Saturday, October 30, 2010

இன்றைய தமிழகம் !


இன்றைய தமிழகம் !

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் – "எதற்க்காக இத்தனை கஷ்ட்டப்படுகிறாய்?"

நான் கேட்டேன் – "கஷ்டப் படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?"

அவர் சிரித்தபடி சொன்னார் – "என்னைப் பார்,

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கி விடுவேன்.

போரடித்தால் வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் இராஜமரியாதையுடன் !!"

"உழைக்காமல் எப்படியடா இத்தனையும் முடியும்?"

முதலாமவர் சிரித்தபடி கேட்டார் –

"நான் யார் தெரியுமா??

தமிழ் நாட்டுக் குடிமகன்."

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்

சமைப்பதற்க்கு எரிவாயுவும் அடுப்பும் இலவசம்.

பொழுதுபோக்கிற்கு வண்ணத்தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்

எதற்க்காக உழைக்கவேண்டும் ?"

நான் கேட்டேன் – "உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?"

பலமாக சிரித்தபடி உரைத்தார் -

"மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5,000 இலவசம் சிகிச்சையுடன் ..

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் ..

படிப்பு சீருடையுடன் உணவும்  இலவசம் முட்டையுடன்

பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்..

தேவையென்றால் மிதி வண்டியும் இலவசம்.

பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை ரூபாய் 25,000 இலவசம்

ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் !!"

"தேவையென்றால் மாப்பிள்ளையுடன் செய்தித்தாளில் விளம்பரமும் இலவசம்

மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்

நான் எதற்கு உழைக்க வேண்டும்??"

வியந்து போனேன் நான் !!

என் உயிர் தமிழகமே ! எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்க்கு இரண்டு பொருள் உண்டு

ஒன்று கையூட்டு , மற்றொன்று யாசகம்

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் – இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ஆகும்??

உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய் !!

இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால்,

அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை

தமிழா விழித்திடு -  உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு

நாளைய தமிழகம் நம் கையில்

உடன்பிறப்பே சிந்திப்பாயா?

மனது வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!

–தமிழன்


 ( இணையத்தில் படித்தது )


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விவேகானந்தர்

விவேகானந்தரின் பொன்மொழிகளில் சில:
இந்தியாவில் மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒற்றுமையுடன் செயல்படுவதில்லை.ஒவ்வொருவரும் பட்டம் பதவிகளுக்காகப் போட்டி இடுகிறார்கள்.
**********
பேச்சு...பேச்சு....எப்போதும் பேசிக்கொண்டிருப்பதே வியாதி இதை நன்கு உணர வேண்டும்.
**********
கோழைத்தனத்தை விடப் பெரியதொரு பாவம் வேறெதுவுமில்லை.கோழைகள் என்றுமே காப்பாற்றப் பட மாட்டார்கள்.
**********
வலிமையே வாழ்வு:கோழைத்தனமே மரணம்.வலிமையற்றவர்க்கு இங்கு இடமில்லை.பலவீனம் அடிமைத்தனத்தில் புகுத்தி விடும்.உடலளவிலும் உள்ளத்தளவிலும் வரக் கூடிய எல்லாத் துன்பங்களுக்கும் பலவீனமே காரணம்.
**********
தீயோர்களுக்கு உலகம் நரகமாகத் தெரிகிறது.நல்லோருக்கு சுவர்க்கமாகத் தெரிகிறது.அருளாளருக்கு அருள் வடிவமாகத் தெரிகிறது.பகை உணர்ச்சி உடையவர்களுக்கு வெறுப்பு மயமாகத் தெரிகிறது.சண்டை சச்சரவு இடுபவர்களுக்கு போர்க்களமாகத் தெரிகிறது.அமைதியானவர்களுக்கு அமைதிக் களஞ்சியமாகத் தெரிகிறது.முழுமையுற்ற மனிதனுக்கு தெய்வமாகத் தெரிகிறது.
**********
ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்றா நீ நினைக்கிறாய்?அது தானாகவே கற்றுக் கொள்ளும்.வாய்ப்புகளை உண்டாக்கித் தருவது,இடர்ப்பாடுகளை நீக்குவதுதான் உன் கடமை.
**********
உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
**********
நீங்கள் கற்ற லட்சணம் தான் என்ன?மாற்றான் மொழியில் மற்றவர் கருத்துக்களை மனப்பாடம் செய்து மூளையில் அவற்றைத் திணித்து வைத்துப் பிறகு ஒரு சில பட்டங்களைப் பெற்றதனால் மெத்தப் படித்தவர் என்ற எண்ணம் உங்களுக்கு!இதுவா கல்வி?
**********
தனக்கு எது தேவையோ,அதை இறைவன் தந்தருளவில்லை என்ற காரணத்தினால் உலகம் இறைவனைத்  துறந்து விட்டது.உதாசீனப்  படுத்தியுள்ளது.கடவுளை ஒரு நகராட்சியின் அதிகாரியாகவா நாம் நினைப்பது?
**********

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழந்தைகளை அடிக்கலாமா?

குழந்தைகள் தவறு செய்யும்போது அடிக்கலாமா?அடிக்கலாம் என்பதைவிட தண்டிக்கலாம்.குழந்தைகளைத் தண்டிக்கும்போது  கவனிக்க வேண்டியவை:
**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும்.பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
**தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்.மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
**தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
**தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது,குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
**தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்,அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
**குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும்.நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
**குழந்தை தவறு செய்தால்,தொடர்ந்து தண்டிக்க வேண்டும்.ஒரு முறை தண்டிப்பதும்,மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
**குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தானுருவாகும்.
**குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
**தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிடமன ரீதியான அணுகு முறையே  சிறந்தது.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net