Sunday, December 12, 2010

சேவை மனப்பான்மை

"ஏழை மக்களுக்குச் செய்கின்ற சேவை, கடவுளுக்கு நேராக சென்று சேர்ந்துவிடும். கடவுளைத் தரிசிக்க நாள்கணக்கில் வரிசையில் நின்று உண்டியலில் போடப்படுகிற பணம் மக்களாகிய கடவுளிடம் வராது".

'மக்கள் சேவை மகேசன் சேவை' என்பது சேவை பற்றி நம் முன்னோர்கள் கூறியது. ஆனால் இப்பொழுது இந்த வாசகம் அரசியல் தலைவர்கள் நகைச்சுயைாகப் பயன்படுத்துகிற வாசகம். கடவுள் சிலைக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு தரவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் யாத்திரைக்குப் போகும் வழியில் அநேக குழந்தைகள் உடைகள் இன்றி இருந்ததைப் பார்த்து யாத்திரையையே நிறுத்தினார். சீடர்களிடம் அவர்களுக்கு உடைகள் வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யக் கேட்டார். 'நம்மிடம் இருக்கும் பணத்தில் உடைகள் வாங்கிவிட்டால், யாத்திரை போக முடியாது. பகவானைத் தரிசிக்க முடியாது' என்று சீடர்கள் சொல்ல, 'பகவானை இந்தக் குழந்தைகளிடமிருந்து இல்லாமல் கோயில்களிலா தரிசிக்க முடியும்?' என்று கேட்டார். அந்த பக்குவம்தான் சேவை.

காந்திக்கு ஏற்பட்ட சோதனை – பீதிகர்வா என்ற கிராமத்திற்கு சென்று இருந்தபோது, அங்கு இருந்த சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டார். அப்பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி மனைவியிடம் கூறினார். கஸ்துரிபா அவர்களும் சென்று அவர்களோடு பேசினார்கள். அதில் ஒரு பெண், தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள். "வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் ஒரு புடவைதான்; இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் சொல்லி எனக்கு இன்னொரு புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்".

நண்பர்களே, இது போன்ற நிலைமைகள் அறையாடை மனிதர் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கித் தருவதற்கு முன்பு மட்டுமல்ல. இன்றும் நமது கிரமாப்புறங்களில் பல்வேறு குழந்தைகள் இந்த நிலைமையிலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள்.

நாம் மேலே பார்த்த காந்தியோ, இராமகிருஷ்ண பரமஹம்சரோ பணத்தை வைத்துக் கொண்டு சேவைக்குச் செல்லவில்லை. தன் மனத்தினால் சேவை செய்தார்கள். 

"வாருங்கள் நண்பர்களே, நாம் ஒவ்வொருவரும், சுதந்திர இந்தியாவை கல்வியறிவுள்ள இந்தியாவாகவும் எழுச்சிபெற்ற இந்தியாவாகவும் மாற்றுவோம்."

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வயிறு குலுங்க சிரிக்கலாம் வாங்க : கடி ஜோக்ஸ் நகைச்சுவை காமெடி சிரிப்பு வெடி

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்

அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.


மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
சிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

டவுள்:  மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
னிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
டவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
னிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
டவுள்:  அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????
 

ன்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்


தோழி 1 :உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
தோழி 2: ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.


தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

 
ருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!


தொண்டன் : தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
லைவன் : இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!


நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
ருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

 
தொண்டன் : தலைவரே புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும் சாராயம் காய்ச்ச கூடாது.
லைவன் : பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தலைக்கு அழகு முடி

தலை உடலின் தலையாய பாகம். தலைக்கு அழகு முடி. கூந்தலை அழகாக வைத்துக் கொள்வதுதான் உண்மையில் நம்மை அழகாக வைத்துக் கொள்வதற்குச் சமம். இக்காலத்தில் அருகருகே அழகு நிலையங்களைப் பார்க்கலாம். இயற்கையில் அழகானவர்கள் பெண்கள் என்றால் அவர்களிடம் மிகவும் அழகானது கூந்தல்தான். அதனால்தான் அவர்கள் கூந்தல் அலங்காரத்தில் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள். ஆனால் அழகிற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் கூந்தலுக்கு நிறையவே தொடர்பு உண்டு.
***
உண்மையில் தலைமுடி அழகிற்கான படைப்பு அல்ல. உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தி தலைக்கு பாதுகாப்பை அளிப்பதே கூந்தலின் பணி. எண்ணைப்பசை தலைமுடி, வறண்ட தலைமுடி, எண்ணைப் பிசுக்குடன் கூடிய வறண்ட தலைமுடி என முடியில் சில வகைகள் உள்ளன.
பளபளப்பாக காட்சி தருவது ஆரோக்கியமான கூந்தல். பளபளப்பை இழந்திருப்பது வறண்ட தலைமுடி. அதிக அளவு வைட்டமின் பி மற்றும் புரதச் சத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலைப் போலவே கூந்தலும் நலமாக இருக்கும்.
***
ஒரு மனிதனுக்கு தலையில் ஒரு லட்சம் முடிகள் வரை இருக்கும். தினமும் 80 முடிகள் வரை கொட்டும். குளித்துவிட்டு தலைதுவட்டும்போது கொத்துக் கொத்தாக முடி உதிர்ந்தால் உடனே கவனிக்க வேண்டும்.
வளரும் நிலையில் 80 முதல் 90 சதவீத முடிகள் இருக்கும். மற்றவை ஓய்வுநிலை, உதிரும் நிலையில் இருக்கும். தினமும் உதிரும் 80 முடிகள் தான் உதிரும் முடிகள் கணக்கில் சேரும். கெரட்டீன் என்ற புரதத்தால் ஆனது தலைமுடி. அதன் வளர்ச்சிக்கு புரதம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாதுக்கள் தேவை. இல்லாவிட்டால் முடி உதிரும்.
***
பச்சைக் காய்கறி மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவற்றில் இருக்கும் இரும்பு மற்றும் செம்பு போன்ற தாதுக்களும் கூந்தலுக்கு நல்லது. நம் தோலில் சீபம் என்ற எண்ணைப் பசை சுரக்கும். இதன் அளவு குறைந்தாலும் தலைமுடி வறண்டு போகும்.
எண்ணைப் பிசுக்கான கூந்தல் உள்ளவர்கள் கொழுப்புச் சத்துள்ள பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறண்ட கூந்தல் உள்ளவர்கள் உணவில் சற்றே அதிக அளவில் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.
***
கூந்தலைப் பராமரிக்க பொதுவான சில வழிகள் உண்டு. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அந்த ஆவியில் கூந்தலைக் காட்டலாம். அல்லது கொதிக்கும் நீரில் துண்டை நனைத்துப் பிழிந்து தலையில் சுமார் 10 நிமிடம் வரை சுற்றிக்கொண்ட பின்பு தரமான ஷாம்பு அல்லது சீயக்காய் பொடியால் தலைமுடியை நன்றாக அலசிக் காயவிட்டால் தலைமுடி மென்மையாகும். எலுமிச்சம் பழச்சாறில் வினிகர் கலந்து தலைமுடியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் முடி வறட்சி குறையும்.
***
அதிகம் முடி கொட்டுவதைத் தடுக்க ஹேர்பேக் செய்ய வேண்டும். இதற்கு நெல்லிக்காய், வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி, செம்பருத்திப் பொடி, வல்லாரைப்பொடி, கரிசாலைப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராமும், வேப்பிலைப் பொடி 5 கிராமும் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கெட்டியான கரைசல் தயாரிக்க வேண்டும்.
தலையில் சிறிது எண்ணை தடவிக் கொண்ட பிறகு இந்தக் கலவையை முடியில் தேய்த்து `ஹேர்பேக்' செய்ய வேண்டும். அரைமணி நேரம் கழித்து அரிசி வடித்த கஞ்சியில் சீயக்காய் பொடியை கலந்து தேய்த்துக் குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். கூந்தலுக்கு பளபளப்பும் கிடைக்கும்.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net