ஓர் அரிசிக் கடையில் இருவர் பேசியது;
அரிசி கிலோ எவ்வளவு?
பதினைஞ்சு ரூபாய்!
கொஞ்சம் குறைச்சுப் போடக் கூடாதா?
இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க . இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?
சலூனில் இருவர் பேசியது;
மதுக்கும் விஷத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
எனக்கு முதல் சமாசாரம் மட்டும்தான்டா தெரியும்... ரெண்டாவதா சொன்னியே அதப்பத்தி தெரியாதுடா ......
மது குடிச்சா நாம ஆடுவோம் . விஷம் குடிச்சா நம்ம முன்னாடி மத்தவங்க ஆடுவாங்க .....
மாணவர்கள் இருவர் பேசியது;
வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாட்டுக் கேட்ட ஒரு கரப்பான் பூச்சிக்கு என்ன ஆச்சுத் தெரியுமா ?
என்ன ஆச்சு ?
செத்துப் போச்சு......
ஏன் ?
அந்தப் பாட்டுதான் HITஸாங் ஆச்சே!!!
இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொண்டது;
நான் பத்தாண்டு காலமாக எழுதிவந்த புதுக்கவிதைகளை எல்லாம் சேர்த்து தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன்....
பத்துவருஷமா எழுதின கவிதைங்கள்னா அது பழசாத்தானே இருக்கும்? எப்பிடி புதுக்கவிதைங்கிறீங்க?
மனைவியும் கணவனும் பேசிக்கொண்டது;
இந்த மாதிரியே நான் சமைச்சிப் போட்டா எனக்கு என்ன தருவீங்க அத்தான்!
சீக்கிரமா உனக்கு 5 லட்ச ரூபாய் கிடைக்கும் செல்லமே!!!
எப்படி?
என்னோட LIC policy மூலமா தான் செல்லம்!
பள்ளியில் ஆசிரியரும் மாணவனும் பேசியது;
ஓட்டப் பந்தயத்தில் முயல் ஆமையிடம் தோற்றது ஏன்?
'முயலாமை' யினால் தான்!
பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் பேசியது;
பொண்ணு பிடிச்சிருந்தாத் தான் கை நனைப்போம்!
நீங்க பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்ன பிறகுதான் நாங்க டிபனே வைப்போம்!
தாத்தாவும் பேத்தியும் பேசியது;
இங்க ஒருத்தன் 'நாயா' கத்திக்கிட்டு இருக்கேன்! நீ எங்க போன.....
சிரித்துக்கொண்டே , உனக்குத்தான் 'பிஸ்கெட்' வாங்கப் போனேன் தாத்தா.....
ஆசிரியரும் மாணவனும் பேசியது;
ஏன் பரிட்சை பேப்பர்ல 'எருமை'-ங்கிறதுக்கு 'எரு' ன்னு எழுதியிருக்கே?
'மை' தீர்த்து போச்சு சார்!
மனைவியும் கணவனும் பேசியது;
என்னங்க.... டப்பியை அரைமணி நேரமா தடவிட்டு இருக்கீங்க ?
டாக்டர்தான் இந்த டப்பியைக் கொடுத்து தலை வலிக்கிறப்போ தடவுங்கன்னு சொன்னார் .... அதான்.....
இரண்டு சிறுவர்கள் பேசியது;
டி.வி வயலென்ஸைத் தூண்டிவிடுதுடா?
எப்படிச் சொல்றே?
எப்ப டி.வியை ஆன் பண்ணினாலும் எங்க அப்பா என்னை அடி பின்னுறார்.
பொடியனும் பெரியவரும் பேசியது;
இந்த வழியாகப் போகலாமா சார்?
ஏன் தம்பி கேக்குற....?
வாகனங்கள் போகக் கூடாதுன்னு போர்டு போட்டிருக்கு. என் பேரு மயில் வாகனம் ..... அதான் கேட்டேன்....
ஆசிரியரும் மாணவனும் பேசியது;
நான் அஞ்சை விட பெரியவன். ஏழுக்கு இளையவன். இரட்டைப் படையன்னு சம்பந்தமில்லாம எழுதியிருக்கியே?
ஆறு தன் வரலாறு கூறுதல்னு கட்டுரை கேட்டிருந்தீங்களே . அதான் சார் இப்படி எழுதியிருக்கேன் .
மகனும் அப்பாவும் பேசியது;
அப்பா எங்க கணக்கு வாத்தியாருக்கு ஞாபக மறதி ரொம்ப!.....
எப்படிச் சொல்றே?
நேத்து ஐந்தும் ஐந்தும் பத்துன்னு சொன்னார் ....இன்னிக்கு ஆறும் நாலும் பத்துன்னு சொல்றார்....
இரண்டு சிறுவர்கள் பேசியது;
ஏண்டா ....காக்கையை பிடித்துத் தண்ணீரில் மூழ்கடிக்கிறே?
'காக்கை கரையும்' னு புத்தகத்தில போட்டிருக்கே ....அதான்டா....
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net