவில்தான் பார்க்க வேண்டும். புதிய சூழ்நிலைக்கான புதிய யுக்திகளை, புதிய எண்ணங்களை கைக்கொண்டால், எந்த சூழ்நிலையிலும் நாம் வெற்றி பெறுகிறோம் என்ற எண்ணம் ஏற்படும்.8. சூழ்நிலை சரியில்லை என்ற எண்ணம் பிறர் வழி போவோரிடம் (Followers) இருக்கலாம். பிறரை தன் வழிக்கு கொண்டு வருவோரிடம் (Leaders) இருக்கலாமா? ஒரு சுய தொழில் புரிபவர் பிறர் வழி போகும் மனப்போக்கு உடையவராக இருக்க முடியுமா?9. சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்கள் அணுகு முறைகளை விஞ்ஞான ரீதியில் கலந்தா லோசித்து (Scientific Consultation) மாற்றி யமைத்துக் கொள்ள வேண்டும். அதன் வெற்றி, பிறரை உங்களது வழிக்கு கொண்டு வர உதவும்.10. சுய தொழிலில் இத்தகைய தலைமைப் பண்பு முக்கியம். Business Leader ஆக முயற்சிக்க வேண்டுமே தவிர Business Followers ஆக முயற்சிக்கக் கூடாது.11. பிறர் போகாத, கால் பதிக்காத இடத்திலேயும் நீங்கள் கால் பதித்து, பாதையாக்கிக்கொள்ள வேண்டும். பிறர் கையாளாத அணுகு முறையைக் கூட நீங்கள் கையாளத் தயாராக இருக்க வேண்டும். பிறரின் ஏளனத்தையும் பொருட்படுத்தாமல், நவீன அணுகுமுறை களைக் கையாளும் துணிவு கொண்டவர்கள் மட்டுமே தொடர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.12. இறுதியாக, ஆனால் முக்கியமான ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். When you hire a dog, allow it to bark என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசகர் என்ன சொல்ல வேண்டும் (Consultant) என்ற உங்களது விருப்பத்தை வெளிப்படுத்தாதீர்கள். அதே போல் உங்கள் ஆலோசகர் என்ன ஆலோசனை கூறுகிறாறோ, அதை அப்படியே செயல்படுத்துங்கள். நீங்கள் அதை மாற்றாதீர்கள்.அவருடைய ஆலோசனையை செயல்படுத்திய பிறகும், நல்ல பலன் கிடைக்கவில்லையெனில், அவரையே கலந்தாலோசித்து வேறொரு ஐடியா கூறச் சொல்லுங்கள். அப்பொழுது தான், செயல்பாடுகளையும், பலாபலன்களை யும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.13. சுய ஆய்விற்கு


உங்களது செயல்பிரச்சனைகளைச் சமாளிக்க……


1. தொழில், சூழ்நிலை சரியில்லை என்று நடப்பது நடக்கட்டும் என இருந்து விடுவீர்கள்


2. பணம் இருந்தால், தொழில் சரிவை சரிசெய்து விடலாம் என்று நினைத்து செயல்படுகிறீர்கள்.


3. ஆலோசகர்களை அணுக தயங்குகிறீர்கள்


4. யாருடைய ஆலோசனையும் வழிகாட்டுதலும் இல்லாமலேயே தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என நினைக்கிறீர்கள்
அத்தயை செயலுக்கு காரணமான உங்கள்மன இயல்புஆக்கப்பூர்வமான (Creative thinking) எண்ணம் குறைவாக உள்ளது. உற்சாகம் குறைந்தும், மனச்சோர்வு (Depression) அதிகமாகவும் உள்ள மனநிலை.
பணமில்லாமல் போனதற்குக் காரணம், உங்களது கடந்தகால செயல்பாடுகள்லி சுபாவங்கள் என்று உணரத் தவறிவிட்டீர்கள். மீண்டும் பணத்தை மாத்திரம் முதலீடு செய்தால் கடந்த கால முதலீடு கரைந்தது போல் இதுவும் கரைந்து விடும்.அதை உணர்ந்து செயல்பட்டால், ஆக்க பூர்வமாய் சிந்தித்து உற்சாகமாய் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.


உங்கள் மனதினுள் உங்களைப் பற்றிய சுய ஆய்வு செய்து கொள்ள தயக்கமும் தோல்விக்கு தானே காரணம் என தெரிய வந்துவிடுமோ என்ற பய உணர்ச்சியும், உங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சுய கௌரவம் (EGO) உங்களுக்குத் தோல்வியை ஏற்படுத்தும் விதமான மனதை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
14. மேலும் ஒருவரிடம் ஆலோசனை பெற. அவருடைய தகுதியைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர் பிரபலமா என்று பார்க்க வேண்டிய தில்லை. பிரபலத்திற்கும் ரிசல்ட்டிற் கும் சம்பந்தமில்லை - உதாரணத் திற்கு பிரபலமாகாத எத்தனையோ மருத்துவர்கள் நல்ல ரிசல்ட்டை ஏற்படுத்தக் கூடியவர்கள்.


அது மட்டுமல்ல, ஒரு பிரபலத்தின் ஆலோசனைக் கட்டணத்தை தர எத்தனை பேருக்கு மனம் வரும்? எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், எல்லோருமே மும்பை மருத்துவமனையில் செலவு செய்து சிகிச்சை பெற முன்வருவார்களா?


எனவே, பிரபலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, ஒரு நல்ல ஆலோசகரின் திறமைக்கும், அவர் உங்களுக்கு ஏற்படுத்தித் தரவல்ல ரிசல்ட்டிற்கும் முக்கியத்துவம் தரும் மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net