Showing posts with label டான்சிலைடிஸ். Show all posts
Showing posts with label டான்சிலைடிஸ். Show all posts

Wednesday, April 20, 2011

டான்சிலைடிஸ்


தொண்டையில் அண்ணாக்கு தூறில் ஏற்படும் நிண வளர்ச்சிக்கு டான்சிலைடிஸ் என்று பெயர். பொதுவாக இது குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படும். ஐஸ்கிரீம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட சாப்பிட இது அதிகமாகும்.

இந்நோய் கண்ட குழந்தைகளுக்கு அடிக்கடி ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படும். மாலை நேரங்களில் கால்களில் வலி உண்டாகும். இத்தகைய குழந்தைகள் உணவை விரும்பி உண்ணாமல் ஏனோதானோ என்று நடந்து கொள்வார்கள். அதே சமயம் நொறுக்குத் தீனிகளை விளாசுவார்கள்.

டான்சிலைடிஸை வராமல் தடுக்கவும், வந்தால் குணப்படுத்தவும் கண்கண்ட மருந்து தூதுவளை தான். தூதுவளை இலையை சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வதக்கி உப்பு, புளி, மிளகாய் சேர்த்து துவையல் செய்து முதல் அன்னத்தில் சேர்த்து பிசைத்து சாப்பிட்டு வர கப சம்பந்தமான நோய்கள் தீருவதுடன் நல்ல பசியைத் தூண்டும். தொண்டைச் சதை வளர்ச்சியும் குணமாகும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net