Sunday, June 19, 2011

பிட்டு - 54

1. எங்க மானேஜருக்கு ஆபீஸ்ல திடீர்னு பெண்டாட்டி ஞாபகம் வந்தா போதும்.. .உடனே வீட்டுக்கு கிளம்பிடு வாரா.. .?இல்ல ஆபீஸ்ல எல்லார் மேலயும் எரிஞ்சு விழுவாரு.=========2. போலீஸை ஏன் அரிவாளால் வெட்டுனே ?சும்மா மாமூலை வெட்டு வெட்டுனு தொந்தரவு குடுத்துட்டு இருந்தாரு மொத்தமா வெட்டிட்டேன்.==========3. டீச்சர்: ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.மாணவன்: உங்க கொடுமைகளை தாங்கிக்கிட்டு உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார் டீச்சர்.==========4. உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?கண்டிப்பா இருக்கே.அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே==========5. டேய். .. மரியாதையா பீரோ சாவியை எடு.எடுக்கறேன். .. முதல்ல பணம் கொடு.எதுக்கு ?பீரோ வாங்கத்தான்==========6. தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சுஏன் ?நர்ஸிங் ஹோம் வெச்சுத்தரச் சொல்லி பிடிவாதம் பண்றாரு.=========7. கணவன்: என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?மனைவி: நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க.=========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. டாக்டர், ரெண்டு நாளா நானும் கவனிச்சிட்டு இருக்கேன். எப்பப்பாரு என் சம்சாரம் கையை டச் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே ?என் மனைவிக்கு ஆபத்து, கைவிட்டுடாதீங்க டாக்டர்னு நீங்கதானே சொன்னீங்க ?

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 52

1. எதுக்கு அந்த வாஸ்து சாஸ்திர ஜோசியரைப் போய் அடிக்கப் போனீங்க. ..?பின்னே. .. இடதுபக்கம் இருக்கிற இதயத்தை எடுத்து வலதுபக்கம் வெச்சுட்டா நல்ல பணம் வரும்-னு சொல்றாரு.=========2. சார். .. நாங்க வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான். ..ஆச்சரியமா இருக்கே. ..இதுக்கே ஆச்சரியப்பட்டா.. . போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான் சார்.=========3. சாப்பிட்டு முடிச்சவுடனே, உன்னைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே. .. என்னவாம் ?இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமா ?னு கண்ணீர் மல்கக் கேட்டார்========4. நாம ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடப்போற விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்ச போச்சு. ..ஐயையோ. .. என்ன சொன்னாரு ?போறப்ப எங்க அம்மாiவும் கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.=========5. பக்கத்து வீட்டுக்காரி நல்லாத்தானே இருக்கா. அப்புறம் ஏன் கழுத்துல சுளுக்குங்கிறா ?அவ போட்டிருக்கிற வைர அட்டிகையை எல்லோரும் பார்க்கணுமாம். அதான்.=========6. கணிப்பொறிக்கும், எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம் .. .?கணிப்பொறிக்கு மௌஸ் வெளியே இருக்கும். .. எலிப் பொறிக்கு மௌஸ் உள்ளே இருக்கும்.=========7. குரைக்கிற நாய் கடிக்காதுன்னு எதவைச்சு சொன்னாங்க ?தேள் குரைக்கறதில்லை. ஆனா கடிக்குதுல்ல.=========இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. கார் மெக்கானிக்கைக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சுஏன் ?டெய்லி கட்டிலுக்குக் கீழே தான் படுக்கறாரு.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 49

1. கண்ணாடியை கழட்டிட்டா எதுவுமே தெரியமாட்டேங்குது டாக்டர்.. .நிஜமாவா.. ?ஆமாம், கண்ணாடியை கழட்டிட்டனா இல்லையான்னு கூட தெரியமாட்டேங்குது டாக்டர்==========2. சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு..உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. .?தோய்க்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு என் கணவர்தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.==========3. எங்கப்பா வெளியே போறப்ப சட்டை போட்டா பேண்ட் போட மாட்டாரு.. . பேண்ட் போட்டா சட்டை போட மாட்டாரு.. .ரொம்ப அசிங்கமாயிருக்குமே..அதெப்படி அசிங்கமாயிருக்கும். .. சட்டை போட்டா பேண்ட்டுக்குப் பதிலா வேஷ்டி கட்டுவாரு.. . பேண்ட் போட்டா சட்டைக்குப் பதிலா ஜpப்பா போடுவாரு.. .==========4. ராத்திரி எட்டு மணி ஆனா என் கணவர் வீட்டுக் கதவைச் சாத்திடறhரு.. .புதுசா கல்யாணம் ஆச்சே., கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும்.அட நீ வேற அவரு பாத்திரம் தேய்க்கற விஷயம் வெளியே யாருக்கும் தெரியக் கூடாதாம்.==========5. சார் நான் பரீட்சை எழுதறப்ப இவனைப் பார்த்துதான் எழுதினேன்.சரி.. . இண்டர்வ்யூக்கு இவரை ஏன் கூட்டிட்டு வந்தீங்க ?எனக்கு பதில் தெரியாத கேள்வியைக் கேட்டீங்கன்னா இவரைக் கேட்டு பதில் சொல்வேன்.==========6. ஏன் சார் உங்களுடையது காதல் திருமணமா ?எப்படி கரெக்டா சொன்னீங்க ?இவ்வளவு மோசமான சமையலை இவ்வளவு ருசிச்சு சாப்பிடறீங்களே அதை வச்சுதான் கண்டுபிடிச்சேன்==========7. தலைதீபாவளிக்கு உன்னோட மாமனார் முறைப்படி எல்லாம் செஞ்சாரா.. ?ம்.. . முறைப்படி செஞ்சார்.. . ஆனா, முறைச்சபடி செஞ்சார்==========இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8, (முதலிரவு அறையில்) என்னது.. . அங்கேயே வெட்கப்பட்டுக்கிட்டு நிக்கிறே.. .? உனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலையா.. .?சொல்லித் தந்தாங்க. மொதல்ல அஞ்சு நிமிஷம் வெட்கப்படணும்-னு சொன்னாங்க.. அதான் பட்டுக்கிட்டிருக்கேன்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 38

1. அவர்:எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?இவர்:அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!==========2. ஒருவர்: உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல...மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!==========3. வாங்கின கடனை போன மாதம் திருப்பிக் கேட்டப்ப அடுத்த மாதம் தர்றேன்னு சொன்னீங்க. இப்பவும் அடுத்த மாதம்னு சொல்றீங்களே.. .?இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சுங்கிறது என்கிட்ட கிடையாதுங்க==========4. பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!இப்பவாவது உணர்ந்தியே!கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!==========5. என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...?சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்==========6. உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.==========7. ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்புபோனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!==========இன்றைய மெகா ஜோக்:8. மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க...எதுக்கு டாக்டர் ?தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 36

1. ஏன் உங்க மூளையைப் படம் எடுத்துத் தரச் சொல்லி தொல்லைப்படுத்துறீங்க?எனக்கு மூளை இல்லேன்னு சொல்றவங்க கிட்டெல்லாம் காட்டத்தான்==========2. நிம்மதியைத் தேடி ஊர் ஊரா யாத்திரை போறதுக்குப் பதிலா, இப்படிச் செய்தா என்ன ?எப்படி ?உங்க மனைவியை கொஞ்சநாள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வையுங்களேன்.=========3. என் கணவர் இரவு பகல்னு பார்க்க மாட்டார். எப்பவும் கடினமாதான் உழைப்பார்.அதான் இத்தனை குழந்தைகளைப் பார்த்தாலே தெரியுதே...=========4. அன்பரே, கைவிட்டு விட மாட்டீங்களே ?கையை எப்படி விட முடியும் கண்ணே. கைக்கு பத்து பவுன் வளையல் அல்லவா போட்டிருக்கே.==========5. உங்க மனைவியைப் பற்றிப் பலபேர் பலவிதமா பேசறhங்களே, நீங்க கண்டிக்கக் கூடாதா ?ஒருத்தர் ரெண்டு பேர்னா கண்டிக்கலாம். பல பேரை எப்படிக் கண்டிக்க முடியும்==========6. சிஸ்டர் எனக்காக ஒரு பாட்டு பாடுவீங்களா ?ஓ.. .ஆனால் திட்டக் கூடாதும் .. . பாடுங்கஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா.. .==========7. நடிகை - டைரக்டர்: சார்மார்வாடிகிட்டே என்னை ஏன் அழைச்சுட்டு வந்தீங்க ?டைரக்டர் - அதான் சொன்னேனே.. . உங்களை வச்சுத்தான் இந்த படமே எடுக்கணும்னு==========இன்றைய மெகா ஜோக்:8. பசங்களை அப்பா அம்மா விளையாட்டு விளையாடச் சொன்னது தப்பாப் போச்சு.என்ன ஆச்சு ?பயங்கரமாக அடிச்சு சண்டை போட்டுக் கொண்டு ரத்தக் காயத்துடன் வந்து நிற்கறாங்க.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 35

1. தொண்டன்1: நம்ம தலைவர் கதை விடுறதுல பலே கில்லாடி...தொண்டன்2: அப்படி என்னக்கதை விட்டார்...தொ1: நாங்க ஆட்சிக்கு வந்தால் .... இரவில் வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு சரியாக வழி தெரிய வானத்திலும் தெரு விளக்குகள் அமைப்போம்னு சொல்றார்.==========2. ஒருவர்: எதுக்கு அந்த டிராபிக் போலீஸ் காரர் விமான நிலையத்தில வந்து சண்டைப்போடுறார்.மற்றவர்: நோ எண்ட்ரி வழியா ஒரு பிளைட் ஆகாயத்துல பறந்து போச்சாம், அதுக்கு ஃபைன் போடணும்னு சொல்றார்!==========3. வித்வான்:அந்தம்மாவுக்கு பெரிய நாட்டிய "தார"கைனு தான் பேரு, ஆனால் சம்பளம் ஒழுங்காவே தர மாட்டாங்க!நண்பர்: அப்போ நாட்டிய தராத"கை"னு சொல்லுங்க!==========4. நண்பர்: பக்கத்து வீட்டில திருடி போலீஸ்ல மாட்டிக்கிட்டாரே கொன்னக்கோல் பாகவர் கிட்டப்பா இப்போ என்ன ஆனார்?மற்றவர்: இப்போ அவரை எல்லாம் கன்னக்கோல் பாகவதர்னு சொல்றா!==========5. நண்பர்1: உங்க பிரண்டு பெரிய விஜய் ஃபேனாக இருக்கலாம் அதுக்காக பஸ்டாண்ட்ல போய் மதுரைக்கு போகாதடினு பாடிக்கிட்டு நிக்கனுமா?நண்பர்2: நீ வேற அவன் பொண்டாட்டி கோச்சுக்கிட்டு அவங்க அம்மா ஊரு மதுரைக்கு போகுது அவங்களை போக வேண்டாம் சொல்லிக்கிட்டு இருக்கான்!==========6. நண்பர்1: தனுஷ் "பொல்லாதவன், அஜித் "பில்லா" தெரியும் அது என்ன அவரைப்பார்த்து எல்லாம் பில்லாதவன் சொல்றாங்க!நண்பர்2: அவர் பலே ஆசாமி , ஹோட்டலுக்கு சாப்பிட கூப்பிட்டு போய்ட்டு பில்லை நம்ம தலைல கட்டிட்டு எஸ்கேப் ஆகிடுவார், பில் தர மாட்டார் அதான் "பில்லாதவன்"==========7. மீனா: நம்ம பரிமளாவுக்கு ஓவர் பந்தாடி...வீணா: எப்படி சொல்ற...மீனா: அவ ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு ஒரு விண்டோவ் ஏசி வைக்க போறாளாம்!==========இன்றைய மெகா ஜோக்:8. அவள்: அந்த டைலர் லேட்டஸ்ட் டெக்னாலஜிப்படி ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாரம்?இவள்: எப்படி?அவள்: ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு "பவர் விண்டோவ் "எல்லாம் வைப்பாராம் ஒரு பட்டனை அமுக்கினா விண்டோவ் தானா மூடிக்கிட்டு சாதாரண ஜாக்கெட் ஆகிடுமாம்!

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 34

1. உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்.சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா ?==========2. பள்ளிக்கூட திறப்பு விழாவுக்கு நம்ம தலைவரைக் கூப்பிட்டது ரொம்பத் தப்பா போச்சு.எதனால .. ..?வகுப்பு அறைகளைப் பார்த்துட்டு, இதென்ன ரூம், ரூமா கட்டியிருக்கு, லாட்ஜா? -னு கேட்கிறாரு==========3. இயக்குனர்: விஜய் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறாப்போல ஒரு படம் எடுக்கிறேன்.தயாரிப்பாளர்: பேர் என்ன?இயக்குனர்:அழகிய டுமீல் மகன்!==========4. நண்பர்: கார்த்திக் அஜித் ஃபேன் என்பதை நிருபிச்சுட்டாண்டா...நண்பர்2: எப்படிறா?நண்பர்1: வரலாறு ல மட்டும் பாஸ் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் பெயில் ஆகிட்டான்.==========5. இயக்குனர்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கதையை வச்சு ஒரு சரித்திர படம் எடுக்கப்போறேன்.தயாரிப்பாளர்:பெயர் என்ன வச்சு இருக்கிங்க...இயக்குனர்: நேதாஜி - "the bose"==========6. உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்...அப்படி என்ன பேசினான்:வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும் சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்?==========7. கல்லூரி னு படம் வந்துச்சு அதுக்குள்ள பழனியப்பா கல்லூரினு ஒரு படம் வருதே, ரெண்டும் ஒண்ணா?படத்துக்கு கல்லூரினு பேரு வச்சாங்க ஆனா கல்லூரிக்கு பேருக்கு வைக்க மறந்துட்டாங்களாம், அதான் பழனியப்பா கல்லூரினு பேரு வச்சு கல்லூரிய திரும்பவும் ரிலீஸ்செய்றாங்க!==========இன்றைய மெகா ஜோக்:8. நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தரிங்களே!என்னை என்ன கேணைப்பயனு நினைச்சிங்களா.... "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கறிங்கஅதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்!

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 33

1. அவர் திடீர்னு கோர்ட்ல குட்டிக்கரணம் போடுறாரே.. . ஏன் ?அதான் சொன்னேனே.. . அந்த சாட்சி பல்டி அடிப்பாருன்னு.. .==========2. தலைவர் வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னம் ஆக்கறேன்னு சொல்லிட்டு ஏன் கை விட்டுட்டாங்க?அவரு ஏகப்பட்ட வீட்டுல வாழ்ந்ததால, அரசாங்கத்தால முடியாதாம்.==========3. நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு.கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்.... கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்.==========4. எதை வெச்சிப் படம் எடுத்தா நல்லா ஓடும் ?முயலை வெச்சிப் படம் எடுங்க சார், நல்லா துள்ளித் துள்ளி ஓடும்==========5. ஏண்டீ என் கல்யாண பட்டு வேட்டி பத்திரமா இருக்கா .. .பாத்திரமா இருக்கு .. ..==========6. டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்==========7. நம்ம தலைவரை நெடுஞ்சாலைத் துறையிலிருந்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கினது தப்பாப்போச்சு .. ..ஏன்யா .. .. ?ஏர்போர்ட் ரன்வேயில விமானங்களெல்லாம் ரொம்ப வேகமா வருது. அதனால, ஏகப்பட்ட ஸ்பீட் பிரேக்கர் போடணும்னு அடம் பிடிக்கிறாரு.==========இன்றைய மெகா ஜோக்:8. மாமியார் முகத்துல அயர்ன் பாக்ஸை வச்சு தேச்சியா .. .. ஏன் ?முகத்துல சுருக்கம் விழுதுன்னு கவலைப்பட்டாங்க

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 31

1. உன் பக்கத்துல உக்காந்து பரீட்சை எழுதின மனோகரைப் பார்த்து நீ காப்பி அடிச்சிருக்கேங்கறதை வாத்தியார் எப்படிக் கண்டுபிடிச்சார்?பரீட்சை பேப்பர்ல கடைசியா நன்றி - மனோகர்னு எழுதித் தொலைச்சுட்டேன்.==========2. விநாடி வினா நிகழ்ச்சில அந்தப் பொண்ணை ஏன் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்தீங்க ?ஸாரிங்க, குவிஸ் புரோக்ராம்னு தெரியாது, கிஸ் புரோக்ராம்னு நினைச்சுட்டேன்.==========3. என்னடா ? போஸ்ட்மேன் வேலை கிடைச்சதுக்கு இவ்வளவு சந்தோஷப்படறே ?பின்னே ? இனி எந்த ஃபிகரைப் பார்த்து லெட்டர் குடுத்தாலும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.==========4. சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.==========5. அந்த ஆட்டோவுல கல்யாணத்துக்கு வயது 31-ன்னு எழுதியிருக்கே, எப்படி ?அந்த ஆட்டோக்காரரோட பேரு கல்யாணம். அவருக்க வயசு முப்பத்தி ஒண்ணு==========6. பதவிப் பிரமாணம் எடுக்க தலைவர் ரொம்ப கூச்சப்படுறாரே .. ஏன் ?எதையும் யாருக்கும் தெரியாம எடுத்துதான் பழக்கமாம்==========7. மாப்பிள்ளை பையன் ஊமை பரவாயில்லையா ?பரவாயில்லை .. .. எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே==========இன்றைய மெகா ஜோக்:8. கணவன்: சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க .. ..மனைவி: எதுக்காம் .. .. ?கண்வன்: நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 30

1. டாக்டர் என் கணவர் என்னை எதிர்த்துப் பேசறார் ?இந்தப் பிரசினைக்கு ஏன் இங்கே வந்தீங்க ?நான் வீட்ல இல்லாதப்ப தனியா அவர் பாட்டுக்கு எதிர்த்துப் பேசறார் டாக்டர்.==========2. இல்லத்தரசி : டாக்டர், என் மாமியாருக்கு நீங்க வைத்தியம் பண்றது இது மூணாவது தடவை.டாக்டர்: அதுக்கு என்னங்க இப்போ?இல்லத்தரசி: இந்த முறையும் அவங்க தேறிட்டாங்கன்னா, நான் டாக்டரை மாத்த வேண்டியிருக்கும்.==========3. தரகர்: மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன் .. .. ?வீடு பார்க்க வந்தவர்: என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு==========4. தன் வீட்டருகே இருந்த பைனான்ஸ் கம்பெனி திடீரென்று மூடப்பட்டுவிட்டதாக தன் நண்பனிடம் வருத்தத்தோடு சொன்னார் சர்தார்ஜி."ஏன், நீ எதுவும் பணம் போட்டிருந்தியா?" என்று கேட்டார் நண்பர்."பத்தாயிரம் ரூபாயை இன்னிக்கு அங்கே டெபாசிட் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன் படுபாவி அதுக்குள்ளே ஒடிட்டானே" முன்பை விட வருத்தமாய் சொன்னார் சர்தார்ஜி==========5. சர்தார்ஜி ஒருவர் வேலை விஷயமாக ஒரு கம்பெனிக்குச் சென்றார். அங்கே, அவசரமாக பத்து ஒயிட் பேப்பர்கள் தேவைப்பட்டது அவருக்கு ஆனால், அவரிடமிருந்ததோஒரே ஒரு பேப்பர் மட்டும். பக்கத்தில் இருந்த கடைகளில் பேப்பர் கிடைக்காததால் ஒரு ஐடியாவுடன் ஜெராக்ஸ் கடை ஒன்றிற்குள் நுழைந்து கையிலிருந்த ஒயிட் பேப்பரைக்குடுத்து அவசரமா, பத்து காப்பி போட்டுக்குடுங்க என்றவர் சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் பேக் அண்ட் ஃப்ரெண்ட் ரெண்டு சைடும் காப்பி போட்டுடுங்க - என்றார்.==========6. சர்தார்ஜிகள் முட்டாள்களாக ஜோக்குகளில் சித்திக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பவர் சுக்பீர்சிங் இந்த உலகில் சர்தார்ஜிகள் மட்டும் தான் முட்டாள்களா ? எல்லோரும்ஒரு வகையில் முட்டாள்கள்தான். இதை நிரூபித்துக் காட்டுவேன் என்று தன் நண்பர்களிடம் ஒரு நாள் சவால் விட்ட சுக்பீர் சிங், குதுப்மினாருக்கு போனார்.குதுப்மினாரின் உச்சியில் நின்று கொண்டு கீழே எதையோ சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார் "கீழே அப்படி என்ன சுவாரஸ்யமாக இருக்கிறது?" என்று அவர் காதருகில்ஓரு குரல் கேட்டது. "பேசாமல் என் பின்னால் கியூவில் நில், நான் கொஞ்ச நேரம் பார்த்த பிறகு உனக்கு விஷயத்தை சொல்கிறேன்" என்றார் சுக்பீர் சிங்.கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆன பின் சர்தார்ஜியின் பின்னால் நின்றவருக்கு கோபம் வந்தது. என்னய்யா இது நீ பார்த்து ரசிக்க குதுப்மினாரின் உச்சியில் இருந்து தரைவரை நீண்ட கியூ நிற்கிறது. நீ என்ன பார்க்கிறாய் என்பதை இப்போதாவது சொல்லமாட்டாயா ? என்று சிங்கின் காதருகே சென்று கத்தினார்.இதைக் கேட்டதும் சுக்பீர் சிங்குக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரு சர்தார்ஜியை நம்பி எத்தனை முட்டாள்கள் ஒன்றுமில்லாததைப் பார்க்க கியூவில் நிற்கிறhர்கள்என்று நினைத்தவாறு திரும்பிப் பார்த்த சுக்பீர்கிங்கின் முகம் குறுகியது. குதுப்பினாரின் உச்சி முதல் தரை வரை கியூவில் நின்றிருந்தவர்கள் எல்லோருமே சர்தாஜிகள்==========7. டாக்டர் எனக்கு வாய் கூசாத மாதிரி மாத்திரை குடுங்கஏன் ? அடிக்கடி மாங்கா சாப்பிடுவீர்களா ?நான் ஒரு வக்கீல் டாக்டர். கோர்ட்ல வாய் கூசமா நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கு.==========இன்றைய மெகா ஜோக்:8. என்னடி நீ, பஸ்ஸில் உன் பின்னால் நின்னவன் உன் ஜாக்கெட்டுக்குள்ள கையை விடறான் .. .. நீ பேசாம இருக்கியே ?நான் மணிபர்சை ஜாக்கெட்டுக்குள்ள வைக்கலையே .. .. கையை விட்டு அவன் ஏமாறட்டுமேன்னுதான் சும்மா இருந்தேன்

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 29

1. உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சி==========2. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க ?பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.==========3. மேடையில மைக் டெஸ்ட் பண்ணியது தப்பாப் போச்சி.ஏன் ?ஒன் டூ த்ரீன்னு சொன்னதும் எல்லோரும் ஓடிட்டாங்க==========4. சர்தார்ஜியும் அவரது நண்பரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி, பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட வெளியே வந்த நண்பர்கள் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.பேச்சுவாக்கில் அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது என்று பந்தயமே கட்டினார் நண்பர். சர்தார்ஜியும் விடவில்லை பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான் என்றார் நம்பிக்கையோடு பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.சர்தார்ஜிதான் பாவம் அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.பந்தயத்தின்படி, வென்ற நண்பருக்கு விருந்து வைத்தார் சர்தார்ஜி. அப்போது நண்பர், "உங்களை நான் எமாத்திட்டதா என்னோட மனச்சாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் எற்கெனவே பார்த்துட்டேன் என்றார்."நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை" என்றார் சர்தார்ஜி வருத்தத்தோடு==========5. டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.வெரிகுட் நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க==========6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்==========7. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்ககணவன்: ஏன் .. .. ?மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே==========இன்றைய மெகா ஜோக்:8. என்ன சார்.. .. வண்டியில காஸ் பொருத்தினப்புறம் ஆபீஸ் போறது கஷ்டமா இருக்காதேநீங்க வேற ... இப்ப ராத்திரி சமையலையும் கார்லேயே பண்ணி முடிச்சுடுங்கனு சொல்லிட்டா என் பொண்டாட்டி

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 27

1. மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் "தந்தையின் உழைப்பு" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதவது?அப்பா: நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது, வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.==========2. அரசியல் பொதுக்கூட்டத்தில் ஒரு அறிவிப்பு:முப்பது உண்டியல்களைக் கூட்டத்தினரிடையே வசூலுக்கு அனுப்பினோம். இருபத்தெட்டுதான் திரும்பி வந்துள்ளன உண்டியலுடன் எதிர் அணிக்கு ஒடிவிட்ட அந்தஇருவரையும் அப்படியே தங்கள் கட்சியிலேயே வைத்துக் கொண்டு உண்டியல்களை மட்டும் திருப்பி அனுப்புமாறு எதிர் அணியினரைப் பணிவோடு வேண்டுகிறோம்==========3. அந்த லேடி டாக்டர் தொட்டாலே போதும், அம்பது ரூபாய் வாங்கிடுவாங்க.அப்படி ஒண்ணும் அழகா இல்லையே அவங்க.==========4. சர்வர் : முதலாளி... இந்த ஆள் காசில்லாமல் சாப்பிட்டார்...முதலாளி : சரி... மாவாட்டச் சொல்லிடு...சர்வர் : சென்னேன்... மெடிக்கல் சர்டிபிகேட்டைக் காட்டறார். நெஞ்சுவலி வருமாம்...==========5. மனைவி : நாளைக்கு எங்க `லேடீஸ் கிளப்'பில் எல்லாரையும் அவங்க அவங்க ஹஸ்பெண்டுகளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க.கணவன் : எதுக்காக?மனைவி : புதுசா ஒரு சலவைத் தூளை அறிமுகப்படுத்தறார்களாம்.==========6. அந்தக் கடையில் தள்ளுபடி விலையில் வாங்கிட்டுப் போன துணி சாயம் போகுதுன்னு கன்ஸ்யூமர் கோர்ட்டிலே கேஸ் போட்டியே என்ன ஆனது?கேஸ் தள்ளுபடி ஆயிடுச்சு!==========7. புதுக்கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்கமாட்டாள் என்று நினைக்கிறேன்!நண்பன்: எப்படி சொல்கிறாய்?புதுக்கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!==========இன்றைய மெகா ஜோக்:8. மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா, கஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 26

1. பக்கத்து வீட்டுக்காரி காபி சாப்பிடணும்னா அதுக்காக எதைத்தான் இரவல் கேட்கறதுன்னு இல்லியா ?காபி பொடியா, சர்க்கரையா எதை இரவல் கேட்டாங்க ?ரெண்டும் இல்ல காபி போட்டுத்தர அஞ்சு நிமிஷம் என் கணவரை இரவலா அனுப்பணுமாம்==========2. எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு?==========3. சே... அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு!பேசட்டுமே சார்... நம்ம கட்சிப் பிரமுகர்தானே.நீங்க வேற ... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்!==========4. அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும் நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்.அப்போ ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க.==========5. நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலைத் தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா...அதான் குடி முழுகிப் போனா மாதிரி இருக்கீங்களா.==========6. ஏன் இந்தப் படத்துல கதாநாயகன் முட்டையின் மஞ்கள் கரு-வை சாப்பிடுற மாதிரி அடிக்கடி காட்றாங்ககதையில கருவே இல்லேன்னு யாரும் சொல்லிவிடக் கூடாது பாருங்க அதான்.==========7. நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.ஐயோ அப்புறம் என்னாச்சி?அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி, "வேலைக்குப் போக நேரமாச்சு, எழுந்திரி" ன்னு கனவைக் கலைச்சுட்டா.==========இன்றைய மெகா ஜோக்:8. நேத்து முதல் ராத்திரியில நடக்கக்கூடாதது நடந்திடுச்சு.என்னாச்சு தூங்கிட்டியா?இல்லடா! எல்லாம் முடிந்தவுடன் பழக்க தோஷத்துல அவள் கையில ஐநூறு ரூபா நோட்டை திணிச்சிட்டு எழுந்து வந்துட்டேன்.அப்புறம்?அவ மீதின்னு சொல்லி 200 ரூபாய் என் கையில் திருப்பிக் கொடுத்துட்டா!

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 24

1. வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?ஆமாங்க, இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..==========2. ஆப்பரேஷனில் உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க..எதுக்கும் இன்னொரு தரம் ட்ரை பண்ணிப் பாருங்க டாக்டர்..==========3. உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க..==========4. கல்யாணப் பெண்ணைப் பார்த்தா கொஞ்சம் வயசான மாதிரி தெரியுது..நீங்க சத்திரம்; மாறி வந்திட்டீங்க போல.. இங்க நடக்கறது 60-ம் கல்யாணம்..==========5. டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல.. டாக்டர்..சரி சரி கவலைப் படாதே புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..==========6. அரசே.. நாம் மோசம் போயிட்டோம்.என்னாச்சு மந்திரியாரே?இப்பொழுது நடக்கும் போரில் நமது படைத் தளபதி போர் ஃபிக்ஸிங் செய்து தோற்றுக்கொண்டிருக்கிறா மன்னா!==========7. எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறhன்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே.. .=========இன்றைய மெகா ஜோக்:8. அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு பண்ணினான். விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியில்.. ரெயில்முன் பாய்வதுதான் சரியான ஐடியாவாக தோன்றியது..தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டான். அத்தனை மூட்டைகளிலும்சிக்கன், மட்டன் என்று அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்.பார்த்தவர்கள் வியந்தார்கள்.ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டைகள்?அவன் சொன்னான்.. சரியாப் போச்சு போங்க. அந்த விவஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 22

1. ஊஞ்சலாடுவது என் பொழுது போக்கு என்கிறார் உங்கள் மனைவி, உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு ?ஹி... ஹி.... ஊஞ்சலாட்டுறதுங்க!==========2. உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே.....? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!==========3. இந்த ஊர்ல திருட்டு பயம் ஜாஸ்தின்னு பேசிக்கிறாங்க. நீங்க எப்படி இவ்வளவு தைரியமா போறீங்க ?எனக்கு போலீஸ்னாதான் பயமே!==========4. காரோட என் மனைவியைக் காணோம்னு நான் புகார் கொடுத்திருந்தேனே, அதை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் சார்!ஏன் ?கார் கிடைச்சிடுச்சு.==========5. ஆசிரியர்: பரீட்சை அறையில் ஏண்டா தூங்குறே ?மாணவன்: பதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க.==========6. வாணி: புடவை தீப்பிடிச்சிகிட்டு உன் மாமியாரைக் காப்பாத்த நினைச்சதுக்காக உன் மேலே கொலை பழி விழுந்துதா ஏன் ?ராணி: தீயை அணைக்க நான் அவங்களைக் கிணத்தக்குள்ளே தள்ளினது தப்பாம்.==========7. ஹலோ போலீஸ் ஸ்டேஷனா இங்க டி.வி-ல தொடர் பார்க்கவிடாம ஒரத்தர் குறுக்கம் நெடுக்கமா என் வீட்டுல நடந்து தொலைக்கறார்யார்னு விசாரிச்சீங்களா ?விசாரிச்சேன். யாரோ திருடனாம்.==========இன்றைய மெகா ஜோக்:8. சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!ராமு: அதனால...?சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 20

1. ஹலோ டாக்டர் ஸ்ரீதரா ..? அவசரமா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா ..?யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?நான்தான் உங்க பேஷண்ட்... நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க===========2. ஏன் சார் இவர் ஃபைலைக் கட்டிப்பிடிச்சு சிரிச்சுக்கிட்டே இருக்கார் ?எப்பவும் ஆபீஸ்ல ஃபைலைக் கட்டிக்கிட்டு அழறீங்களே.. .னு அவர் மனைவி திட்டினாங்களாம்.. . அதான்==========3. டாக்டர்.. . இந்த வியாதியோட போராடி வாழவே பிடிக்கலை. ஏதாவது விஷஊசி இருந்தா போட்டுக் கொன்னுடுங்கநீங்க இப்படிக் கவலைப் படக்கூடாது. அதுக்காகத்தானே ஆபரேஷன் பண்றேன்==========4. ஆப்பக்காரக் கிழவி பிஸியா வியாபாரம் பார்த்துட்டிருந்தப்போ திடீர்னு அடைமழை .. .. இடி, மின்னல் .. .. கடையைச் சாத்திட்டுப் போன கிழவி மறுநாள் காலையில வந்துபார்த்தப்போ ஆச்சரியமாயிட்டாங்க .. ..ஏன் .. .. ?கடையில இருந்த ஆப்பமெல்லாம் இடியாப்பமா மாறிப் போயிருந்தது==========5. வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்==========6. என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சுஏன் என்ன ஆச்சு ?எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்==========7. வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். .வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .==========இன்றைய மெகா ஜோக்:8. பக்தன்: சுவாமிஜி, உலகம் ஏன் இப்படி சுத்துது?சுவாமிஜி: ஒரு குவார்ட்டர் தண்ணி அடிச்சா மனுஷனே சுத்தும் போது, 3 குவார்ட்டர் தண்ணி இருக்கிற உலகம் ஏன் சுத்தக் கூடாது?

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 18

1. பத்து மணிக்கு டாண்னு ஆபீஸ் போகலாம்னு பார்த்தா முடியலைஏன் .. . நடுவில் ஏதாவது பிரச்சினையா ?இன்னும் வேலையே கிடைக்கலையே==========2. எலிப்பொறி செய்ய என்னை ஏன் கூப்பிடுறீங்க ?நீங்க பொறியல் வல்லுனர்னு சொன்னாங்களே==========3. டிஸ்பென்சரி வாசல்ல கடை வெச்சதுக்குப் போய் அந்த டாக்டர் ஏன் இப்படி சத்தம் போடறாரு ?பின்ன டிஸ்பென்சரி வாசல்ல ரோஜா மாலை, மலர் வளையமெல்லாம் வித்தா டாக்டர் சும்மா இருப்பாரா ?==========4. போன ஜென்மத்துல எனக்கு நீ மருமகளா வந்திருப்பேன்னு நினைக்கிறேன்..எப்படிச் சொல்றீங்க.. .?உன்னைப் பார்த்தாலே சண்டை போடணும் போலத் தோணுதே.. .==========5. நான் குடிகாரனா நடிச்சதை என் ரசிகர்கள் ஏத்துக்கலைன்னு நினைக்கிறேன்.ஏன் சொல்றீங்க ?படம் ஊத்திக்கிச்சு.==========6. அந்த நடிகைகிட்டே எக்ஸ்-ரே படம் எடுக்கணும்னு சொன்னீங்களா டாக்டர்?ஆமாம் .. .. ஏன் கேட்கறீங்க ?முழு டிரஸ்ஸோட எடுத்தா ஒரு ரேட் கவர்ச்சி டிரஸ்ல எடுத்தா ஒரு ரேட்னு சொல்றாங்க==========7. என்ன .. .. அந்த டாக்டர் எம்.பி.பி.எஸ்-னு மட்டும் போட்டுக்கிட்டு இருக்காரு .. ..பேரே போடலையே .. .. ?நான்தான் சொன்னேனே .. .. அவர் பேர் போன டாக்டர்னு .. ..==========இன்றைய மெகா ஜோக்:8. ஷூட்டிங்கல ஏன் கேமராமேன் குஷியாயிட்டாரு ?அது ஒண்ணுமில்ல.. . ஜன்னல் ஜாக்கெட்டை கதாநாயகி மாத்திப் போட்டுட்டாங்களாம்.. . அதான்

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு -17

1. ''பத்தாம் நம்பர் பேஷன்ட்டை அடிக்கடி திட்டிட்டு வர்றீங்களாமே... ஏன்?''''நீங்கதானே டாக்டர்... ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் அவருக்கு ஒரு டோஸ் தரணும்னீங்க!''==========2. அந்த டாக்டர் கொஞ்சம் சினிமா பைத்தியம் போலிருக்கு.. .ஏன் ?ஆபரேஷன் தியேட்டர்ல கரண்ட் கட்டாச்சுன்னா உடனே விசிலடிக்கிறாரு.. .==========3. ஸ்கூல் வாத்தியார் உலக மேப்பைக் காட்டி, பையன்கிட்டே இந்தியா எங்கே இருக்கு காட்டு.. ? னு சொன்னார்.பையன் அமைதியா இருந்தான்.ஏண்டா, உனக்குத் தெரியுமா, தெரியாதா .. ? னு வாத்தியார் கேட்டதுக்கு,தெரியும்.. . ஆனா, நான் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் சார்..னு சொன்னான் அந்தப் பையன்==========4. ஓவியப் போட்டி ஒண்ணு நடந்தது. சின்னப் பசங்க நிறையப்பேரு படம் வரைஞ்சு கொடுத்தாங்க. ஒரு பையன் கொடுத்த பேப்பர் மட்டும் வெள்ளையா இருந்தது.மாஸ்டருக்குப் பயங்கர கோபம்.என்னடா இது ?னு கேட்டார்.ஒரு ஆடு புல் திங்கற ஓவியம் சார். னான் பையன்.மாஸ்டருக்குக் குழப்பமாயிடுச்சு, ஆடு, புல் எல்லாம் எங்கேடா ? னார்.புல் எப்படி இருக்கும் சார் ? அதுதான் ஆடு தின்னுடுச்சேன்னான் பையன்அப்படின்னா ஆடாவது இருக்கணுமே.. .? னார் மாஸ்டர்.புல் இல்லாத இடத்தில் ஆட்டுக்கு என்ன சார் வேலை ? அதனால் ஓடிப் போயிடுச்சுன்னான் பையன்.==========5. ரோட்டில் ரெண்டு பேர் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க. பக்கத்தில் ஒரு பையன் நின்னு அப்பா, அப்பானு அழுதுட்டிருந்தான். அந்த வழியா போன ஒருத்தன். அந்த பையனிடம் என்னடா பிரச்னை.. ஏன் அழறே?னு கேட்டான்.அந்தப் பையன் அப்பா, அப்பானு தொடர்ந்து அழுதான். சண்டை போட்டுக்கிட்டிருக்கற ரெண்டு பேர்ல உங்கப்பா யாருடா ?னு கேட்டதுக்கு அதுக்குத்தான் ரெண்டு பேரும் சண்டை போடறாங்கனு சொல்லிட்டு மறுபடியும் அழுதான் அந்தப் பையன்.==========6. ஊதாரித்தனமாக செலவு பண்ணும் தனது மகனுக்கு பாக்கெட் மணி தருவது தொடர்பாக மனைவியிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் அவர். டார்லிங் இனிமே அவன் திருந்திடுவான்னு நெனைக்கிறேன். ஒவ்வொரு ரூபாயும் எவ்வளவு மதிப்பானதுன்னு நேத்து ராத்திரி விலாவாரியா அவனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கேன்ஓகோ. .. நீங்கதானா அது ?எது ?இன்னிக்கு காலை என்கிட்டே வந்து, ரூபாய்க்கு இவ்ளோ மட்டமான மதிப்பு இருக்கிறது நேத்துதான் தெரிஞ்சது. பாக்கெட் மணியை டாலர்ல கொடு-னு அவன் அடம்பிடிச்சானே.. . அது உங்களாலதானா ?==========7. என்ன அந்த அரசியல்வாதி சலுhன்காரர்கிட்டே போய் தகராறு பண்றாரு .முடிவெட்டும்போது அவருக்குப் போத்தின துண்டை அவருக்கே கொடுக்கணுமாம்.==========இன்றைய மெகா ஜோக்:8. டி.வி-யில் சின்னவீடு படம் ஓடிக்கிட்டிருந்தது. என் அண்ணா பையனுக்குப் பன்னிரண்டு வயசு. அவன் என்கிட்ட வந்து சித்தப்பா, சின்னவீடுன்ன என்ன ?னு கேட்டான்.எனக்குத் தர்மசங்கடமா இருந்தது. நீ படிக்கிற பையன். இதெல்லாம் இப்ப தெரிஞ்சுக்க வேண்டாம். பின்னால தெரிஞ்சுக்கலாம். இப்ப போய் படிடான்னு சொன்னேன்.அதுக்கு அவன் நீங்க சொல்லுங்க சித்தப்பா.. . நான் இப்பவே தெரிஞ்சு வெச்சுக்கறேன்னு சொன்னான்.அடப்பாவி தெரிஞ்சு வெச்சக்கறது இல்லடா சின்னவீடு. தெரியாம வெச்சுக்கிட்டாதான் சின்னவீடுனு பதில் சொல்லி வெச்சேன்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 15

மாமியார் - மருமகள்என்னதான் இன்டர்நெட் யுகம் வந்தாலும் மாமியார் - மருமகள் சண்டை ஓயப் போறதில்லை. இன்டர்நெட்லேயே ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறாங்க. இதுக்காகவே வெப்சைட் ஓபன் பண்ணி இருக்காங்களாம்.வீட்டிலே எல்லா வசதியும் இருந்தாலும் வெறும் ஈகோ ப்ராப்ளத்தாலே, இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.ஒரு மருமகப் பொண்ணு எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தாளாம். "என்ன விசேஷம்?" னு கேட்டப்போ "மாமியாருக்கு சுகர் 400க்கு மேலே ஏறிடுச்சாம்."மாமியார் சும்மா இருப்பாங்களா ? அதுக்கு உதாரணம் இந்த விஷயம்.ஒரு மாமியார் என்கிட்டே ரொம்ப வருத்தப்பட்டு சொல்லிச்சு. "தம்பி இந்த அநியாயத்தைப் பார்த்தீங்களா ? நான் எப்பவுமே காலையிலே 6 மணிக்கெல்லாம் படுக்கையை விட்டு எந்திரிச்சிருவேன். அன்னிக்கு உடம்பு ரொம்ப அசதியா இருக்குன்னு கூட ஒரு அரைமணி நேரம் படுக்கையிலே படுத்துட்டேன். அதுக்குள்ளே மருமகள் என்னோட தலை மாட்டிலே குத்துவிளக்கை ஏத்திவச்சி. ஊதுவத்தியைப் பொருத்தி வச்சி, கால் மாட்டிலே உட்கார்ந்து அத்தே போயிட்டீங்களேன்னு அழ ஆரம்பிச்சிட்டா."எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டிலே ஒரு அற்புதமான காட்சி. மாமியாரை நாற்காலியிலே உட்கார வச்சி மருமகள் பவ்யமா நகம் வெட்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.அன்னைக்கு சாயந்திரம் கடைத் தெருவிலே அந்தப் பொண்ணைப் பார்த்தப்போ "என்ன மாமியார் மேலே ரொம்ப அக்கறை வந்திடுச்சா ? நகமெல்லாம் வெட்டி விடறhப்பிலே இருக்கே" அப்படின்னேன்.அதுக்கு அந்தப் பொண்ணு, "போங்க சார் பிரியமாவது ஒண்ணாவது. நாளைக்கு சண்டை வந்தா பிறாண்டி விட்டிரும். அதுக்காகத்தான் வெட்டினேன்" என்றாள்.வீட்டுக்கு முன்னாடி மாமியாரோட உருவத்தை அச்சா பெரிய கோலமா ஒரு பொண்ணு போட்டுகிட்டிருந்தாள். போகிற வருகிறவங்களெல்லாம் இதைப் பார்த்து, "மாமியார் மேலே இவ்வளவு பிரியமா கோலமெல்லாம் போடுறியே" ன்னாங்க. அதுக்கு அந்தப் பொண்ணு, "ஆசையாவது, மண்ணாவது, போற வர்றவங்க எல்லாம் நல்லா மிதிச்சிட்டு போகட்டும்னுதான் போட்டேன்" என்றாள்.அன்னிக்கு ஒருநாள், ஒரு மருமகள் சாயந்திரம் டிபனுக்கு கடாமுடான்னு சீடை, முறுக்கா பண்ணி வச்சிருந்தாள். "என்னடி இன்னிக்கு சீடை, முறுக்கா பண்ணியிருக்கே"ன்னு புருஷன் காரன் கேட்டான். அதுக்கு அவள். "உங்களுக்கு விஷயம் தெரியாதா ? உங்க அம்மாவுக்கு மிச்சமிருந்த பல்லெல்லாம் விழுந்திருச்சி" ன்னாள்.மாமியாரும் விடலை. சீடை, முறுக்கை எடுத்து வெற்றிலை உரல்லே போட்டு இடிச்சி மென்னு காட்டிச்சு. இப்படி ஒரு மௌனப் போராட்டம் தேவையா ?ஒரு விநோதமான விஷயத்தை கேக்கலாமா ?"அதெப்படி மாமியாரையும், மருமகளையும் ஒரே சமயத்திலே தேள் கொட்டுச்சி ?""மாமியாரைத் தேள் கொட்டியதும் மருமகள் சபாஷ்னு சொல்லி தேளைத் தடவிக் கொடுத்தாளாம். அவளையும் பொட்டுன்னு போட்டிருச்சி.""பேய் வந்தா நாய்க்குத் தெரியுமாம். நம்ம வீட்டு நாய் குரைக்குது பார்த்தீங்களா"-ன்னு ஒருத்தி சொன்னப்போ, புருஷன் சொன்னான். "நம்ம வீட்டுக்கு ஏண்டி பேய் வரப் போவுது ?" அதுக்கு அவ விடலை. "கரெக்ட் அதோ உங்க அம்மாதான் வந்துக்கிட்டு இருக்காங்களே" என்றாள்.காலையிலே ஒரு வீட்டிலே புருஷன், "ஏண்டி நீண்ட நாட்கள் வாழ்வது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிட்டு வந்தேனே அதை எங்கே எடுத்து வச்சே" ன்னு கேட்டான். அதுக்கு அவன் மனைவி, "நாளைக்கு உங்க அம்மா ஊரிலே இருந்து வர்றhங்க. அவங்க எடுத்து படிச்சிடக் கூடாதேன்னு அடுப்பிலே போட்டு எரிச்சிட்டேங்க" என்று பதில் சொன்னாளாம்."என்னடி நான் பத்து தடவை மிதிச்சும் ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ ஒரே மிதி மிதிச்சதும் ஸ்டார்ட் ஆயிருச்சே எப்படி?" ன்னு புருஷன் கேட்டான். "அது ஒண்ணும் பெரிய வித்தை இல்லை. உங்க அம்மாவை நினைச்சுக்கிட்டு ஓங்கி மிதிச்சேன்."ஒரு அம்மா இன்னொரு பொண்ணுகிட்டே "உங்க மாமியாருக்கு சீரியஸ்னு ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணுனீங்களே, என்ன ஆச்சு?" ன்னாங்க. "ப்ச்சு, ஒண்ணும் ஆகலை" ன்னு சலிப்போட பதில் சொன்னாள்."மருமகப் பொண்ணே நீ கொடுத்த மர்ம நாவலை ஒரு தடவை படிச்சேன். பாதி உயிர் போயிருச்சுடி.""அப்படின்னா இன்னொரு தடவை படிச்சிருங்க அத்தை" - இது மருமகள்.ஒருத்தன் தன் மனைவிகிட்டே, " இறந்து போன எங்கம்மா நேத்து என் கனவிலே வந்தாங்க" அப்படின்னு கண்கலங்கச் சொன்னான். உடனே அவன் மனைவி, "அடடா என்னை எழுப்பியிருக்கக் கூடாது, நல்லா சண்டை போட்டிருப்பேனே" என்றாள்.நம்ம பெண்களுக்கு இங்கே மட்டுமில்லை, வெளிநாட்டுக்குப் போனாலும் இந்த மனோபாவம் மாறுவதில்லை.கொடுமைப்படுத்துற மாமியாரைப் பழிவாங்குறதுக்கு சந்தர்ப்பத்தை மருமகள் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தாள். அமெரிக்காவுக்கு வரவழைச்சு தன்னோட தமிழ்நாட்டு மாமியார் கிட்டே இங்கிலீஷ்லேயே பேசிக்கிட்டு இருந்தா. அது புரியாம அந்தம்மா அலங்க மலங்க விழிச்சிகிட்டு இருந்தது.ஒருநாள் எலி ஓடறதைப் பார்த்ததும் மாமியார்காரம்மா "ஐயய்யோ நம்ம வீட்டிலே எலி ரொம்ப இருக்கும் போலிருக்கே" அப்படின்னுது. உடனே மருமகள் "ரியலி!" அப்படின்னாள். "அந்த எலியெல்லாம் இல்லைம்மா. எல்லாம் சுண்டெலிதான்" என்றது மாமியார் அப்பாவியாக.மருமகளை மட்டம் தட்டறதுன்னா மாமியாருக்கு அல்வா சாப்பிடற மாதிரி. ஒரு நாள் மகன் கிட்டே, "ஒம் பொண்டாட்டிக்கு காது கேக்கிற மிஷின் வாங்கிக் கொடுடா. வர வர சரியா காது கேட்க மாட்டேங்குது. சண்டை போட்டா ரெஸ்பான்ஸே இல்லை" அப்படின்னுதாம்.இது கூட பரவாயில்லை. "சட்டு புட்டுன்னு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோடா. இவகிட்டே சண்டை போட்டு அலுத்துப் போச்சு" அப்படின்னுதாம்.ஒரு அம்மா இன்னொரு அம்மா கிட்டே, "அதோ போறா பாரு அந்தப் பொண்ணு இருக்கே அடங்காப்பிடாரி. ஆனா அவ மாமியார் தங்கமானவங்க" அப்படின்னாளாம்." அந்த மாமியார் யாரு?" கேட்டுதாம். "நான்தான்" னாங்க இந்தம்மா. இவங்களை நல்லவங்கன்னு இவங்களைத் தவிர யார் சொல்லப்போறா?மருமககூட எதுக்குத்தான் போட்டி போடறதுன்னு இல்லாமப் போச்சு. அவ ரெட்டை சடை போட்டிருக்காங்கறதினாலே இதுவும் இத்துனூண்டு முடியிலே ரெட்டை சடை போட்டுக்கிட்டு அலையுதாம்.தன் மகளை இன்னொரு இடத்திலே கட்டிக் கொடுத்திருக்கிற தாய் அவ கண் கலங்காம இருக்கணும்னு நினைக்கிறவ, தன்னை நம்பி வந்திருக்கிற மருமகளையும் அதைப் போலவே நடத்தலாமே. மருமகளும் தன் தாயைப் போலவே மாமியாரை நேசிக்கலாமே அப்போது இல்லறம் என்பது அமைதிப் பூங்காவாகத் திகழுமே.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 14

1. ஏங்க ஷாஜகான் மும்தாஜின் நினைவா தாஜ்மஹால் கட்டினார். நீங்க என் நினைவா என்ன கட்டுவீங்க ?எனக்கு அவ்வளவு வசதியில்லை... வேணும்னா உன் தங்கச்சியைக் கட்டிக்கிறேன்==========2. இருந்தாலும் நம்ம தலைவர் இப்படி முட்டாள்தனமா இருக்கக்கூடாதுஏன் - என்னாச்சு ?இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். இதில் ஏதோ எதிர்க்கட்சிக்காரர்களின் சதி உள்ளது அப்படின்னு மேடையில் பேசுறார்.==========3. மனைவியை அடிச்ச குற்றத்துக்காக உனக்கு என்ன தண்டனை தந்தாங்க ?இரண்டு பேரும் சேர்ந்து வாழணும்னுட்டாங்க==========4. என்ன இது... பிளாட்பாரத்தை இப்படி அசிங்கம் பண்ணி வச்சிருக்காங்க ?நடைபாதையைப் பயன்படுத்தவும்-னு போர்டு வச்சதை ஜனங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்க==========5. குருவே சாந்தியைத் தேடி வந்துள்ளேன்.சிஷ்யா இந்த ஆசிரமத்திலே சாந்தினு யாரும் இல்லை. அடையாறு பிரிவுல ஒரு ஆசிரமம் இருக்கு. அங்கே விசாரிச்சுப் பாரு.==========6. வேட்டையாடுவதில் விருப்பமுள்ள ஒரு அப்பாவுக்கு வினோதமான ஒரு ஆசை. குறி தவறாது சுடும் தனது திறமையை மகன் எதிரில் நிரூபிக்க விரும்பினார். ஒரு நாள் வேட்டைக்குப் போகும்போது மகனையும் கூடவே அழைத்துக் கொண்டு போனார்.சற்று தூரத்தில் கொக்கு ஒன்று அமர்ந்திருந்தது கண்டு அப்பாவுக்கு குஷி *சில நிமிடங்கள் துப்பாக்கி முனையில் கொக்கை குறிபார்த்துவிட்டு, மகனே... இப்ப பார் என்றபடி ட்ரிகரை அழுத்தினார். கொக்கு செத்துவிழப் போகிறது என்று மகன் எதிர்பார்க்க, துளி காயமுமின்றி எம்பிப் பறந்தது கொக்கு. அப்பாவை மகன் நகைப்போடு பார்க்க, சிறிதும் தயங்காமல் அவர் சொன்னார் - மகனே .. ஒரு அதிசயத்தைப் பார்க்கிற பாக்கியம் உனக்குக் கிடைச்சிருக்கு. அதோ பார்... செத்துப்போன ஒரு கொக்கு பறந்துக்கிட்டிருக்கு==========7. மிஸ்டர். மொக்கை ஏதோ வேலையாக அஞ்சலகம் போனார். அங்கு ஒரு கிராமவாசி தனக்காக ஒரு அஞ்சலட்டை எழுதித்தர வேண்டினார். மொக்கையும் மகிழ்வுடன் அக்கிராமவாசி சொன்னதை எழுதித்தந்தார். கடைசியாக அட்டையில் இன்னும் இடமிருக்கவே, வேறேதும் எழுதவேண்டுமா என மொக்கை வினவினார். சற்று யோசித்த கிராமவாசி சொன்னார்.."கையெழுத்து கேணத்தனமா இருக்கறத்துக்காக மன்னிச்சுடுங்க"ன்னு எழுதுங்க சாமி..!==========இன்றைய மெகா ஜோக்:8. மிஸ்டர் மொக்கை பாரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.. பேண்டின் பின் பாக்கெட்டில் ஒரு குவார்ட்டர் பாட்டில் வேறு வைத்திருந்தார்.. வழியில் வாழைப்பழத் தோலில் வழுக்கி தொபீர் என்று கீழே விழ, பின்பக்கம் முழுவதும் கசகசவென்று ஒரே ஈரம்..அதிர்ச்சியடைந்த மொக்கை இறைவனிடம் வேண்டினார்.."கடவுளே..! இந்த ஈரம் அடிபட்ட ரத்தமாகவே இருக்கட்டும்.. குவார்ட்டர் பாட்டில் உடைந்து போயிருக்கக் கூடாது..!

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 13

1. ஒரு ஜோடி தியேட்டரில் படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே கரண்டு போயி திரும்பி வந்தது."கரண்டு வர இவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா உனக்கு ஒரு முத்தம் கொடுத்திருப்பேனே!" அப்படின்னான் காதலன்."அப்படின்னா, கொஞ்ச நேரத்துக்கு முந்தி முத்தம் கொடுத்தது நீங்க இல்லியா" -ன்னு பதறினாள் அவள்.==========2. "அம்மி மிதிச்சி அருந்ததி பார்க்கிறது அப்படின்னா என்னன்னு தெரியுமா ?" -ன்னு வாத்தியார் பையன் கிட்டே கேட்டார்."தெரியும் சார் எங்க வீட்டுலே ஜன்னலுக்குக் கீழே கிடக்கிற அம்மியை மிதிச்சுத்தான் எங்க அண்ணன் எதிர்த்த வீட்டு அருந்ததிங்கிற பெண்ணைப் பார்த்து கிட்டு இருக்கிறான்" இப்புடி மாணவன் பதில் சொறான். இப்போ காதல் அந்த ரேஞ்சிலே போகுது.==========3. ஒருநாள் ஒரு பொண்ணு தன் காதலன் கிட்டே, "அத்தான் உங்க அன்புச் சின்னம் என் வயித்துலே விளையாடுது" ன்னு சொன்னா. உடனே அவன் பதறிப் போய், "நாம காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வாரம் தானே ஆச்சு அப்படின்னான்""பயப்படாதீங்க. முந்தா நாள் நீங்க வாங்கித் தந்த பாதுஷா இன்னமும் ஜீரணம் ஆகலை. அதைச் சொன்னேன்" அப்படினாள்.==========4. ஒருத்தன் தன் நண்பன் கிட்டே, "ஏண்டா மூஞ்சியெல்லாம் காயமா இருக்கு?" ன்னு கேட்டான்."எதிர்த்த வீட்டுப் பெண்ணை சைட் அடிச்சேன். பூவை வீசினா" -ன்னான்."பூவை வீசினா எப்படிடா காயம் படும்"-ன்னான். "அவ வீசும் போது பூ, தொட்டியிலே இருந்தது" அப்படின்னான் இவன்.==========5. இதை மாதிரி இன்னொரு டயலாக்கை கேளுங்க... ஒருத்தன் சொல்றான்."அன்பே எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நீதான் எனக்குக் காதலி. நான் தான் உனக்குக் காதலன். இதுலே மாற்றமே கிடையாது.அதுக்கு அவ, "நாசமாப் போச்சு. அப்போ நாம கணவன் - மனைவியா ஆகப்போறதே இல்லியா"-ன்னு கவலையோட கேட்டாள்.==========6. "டாக்டரைக் காதலிச்சியே என்னாச்சுடி?" அப்படின்னு ஒருத்தி தன் தோழிகிட்டே கேட்டாள்.அதுக்கு அவ "டாக்டர் கொடுக்கிற லவ் லெட்டர்லே எழுத்து புரியலைன்னு கம்பவுண்டர்கிட்டே கொடுத்து படிக்கச் சொன்னேன். இப்போ நாங்க இரண்டு பேருமே காதலிக்க ஆரம்பிச்சிட்டோம்" -னா.==========7. டைரக்டர் : நீங்க நடிக்குற படம் நல்லா ஓடனும்னா ரெண்டே ரெண்டு வழி தான் இருக்கு ......ஒன்னு உடலை குறைக்கணும் .......நடிகை: இன்னொன்னு ????....டைரக்டர் :உடைய குறைக்கணும் !!!!!!!==========இன்றைய மெகா ஜோக்:8. இந்திய கிரிக்கெட் அணியில் மிஸ்டர் மொக்கையையும் தேர்வு செய்திருந்தார்கள்.. ஆஸ்திரேலியாவுடனான போட்டியில், மொக்கையும், சச்சினும் துவக்க ஆட்டக்காரர்கள்..முதலில் மொக்கை, பிரெட் லீயின் புயல் வேக பந்துவீச்சை எதிர்கொண்டார்..முதல் பந்து .. விர்ர்ர்ர்ர்ர்ரூம்... 145 கிமீ வேகம்.. மொக்கை பார்க்குமுன்னே அவரைக் கடந்து போனது..2 வது பந்து... விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம்... 147 கிமீ வேகம்.. அதே கதை..3 வது பந்து.. 150 கிமீ வேகம்.. வி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. இதுவும் வந்ததும் போனதும் மொக்கைக்கு தெரியவே இல்லை..4 வது பந்து ஓவர் ஸ்டெப்பிங்.. நடுவர் "நோ பால்" என்று அறிவித்ததைக் கண்ட மொக்கை நேரே சச்சினிடம் சென்றார்.. போகும்போது, தேர்ந்த பேட்ஸ்மேனைப் போல பிட்சை தன் மட்டையால் தட்டிக்கொண்டே சென்றார்.. சச்சின் என்னவென்று கேட்க.. மொக்கை சொல்லலானார்..இப்போதான் அம்பயருக்குத் தெரிஞ்சிருக்கு.. இவன்கிட்ட பந்து இல்லேன்னு.. ஆனா அப்போலேருந்தே அந்த ஆளு.. சும்மா ஓடி வரான்.. பந்து போடுவதுபோல நடிக்கிறான்.. ஆனா பந்தும் வரலே..ஒண்ணும் வரலே..!

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 12

1. இனிமே மனிதப் பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும் சாமி...?ஏன் கேட்கிறாய் மகனே ?என் மனைவி ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கே மனைவியா வரணும்னு வேண்டிக்கிறாளே==========2. என் கண் எதிர்லயே கல்யாண வீட்டுல செருப்பை திருடிட்டு போயிட்டான்...செருப்பு உங்களுதா...?இல்லை... நான் எடுத்துட்டு போலாம்னு பார்த்து வெச்சிருந்த செருப்பு==========3. டாக்டர்: எதுக்கு நாதஸ்வரத்தைக் கொண்டுவந்து என்கிட்டே காட்டுறீங்க...?வித்வான்: நீங்கதானே என்னோட பீப்பி பார்க்கணும்னு சொன்னீங்க...==========4. அந்த டாக்டர் ஆபரேஷனைவிட, போஸ்ட்மார்ட்டத்தின் போதுதான் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாரு..ஏன் ?கத்தியை உள்ளே வெச்சுட்டா அப்புறம் கிடைக்காதே...==========5. ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சா...?உறவுக்கார்களுக்கு தந்திகூட கொடுத்தாச்சு டாக்டர்...==========6. டாக்டர்... ஒரு மாசமா துhக்கமே வரலை...ஒரு மாசமா என்ன பண்ணீங்க...?முழிச்சிட்டு இருந்தேன் டாக்டர்...==========7. டாக்டர் அந்த ஆளுக்கு கிட்னில கல் இருக்குன்னு சொன்னதும் அவர் எதுக்கு ஜோசியர்கிட்டே போறாரு...?ராசியான கல்லான்னு பார்க்கறதுக்காம்...==========இன்னிக்கு இது தாங்க மெகா ஜோக்கு:8. மிஸ்டர் மொக்கைக்கு காவல்துறையில் அதிகாரியாக வேலை கிடைத்தது.. முதல்நாள் புல்லட் மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக பவனி வந்தபோது, வயர்லஸ் கூவிற்று.."7 வது தெருவுக்கு உடனே செல்லுங்கள்.. அங்கு சட்டவிரோதமாக கூடி நிற்கும் கும்பலைக் கலைத்துவிட்டு அறிக்கை தாருங்கள்.."சக அதிகாரி துணைக்கு வர 7 வது தெருவுக்கு விரைந்தார் மொக்கை. அங்கே எதையோ எதிர்பார்த்துக்கொண்டு ஒரு கும்பல் அமைதியிழந்து நின்றுகொண்டிருந்தது. ஸ்டைலாக போய் இறங்கிய மொக்கை முழங்கினார்.."உடனே இடத்தைக் காலி செய்யுங்கள்..! இது என் உத்தரவு..!'கும்பலில் இருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்..ஆனால் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.. மொக்கைக்கு அவமானமாகப் போய்விட்டது.. சட்டென்று துப்பாக்கியை உருவி, வானை நோக்கிச் சுட்டு மீண்டும் உத்தரவிட்டார்.."எல்லோரும் உடனே கலைந்து செல்லுங்கள்.. அல்லது அடுத்த குண்டு உங்கள் தலையில் திணிக்கப்படும்..!"கூட்டம் மொக்கையை வெறித்துப் பார்த்தவாறே கலைந்து சென்றது.. வெற்றிச்சிரிப்புடன் சக அதிகாரியைக் கேட்டார் மொக்கை.."முதல் அசைன்மெண்ட்டே கலக்கிட்டேன்ல..?"சக அதிகாரி சற்று யோசனையுடன் சொன்னார்..."மிஸ்டர் மொக்கை.. நான் அப்படி நினைக்கவில்லை.. தேவையில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளை வீணாக்கியதற்கும், 6 வது தெருவில் பேருந்துக்காக காத்திருந்தவர்களை விரட்டி அடித்ததற்காகவும் நீங்கள் மேலிடத்தில் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும்..!"

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 11

1. சர்தார்ஜி: ஒரு காபி எவ்வளவு?ஹோட்டல் ஓனர்: 5 ரூபாசர்தார்ஜி: எதிர்த்த கடையில ஒரு காபி 35 பைசான்னு போட்டிருக்கு...ஹோட்டல் ஓனர்: யோவ்...! அது ஜெராக்ஸ் காபியா..==========2. எதுக்கு டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு நாயைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க ?ரத்தம்னா அதுக்கு ரொம்பப் பிடிக்கும் அதான்...==========3. அவருக்கு நாக்கு தொங்குதே... ஏன் ?அழகிப் போட்டிகளுக்கு தொடர்ந்து நடுவரா இருந்து இப்படி ஆயிட்டாரு==========4. கவர்ச்சி நடிகையை திரௌபதியா போடாதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா.. .ஏன் என்ன ஆச்சு ?துயிலுரியற சீன்லே சிரிச்சுக்கிட்டு நிக்கறாங்க!==========5. பொங்கல் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சுதான் என் கணவர் பொங்கல்ல உப்பு கொஞ்சம் அதிகம்-னு சொன்னாரு ?ஏன்...?பொங்கலை வாய்ல போட்ட உடனே ரெண்டு நாள் அவரால வாயையே திறக்க முடியலையே.. .==========6. இளவரசரைப் பல்லக்கில் செல்வதற்குத் தடை போட்டிருக்கிறீர்களாமே, பிரபு ?பல்லக்குகளில் அமர்ந்தபடியே திருட்டு தம் அடிப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது அமைச்சரே==========7. சார்... என் மாமியாரை ஒரு வாரமா காணலை...ஒரு வாரமா என்ன பண்ணீங்க...?வேற வழியில்லாம ஒரு வாரமா என் நாத்தனாரோட சண்டை போட்டுட்டு இருந்தேன்.இது தாங்க இன்னிக்கு மெகா ஜோக்கு:8. மிஸ்டர் மொக்கை குடும்பம் கோடைக்கால சுற்றுலாவுக்கு கிளம்பியது. ஆனால் ஒரு பிரச்னை.. அவர்களின் பசு மாட்டை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக சிலரை அணுகி, மொக்கை வேண்டினார்.ஒருவர், "10 நாளைக்கு 300 ரூபாய் பணம் கொடு.. அதோட, சாணியையும் வறட்டிக்காக நான் எடுத்துப்பேன்.. சம்மதம்ன்னா விட்டுட்டு போ..!" என்றார்.மொக்கைக்கு இது அதிகமாகப் பட, இன்னொருவரை அணுகினார்.. "எனக்கு 200 ரூபாய் கொடு.. சாணியும் வேணும்.. நான் பாத்துக்கறேன்..!" என்றார். இதற்கும் மொக்கை சம்மதிக்கவில்லை. வெகுநேரம் வெவ்வேறு ஆட்களை வேண்டிப் பார்த்தார். இறுதியாக, ஓமகுச்சி நரசிம்மன் போல ஒரு ஆள் சிக்கினான்.."50 ரூவா கொடுங்க சாமி.. நான் கவனிச்சுக்கறேன்..!"வெரி குட்.. இந்தா 50 ரூவா.. இன்னொன்னு.. சாணியைக் கூட நீயே எடுத்துக்கலாம்.."அதுக்கு அவசியமே வராது சாமி.. 50 ரூவாதானே கொடுத்திருக்கீங்க...! சாணியெல்லாம் போடாது..!!"

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 10

1. டாக்டர், "உங்களுக்கு புகையிலை போடுற பழக்கம் உண்டா?" ன்னு கேட்டார்.நோயாளி, “உண்டுங்க என்னோட நாலு ஏக்கர் நிலத்துலேயும் புகையிலைதான் போட்டிருக்கேன்”==========2. ஒரு நர்சிங் ஹோம்லே ஒரு நர்சம்மா எல்லா நோயாளிகளுக்கும் மாத்திரை கொடுத்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சி திரும்பி வந்தாங்க.ஒரு நோயாளி புலம்பினாரு, ”என்ன நர்சம்மா, மத்தவங்களுக்கு எல்லாம் பொடிப் பொடி மாத்திரையாக் கொடுத்தீங்க. எனக்கு மட்டும் ஏன் நீளமான மாத்திரையாக் கொடுத்தீங்க? ரொம்பக் கஷ்டப்பட்டு முழுங்கினேன். இனிமே எனக்கும் பொடி மாத்திரையாக் கொடுங்கம்மா” -ன்னாரு.நர்சம்மா-வுக்குச் சிரிப்பு தாங்கலை, ”ஏம்பா உனக்கு நான் கொடுத்தது மாத்திரை இல்லை. காய்ச்சல் எவ்வளவுன்னு பார்க்கிறதுக்குத் தெர்மாமீட்டரைத் தானே வச்சிட்டுப் போனேன். உன்னை யார் முழுங்கச் சொன்னா ?”===========3. இப்போ எதுக்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுற மோகம் வந்துருச்சி. ஒரு டாக்டர் வயதைக் குறைக்கிற மாத்திரை கண்டுபிடிச்சாராம். மாத்திரை விலை ரொம்ப காஸ்ட்லி.ஒரு பணக்காரப் பெண்ணுக்கு தன்னோட வயசைக் குறைச்சுக்கணும்னு ஆசை. நிறையப் பணம் கொடுத்து முப்பது மாத்திரை கொண்ட ஒரு டப்பா வாங்கினாங்க. எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்னும் இரண்டு டப்பா சேர்த்து வாங்கிக்கிட்டாங்க. தினம் ஒரு மாத்திரை சாப்பிட்டுக் கிட்டே வந்தாங்க. 30 நாள் முடிஞ்சதும் 50 வயசுக்காரியான அந்தம்மா 20 வயசு இளம் பெண்ணா மாறிட்டாங்க. டாக்டரை பார்க்க வந்தாங்க.”நீங்க யாரு ?” ன்னாரு டாக்டர்.”வயசு குறைக்கிற மாத்திரை வாங்கிட்டுப் போனது நான் தான். மாத்திரை ரொம்ப எஃபக்டிவா வேலை செஞ்சிருக்கு.””அப்படியா, ரொம்ப சந்தோஷம் உங்க இடுப்பிலே இருக்கிற குழந்தை யாரு?” ன்னாரு டாக்டர்.”அவர்தான் டாக்டர் என் ஹஸ்பெண்ட் எனக்குத் தெரியாம தினம் ரெண்டு மாத்திரையாத் தின்னுருக்கார். இப்படிக் குழந்தை ஆயிட்டார். இப்போ வயசைக் கூட்டறதுக்கு ஏதாவது மாத்திரை இருக்கா?” ன்னாங்களாம்.இப்படி ஒரு பிரச்சினை வரும்னு டாக்டர் எதிர்பார்க்கவே இல்லை.==========4. ரொம்பப் பலகீனமா இருந்த ஒரு நோயாளிக்கு, ”மீன் மாத்திரை சாப்பிடு” ன்னு சொல்லிக் கொடுத்தார் டாக்டர். மறுநாள் டாக்டர்கிட்டே வந்த அந்த ஆள் ஏகப் பட்ட கூச்சல் போட்டான். ”டாக்டர், நீங்க எனக்குக் கொடுத்தது மீன் மாத்திரையே கிடையாது. ஒரு மாத்திரையிலே கூட முள் இல்லையே”==========5. ஒருத்தன் ஒரு மெடிகல் ஷாப்பிலே போய் மூணு மாசத்துக்கு மட்டும் வேலை கேட்டான். அதென்ன மூணு மாசம் ?னு கடைக்காரர் கேட்டார்.மூணு மாசத்துக்கு வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடணும்னு டாக்டர் எழுதிக் கொடுத்திருந்தார். அதுக்கு இது வசதியா இருக்கும்ன்னுதான்-னு அவன் சொன்னான்.இவனை வேலைக்குச் சேர்த்தா கடை என்ன ஆகும் ? தின்னே தீர்த்திடுவானே!==========6. பல்வலின்னு ஒருத்தர் டாக்டர் கிட்டே போனார். டாக்டர் ”ஆ” காட்டுங்கன்னாரு. காட்டினா பிறகு இன்னும் கொஞ்சம் ”ஆ” காட்டுங்கன்னாரு. இன்னும் கொஞ்சம் பெரிசா... வாயைத் திறங்கன்னார். உடனே நோயாளி ”டாக்டர் பல்லை வெளியே இருந்து பிடுங்கப் போறீங்களா, வாய்க்கு உள்ளே இறங்கி பிடுங்கப் போறீங்களா” -ன்னு கேட்டார்.==========7. ஒருத்தரை டெஸ்ட் பண்ணின டாக்டர், ”உங்களுக்கு சுகர் வந்திருக்கு. மாத்திரை எல்லாம் தர்றேன். அது மட்டும் போதாது. தினம் 5 கி.மீ. வாக்கிங் போகணும். பத்தாவது நாள் எனக்கு போன் பண்ணுங்க, மேற்கொண்டு என்ன செய்யலாம்னு சொல்றேன்” னார்.பத்தாவது நாள் அந்த ஆள் போன் பண்ணினான். ”டாக்டர், நீங்க சொன்ன மாதிரி தினம் 5 கி.மீ. நடந்து இப்போ 50-வது கி.மீட்டர்லே நிக்கிறேன். மேற்கொண்டு என்ன செய்யணும் சொல்லுங்க” ன்னான்.==========அப்புறம் இன்றைய மெகா ஜோக்:8. இன்னொருத்தன் இப்படித்தான் பல் வலின்னு போனான். ”பல்லைப் பிடுங்கித்தான் ஆகணும். வலிக்காம இருக்க மயக்க மருந்து ஊசி போடறேன்” -னாரு டாக்டர். “அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு. அப்புறம் நிறையத் தைரியம் வந்திடும். நீங்க பல்லைப் பிடுங்கிக்கலாம்” அப்படின்னான். டாக்டர் அவன் வழியிலேயே விட்டுட்டார். அவன் வெளியே போய் தண்ணி அடிச்சான். என்னைக்கும் ஆஃப்தான் அடிப்பான். அன்னைக்கு ஃபுல்லா அடிச்சான். ஆஃப் ஆயிட்டான். தள்ளாடிக்கிட்டே வந்து நாற்காலியிலே உட்கார்ந்தான்.”தைரியம் வந்திடுச்சா” ன்னார் டாக்டர். “ஏகப்பட்ட தைரியம் வந்துடுச்சி டாக்டர்” அப்படின்னு போதையிலே உளறினான். ”ஏகப்பட்ட தைரியம்னா ?” ன்னார். “எந்தப் பய என் பல்லுல கை வைக்கிறான்” னு பார்க்கிறேன் அப்படின்னான். டாக்டர் ஆடிப்போயிட்டார்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 9

1. நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்அப்புறம் ?களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்...==========2. என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்==========3. தலைவருக்கு, எதுஎதுக்குத்தான் ஜோசியம் பார்க்குறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு...என்னாச்சு ?வருகிற தேர்தலில் தனக்கு எத்தனை கள்ள ஒட்டு விழும்ன்னு கேட்குறாரே==========4. டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க==========5. டாக்டர்... உங்களைக் கைராசி இல்லாதவர்னு வெளில பேசிக்கிறாங்களே... உண்மையா...?ஏன் கேட்கறீங்க ?என் மாமியாரை உங்ககிட்டே அட்மிட் பண்ணலாம்னு இருக்கேன்==========6. ஐய்யா சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. .ஒரு அஞ்சு நிமிஷம் இரு... இப்ப நான் சாப்பிடப் போறேன்... பார்த்துட்டுப் போய்டு==========7. அவருக்கு மறதி அதிகமாயிடுச்சுனு எப்படிச் சொல்றே ?கதவில் சாவியை மாட்டிட்டு பூட்டை எடுத்துட்டுப் போறாரே!==========இன்றைய மெகா ஜோக்:8. திருடன்: மரியாதையா பீரோ சாவியைக் கொடு...இல்லத்தரசன்: இதையேதாம்ப்பா நான் கல்யாணம் ஆனதுலேர்ந்து என் வீட்டுக்காரிகிட்டே கேட்டுக்கிட்டிருக்கேன்...==========

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 8

1. பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்.==========2. பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ?உள்ளே டிபன் வாசமே வரலியே==========3. மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ?என்னவாம் ?பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்==========4. வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. .அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை.==========5. நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ?எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..==========6. டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸைடேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை==========7. டாக்டர் மோசமா... எப்படி ?பேஷண்ட்டைப் பார்த்து, நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்கறாரே ?இதிலென்ன தப்பு ?அதை ரொம்ப ஆச்சரியமாகக் கேட்கறாரே==========
இன்றைய மெகா பிட்டு ஜோக்கு8. திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 6

1. எந்த சூழ்நிலையிலும் அந்த டாக்டர் ஆபரேஷனை நிறுத்தமாட்டார்பேஷண்ட் இறந்துட்டாகூட ஆபரேஷனை முடிச்சுட்டுத்தான் வருவார்==========2. நான் போனவாரம் மெகா சீரியல் பார்த்துகிட்டு இருக்கும்போது என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதுஐயோ அப்புறம் ?அநியாயமா அந்த ஒரு நாள் என்னால சீரியல் பார்க்க முடியாமப் போச்சு!==========3. போன வருஷம் டைரி தரலைன்னு வருத்தப்பட்டீங்களே ..!ஆமாம் சார் இந்த வருஷம் கிடைக்குமா ?இந்தாங்க... போன வருஷத்து டைரி!==========4. எதுக்காகடா திருடன் கிட்டே கல்லாப்பெட்டி சாவியைக் கொடுத்தே ?நீங்கதானே முதலாளி புத்தாண்டு அன்னிக்கி யார் என்ன கேட்டாலும் இல்லை-ன்னு சொல்லக் கூடாதுன்னீங்க!==========5. உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட ஒரு பொண்ணு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம்.ஐயையோ... அப்புறம்...?உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்களாம்==========6. அந்தாளு செருப்பு வாங்கறதுக்குக்கூட ஜோசியரை அழைச்சிட்டுப் போவாரு.எதுக்கு..?ஜோடிப் பொருத்தம் பார்த்து வாங்கறதுக்குத்தான்.==========7. எதுக்குய்யா ஒருத்தன் போட்டோவை மட்டும் இவ்ளோ சின்னதா ஒட்டி வெச்சிருக்கே...?அவன் கரெக்டா மாமூல் கொடுத்துடறான் சார்.==========அப்புறம் இன்றைய மெகா பிட்டு ஜோக்:8. என் மனைவி நான் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஒடி வந்துடுவாஇப்ப எங்க இருக்காங்க ?குளிச்சுகிட்டு இருக்காகூப்பிடுங்களேன் பார்ப்போம்

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 5

இது நவநாகரீக யுகம். மேட்சிங் மோகம் ஆண்களை விட பெண்களையே அதிகமாக ஆட்டிப் படைக்குது.சிவப்புக் கலர்ல புடவையும் அதே கலர்ல ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு கிச்சன்லே உட்கார்ந்திருச்சி. புருஷன்காரன் பயந்து போயிட்டான்.இப்படி உட்காராதேடி எம்ப்டி கேஸ் சிலிண்டர்-னு நினைச்சி சிலிண்டர் கொண்டு வர்றவன் தூக்கிட்டு போயிடப்போறhன் அப்படின்னுட்டான்.அந்தம்மாவுக்கு கோபம் வந்திருச்சி. கேஸ் சிலிண்டர்னு சொன்னதுக்குக் கூட இல்லை. எம்ப்டி சிலிண்டர்-னு எப்படிச் சொல்லலாம்-னுதான்.அன்னைக்கு ஒரு வீட்டிலே கணவனும், மனைவியும் சினிமாவுக்குப் புறப்பட்டாங்க.அந்த அம்மா பச்சை சாத்துற படலத்திலே மூழ்கிட்டாங்க. புடவை பச்சை, ஜாக்கெட் பச்சை, வளையல் பச்சை, கம்மல் பச்சை, ரிப்பன் பச்சை, நெக்லஸ் பச்சை கைப் பை பச்சை.திருப்தி ஏற்படலை செருப்பு பச்சையா அமையலை. நல்லவேளை அவரோட ஹவாய் செருப்பு வார் கொஞ்சம் பச்சை அதைக் கொடுத்து சமாளிச்சு நிம்மதியா பெருமூச்சு விட்டார் கணவர்.பஸ் ஸ்டாப்புக்கு வந்ததும் பிரச்சினை பெரிசாயிடுச்சி. சிவப்பு கலர்லே டவுன் பஸ் வந்திச்சி. ஏறுவோம்னார் அவர். வேணாம், பச்சை கலர் பஸ் வரட்டும்-னாங்க அந்தம்மா.அந்த பஸ் நாம போற தியேட்டருக்குப் போகாதும்மாஅப்போ தியேட்டரை மாத்துங்க அப்படின்னாங்களே பார்க்கலாம்இந்த மேட்சிங் மோகம் வந்ததினாலே தான் ஜிமிக்கி எல்லாம் இப்போ அமுக்கியா மாறிடுச்சி. புடவைக்கு மேட்சா ஒண்ணை வாங்கி காதுலே அமுக்கிடறாங்க.புடவை எடுத்து முடிக்கவே ஒரு யுகம் ஆகும். அதுக்கு மேட்சா ஜாக்கெட் பிட் எடுக்க அலைவாங்க. அது அதைவிடக் கொடுமையானது. கடைக்காரர் அந்தப் புடவையைக் கையிலே வச்சிகிட்டு ஜாக்கெட் துணி இருக்கிற பீரோவிலே தீபாராதனை காட்டுற மாதிரி வச்சி வச்சி எடுப்பார் பாருங்க ரொம்ப வேடிக்கையா இருக்கும்.இப்படித்தான் ஒரு ஜாக்கெட் பிட் எடுக்க புருஷனும், பெண் ஜாதியும் கடை கடையா ஏறி இறங்கினாங்க.கட்டியிருக்கிற புடவைக்கு மேட்சா ஒரு ஜாக்கெட் துணி கொடுங்கன்னு அந்த அம்மா கேட்க, கடைக்காரர் ஒவ்வொரு பிட்டா எடுத்து இந்த அம்மா மேலே வச்சி வச்சி பார்க்க, புருஷன்காரன் மனசு படபடன்னு துடிக்க ஆரம்பிச்சது.கடைசியிலே கடைக்காரர், அம்மா உங்களுக்கு எதுவுமே மேட்ச்சா அமையலை-ன்னு சிம்பாலிக்கா சொல்ல, ஆமா அது சரிதான்னு சொல்லி அந்தம்மா புருஷனைத் திரும்பிப் பார்த்து பெருமூச்சு விட ஒரே ரகளைதான் போங்க.ஒரு நடிகையிடம் ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார்.உங்களுடைய கூந்தல் கருமையாக, பளபளவென்று நீளமாக இருக்கிறதே, நீங்கள் உங்கள் கூந்தலை எப்படி பராமரிக்கிறீர்கள் ?ஓ... அதுவா. காலையில் குளிக்கும்போது நன்றாக ஷாம்பூ போட்டு கூந்தலைக் கழுவுகிறேன். பிறகு ஃபேன்லே காய வைக்கிறேன். பகலெல்லாம் தூசு தும்பு படாமல் பத்திரமாகப் பாதுகாக்கிறேன். இரவு படுக்கப் போகும்போது மட்டும் கழட்டி ஆணியிலே மாட்டி விடுகிறேன்.நிருபர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். பின்னே சவுரி முடி அப்படித்தானே இருக்கும். அதுக்கு அந்தப் பெயர் வந்ததே பொருத்தம்தான். சவுரியம்னே வச்சிக்கலாம், சவுரியமில்லாட்டி கழட்டி ஆணியிலே மாட்டிரலாம்.ஓரு வீட்டிலே புருஷன் தன் பெண்டாட்டிகிட்டே, இந்தாடி இந்த சவுரி முடி நானே என் கையாலே தயாரிச்சது வச்சுக்கோ என்றார்.அதுக்கு அந்த அம்மா இவ்வளவு முடி வச்சி எப்படி தயாரிச்சீங்கன்னு ஆச்சரியமா கேட்டுது.தினம் நீ போடுற சாப்பாட்டிலே கிடக்கிற தலைமுடியை எடுத்து கலெக்ட் பண்ணித்தான் இது செஞ்சேன் அப்படின்னார் அவர்.இப்போ சவுரி முடி எதுக்கெல்லாம் பயன்படுது தெரியுமா ? நாமெல்லாம் பஸ்சிலே இடம் பிடிக்க கைக்குட்டையைப் போடுவோம். துண்டைப் போடுவோம். ஒரு அம்மா சவுரிமுடியைப் போட்டு வச்சிருந்திச்சி. அப்புறம் கூட்டத்திலே முண்டியடிச்சி பஸ்சுக்குள்ளே ஏறிப் போய் சீட்டிலே உட்காரப் போனா பக்கத்து சீட்டு அம்மா உட்கார விடலை. ஏன்னா அடையாளம் மாறிப்போச்சே.பஸ் பயணத்திலே இன்னொரு சம்பவம். ஆணும், பெண்ணுமா பல பேரு பஸ்சிலே கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க ஸ்டாப் வந்ததும் டிரைவர் சடன் பிரேக் போட்டார். பஸ் குலுக்கத்திலே பலபேரு தடுமாறி மேலே கம்பியைப் பிடிச்சிக் கிட்டாங்க. சிலபேர் குழப்பத்திலே முன்னாடி நின்ன பொண்ணுங்களோட ஜடைகளைப் பிடிச்சிக்கிட்டாங்க. ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்க. ஜடைகளெல்லாம் அவங்க கையிலே இருக்க, பொண்ணுங்க இறங்கிப் போயிட்டே இருக்காங்க.ஒரு காலத்தில் பெண்களோட கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா இல்லையான்னு ஆராய்ச்சி நடந்துச்சாம். இப்போ கூந்தலே இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி நடத்த வேண்டியிருக்கலாம். அந்த காலத்திலே பெண்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டா தரை வரைக்கும் வந்து விழுமாம். இப்போ தரையிலே விழுந்துடுதாம்.முடி மட்டுமா போலி ? ஒரு காதலன் தன்னோட காதலியோட பல் அழகிலே மயங்கி உனக்கு முத்துப் போல் பல்லு-ன்னு மூச்சுக்கு மூச்சு சொல்ல ஆரம்பிச்சிட்டான். அவள் ஒருநாள், அட இருய்யா-ன்னு கழட்டி கையிலே கொடுத்துட்டா.பெண் பார்க்கப் போன இடத்துல பையனோட அம்மா சீக்கிரம் பொண்ணைக் கூப்பிடுங்க-ன்னு சொன்னதும் பெண்ணோட அப்பா படபடன்னு சொல்ல ஆரம்பிச்சார்.கொஞ்சம் பொறுங்க. சாயந்தரமா வர்றோம்னு சொல்லிட்டு இப்படி காலையிலேயே வந்துட்டீங்க. அவள் கண் டாக்டரையும், பல் டாக்டரையும் கன்சல்ட் பண்ணிட்டு, அப்படியே பியூட்டி பார்லர்லே ஹேர்டையும் பண்ணிட்டு வந்துடறேன்னு போனா. இப்ப வந்திடுவா. மறுநிமிடம் பொண்ணு பார்க்க வந்தவங்க அந்த இடத்திலே இல்லை.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 3

1. பாடகர் முன்னாலே ஒருத்தர் டபரா செட்-டைக் காட்டுறாரே... ஏன் ?காபி ராகத்துலே பாட்டு வேணுமாம்==========2. புது வருஷ தள்ளுபடி விற்பனைல உங்க மனைவிக்கு ஏதாவது வாங்கி கொடுத்தீங்களா...?மிக்ஸி வாங்கினேன்...உங்களுக்கு சரி, உங்க மனைவிக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கலையா.. ?==========3. இன்றைய டான்ஸ் புரோக்ராமுக்கு அந்த அரசியல்வாதியைத் தலைமை தாங்கக் கூப்பிட்டது தப்பாப் போச்சு.ஏன் ?ஜதி ரொம்ப முக்கியம்னு சொல்றதுக்குப் பதிலா ஜாதி ரொம்ப முக்கியம்னு சொல்றார்.=========4. சின்ன ஆபரேஷன்தான்... பயப்பட வேண்டாம்.டாக்டர் பெரிய ஆபரேஷன்னு சொன்னாரே...?டாக்டருக்கு இது பெரிய ஆபரேஷன்!==========5. நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு!==========6. டாக்டர், பயங்கர முதுகுவலி... என்ன பண்ணலாம்...?தைலம் அப்ளை பண்ணுங்க...அப்படியும் வலி போகலேன்னா...?லீவுக்கு அப்ளை பண்ணுங்க.==========7. அந்த டாக்டர் பேஷண்ட்டுகிட்டே நைஸh பேசி, ஐஸ் வெச்சு ஆபரேஷனுக்கு முன்னாடி ஃபீஸை வாங்கிடுவாரு!ஏன் அப்படி..?ஆபரேஷனுக்கு அப்புறம்னா, அவரால ஐஸ் மட்டும்தான் வைக்க முடியும்... ஃபீஸை வாங்க முடியாதே!==========
இன்றைய மெகா ஜோக்:
8. ஒருத்தரோட மனைவி தன் கணவர்கிட்டே, "எதிர்த்த வீட்டுக்காரரு அவரோட மனைவிக்கு தினமும் ஒரு புடவை வாங்கித் தரார். நீங்களும் இருக்கீங்களே" ன்னு சலிச்சிக்கிட்டாங்க.அதுக்கு அவர், "எனக்கும் வாங்கிக் குடுக்கலாம்னு ஆசைதான். ஆனா அவங்க வாங்கிக்குவாங்களோ மாட்டாங்களோன்னுதான் பயமாயிருக்கு" அப்படின்னிருக்கார்.

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 1

1. கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?என்ன வித்தியாசம் ?மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது==========2. நகை போடாம இருக்கிறதே மேல்ஏன் ?நகை போடுவது ஃபீமேல்==========3. தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?என்ன செய்வாங்க ?முழிச்சிருப்பாங்க==========4. தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?ஏன் ?அதைச் சுடுகிறார்கள்==========5. ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?என்ன ?இறங்கி==========6. ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடுநீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?==========7. உங்க ஃபேமிலி பேக்ரவுண்டைப் பத்திச் சொல்லுங்க...எனக்கு ஃபேமிலியே கிடையாதுங்க... பேக் க்ரவுண்டும் இல்லை ஃபிரண்ட் க்ரவுண்டும் இல்லை வாடகை வீட்ல இருக்கேன்.==========இன்றைய மெகா பிட்டு ஜோக்:8. இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...அவ்வளவு கஷ்டமான கதையா ?ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்...

Most of the information collected here
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net