பக்கத்துவீடு ஒரு பணக்காரரின் வீடு.அந்த வீட்டுப் பையனைப் பார்த்துக்கொள்ள ஒரு பணிப் பெண்.விளையாட வித விதமான பொம்மைகள். விளையாடிக் கொண்டிருந்த பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான்,''ஆயா,எனக்கு இந்த பொம்மையெல்லாம் வேண்டாம்.பக்கத்து வீட்டுத் தம்பி அழகான மண் பொம்மைகள் வைத்து விளையாடுகிறான்.எனக்கு அது போல பொம்மைகள் வேண்டும்'' என்று கூறி அழ ஆரம்பித்தான்.அவன் அழுகையை அடக்க வழி தெரியாது திகைத்து நின்றாள் வேலைக்காரப்பெண்.
பொன்னென்றும் மண்ணென்றும் வேறுபாடு அறியாக் குழந்தை,பொன்னுக்கும்,மண்ணுக்கும் போராடுகிறது வளர்ந்த பின். என்றென்றும் குழந்தையாய் இருந்தால் இவ்வுலகில் ஏனிந்த சண்டை,ஏனிந்த வேற்றுமை?
மூலம் ;ஒரு இந்திக் கவிதை
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net