Sunday, September 26, 2010

வசந்தி டீச்சரும் ராத்திரிப் பிசாசும்!!!


வசந்தி பாத்ருமிலிருந்து நெஞ்சு கட்டுடன் கமகமவென்று வெளியே வந்தாள்.

 

 

ஹாலைக் கடந்து ருமுக்குள் நுழையும் முன் கார்த்தி ஓடி வந்தது தானும் ருமுக்குள் நுழையப் பார்த்தது

 

 

"அம்மா டிரஸ் மாத்திட்டு வந்திடறேன் அப்பா கூட இரு" என்று சொல்லிவிட்டு "என்னங்க கார்த்திய பாத்துக்குங்க" 

 

 

ஹாலில் குப்புறப்படுத்து இருந்தவன் தலையை மட்டும் திருப்பி கண்ணடித்தான்.

 

 

ஹ்ம் அவன் அவசரம் அவனுக்கு.!!

 

 

டீச்சர் வேலை ரொம்ப ஈஸினு யாரு சொன்னது?  ஒரு வகுப்பில் நாற்பது பேர் என்றால் நாற்பது பேருடனும் மல்லடிக்க வேண்டும். அறிவாளிப்பையன் கேட்கிற கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் மக்குப் பையனுக்கு புரிய வைப்பதற்குள் தாவு தீரந்துவிடும். தூங்கும் பையனை சாக்பீஸ் எறிநது எழுப்ப வேண்டும் பாத்ருமில் எவனும் கிறுக்கிவிடாத அளவுக்கு சிநேகமாக பழக வேண்டும். முதுகுக்குப்பின்னால் சிரிக்கும் மாணவிகளை உணர வேண்டும்..

 

 

காலையில் அவசர வேலைகளை அவதியாய் செய்துவிட்டு விழுந்தடித்து ஓட வேண்டும். பள்ளி முடிந்து ஓடிவந்து குடும்பத்தை தாங்க வேண்டும். சனி ஞாயிறு ஆசுவாசம். கார்த்தியின் விஷமங்களுக்கு ஈடு கொடுத்து ஓடிவிடும்.

 

 

கொஞ்சநாள் டியுசன் எடுத்தாள். வீட்டுவேலை - பள்ளி- கார்த்தி என்று வட்டமடிக்கவே நேரம் சரியாக இருந்தது. விட்டுவிட்டாள்.

 

 

இப்பவும் வேலைகள் தீர 9 மணி ஆகிவிட்டது. உடம்பு முழுக்க அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. கார்த்தி தூங்கிவிட்டாலும் நாகராஜன் தூங்கவிடமாட்டான். காலையில் கண் எரிய எரியத்தான் வேறு வழியின்றி எழுந்திருக்க வேண்டும்.

 

 

கதவைச் சாத்திவிட்டு நைட்டிக்கு மாறினாள்.  ஆளுயரக் கண்ணாடியில் திரும்ப நின்று ரசித்தாள். கொஞ்சம் சதை போட்டிருப்பது மாதிரி தெரிந்தது.  பாதகமில்லை. கொஞ்சமாய் பாடி ஸ்பிரே பீய்ச்சிக் கொண்டு வெளியே வந்தாள்.

 

 

ஹாலில் படுப்பது தான் வழக்கம். பழைய மாடல் ஓட்டு வீடு. ஹால் பக்கத்தில் முற்றம். காற்று அள்ளும் சுகமான துக்கம

 

 

விரித்திருந்த பாயில் தலையணையை சரிசெய்துவிட்டு படுத்துக் கொண்டாள்.

 

 

ஆசுவாசமாக இருந்தது.

 

 

கார்த்தி ஓடி வந்தது.

 

 

"அம்மா.. உச்சா வருது'"

 

 

"ச்சீ போடா" என்றாள் வெறுப்பாக.. "எப்ப படுப்பேனு பார்த்திட்டுருந்தியா"

 

 

கார்த்தி மலங்க மலங்க முழித்தது பாவமாக இருந்தது

 

 

"அம்மாக்கு கால் எல்லாம் வலிக்குதுடா.. அம்மா பாத்துட்டே இருபபேனாம். முத்தத்தில போய் நீ பேஞ்சிட்டு வருவியாம் சரியா?"

 

 

"பயம்மா இருக்குதுமா"

 

 

"என்ன பயம் அம்மா இருக்கேன்ல. என் செல்லம் இல்லே? போம்மா ப்ளீஸ்"

 

 

டவுசர் கழட்டிவிட்டாள்.

 

 

முற்ற்ம உண்மையிலேயே இருட்டாக இருந்தது. கார்த்தி அங்க போய் நின்று கொண்டு திரும்ப திரும்ப பார்த்தது.

 

 

"என்னாச்சு பேஞ்சுட்டு வா"

 

 

கார்த்தி முகம் அஷ்ட கோணலாக மாறியது.

 

 

அழுக போகிறானா?

 

 

"பேய்டா"

 

 

"என்னாது"

 

 

"பேயீ"

 

 

மாடு துரத்திய மாதிரி ஓடி வந்தான்.

 

 

அடடே. பிள்ளை பய்ந்துவிட்டது. பதற்றத்துடன் எழுவதற்குள் -

 

 

லாங் ஜம்பில் வசந்தியின் நெஞ்சில் வந்து விழுந்தான்

 

 

"எப்டி வந்து விழுது பார் அப்பன் கணக்கா"  என்று கத்தினாள்.

 

 

வலித்தது.

 

 

குழந்தை கழுத்தை கட்டிக் கொண்டது.

 

 

"ஏண்டா இப்படி வந்து விழறே"

 

 

"அங்கே பேய் இருக்கு"

 

 

"எங்கடா இருக்கு?"

 

 

"அங்கதான் இருட்டுல"

 

 

"பேயும் இல்ல. பிசாசும் இல்ல"

 

 

"நீ தான சொன்ன. பேயிடா பேயிடான்னு"

 





--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net