Saturday, February 26, 2011

பொன்மொழிகள்-12

புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன் தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?
**********
மாடி ஏறுகிறவன் எந்த மாடிக்குச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் வைத்திருந்தால் போதாது.அடுத்த படியின் மீது கவனத்தை வைக்க வேண்டும்.
**********
வாழ்கையை புளிக்க வைத்துவிட்டவர்கள்தான் புளித்த மதுவின் புறமுதுகில் ஏறி சவாரி செய்கிறார்கள்.சமாளிப்பதால்  எதையுமே சரி செய்து விட முடியாது.
**********
மனதின் அளவற்ற ஆசைகளை அடைய முயற்சி செய்து உடல் தளர்ந்து விடுவதேநம்முடைய உள்ளச் சோர்வுக்குக் காரணம்.
**********
மற்றவர்கள் புகழ்ச்சி ஒருவிதமான போதையை ஏற்படுத்தி விடும்.அதிலிருந்து மீள்வது சிரமம்.கொஞ்ச நாள் கழித்து நாம்மற்றவர்கள் அவ்வாறு புகழ வேண்டும் என்று எதிர் பார்க்க ஆரம்பித்து விடுவோம்.
**********
நாம் யாரையாவது எதிரியாகப் பாவித்துக் கொள்கிறோம்.கோபமும் வன்மமும் நம் உடலைப் பலவீனப் படுத்தி நம்மை கருவச் செய்து வீழ்த்தி விடுகின்றன.
**********
போதிக்கிறபலரும் தாம்  போதிக்கிற சுகத்திற்காகப் போதிக்கிறார்களே தவிர மற்றவர் திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல.திருந்திவிட்டால் நமக்கு வேலை இல்லாமல் போய்விடுமே என்கிற பயமும் அவர்களுக்கு உண்டு.
**********
குண்டூசி தொலைந்ததற்கு கடப்பாரை அளவு விசனம் தேவையா?
**********
காது குத்துவதர்காகக் கடன் வாங்கியவர்கள் கொடுத்தவர்களுக்கும் சேர்த்து  காது குத்திவிடுகிறார்கள்.
**********
                       இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு என்ற நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சற்றே நகுக

ஒரு விருந்தில் ஒருவர் அருகிலிருந்தவரிடம் கேட்டார்,''அந்த மூலையில் மிகவும் உரக்கப் பேசிக்கொண்டிருக்கும் அசிங்கமான பெண்மணி யார்?''
''அவள் என் மனைவி.''
''நான் அவரைச் சொல்லவில்லை ,அவர்  அருகில்  இருக்கும்  பெண்ணைக்  குறிப்பிடுகிறேன்.''
''அவள் என் சகோதரி.''
**********
ஆங்கிலத்தில் அகராதியைத் தயாரித்த சாமுவேல் ஜான்சனைச் சந்தித்த இரண்டு பெண்மணிகள் அவரிடம்,''நீங்கள் கெட்ட வார்த்தைகள் எதையும்  உங்கள்  அகராதியில் சேர்க்காதது குறித்து மகிழ்ச்சி,''என்றனர்.உடனே ஜான்சன் கேட்டார்,''ஏன் நீங்கள் அவற்றைத் தேடினீர்களா?''
**********
ஒரு பணியாள் தன்னுடைய செல்வந்தர் எஜமானிடம்,''நீங்கள் என்னை முழுசா நம்பலை.அதனால் வேலையை விட்டு நின்னுக்கிறேன்,''என்றான். அவர்,''நீ எப்படி அப்படி சொல்லலாம்?சாவிக்கொத்தையே உன்னை நம்பி மேஜையின் மேலே தானே வச்சிட்டு வெளியே போகிறேன்,''என்றார். பணியாள்,''உண்மைதான்.ஆனால் ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?''என்றான்.
**********
ஒரு இளைஞன் ஒரு பெண்ணை நேசிப்பதாகக் கூறினான்.அவன் நண்பன் கேட்டான்,''என்ன,முதல் பார்வையிலேயே காதலா?''இளைஞன் சொன்னான்,''இல்லை இது இரண்டாவது பார்வையில் நிகழ்ந்தது.''  எனென நண்பன் விளக்கம் கேட்க அவன்  சொன்னான்,''முதல் முறை பார்த்தபோது அவள் பணக்காரப்பெண் என்று தெரியாது.''
**********
ஒரு பெண் மருத்துவரிடம் சென்று,''என் கணவர் தூக்கத்தில் ஏதேதோ பேசுகிறார்.''என்று சொன்னார்.மருத்துவர் ,''இந்த மாத்திரையைக் கொடுங்கள்.அவர் ஆழ்ந்து தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும்.''என்றார்.அந்தப்பெண் சொன்னாள்,''டாக்டர்,அவருக்குத் தூக்க மாத்திரை  வேண்டாம்.நான் தூங்காமல் இருக்க ஏதாவது மாத்திரை கொடுங்கள்.ஏன்என்றால் அவர் தூக்கத்தில் பேசுவது, முழிச்சிக்கிட்டு இருக்கும் போதுபேசுவதைவிட சுவாரசியமா இருக்கு.''
**********
ஒரு பேச்சாளர் சிறப்பு விருந்தினரை வானளாவப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.ஐந்து நிமிடம் கழித்து அந்த சிறப்பு விருந்தினர்,எழுந்து,''தயவு செய்து என்னைப் புகழாதீர்கள்,''என்றார்.அருகிலிருந்தவர்,''ஏன் ஐந்து நிமிடமாக ஒன்றும் சொல்லாமல் இப்போது சொல்கிறீர்கள்?''என்று கேட்டார்.அதற்கு அவர் சொன்னார்,''நானே அதில் மயங்கி மெய் மறந்துவிட்டேன்.அதனால்தான்.''
**********
ஒரு சிறுவனின் அருகில் ஒரு அழகிய நாய் இருந்தது.அங்கு வந்த அவன் நண்பன் கேட்டான்,''உன் நாய் கடிக்குமா?'''கடிக்காது,''என்று பதில் வந்தது.நண்பன் உடனே அந்த நாயின் நெற்றியில் கை வைத்ததும் அந்த நாய் அவனை கடிக்காத குறையாய் உறுமி அவன் மீது பாய்ந்தது.வெலவெலத்துப்போன நண்பன் ''உன் நாய் கடிக்குமா என்று கேட்டேன்.நீ ஏன் அது கோபக்கார நாய் எனச் சொல்லவில்லை?''என்று கேட்டான்.அவன் சொன்னான்,''என நாய் சாதுவானது அது என் வீட்டில் இருக்கிறது.இது என் நாய் இல்லை வேறு யாருடையதோ?''
**********
                                        இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு என்ற நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொய்யன்

ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும்  என்று அறிவித்தார்.நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள்  கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம்  இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான்  இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய்   ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கற்பனை

நீங்கள் உண்மையைவிடக்  கற்பனையில்  மிகுந்த விருப்பம் காட்டுகிறீர்கள். உண்மையைவிடப் பொய் மிக உண்மையாகத் தெரிகிறது.கற்பனை பலவகையில் உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும்.உங்களுடைய கற்பனை உங்கள் அகங்காரத்திற்கு (ego) திருப்தி அளிக்கிறது.ஒரு குரு இறந்தபின் அவருக்கு பல சீடர்கள் உருவாகிறார்கள்.(உதாரணம்:புத்தர், இயேசு..) அவர் இறந்தபின் நீங்கள் அவரைப்பற்றி நிறைய கற்பனை செய்கிறீர்கள்.உங்கள் விருப்பம் போல அவரை வரைந்து கொள்கிறீர்கள்.அவர் உயிரோடு உங்கள் அருகிலிருந்தால்,அவர் உங்களுக்கு ஒரு சாதாரண மனிதராகவே தெரிவார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வியாபாரம்

ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்டபோது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர்.ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.அவரை அனைவரும்பைத்தியம் என்று கேலி பேசினர்.அந்த ஞானி சொன்னார்,''எனக்குக் கடவுளிடம் எந்தவியாபாரமும் இல்லை.நம்மைக் காப்பாற்ற வேண்டுமா,மூழ்கடிக்க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று.அது என்னுடைய கவலை இல்லை.நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை.திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன்.ஆகவே,மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது.எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ,மரணத்தைப்பற்றி மட்டும் எப்படிஎன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மன்னிக்க முடியாது.

காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன.பல சாகும் தருவாயில் இருந்தன.விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது.''காட்டில் பாவம் அதிகரித்து விட்டது.இந்தக் காட்டில் யார் அதிக பாவம் செய்தார்களோ,அவரைக் கண்டுபிடித்து பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்,''என்று சொன்னது சிங்கம்.ஒருவரும் பேசவில்லை.சிங்கம் தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும்,தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது.உடனே நரி சொன்னது,''மாண்பு மிகு அரசே,நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறீர்கள். கேவலம்,இந்த ஆடுகளை நீங்கள் சாப்பிட்டதெல்லாம் ஒரு பாவமா?''என்றது எல்லா விலங்குகளும் கைதட்டி நரியின் பேச்சை ஆமோதித்தன.அதன்பின் புலி,கரடி,யானை போன்றபெரிய  விலங்குகளைக் குற்றம் சாட்ட எந்த விலங்குக்கும் தைரியமில்லை.அப்போது ஒரு கழுதை சொன்னது,''என்னுடைய பேராசையால் எனக்கு உரிமை இல்லாத இடத்தில்  புல்லை திருடி சாப்பிட்டு விட்டேன்.''உடனே எல்லா விலங்குகளும் ,''கழுதை செய்தது மிகப் பெரிய பாவம் எனவே அதை பலி கொடுத்துவிடலாம்,''என்று ஒருமித்த குரலில் சொல்லின.
இது தானே நாட்டு நடப்பு!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பேராசை

பேராசை கொள்ளும்படி நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிரீர்கள்.அது ஒருபோதும் எந்த இன்பத்தையும்தராது..அது வன்முறையானது.அழிவு பயப்பது.புத்திசாலி மனிதன் பேராசை கொள்வதில்லை.மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி அவர் சாதாரணமாக வாழ்கிறார்.ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு என்பதை அவர் அறிவார்.அவர் ஒரு போதும்  பிறருடன் ஒப்பிடுவதேயில்லை.ஒருபோதும் தன்னை மேல் என்றோ ,கீழ் என்றோ  அவர் எண்ணுவதில்லை.அவர் ஒருபோதும் உயர்வு மனப்பான்மையாலோ,தாழ்வு மனப்பான்மையாலோ துன்புறுவதில்லை.ரோஜாவை தாமரையுடன் எப்படிஒப்பிட முடியும்?எல்லா ஒப்பீடுகளின் துவக்குமுமே தவறாக உள்ளன.ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய தனியழகு கொண்டிருக்கிறார்.இவற்றை ஒப்பிடுவது சாத்தியமில்லை.
அப்படியானால் பேராசை கொள்வதன் பொருள் என்ன?உன்னை விட நானே உயர்வாக இருக்க வேண்டும் என்பதே பேராசையின்  பொருள். மற்றவர்களை விட நான் உசத்தி என்பதை நான் நிரூபித்தாக வேண்டும்.இதற்காக நீ ஏன் புத்தியை இழக்க வேண்டும்?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பாவம்

ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்கப்போன ஒருவர் அவரிடம் தான் காசிக்கு செல்லவிருப்பதாகக் கூறினார்.எதற்கு என்று பரமஹம்சர் கேட்டதற்கு ,காசிக்கு சென்று கங்கையில் குளித்தால் பாவம் தீரும் என்று கூறப்படுவதால் அங்கு செல்லவிருப்பதாகக் கூறினார்.
பரமஹம்சர் :கல்கத்தாவிலும் கங்கை நதி வருகிறதே,பின் ஏன் காசி செல்லவேண்டும் என்கிறாய்?
பக்தர் :காசி  புனிதமான  இடம் என்பதால்தான்.
ப.ஹ.:காசியில் கங்கையின் கரையில் மரங்கள் இருக்கிறது தெரியுமா?நீ  குளித்தவுடன் உன்பாவங்கள் உன்னைவிட்டு நீங்கி அந்த மரத்தில் போய் ஏறிக்கொள்ளும்.நீ குளித்து கரையில்உடை மாற்றியபின் அவை மீண்டும் உன்னிடம்வந்து ஒட்டிக் கொள்ளும்.அதனால் தான் நான் காசி செல்வதில்லை.மேலும் அம்மரங்களில் குளித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களின் பாவங்களும் இருக்கும்.அவற்றில் எதுக்கேனும் உன்னைப் பிடித்திருந்தால் அவையும் உன்னிடம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
பக்தர்.ஐயையோ.என்னை மிகவும்  குழப்பி விட்டேர்களே.என் பாவம் தீர நான் காசி செல்ல  நினைத்தால்,நீங்களோ என் பாவத்தோடு மற்றவர் பாவங்களும் என்னுடன் வந்து ஒட்டிக் கொள்ளலாம்  என்கிறீர்களே.
அதன் பின் அந்த பக்தருக்கு காசி போக பைத்தியமா பிடித்திருக்கிறது?
சொர்க்கம் என்பது மேலே எங்கேயோ இல்லை அது நம்மிடம் தான் இருக்கிறது.இதைப் புரிந்து கொண்டால் வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சக்கரம்

ஒரு வண்டி போய்க் கொண்டிருந்தது.வண்டிச் சக்கரங்களில் ஒன்று பலமாய் கிரீச் என்று குரல் எழுப்பி வந்தது.வண்டிக்காரன் கீழே இறங்கிப் பார்த்தான்.அந்தச் சக்கரம் குறைபாடுகளுடன் இருந்தது. வண்டிக்காரனுக்கு கோபம் வந்தது.அவன்,''நீதான் ஏகப்பட்ட குறைகளுடன் இருக்கிறாயே!நீ எதற்கு இவ்வளவு சப்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறாய்?''என்று கேட்டான்.சக்கரம் சொன்னது,''இந்த உலகம் தோன்றிய காலம் முதல்,யாருக்குக்குறை இருக்கிறதோ,அவர்கள்தான் அதிக ஆர்ப்பாட்டம் செய்வது  வழக்கமாய் இருக்கிறது.இதற்கு நான் மட்டும் விதிவிலக்கா?''
குறை குடம் கூத்தாடும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆடும் மீன்கள்

ஒரு மீனவன் தன வலையைக் கரையில் போட்டுவிட்டு   ,புல்லாங்குழலை  எடுத்து  ஊத  ஆரம்பித்தான் .அப்படி ஊதினால் மீன்கள் ஆடிக் கொண்டு வலையில் வந்து  விழும் என்று அவன் நினைத்தான்.நீண்ட நேரம் வாசித்தும் ஒரு மீன் கூட வரவில்லை.மீனவனுக்குக் கோபம் வந்தது புல்லாங்குழலைக் கீழேவைத்துவிட்டு வலையை எடுத்துத் தண்ணீரில் வீசினான்.வலையில் ஏராளமான மீன்கள் அகப்பட்டன.வலையில் அகப்பட்ட மீன்களை பக்கத்தில் இருந்த பாறையில் போட்டான்.உடனே வலையில் இருந்த மீன்களெல்லாம் துள்ள ஆரம்பித்தன.அதைப் பார்த்த மீனவன்,''நான் புல்லாங்குழல் வாசித்தபோது நீங்கள் ஆடாமல் இருந்தீர்கள்.இப்போது ஆடுகிறீர்களே!எதற்காக?என்ன ஆடினாலும் உங்களை நான்விடப்போவதில்லை..''என்று சொன்னான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அசிங்கமானவர்கள்

மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த தன நண்பனைப் பார்க்கப் போனார் கலீல் கிப்ரான்.அவன் ஒரு மரத்தடியில் மிக மகிழ்வுடன் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தான்.கிப்ரான் அவனிடம் கேட்டார்,''இந்த மன நல விடுதியின்சுவர்களுக்குள்ளே இருப்பது குறித்து நீகவலைப் படுகிறாயா?''நண்பன் சொன்னான்,''நான் ஏன் கவலையும் வருத்தமும் கொள்ள வேண்டும்?மிகச் சிலரான நலமான மனிதர்கள் மட்டுமே இங்கு வாழ்கிறோம்.மன நலமற்ற அனைவரையும்வெளியே விட்டு விட்டோம்.இங்கு நான் வந்ததிலிருந்து பல புத்திசாலியான மனிதர்களை,பல அற்புதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.வெளியிலோ எல்லோரும் அசிங்கமானவர்களாக இருக்கிறார்கள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இகழ்ச்சி

தமிழில் முதல் நாவலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.அவரிடம் பணம் பெறும் பொருட்டு அவரைப் பார்க்க வந்த ஒரு புலவர் அவரைப்  பார்த்து,
,''அருங்கிரியே,கற்பகமே,காளையே,அனந்தனே,அரியே!''என்று புகழ்ந்தார். அவனுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்ட பிள்ளை அவர்கள் அவன் சொன்ன வார்த்தைகளை அலங்காரம் ஏதுமில்லாமல்அவனைப்பார்த்து  திரும்பச் சொன்னார்.ஆனால் அந்த புலவர் மிகுந்த கோபத்துடன் வெளியேறிவிட்டார்.அப்படி அவர் என்ன தான் சொல்லி விட்டார்?
புலவர் அருங்கிரியே என்றார்.அதாவது அருமையான மலை போன்றவனே.கற்பகமே என்றார்.அதன் பொருள் நினைத்ததைத்தரும்  கற்பக மரத்தைப் போன்றவனே என்பதாகும்.சிவனின்வாகனம் காளை.எனவே காளை போன்ற ஆற்றல் உடையவனே என்று புகழ்கிறார்.அனந்தன் என்பது திருமால் அமர்ந்திருக்கும் ஆதிசேடன்  ஆகும். அரி என்றால் சிங்கம்.சிங்கம் போன்றவனே என்று சொல்கிறார்.
சரி,வேதநாயகம் பிள்ளை என்ன சொன்னார்?இதோ அவரது பாடல்.
அருங்கிரியே!கற்பகமே! காளையே!
அனந்தனே!அரியே!என்ன
ஒருங்கு நமையே  புகழ்ந்து பொருள்கேட்ட 
ஒருவனை யாம் உற்று நோக்கி
இருங்கல்லே!மரமே!மாடே!பாம்பே!மிருகமே!
என்றோம்;காய்ந்தான் 
மருங்க வன் வார்த்தையைத் திருப்பி நான் சொன்னால்,
அவனுக்கு ஏன் வருத்தம் அம்மா?
 புலவர் அருமையான மலை என்றார்.மலை என்பது கல்தானே.கற்பகம் ஒரு மரம்தானே!காளை என்பது மாடு தானே!அனந்தன் என்பது பாம்பு தானே! சிங்கம் ஒரு விலங்கு தானே.எனவே புலவர் சொன்னதையே திருப்பி,''கல்லே,மரமே,மாடே,பாம்பே,மிருகமே,''என்று சொன்னபோது அவர் கோபம் கொண்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பென்சில்

பென்சிலில் இருந்து  கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:
பென்சிலை யாராவது கையில் எடுத்துக் கொண்டால் ஒழிய அதனால் பயனில்லை.அதுபோல நாமும் உயர்வான காரியத்திற்காக வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பென்சிலை அடிக்கடி சீவி  கூராக்குவார்கள்.அதுபோல நமது அறிவு தீட்டப்பட வேண்டும்.
பென்சிலின் உள்ளே இருக்கும் ஊக்கு தான் முக்கியமே தவிர வெளியே இருப்பது எதனால் ஆனது என்பது முக்கியமல்ல.அதுபோல நமக்குள்ளே  குடி கொண்டுள்ள அன்பு,மௌனம்,நற்குணம் தான் முக்கியமே தவிர,வெளியிலுள்ள பகட்டும்,படாடோபமும்,கவர்ச்சியும் முக்கியமில்லை.
பென்சிலை உபயோகிக்கும்போது எழுதுபவர்கள் தவறு செய்யலாம்.ஆனால் அதை ரப்பரால் அழித்துத் திருத்தி எழுதலாம்.அதுபோல வாழ்க்கையில்  நாம் தவறுகள் செய்கிறோம்.அவற்றை நாம் திருத்திக் கொள்ளலாம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கல்லில் எழுத்து

ஜேம்சும் வில்லியம்சும் நண்பர்கள்.ஒருநாள் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சிறு மன வருத்தத்தில் ஜேம்ஸ் வில்லியம்சைக் கன்னத்தில் அறைந்து விட்டான்.இதனால் வருத்தமடைந்த வில்லியம்ஸ்,''எனது உயிருக்குயிரான நண்பன் என்னைக் கன்னத்தில் அடித்து விட்டான்,''என்று கடல் மணலில் எழுதினான்.பின்னர் இருவருக்கும் சமாதானமேற்பட்டது.கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு பெரிய அலையில் வில்லியம்ஸ் கடல் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டான்.உடனே ஜேம்ஸ் கடலில் குதித்து நண்பனைக் காப்பாற்றினான்.வில்லியம்ஸ் அவனுக்கு நன்றி தெரிவித்து பக்கத்திலிருந்த பாறையில்''எனது சிறந்த நண்பன் எனது உயிரைக் காப்பாற்றினான்.''என்று எழுதினான்.ஜேம்ஸ் கேட்டான்,''நான் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதினாய்.ஆனால் உன்னைக் காப்பாற்றியதைக் கல்லில் எழுதுகிறாயே?என்ன காரணம்?''வில்லியம்ஸ் சொன்னான்,''யாராவது உன்னைப் புண்படுத்தினால் அதை மணலில் எழுத்து.ஏனெனில் சிறிது நேரத்தில் அது அழிந்து விடும்.யாராவது நல்ல காரியம் செய்தால் அதைக் கல்லில் எழுத்து.அது என்றும் அழியாது இருக்கும்.''
பொதுவாக நாம் இதற்கு நேர் மாறாகத்தான் செய்கிறோம்.மக்கள் நல்ல காரியத்தை மணலில் எழுதினாற்போல மறந்துவிடுகிறார்கள்.ஆனால் ஒரு கெட்ட செயலுக்கு மாலை போட்டு மனப்புண் ஆறாமல் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சூபி சிந்தனைகள்

மனம் என்ற ஒன்று நம்மிடம் உள்ளவரை மனதில்,'நான்'என்பது இருக்கும்.அந்த நான் என்ற உணர்வானது ஒவ்வொன்றையும் தனக்கு விரும்பிய விதத்தில் தான் கற்பனை செய்யும்.நிஜமான உண்மை அந்தக் கற்பனைக்கு முரணானது என்று தெரியும் நிலையில்,மனம் உண்மையைத்தான் தூக்கி எறியுமே தவிர,தனது கற்பனைகளை விட்டுத்தரவே  செய்யாது.உள் மனதிற்கு உண்மை என்ன என்று  தெரியும்.ஆனால் புற மனம் உண்மையை மறைப்பதற்கு வழி கிடைக்காதா என்று ஏங்கும்.
**********
குழந்தைகள்எதைக்கண்டாலும்குதூகலப்படுகின்றனர்.பரவசமடைகின்றனர். காரணம்,அவர்களின் மனதில்எதைப் பற்றிய கற்பனைகளும் இல்லை.அவர்கள் நிஜத்தை நேரிடையாக எதிர் கொள்கின்றனர்.நாம் ஒன்றைப் பற்றிக் கேள்விப்படும்போதே,நமது மனம் அது பற்றி அதீதக் கற்பனைகள் செய்யத் துவங்கி விடுகிறது.அதனால்,அதன் பின்னர் நேரில் பார்க்கும்போது அது எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும்,நம் மனதால், நிறைவை அடைய முடிவதில்லை.
**********
பணம்,பொருள்,புகழ்,இவற்றை அடையும் வேட்டை,ஆயுள் முழுவதும் தொடர்கிறது.ஆனால் இவற்றை அடையும் வரை இருந்த வேகம்,அடைந்தபின் அவனிடம் வடிந்துபோய்,அப்படி அடைந்தவற்றின் மீது ஒரு சலிப்பு கூட ஏற்படுகிறது.
**********
ஞானம் பெற்றபலரும் ஆலயங்களிலோ,வழிபாட்டுத் தளங்களிலோ,அன்றாடம் தொழும் பக்திமானாக இருந்தது இல்லை.ஆலயப்பணி,இறைவன்தொண்டு என்றெல்லாம் ஈடுபடும் பலரிடம் உள்ளூர ஊடுருவிப் பார்த்தால்,அகந்தை கொப்பளிக்கக்  காணலாம். தாங்கள்  புனிதமானவர்கள் என்ற செருக்கு இவர்களுடன் சேர்ந்து கொண்டு விடுகிறது.இயற்கை என்றுமே மனிதனின் புறச் சூழ்நிலைகளைப் பார்ப்பதில்லை.அவன் மனதை மட்டுமே பார்க்கிறது.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனதுடன் யுத்தம்

மனம் என்பது விதவிதமான மாயைகளை தோற்றுவிக்கக்கூடியது.அதிலும்,மற்றவர்களிடம் இருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவரது மனதில் எப்படியாவது விதைக்க அது முயன்று கொண்டே இருக்கும்.ஒரு முறை அத்தகைய உணர்வு ஒருவர் மனதில் புகுந்து விட்டால் அதிலிருந்து எளிதாக யாரும் மீள முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும்.அதைத் தாண்டி நம் மனதுக்குள் எதுவும் நுழைய முடியாது.ஒவ்வொரு எண்ணமும்,ஒவ்வொரு கருத்தும் நான் என்ற உணர்வுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே,மனதில் நுழைய முடியும்.இயற்கை பற்றிய,இறைவன் பற்றிய கருத்துக்களில் கூட நமக்குப் பிடித்தமானது மட்டுமே நம்மால் ஏற்கப்படும்.யுத்தத்தில் பெரிய யுத்தம்,ஒரு மனிதன் தன மனதுடன் நடத்தும் யுத்தமே.நாம் மனதிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணரக் கூட நம்மால் முடிவதில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இல்வாழ்க்கை

ஞானி கபீரைத்தேடி ஒருவர் வந்தார்.அவர் முகத்தைப் பார்த்த  கபீர்,''உங்களைப் பார்த்தால் உங்களுக்கு இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்று தெரிகிறது.''வந்தவர் ஆச்சரியப்பட்டு அது உண்மை என்றும்,தங்கள் வாழ்க்கை போராட்டமாகவும் நரகமாகவும் இருப்பதாகக் கூறினார்.
கபீர் இதற்கு பதில் சொல்லவில்லை.தன மனைவியை அழைத்து,இருவருக்கும் பால் கொண்டு வரும்படி சொன்னார்.அவர் மனைவி கொண்டு வந்து கொடுத்தார்.இருவரும் அருந்தினர்.வந்தவர் முகம் அஷ்டகோணலாக ஆனது.கபீர் முகம் கோணாமல் அமைதியாகக் குடித்துக் கொண்டிருந்தார்/அந்தப் பாலில் இனிப்பே இல்லை.உள்ளிருந்து அவர் மனைவி,''போதுமா?எல்லாம் சரியாக இருக்கிறதா?''என்று கேட்க ,''போதும்,ருசியாக இருக்கிறது,''என்றார் கபீர்.
வந்தவர் இப்போது கேட்டார்,''என் பிரச்சினைக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே?''கபீர் குவளையைக் காட்டியபடி சொன்னார்,''இதுதான் என் பதில்.குறைகளைப் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போவதே இல்வாழ்க்கைக்கு இனிய வழி.''
எதையும் பெரிது படுத்தாமல்,இதுதான் நடக்க வேண்டும்,இப்படித்தான் நடக்க வேண்டும் என எல்லாவற்றையும் தன விருப்பத்துக்கு வளைக்காமல்.அதன் விருப்பப்படி விட்டுக் கொடுத்துப் போவதே சிறந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கால்பந்து

யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன.இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சி)இறங்கியது.உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது.பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது.ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது.விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது,யானைக் குழுவின் தலைவன்,பூச்சிக் குழுவின்  தலைவனிடம்,''உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?''பூச்சித்தலைவன் சொன்னது,''அதுவா,பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

போலித்தோற்றம்

முல்லா தன் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்.கழுதை  மிக  வேகமாக  ஓடிக்  கொண்டிருந்தது .அது சந்தை வழியாக சென்று கொண்டிருந்தது.''முல்லா,எங்கே வேகமாகப் போகிறீர்?''என்று வழியில் சிலர் கேட்டனர்.முல்லா சொன்னார்,''என்னைக் கேட்காதீர்கள்.என் கழுதையைக் கேளுங்கள்.''''இது என்ன வேடிக்கையாயிருக்கிறது?''என்று அவர்கள் கேட்டனர்.முல்லா சொன்னார்,''இதில்  வேடிக்கை ஒன்றுமில்லை.இது ஒரு வீம்பு பிடித்த கழுதை.நான் சொல்லும் பாதையில் இது போகாது.முரண்டு பிடிக்கும்.எனவே நான் தனியாக இருக்கும்போது இதை உதைத்து நான் விரும்பும் இடத்துக்குக் ஓட்டிச்  செல்கிறேன்.ஆனால் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் என்னைப் பார்த்து  சிரிக்கிறார்கள். என் கழுதையை என்னாலேயே அடக்க முடியவில்லை என்று கேலி பேசுகிறார்கள்.கூட்டத்தைக் கண்டதும் கழுதையும்  அதிகப் பிடிவாதம் பிடிக்கிறது.இதிலிருந்து ஒரு பாடத்தை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.கூட்டம் உள்ள இடத்தில் கழுதை போகும் இடத்துக்கே நான் போகிறேன்.தனியாக இருக்கும்போது அதை நான் ஒரு வழி பண்ணி விடுகிறேன்.கூட்டம் இருக்கும் இடத்தில் அதன் போக்கிற்குப் போக விடுவதால்,குறைந்த பட்சம் நான் அதன் எஜமானனாக இருக்கிறேன் என்ற போலித் தோற்றத்தை எல்லோர் முன்னிலையில் ஏற்படுத்திக்  கொள்கிறேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சுதந்திரம்

புகழ்,கெளரவம்,நேர்மை ஆகியவை ஒரு மனிதனின் சுதந்திரத்தைக் குறைக்கும்.நல்லவர் தவறு செய்வதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.மிகவும் நல்லவர் என்றால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்.அப்போது நீங்கள் உங்கள் சுதந்திரத்தை இழக்கிறீர்கள்.உங்கள் நேர்மைச் செயல்களும்,நற்பண்புகளும் ஒரு தங்கக் கூண்டைப்போல உள்ளன.நீங்கள் புன்முறுவல் கூடக் காட்ட முடியாது.உங்கள் செல்வாக்கையும்,கௌரவத்தையும் விடாது தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஓயாது கவலைப் பட்டுக் கொண்டிருப்பீர்கள்.இது உங்கள் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாகிவிடுகிறது.செல்வாக்கைத் தக்க வைக்க நல்லவராக இருப்பது பயனற்றது.செல்வாக்கும் கௌரவமும்  வாழ்க்கையில் வறுமையைவிட அதிகத் துயர் தரும்.விவேகிகள் செல்வாக்கும் புகழும் பெற்றிருந்தாலும் கூட அவை எதுவும் தனக்கு இல்லாததுபோல வாழ்வர்.ஒரு குழந்தையைப்போல இந்த உலகை ஒரு கனவாக,ஒரு வேடிக்கையாகக் கருதினால் சுதந்திரத்தை இழக்காது இருக்கலாம்.
                                           ---ஸ்ரீ ரவிசங்கர்ஜி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாத்தீகம்

வேத காலத்திலேயே நாத்தீகவாதமும் இருந்துள்ளது.பூர்வ மீமாம்சையை இயற்றிய ஜைமினி சொல்கிறார்,''வேதத்தில் குறிப்பிட்டுள்ள கர்மாக்களைசெய்தால் போதும்.அதற்கான பலனை அடைந்து விடலாம்.இப்பலனை அடைய தெய்வ அருள் தேவையில்லை.நாம் ஒரு காரியத்தை ஒழுங்காகச் செய்தாலே அதன் பலன் கிடைத்துவிடும்.தெய்வத்தின் தலையீடு தேவையில்லை.தெய்வம் பற்றிய சிந்தனையே  தேவையற்றது.இவ்வுலகம் எப்போதும் உள்ளது.நேற்று இருந்தது.இன்று உள்ளது.நாளையும் இருக்கும்.உலகம் ஏற்கனவே இல்லையென்றால் தானே அதை ஒருவர் உருவாக்கியிருக்க முடியும்?ஆகவே கடவுள் உலகை உருவாக்கினார் என்பது தேவையற்ற வாதம்.நீ உனது கடமையை செய்.பலனைப் பெறுவாய்.அதுவே போதும்.''
சார்வாகர்  என்பவர் முழுக்க நாத்திக வாதம் பேசுகிறார்.''உடலானது இந்திரியங்கள் மூலமாக இயங்குகிறது.உலகும் அதில் உள்ள அனைத்தும் இயற்கையாய்த் தோன்றுகின்றன.அவற்றைப் படைக்க ஒரு இறைவன் தேவையில்லை.நன்றாக சாப்பிட்டு,தூங்கி முடிந்த வரை வாழ்வின் அத்தனை இன்பங்களையும் அடைந்து விடவேண்டும்.கடவுள் வழிபாடு, சடங்குகள்,ஒழுக்கங்கள் அவசியம் இல்லாதவை.தீ சுடுவதும்,நீர் குளிர்ந்திருப்பதும் இயற்கைத் தன்மையால்;கடவுளால் அல்ல.மோட்சம்,சொர்க்கம்,ஆன்மா,பரலோகம் என்பவை கட்டுக் கதைகள்.வேதங்கள்,வேள்வி கற்றவரின் வயிற்றுப்பாட்டிற்காக ஏற்பட்டவை.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இருக்கலாம்

ஒரு ஏழையான சீனக் குடியானவன்,ஒரு அழகான கறுப்புக் குதிரை வைத்திருந்தான்.ஊராருக்கு அந்தக் குதிரையின் மீது வியப்பு.அந்த ஊர் மன்னர்  அந்தக் குதிரையைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தக் குதிரைக்காக நிறையப் பணம் தருவதாகவும்,அந்தக் குதிரையை தனக்கு விற்று விடுமாறும் அவனிடம் கேட்டார்.அனால் அவன் சம்மதிக்கவில்லை.ஊர்க்காரர்கள்,'மன்னர் பெருந்தொகை கொடுக்க முன் வந்து நீஏற்கவில்லையே,நீ ஒரு முட்டாள்,'' என்று விமரிசித்தனர்.அதற்கு அவன்,'இருக்கலாம்,'என்று சுருக்கமாகப் பதில் சொன்னான்.சில நாளில் அக்குதிரை காணவில்லை.ஊர்க்காரகளவனிடம்,''நீ  பெருந்தொகையை இழந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போதாவது உணர்கிறாயா?''என்று கேட்டனர்.அப்போதும் அவன்,'இருக்கலாம்,'என்றே பதில் கூறினான்.
சில நாட்களுக்குப்பிறகு,அந்தக் குதிரை மேலும் இருபது அழகிய கறுப்புக் குதிரைகளைக் காட்டிலிருந்து அழைத்து வந்தது.மக்கள்,''உன் குதிரையை விற்காதது உன் புத்திசாலித்தனம்,''என்று பாராட்டினர்.இதற்கும் குடியானவன்,'இருக்கலாம்,'என்று கூறினான்.அவனுடைய பையன் குதிரைகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும்போது குதிரையிலிருந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.மக்கள்,''உன் பையனுக்கு அவ்வளவு விபரம் பத்தாது,''என்றனர்.குடியானவன்  வழக்கம்போலவே,'இருக்கலாம்,'என்றான்.
அப்போது சீனாவில் போர் வந்தது அதற்கு இளைஞர்களை ராணுவத்தில் சேரச்  சொல்லிக் கட்டாயப் படுத்தினர்.குடியானவன் மகன் மட்டும் கால் ஒடிந்திருந்தால் போருக்கு ஏற்றவனல்ல என்று விடப்பட்டான்.மக்கள் குடியானவனிடம் சொல்லினர்,''நீ மிகவும் அதிர்ஷ்டசாலி.உன் பிள்ளை ராணுவத்தில் சேராமல் தப்பி விட்டான்.''என்றனர் இப்போதும் அவன் சொன்னான்,'இருக்கலாம்.'
இவை எல்லாமே ஒப்பீடான சார்பு நிலைகளே.நன்கு உணர்ந்த எவரும்,எதனையும் முற்றிலும் சரியானது என்று கூற மாட்டார்கள். 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கிருபை

ஒருவன் பாவம் செய்ய அவனுடைய மனசு,சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன.நாம் பல பாவங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம்.எனவே ஒரு பாவியைப் பார்க்கும்போது,''அம்பிகே,...இந்தப் பாவத்தை நானும் கூட செய்திருக்கலாம்.ஆனால் அதற்கு சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய்.அந்தக் கிருபையை நீ இவனுக்கு செய்யம்மா...''என்று பிரார்த்திக்க வேண்டும்.
                                  ---காஞ்சிப் பெரியவர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பகிர்வு

முல்லா தன குருவிடம் சொன்னார்,''  .இதோ,இவர்களெல்லாம் உங்களது சீடர்கள்.உங்கள் உபதேசப்படி இவர்கள் நடப்பதில்லை.அது தான் எனக்கு ஒரே வருத்தம்.''குரு கேட்டார்,''என்னுடைய எந்த உபதேசத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை?''முல்லா சொன்னார்,''எதுவானாலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு  உபதேசித்தீர்கள்.நான் பகிர்ந்து கொடுக்கத் தயாராக இருந்தாலும்   இவர்கள் யாருமே என்னுடன் குடியைப் பகிர்ந்து கொள்வதில்லை.அதனால் நான் தனியே குடிக்க வேண்டியிருக்கிறது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மருந்து

ஒரு துறவியிடம் வந்து ஒரு பெண் சொன்னாள்,''என் மாமியாரிடம் நான் படும்  துன்பம் தாங்க முடியவில்லை.என் வாழ்வை நரகமாக்குகிறாள்.அவளை சாகடிக்க ஏதாவது மருந்து கொடுக்க முடியுமா?''துறவி அவளுக்கு ஒரு மருந்தை எடுத்துக் கொடுத்துவிட்டு சொன்னார்,''இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமானால் ஒரு நிபந்தனை இருக்கிறது.இந்த மருந்தை அன்புடனும் கருணையுடனும் கொடுத்தால் தான் அது வேலை செய்யும்.மேலும் அப்படிச் செய்யும்போது உன்  மீதும்  யாரும்  சந்தேகப்பட மாட்டார்கள்.இரண்டு மாதத்தில் உன் மாமியார் இறந்து விடுவார்.''ஒரு மாதத்திற்குப்பின் அந்தப் பெண்  துறவியிடம் மீண்டும் வந்தாள். அவள் சொன்னாள்.''அய்யா,இப்போது என் மாமியார் என்னிடம் மிக அன்பாக இருக்கிறார்.அவர் சாகக்கூடாது.வேறு எதேனும் மருந்து கொடுங்கள்.'' துறவி சொன்னார்,''வேறு மருந்து தேவையில்லை அம்மா,உன் அன்பும் கருணையுமே சிறந்தமருந்து.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிப்பே மருந்து

''அந்த வெள்ளாட்டுடன் எங்கே போகிறாய் தம்பி?''என்று கேட்டான் போலீஸ்காரன்.
'இதை வளர்க்க வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன்,'என்றான் பையன்.
''வீட்டிலா?''
'ஆமாம்'
''நாத்தமடிக்குமே/''
'அதனாலென்ன?நாத்தத்தைப் பற்றியெல்லாம் ஆடு கவலைப்படாது.'
**********
''காலம் சென்ற என் மனைவி உண்மையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க  பெண்மணிதான்.''என்று ஒரு பூங்கா பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு,ஒரு வயதானவன்,தன் நீண்ட நாள் நண்பனிடம் சொல்லிக்  கொண்டிருந்தான்.மேலும் அவன் சொன்னான்,''மிகவும் மதப்பற்றுள்ள பெண் அவள்.ஒரு நாள் கூடக் கோவிலுக்குப் போகத் தவறியதில்லை.வீட்டிலும் காலை முதல் இரவு வரை ஒரே பஜனையும்,சங்கீதமும்தான்.''
'அப்படிப்பட்ட நல்ல பெண் எப்படி இறந்து போனார்கள்?'நண்பன் கேட்டான்.
''கழுத்தை நெறித்தே கொன்று விட்டேன்,''என்றான் அந்த வயோதிகன்.
**********
சாலையில் தன் நடுவயதான  மனைவியுடன் சென்று கொண்டிருந்த
கணவன்,அவளிடம் சொன்னான்,''அந்த அழகிய இள மங்கை என்னைப் பார்த்து புன்னகைப்பதைப் பார்த்தாயா?''
மனைவி சொன்னாள்,''இது என்ன பிரம்மாதம்?முதல் தடவை நான் உங்களைப் பார்த்தபோது வாய் விட்டே சிரித்தேனே!''
**********
ஒரு பெண் மருத்துவமனையில் உள்ள விசாரணைப் பகுதிக்கு சென்று கேட்டாள்,''கண்டைனர் லாரியில் அடிபட்ட என் கணவர் எந்த வார்டில் இருக்கிறார்?''அங்கிருந்தவன் சொன்னான்,''அவர் 256,257,258 வார்டுகளில் இருக்கிறார்.''
**********
ஒரு நாய் மூன்று பேருடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை வியப்புடன் கவனித்த ஒருவன் நாயின் திறமையைப் பாராட்டினான். நாயின் சொந்தக்காரர் சொன்னார்,''அதற்கு அவ்வளவு திறமை கிடையாது,''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்  சொன்னார்,''நல்ல சீட்டு அதற்கு வரும்போதெல்லாம் அது தன் வாலை ஆட்டி விடுகிறது.''
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனசாட்சி

முன்பெல்லாம் யார் யாரை ஏமாற்றிக் கொண்டு இருந்தாலும்,அநியாயம் இழைத்துக் கொண்டிருந்தாலும்,அவனவனுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது,அதனுடைய உறுத்தல் விடாது.அதையே ஒரு ஆறுதலாக,தேறுதலாகச் சொல்வதுண்டு.கடவுள் எங்கும் நிறைந்திருக்கும் முறை,அவனவன் மனதையே அவனவனுக்கு சாட்சியாக நிறுவியிருப்பதுதான்.மனசாட்சிப்படி கேட்கிறானோ இல்லையோ,அவன் எண்ணத்தின்,செய்கையின்,நியாய,அநியாய உணர்வைத் தப்ப முடியாது.அந்த உணர்வே தான் ஆண்டவன்.
வரவர நடப்பைப் பார்த்தால்,மனசாட்சியே கொல்லப்பட்டு விட்டதோ அல்லது அதன் குரல் எட்டாத ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்டதோ என்று திகைப்பாய் இருக்கிறது.அதனாலேயே மனோதைரியம் கலகலத்துப் போய்விடுகிறது.
அல்லது வீசை,பலம்,கிலோகிராம்,கிராமாகவும் ;படி ,ஆழாக்கு,லிட்டர் மில்லியகவும் மாறி விட்டாற்போல் நியாயத்துக்கும் எடை மாறிவிட்டதா,சாஸ்திர எடையிலிருந்து சமுதாய எடையாக?காலத்தின் மேல் பழியைப் போட்டுக்கொண்டு,சௌகர்யம் தான் நியாயம் என்ற புது எடையில்,நியதிகளை மாற்றிவிட்டதோ?
                                                     லா.ச.ரா.எழுதிய சிந்தா நதி எனும் நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கனவு

முல்லா,ஒரு நாள் இரவு,ஒரு மனிதன் தனக்கு கொஞ்சம் பணம் தர விரும்புவதைப்போலக் கனவு கண்டார்.அவன் மிகவும் தாராளமாக இருந்தான்.ஆகவே முல்லா,ஒரேயடியாக ஆயிரம் ரூபாய் கொடு என வலியுறுத்தினார்.அந்த ஆளோ  ஐநூறு ரூபாய் வாங்கிக்கொள் என்றான் பின் அறுநூறு வாங்கிக்கொள் என்றான்.ஆனால் முல்லா முழுதாக ஆயிரம் ரூபாய் வேண்டும் என்பதில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்.அவன் பெருந்தன்மையானவனாகத் தெரிவதால் ஆயிரம் ரூபாய் தரச் சம்மதிக்கலாம்  எனக்கருதினார்.எனவே ஏன் குறைக்க வேண்டும்?கடைசியில் அந்த ஆள் 950 ரூபாய் தர சம்மதித்தான்.ஆனால் முல்லாவோ ஆயிரத்திலிருந்து இறங்கவில்லை.'ஆயிரம் ரூபாய் தான்'என்று சப்தம் போட்டுச் சொன்ன முல்லா விழித்துக்கொண்டார்.கண்களைத் திறந்தார்.ஆளும் இல்லை பணமும் இல்லை.உடனடியாக அவர் கண்களை மூடிக்கொண்டு சொன்னார்,''கோவிச்சுக்காதே.900,......800,.......700,.....600,....''ஆனால்  அங்கு  யாரும்  இல்லை .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மருந்து

முல்லா கால் நடை மருத்துவரிடம் போனார்.''என்  குதிரை  ரொம்பவும்  சோம்பேறி ஆகிவிட்டது.ஓடவும் மாட்டேங்குது ,நடக்கவும் மாட்டேங்குது.ஒரு சக்திவாய்ந்த மருந்தைக் கொடுத்து அதை ஓடச் செய்யுங்கள்.''என்று மருத்துவரிடம் சொன்னார்.மருத்துவர் சொன்னார்,''இதற்கு ஒரு கசப்பான மருந்து இருக்கிறது.ஆனால் நேரடியாகக் கொடுத்தால் குதிரை குடிக்காது.எனவே இந்த மூங்கில் குழாயை எடுத்துக்கொள்.இந்த மருந்தை குழாயில் நிரப்பு.குழாயின் ஒரு முனையை குதிரையின் வாய்க்குள் வை. மறுமுனையை உன் வாயில் வைத்துக்கொள்.பின் மருந்து குதிரையின் தொண்டைக்குள் இறங்கும்படியாக ஊதிவிடு.''
முல்லாவும் வைத்தியர் சொன்னதுபோல செய்துகொண்டே வந்தார்.ஆனால் பாவம் முல்லா.அவர் ஊதுமுன் குதிரை ஊதிவிட்டது.மருந்து முல்லாவின் தொண்டைக்குள் இறங்கிற்று உடனே மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது.என்பது வயதான முல்லா,தன தோட்டத்தின் வேலியைத் தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தார்.யாரும் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடினார்.அதைப்பார்த்த அவர் மனைவி கவலையுடன் அவர் பின்னே ஓடினார்.ஆனால்  பிடிக்க முடியாதலால்,சற்று நேரம் யோசித்துவிட்டு மருத்துவரிடம் விரைந்தார்.''உடனடியாக அவருக்குக் கொடுத்ததைப்போல இரண்டு மடங்கு மருந்து கொடுங்கள்.அப்போது தான் நான் அவரைப் பிடிக்க முடியும்.''என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சமய மறுப்பாளன்

முல்லாவின் புகழ்  மீது பொறாமை கொண்ட  சில பேர் முல்லா,மதத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார் என்றும்
அவர் சமய மறுப்பாளர் ஆகிவிட்டார் என்றும் சுல்தானிடம் வழக்குத் தொடுத்தனர்.சுல்தான் அதுபற்றி முல்லாவிடம் விளக்கம் கேட்டார்.முல்லா உடனே அந்த சபையிலிருந்த முக்கியமான பத்து  புத்திசாலிகளைத் தேர்ந்தெடுக்குமாறு சுல்தானிடம் வேண்டிக்கொண்டார்.பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுப்பதில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.இறுதியில் பத்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அந்த பத்துப்பேரிடமும் எழுதுகோலையும் தாளையும் தந்தார் முல்லா.ஒவ்வொருவரும் கடவுளைப்பற்றி அவர்கள் நினைப்பதை எழுதித்தரக் கூறினார்.பத்துப்பேரும் பத்துவிதமான பதில்களை எழுதித் தந்தனர்.அவற்றை சுல்தானிடம் வாசித்துக் காட்டிய முல்லா,,''இறைவனைப்பற்றி எழுதுவதிலேயே இத்தனை கருத்துவேறுபாடுகள் உள்ள இவர்கள்,நான் சமய மறுப்பாளன் என்ற கருத்தில் மட்டும் ஒன்றுபட்டுள்ளனர்.முதலில் இவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனைப் பற்றிய ஒருமித்த  கருத்துக்கு வரட்டும்.பிறகு அதை நான் ஆதரிப்பவனா,எதிர்ப்பவனா என்பதைப் பற்றிப் புகார் கூறட்டும்.''என்றார்.புகார் கூறியவர்கள் அடங்கிப்போயினர்.
சித்தாந்தங்களோ  அவற்றிடையே உள்ள வேறுபாடுகளோ பிரச்சினை அல்ல. சித்தாந்தவாதிகள்,தம் எண்ணங்களையே கடவுளின் விருப்பமாகச் சித்தரிக்க முயல்கிறார்கள்.நீ அறியாததை,'நான் அறியாதது இது,' என்றே கூறு. அதன் மீது உன் ஊகங்களைத் திணித்துவிடாதே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எவரிடமும் சொல்லாதே.

கலிபா அல் மாமுன் அழகான அரபுக் குதிரை ஒன்று வைத்திருந்தார்.ஓமா அதை வாங்க ஆசைப்பட்டான்.அதற்கு ஈடாக பல ஒட்டகங்களும்,பெரும் பணமும் தருவதாகச் சொன்னான்.எனினும் மாமுன் அதற்கு இணங்க வில்லை.எப்படியாவது அந்தக் குதிரையை அடைய வேண்டும் என்று ஓமா முடிவு செய்தான்.மாமுன் குதிரையில் வரும் பாதையில் அவன் அழுக்கு உடைகளுடன் குப்புற விழுந்து கிடந்தான்.அந்த வழியாக வந்த மாமுன்,இரக்கப்பட்டு அவனைத் தூக்கினார்.ஓமா,'அய்யா,நான் பல நாள் பட்டினி.நிற்கக் கூட முடியவில்லை.'என்றான்.மாமுன் அவனைத் தூக்கி குதிரையின் மீது உட்கார வைத்தார்.மறுகணமே குதிரையில் பறந்தான்,ஓமா. திகைத்துப்போனகலிபா சட்டென்று சுதாகரித்துக் கொண்டார்.அவர்,''நில்.ஒரு கணம் நில்.நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப்போ.''என்றார் உரத்த குரலில்.குதிரையில் சென்றுகொண்டே ஓமா என்னவென்று கேட்டான்.''உனக்கு இந்த குதிரை எப்படிக் கிடைத்தது என்று எவரிடமும் சொல்லாதே.அப்படி நீ சொன்னால்,ஒரு வேலை உண்மையாகவே யாராவது உடல் நலமின்றி சாலையோரம் விழுந்து கிடந்தால் கூட மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய அஞ்சுவார்கள்.''என்றார் அல் மாமுன்.
தனது குதிரை தன்னை ஏமாற்றிக் களவாடப்பட்டது என்பதைப் பற்றிக்கூட  மாமுன் கலங்கவில்லை.மக்களிடையே இதுபோன்ற செய்தி பரவினால்,மற்றவர்களுக்கு உதவு செய்பவர்களும் செய்யாமல்போய்விடக்கூடுமே என்று தான் வருந்தினார்.
                                                                    ----சூபி கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொறுப்பு

துறவு ஹபீப் ஆஷ்மி ஒரு நாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அங்கே தன உடைகளைத் தரையில் கழற்றி வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது அங்கே வந்த ஒருவன் உடைகளைக் கண்டு யார் குளிப்பது எனப் பார்த்தான்.ஆஷ்மி குளித்தஇடம் மறைவாக இருந்ததால் யாரோ கவனமில்லாது வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று எண்ணி அங்கேயே காவலுக்கு நின்றான்.ஆஷ்மி வெகு நேரம் நீராடிய பின் கரைக்கு வந்தபோது அவன்,'இப்படிப் பாதுகாப்பின்றி உடைகளை விட்டுச் செல்லலாமா?யாரேனும் களவாடிச் சென்றால் உங்கள் கதி என்ன?'என்று கேட்டான்.ஆஷ்மி சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஓஹோ,நான் உடைகளை,'அவன்'பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தேன்.'அவன்;அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்.''

                                                                      ---சூபி கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சோகம்

எந்த சம்பவமும் நம்மை சோகப்படுத்துவதில்லை.ஆனால் உண்மைகளை ஏற்க மறுத்துவிட்டு நம் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கற்பனையில் மூழ்கும் போதுதான் சோகம் படிப்படியாக நம்மைக் கவ்விக் கொள்கிறது.குறிப்பிட்ட ஒரு சம்பவம் நம் சிந்தையைக் கிளறிவிட சோகம் ஏற்படுகிறது.நிறைவேறாத விருப்பு வெறுப்புகள் ஏராளமாக இருப்பதால் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரும் சோகப்படுகிறார்கள்.ஒரு காரியம் நிறைவேறாது என்று  தெரிந்தவுடன்  முயற்சியைக்  கைவிடுகிறோம் .அது நமக்குள்ளே புதைந்துபோய் சோகத்திற்கு வித்திட்டு விடுகிறது.உண்மைகளை ஏற்க மறுப்பதே பல பிரச்சினைகளுக்குக்  காரணமாக அமைகிறது.கசப்பான முடிவுகளைத் தள்ளிப் போடுவதற்கு என்ன காரணம்?இனிமையான சூழ்நிலைகளை மட்டுமே மனம் விரும்புகிறது.இது குழந்தைத்தனமான பக்குவமற்ற  பார்வை.நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை இழப்பது தான் வாழ்க்கையில் பெரிய சோகம்.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தேவையில்லாமல் கவலைப்பட்டு போலி வாழ்க்கை வாழ்வது அதைவிடப் பெரிய சோகம்.நாம் எதிர்பார்த்த முடிவு கிடைத்துவிட்டால் அதை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்.எதிர்பார்ப்பிற்குக் குறைவாகவோ,மாறுபட்டோ இருந்தால் நாம் ஒடுங்கி உடைந்து போகிறோம்.முடிவு எப்படியிருந்தாலும் ஒரே மன நிலையில் இருப்பதுதான் கர்ம  யோகிக்கு அடையாளம்.
                                                             --சுவாமி தயானந்த சரஸ்வதி 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சபாஷ்

இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் படையெடுத்து வந்தார்  பாரசீக மன்னர் ஷா அப்பாஸ்.அப்போது ஜகாங்கீர் ஆட்சி காலம்.காந்தகார் வரை வந்துவிட்ட எதிரிப்படைகளை ஜகாங்கீர் படைகள் முறியடித்துவிட்டன.அதை அறிந்ததும் ஜகாங்கிருக்கு ஒரு ஓலைஅனுப்பினார் ஷா.தன படைகள் ஜகாங்கீர் நாட்டின் மீது படையெடுத்தது,தனக்குத் தெரியாமலே நடந்துவிட்டது என்றும் ஜகாங்கிருடன் தன நட்புறவு கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.அது கேட்ட ஜகாங்கீர்,''இது ஷா அப்பாஸ் வேலை,''என்று தன மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.ஆகவே மெச்சத்தக்க காரியத்தை செய்தவர் ஷா அப்பாஸ்.இந்த மாதிரி காரியங்களை யார் செய்தாலும் ,'ஷா அப்பாஸ்,'என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.ஷா அப்பாஸ் என்ற வார்த்தை ஷபாஸ் என்று உருதுவில் மாறி பிறகு சபாஷ் என்று தமிழில் மருவிவிட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அனுபவங்கள்

ஒரு பயணி,டாக்சியில் சென்று கொண்டிருக்கும்போது,அதன் ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக,அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.உடனே ஓட்டுனர் நிலை குலைந்து,இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து,ஒரு மரத்தின்  மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?''பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே,  ''உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்  என்று நான்  நினைத்துக்கூட பார்க்கவில்லை.''ஓட்டுனர் சொன்னார்,''இல்லை,இது என்னுடைய தவறுதான்.இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன்.  கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்.''
நமது அனுபவங்கள் கடந்த காலத்தால்  பாதிக்கப் படுகின்றன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாழ்ந்தேனா?

முதலில்,உயர்நிலைப் பள்ளியில்  முதல் மாணவனாக தேற வேண்டும் என்றுஉயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,சிறந்த கல்லூரியில் சேர வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு,நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,நல்ல ஒரு பெண்மணியைத் திருமணம் செய்ய  உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு குழந்தைகள்பெறுவதற்காக உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,என் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு,நான் ஓய்வு பெற வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,திடீரென எனக்குள் இருந்த உள்ளுணர்வு பளிச்சிட்டது.
நான் வாழ்க்கையை வாழ்ந்தேனா?நான் வாழ்வதையேமறந்து விட்டேனே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அசரீரி

ஒரு படகில் பல போணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அதில் ஒரு ஞானியும் இருந்தார்.அவரைப் பார்த்து மற்ற பயணிகள் கேலியும்,கிண்டலும் செய்து வந்தனர்.அவர் தியானத்தில் அமர்ந்தார்.இந்நேரம் அவர் எதுவும் செய்ய மாட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட மற்றவர்கள்,அவரை இஷ்டம் போல அடித்தனர்.அப்போதும் அவர் தியானத்தில் இருந்தார்.அவர் கண்களிலிருந்து அன்பு, கண்ணீராய் வந்து கொண்டிருந்தது.அப்போது ஆகாயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது.''அன்புக்குரியவனே,நீ விரும்பினால் இந்தப் படகை நான் கவிழ்த்து விடுகிறேன்!''அப்போதும் சாதுவின் தியானம் கலையவில்லை.அடித்தவர்கள் இப்போது என்ன நடக்குமோ என்று பயந்தார்கள்.விளையாட்டு வினையாயிற்றே என்று நினைத்து அவர்கள்ஞானியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.சாதுவின் தியானம் முடிந்தது.சுற்றிலும் அச்ச உணர்வுடன் மற்றவர்கள் நிற்பதைப் பார்த்தார்.''கவலைப்படாதீர்கள்,''என்று அவர்களிடம் கூறிவிட்டு ஆகாயத்தை நோக்கி வணங்கி,''என் அன்பான கடவுளே,நீ ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறாய்?நீ விளையாட வேண்டும் என்று விரும்பினால் இந்த மக்களின் புத்தியை மாற்று.அதை விட்டுவிட்டு படகைக் கவிழச்செய்வதால்
என்ன பயன்?''என்று கேட்டார்.ஆகாயத்திலிருந்து பதில் வந்தது,''நான் மகிழ்ச்சி அடைந்தேன்.நீ சரியான உண்மையை அறிந்து கொண்டாய்.முன்னால் ஒலித்தது என் குரல் அல்ல.எவன் ஒருவன் சாத்தானின் குரலை அறிந்து கொள்ள முடியுமோ.அவனால்தான் என் குரலையும் உணர முடியும்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனிதனும் சிங்கமும்

தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி ஒரு மனிதனுக்கும் ஒரு சிங்கத்திற்கும் ஒரு நாள் தர்க்கம் ஏற்பட்டது.ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல பக்கத்தில் ஒரு சிலை இருந்தது.''அதைப் பார்த்தாயா?யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.''என்றான் மனிதன்.
''ஓ,அது மனிதன் செய்த சிலை.ஒரு சிங்கம் சிலை செய்யுமானால்,மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது,தான் நிற்பது போலச் செய்திருக்கும்.''என்று சொல்லியது சிங்கம்.
 தனக்கென்றால் தனி வழக்குதான்.
                                                          --ஈசாப் நீதிக் கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முன் ஜாக்கிரதை

ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான்.திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான்.அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை.இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது.கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால்  எனக்கு நன்மை செய்வார்.நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார்.சாத்தானைத் தொழுததில்  எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை  எதுவும் இருக்காது.இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும்  இல்லை.நான் எல்லா சாத்தியக்கூறுகளையும்  ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சொர்க்கம்

ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,''நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.''ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.அவருக்கு ஒரே வியப்பு.ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,''வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை.எனக்கு எப்படி சொர்க்கம்...?''அவர்கள் சொன்னார்கள்,''வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய்.அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம்.இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது.இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம்.பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள்.உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய்.அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.''
மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான்.இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தொந்தரவா?

ஞானி ஒருவரிடம் விளக்கங்கள் கேட்ட ஒருவன் அடிக்கடி வந்து சந்தேகங்கள் கேட்ட போதெல்லாம் ஞானி விரிவாக விளக்கினார்.அவன் ஞானியிடம்,'ஐயா, நான் உங்களுக்கு ஒரு தொந்தரவாகத் தெரியவில்லையா?'என்று கேட்டான். ஞானி அவனிடம் அங்கிருந்த எரியும் விளக்கொன்றை எடுத்து மற்ற விளக்குகளை ஏற்றுமாறு கூறினார்.அதன்படி சில விளக்குகளை ஏற்றினார் வந்தவர்.ஞானி கேட்டார்,''முதல் விளக்கிலிருந்து நெருப்பை எடுத்து மற்ற விளக்குகளை ஏற்றியதால் இந்த விளக்குக்கு நஷ்டம் ஏதாவது உண்டா?'''இல்லை,'என்றார் வந்தவர்.;;அதேபோல நீங்களோ மற்றவர்களோ எத்தனை முறை நாடி வந்தாலும் அதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.அதனால் தயங்காமல் எத்தனை தடவை வேண்டுமானாலும் வாருங்கள்.''என்றார் ஞானி அன்புடன்.
                                                                     --சூபி கதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொள்ளை நோய்

எகிப்தின் பாலைவனத்தில் அமர்ந்திருந்த ஒரு ஞானி,சுழன்று சுழன்று வீசிய காற்றுக்கிடையில்,'கொள்ளைநோய்'செல்வதைப் பார்த்து,அந்த நோயிடம்,''எங்கு செல்கிறாய்?''என்று கேட்டபோது,'டமாஸ்கசில் ஆயிரம் பேரின் உயிரைப் பறிக்கச் செல்கிறேன்'.ஆனால் டமாஸ்கசில் கொள்ளை நோய்பரவிஇருபதாயிரம்பேர்இறந்தார்கள்..ஞானி,'கொள்ளைநோய்'திரும்பச் செல்வதைப்  பார்த்து,''நீ என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாய்.ஆயிரம் பேர் என்று சொல்லிவிட்டு இருபதாயிரம் பேரை பலி வாங்கியிருக்கிறாய்.''கொள்ளைநோய் சொன்னது,'உண்மையில் என்னால் இறந்தவர்கள் ஆயிரம் பேர் தான்.தாங்களும் இறந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தான் மற்றவர்கள் பலியானார்கள்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கட்டிப்போடு

ஞானி ஒருவர் பாலைவனச் சோலை ஒன்றில் சிறிய கூடாரம்   ஒன்றில்   தங்கி இருந்தார்.நெடுந்தொலைவிலிருந்து அவரைக் காண ஒருவன் ஒட்டகத்தில் வந்தான்.கூடாரத்தினுள் வந்ததும் ,
பயணி: உங்களைக் காண வெகு தொலைவிலிருந்து வந்துள்ளோம்.
ஞானி: எப்படி வந்தாய்?
பயணி: ஒட்டகத்தில்
ஞானி: ஒட்டகம் எங்கே?
பயணி: வெளியில் நிறுத்தி உள்ளேன்.
ஞானி: அதனைக் கட்டிப் போட்டு வைத்தாயா?
பயணி: இல்லை.எனக்கு இறைவனிடம் முழு நம்பிக்கை உண்டு.அவர் பார்த்துக் கொள்வார்.
ஞானி:முட்டாள்,போ,போய் உன் ஒட்டகத்தைக் கட்டிப்போடு.கடவுளுக்கு நிறைய வேலைகள் உண்டு.உன் ஒட்டகத்தைப் பாதுகாக்க அவருக்கு நேரம் இல்லை.
இக்கதை பின்னர் உலகப் புகழ் பெற்ற பொன்மொழி ஆனது.''அல்லாவிடம் பூரண நம்பிக்கை வையுங்கள்;ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப்போட மறவாதீர்.''
                                                                               --சூபி கதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிப்பே சிறந்தது.

கஞ்சன் ஒருவன் படுக்கையிலிருந்து எழுந்ததும் தன மனைவி இறந்து கிடப்பதைப் பார்த்தான்,உடனே என்ன செய்வது என்று யோசித்தான்.உடனே சமையல்காரியைக் கூப்பிட்டான்.அவளிடம்,''இன்று காலை சிற்றுண்டிக்கு ஒரு முட்டைபோதும்,''என்று சொன்னான்.
**********
டாக்டர்  நோயாளியிடம் சொன்னார்,''இன்று முதல் நீங்கள் உப்பு,உறைப்பு,காரம் எதுவுமில்லாத உணவை தான் உன்ன வேண்டும்.'' என்றார்.நோயாளி ,''கல்யாணம் ஆனதிலிருந்து  அப்படித்தானே  டாக்டர் சாப்பிட்டு வருகிறேன்.''என்றார் பரிதாபமாக.
**********
ஒருவர் தன நண்பன் வீட்டுக்கு சென்றார்.அங்கு நண்பர் தன் நாயுடன் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.''அட,இவ்வளவு புத்திசாலியான நாயை நான் பார்த்ததில்லை,''என்று நண்பனிடம் சொன்னார்.நண்பர் திகைத்துப்போய் , ;நீ நினைப்பது போல அவ்வளவு புத்திசாலியான நாய் இல்லை.பத்து முறை விளையாடியதில் மூன்று முறை என்னிடம் தோற்றுவிட்டது,'என்றாரே பார்க்கலாம்.
**********
ஒருவர்தன பழைய புத்தகங்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது ஒரு பழைய ரசீது ஒன்றைப் பார்த்தார்.அது ஒரு தையற்கடையில்ஏழு  ஆண்டுகளுக்கு முன் தைக்கப்போட்ட ஒரு சட்டைக்கான ரசீது.எப்படியோ சட்டையை வாங்க மறந்து விட்டிருக்கிறார்.நம்பிக்கை இல்லாவிடினும் எதற்கும் ஒரு வாய்ப்பு பார்த்துவிடலாம் என்று கருதி தையற்கடைக்கு சென்று ஒன்றும் சொல்லாமல் ரசீதை மட்டும் நீட்டினார்.கடைக்காரரும்  அதை வாங்கிக்கொண்டு சட்டையைத் தேட கடைக்குள் சென்றார். இவருக்கோ பயங்கர  டென்சன்.கொஞ்ச நேரம் கழித்து கடைக்காரர் அசடு வழிய சிரித்துக்கொண்டே வந்து சொன்னார்,''சார்,சட்டை ரெடியாக இருக்கிறது.ஆனால் காஜா மட்டும் இன்னும் போடவில்லை.நாளைக்கு வந்து சட்டையை வாங்கிக் கொள்கிறீர்களா?''.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அடிக்கடி வயிற்றில் பிரச்சினையா?

* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.    * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மன அழுத்தம் நீங்க..

வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.
ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும்.
வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த மயக்கம், தலைசுற்றல் உடனே நீங்கும்.
விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.
மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், "ஏலக்காய் டீ" குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஒரு கப் டீக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது!) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!
வாயுத் தொல்லையால் பொது இடங்களில் அவமானத்தைச் சந்திக்கிறவர்கள், கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.
குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம். இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். இப்படி மூன்று வேளை செய்தால், வாந்தி உடனே நிற்கும்.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பின் தூங்கி முன் எழுபவரா நீங்கள்?மாரடைப்பு வருமாம் ஜாக்கிரதை: அதிகமாக தூங்கினாலும் ஆபத்து தான்

இரவில் தாமதமாக உறங்கி, காலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும்'என, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம்.பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வேகமாக மாறி வருகிறது. உணவு பழக்கம், நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் குறைவான நேரமே தூங்குகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் தூக்க நேரம் குறைந்து விட்டது. இரவில் மிகவும் தாமதமாக தூங்கி, அதிகாலையில் கண் விழித்து விடுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு குறைவான நேரம் தூங்கும் வழக்கம் உடையவர்களுக்கு, உணவு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இதனால், அவர்களுக்கு கடுமையான பசி ஏற்படும். மேலும், மேலும், அதிகமாக சாப்பிடுவர். இதன்காரணமாக, அவர்களின் உடல் குண்டடித்து விடும். ரத்த அழுத்தம் அதிகமாகி, இருதய நோய்க்கு வழி வகுத்து விடும். இறுதியில், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயின் பாதிப்புக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவர்.

நாங்கள் நடத்திய ஆய்வில், தினமும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவோரில், 50 சதவீதம் பேர் இருதய நோயின் பாதிப்பிற்கும், 15 சதவீதம் பேர், பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.அதற்காக, எப்போது பார்த்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குவோருக்கும், இருதய நோய் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் தூங்குவோருக்கு, சில நேரங்களில் அதிகம் களைப்பாக இருப்பது போல் தோன்றும். இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை. இதற்கு பின்னும், அவர்கள் சுதாரித்துக் கொண்டு, தூங்கும் நேரத்தை குறைக்காவிட்டால், இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESANcourtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல... ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.
பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.
பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?
சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.
ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு... பெர்ஃப்யூம் வேறு!
பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.
வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?
சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.
கவனத்தில் வையுங்கள்:
சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.
சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.
எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.
பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?
நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா?
Axe
பெண்களின் ஃபேவரைட்?
ஜோவன் வொய்ட் மஸ்க்
மேக்ஸி  ப்ளூ லேடிhttp://in.groups.yahoo.com/group/iruvar_