Tuesday, April 5, 2011

கிராம்புவின் ( இலவங்கம் ) மருத்துவ குணங்கள்

அன்றாட உணவில் நாம்சேர்க்கும் பொருட்கள் அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. நோய் வரும்முன் காத்து நீண்ட ஆயுளுடன் வாழ இவையும் பக்கபலமாக உதவிவருகின்றன.ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், கருவாப்பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும்.

*

இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.

*

கிராம்பு இந்தோனேசியாவில் 80 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

*

இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

*

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.

*

இந்திய சமையலில் கிராம்பு அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. பிரியாணி உணவில் அதிகம் சேர்க்கிறார்கள். சீன வகை உணவிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.

***

கிராம்பில் உள்ள சத்துக்கள்:


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

*

கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது.

*

இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.

***

மருத்துவ குணங்கள்:1. பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.


2. வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.


3. உணவில் ஏற்படும் அஃபலாக்சின்(en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (en:Eugenol Eugenol) அழிக்கும்.

4. antioxident,இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.


5. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.


6. உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.


7. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.


8. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.


9. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.


10. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.


11. முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.


12. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.


13. 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.


14. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.


15. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.


16. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.


17. சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம்.


18. வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.


19. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.


20. உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.


21. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.


22. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.


23. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

***

மேலும் சில துளிகள்:
1. பசியைத் தூண்ட

சிலருக்கு குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் செரிமானமாகாமல் இருப்பதுபோல் தோன்றும். இவர்களுக்கு பசியே இருக்காது. இவர்கள் தினமும் உணவில் கிராம்பு சேர்த்துவந்தால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும்.

*

2. பித்தம் குறைய

வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தால் தான் மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் அதிகம் நிலைமாறுவது பித்த நீர்தான். பித்த அதிகரிப்பு ஏற்பட்டு உடலில் பல நோய்கள் உண்டாகும். இந்நிலை மாற கிராம்பு சிறந்த மருந்தாகும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.


*

3. வாந்தி நிற்க

பேருந்துகளில் பயணம் செய்பவர்களக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.

*

4. வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

*

5. வறட்டு இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.v சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம். சிறுநீரகம், மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிரம்பையே அதிகம் பயன் படுத்துகின்றனர்.

*


6. தலைபாரம் நீங்க

கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும்

*

7. தொண்டைப்புண் ஆற

கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டைப்புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும்.


கிராம்பு, நிலவேம்பு இவற்றை சம அளவாக எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் உடல் அசதி நீங்கும். சுரத்திற்குப் பின் உண்டாகும் களைப்பைப் போக்கும்.

கிராம்பு, சுக்கு வகைக்கு 5 கிராம் எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு வகைக்கு 6 கிராம் எடுத்து சூரணம் செய்து தேனுடன் கலந்து கொடுத்தால் உணவு நன்றாக செரிமானமாகும்.

*

8. தோலில் உண்டாகும் படைகளுக்கு

கிராம்பை நீர்விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் தோலில் உண்டான படைகள் மறைந்துபோகும்.

**

9. கிராம்புத் தைலம்

கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.

*

10. ஆஸ்துமாவை நீக்கும் கிராம்பு:

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.


* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.


* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.


11. பல்வலி நீங்க

பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை உபயோகப்படுத்துவார்கள். இது தொடர்ந்தால் பல பக்க விளைவுகள் உண்டாகும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.

கிராம்பை நசுக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி உடனே குணமாகும். ஆனால் இது நிரந்தர தீர்வல்ல. உடனே மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் செய்துகொள்வது நல்லது.


பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.

***
நன்றி விக்கிபீடியா
நன்றி நக்கீரன்
***"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நமக்கு எப்போது வயது முதுர்ச்சி துவங்குகிறது ?

மனித வாழ்வில் வயது நிலையானது இல்லை. மனித உடலின் அடிப்படை அலகு செல் ஆகும். பல ஆயிரம் செல்களின் தொகுப்பே திசுக்களாகும். ஒரேவகையான செல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட உறுப்புகளை தோற்றுவிக்கும்.திசுகள் குறிப்பிட்ட காலத்தில் அழிவதும் தோன்றுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வாகும். வயது முதிர்ச்சி வரவர புதிய திசுக்கள் தோன்றுவது குறைவாக நடைபெறுகிறது.

*

உடல் திறன், நல் உணவு, உழைப்பு,சுற்றுச்சூழலின் தாக்கம் இந்நடவடிகையில் பெறும் பங்குவகிக்கிறது.

*

வயது முதிர்ச்சி தவிர்க்க முடியாதபடி படிப்படியாக நடைபெறுகிறது. மொத்த உடல் செயலியக்கத்தில் 30வயதுக்கு மேலிறுந்தே மெல்லமெல்லமாக,கீழிறங்குமுகமாக செயல்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.

***

தசைகள் (30வயதிலிருந்து முதிர்ச்சி துவங்குகிறது )


1. தசை செல்களின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.

2. இதை தசைத்தன்மை இழப்பு(Sarcopenia) தன்மை 30 வயதிலிருந்தே துவங்குகிறது.

3. வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolic Rate) குறைந்து கொண்டே வருகிறது.

4. விளைவு உடல் சக்தி,கலோரியின் தேவை குறைவாகிறது. உடலில் எரிகப்படாத கொழுப்பு சக்தியின் அளவு கூடுகிறது.

5. இந்த உடல் இயக்க போக்கைத்தடுக்க/குறைக்க தொடர்சியான உடல்பயிற்சி நல்ல கைக்கொடுக்கும்.


***

மூளை (30 வயதிலிருந்து)


1. மூளைச்செல்லின் அடிப்படை அலகு நியுரான் ஆகும். மூளைச்சுறுக்கமே அதனை சுருங்கச்செய்து சிறியதாக்குகிறது.

2. குறிப்பிட்ட பகுதிகளில் நியுரான் செல்கள் குறைந்து அல்லது இரத்த ஓட்டம் மூளைக்கு செல்வது குறைய ஆரம்பிகிறது. பெரும்பாலானோர் அவர்களுடைய மதிநுட்பத்திறனில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வார்கள்.

3. நீண்ட நேரம் யோசிப்பது, கணக்கு போடும் திறனில் காலம் அதிகமாகுவது.

4. ஆனால் பெண்களுக்கு ஆண்களைவிட மூளைச்செயல் பாட்டில் காலம் கடந்தே ஆரம்பிகிறது.

5. காரணம் அவர்களுக்குள்ளே சுறக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆர்மோன் காரணமாகிறது.


***

கண்கள் (40 வயதிலிருந்து)


1. கண்ணிலுள்ள லென்சின் தன்மையில் மீள்நீட்சித்தன்மை குறைந்து தடிமனாகிறது. அதனால் பார்வையின் குவியும் தன்மை மாறுபடுகிறது.

2. குறைந்த வெளிச்சம் மற்றும் மஞ்சல் நிற ஒளியில் பார்க்கும் தன்மை கடினமாகிறது.

3. இதனால் கண்மணியின் ஒளியின் தன்மைக் கேற்ப மாறும் தன்மை மெதுவாகவே செயல்படுகிறது.

4. நரம்பு செல்களின் குறைவால் உற்று கவனிக்ககூடிய தோற்றம் பலவீனமடைகிறது.

5. கண்களில் லென்ஸ் திரவம், ஈரம் உலர்ந்து விடுவதால் கண்களில் வரட்சி பார்வையில் ஏற்படுகிறது.


***


காது (50 வயதுக்கிடையில்)


காது கேட்புத்திறனில் குறைகிறது. குழந்தை மற்றும் பெண்களின் குரல்களை கேட்புத்திறன் குறைவதை உணரலாம்.


***

இருதயம் (40 வயது முதல்)


1. பெருந்தமனித் தடிப்பு (Atherosclerosis) , இந்நிலை இருதயம் மற்றும் தமணி சுறுங்கி விரியும் தன்மை மெல்ல மெல்ல இழக்கிறது.

2. இதனால் இருதயம் இரத்தத்தை தள்ளும் செயலை கடினமாக செய்கிறது.

3. உறுப்புகளுக்கு இரத்தம் செல்லும் நிலை மெதுவாகவே நடைபெறுகிறது.

***


முடி (30வயது முதல்)


1. முடி வளைர்நிலை மெல்ல குறைகிறது. முடியின் மெல்லிய தன்மையாகி சுருங்கி ஒவ்வொரு முடியும் மாறுகிறது .

2. முடி உதிர்ந்து வழுக்கையாகிறது.

3. முடியில் உள்ள நிறமிகள் தன் நிறமியின் தன்மையை இழந்து வெள்ளை மற்றும் பழுப்பு நிறமாகிறது.


***


தோல் (25வயது முதல்)

1. வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது.

2. நெகிழ்வு தன்மை, சுருங்கு தன்மை மெல்ல இழந்து சுருக்கம் தோன்றுகிறது.

3. சூரிய ஒளிபட தன் நிறத்தை மெல்ல இழகிறது.

4. இந்நிலையை குறைக்க நார்சத்து உள்ள உணவு சாப்பிடுதல், பிரனாயமா யோகா செய்வதின் மூலம் தடுக்கலாம்.


5. ( இதை படித்துவிட்டு நான் இளமையாகத்தான் இருகிறேன் என்றால் நான் பொறுப்பள்ள. உங்கள் நம்பிக்கைக்கு நான் குறுக்கே நிற்கப்போவதில்லை )

**

இக்கட்டுரை அடிப்படை ஆதாரம் சென்னை, டிகான் கிரானிகல் 08.03.2009 நாளிட்ட ஆங்கில நாளிதழில் டாக்டர் வி. ரவிந்தர நாத் ரெட்டி, அமெரிக அக்கடாமியின் வயது மூப்பு மருத்தவப் பிரிவு அவர்கள் எழுதியது )

***

நன்றி தோழமை

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நொறுக்கு தீனி நமது உடலுக்கு நல்லதா? அல்லது... நமக்கு கேடா?

பொதுவாகவே எம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அதாவது தினமும் முறையே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய காலை,மதிய,இரவு உணவை உண்பதை தவிர்ப்பது அல்லது நேரம் தவறி சாப்பிடுவது.
ஆனால் நொறுக்கு தீனி என்றால் குளிர்சாதனப்பெட்டியில் அது இருந்த சுவடே இல்லாமல் ஆகும் வரை தொடர்ந்து சாப்பிடுவது.

*

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவை உடலுக்கு நல்லதல்ல என்பது எமக்கு தெரிந்தும் உண்பது தான்.

*

அப்படி எம்மை மயக்கிய சில தீனிகளில் பின்வருவன அடங்கும்:

சொக்கிளட்
குளிர்களி (ஐஸ்கிரீம்)
பொரித்தவை (சிப்ஸ்)
மைக்ரோவேவில் வைத்த சோளம் (பொப் கோர்ன்)
டோனட்ஸ்
பேஸ்ற்றீஸ்
பிஸ்கட்ஸ்
இனிப்புகள்
நெய்யில் செய்த பண்டங்கள்


இவை அனைத்தும் நிச்சயம் தவிர்க்க/குறைக்க பட வேண்டியவை.

*

ஆனால் இவை இல்லாமல் வாழ்வதென்பது இலகுவான செயல் இல்லவே இல்லை. ஆனால் இதற்கு மாற்றீடாக சில பண்டங்களை நாம் உண்ணலம்.

*

ருசிக்கு ருசியும் ஆச்சு, நம்ம ஆரோக்கியத்தை கெடுக்காமல் இருந்த போலும் ஆச்சு.

***

நாம் பயப்படாமல் உண்ணக்கூடிய சில உணவுகள்:உப்பு சேர்க்காத நட்ஸ்
கொழுப்பு குறைந்த யோகர்ட்
கரட்/கியூகும்பர்/செலரி போன்றவை hummus dip உடன்
வீட்டில் செய்த கொழுப்பு குறைந்த muffins
பழங்கள்
கொழுப்பு குறைந்த சீஸ் + அரிசி பிஸ்கட்

*

இதெல்லாம் வேண்டாம்..நான் முதல் லிஸ்டில் உள்ளவற்றை தான் உண்பேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்??

*
May God Bless You...


***
by ♥ தூயா
நன்றி தூயாவின்ட சமையல் கட்டு
***


"வாழ்க வளமுடன்"
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நம் மூளையில் இருக்கும் சாம்பல்

மூளை‌யி‌ல் மசாலா இரு‌க்‌கிறதா? உ‌ள் மூளை எ‌ன்ன க‌ளிம‌ண்ணா எ‌ன்று கே‌ட்பதை வழ‌க்கமாக‌க் கொ‌ண்டு‌ள்ளோ‌ம் நா‌ம்.ஆனா‌‌ல் உ‌ண்ம‌ை‌யி‌ல் ந‌ம் மூளை‌யி‌ல் இரு‌ப்பது சா‌ம்ப‌ல்தானா‌ம்.எ‌ன்ன சா‌ம்பலா எ‌ன்று ‌விய‌க்கா‌தீ‌ர்க‌ள்.

*

1.5 ‌கிலோ ‌கிரா‌ம் எடையு‌ள்ள ந‌ம் மூளை‌யி‌ல் ‌சா‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டு‌க்க‌ள் ‌நிறைய இரு‌க்‌கி‌ன்றன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

*

மூளை‌யி‌ல் உ‌ள்ள நர‌ம்பு செ‌ல்க‌ள் அனை‌த்து‌ம் சா‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டு‌க்களாக‌த்தா‌ன் ‌திர‌ண்டு இரு‌க்‌கி‌ன்றன. இவ‌ற்‌றி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஏற‌க்குறைய ப‌த்தா‌யிர‌ம் கோடியாகு‌ம். இவை அனை‌த்து‌ம் சா‌‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டுக‌ளாக‌த்தா‌ன் காண‌ப்படு‌கி‌ன்றன.

*

நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும்.


*

அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் பெ‌ரிய பெ‌ரிய அ‌றிஞ‌ர்களாகவு‌ம், ‌வி‌ஞ்ஞா‌னிகளாகவு‌ம், படி‌ப்பா‌ளிகளாவு‌ம் உலக‌ப் புக‌ழ்பெரு‌கி‌ன்றன‌ர்.


***
நன்றி வெதுப்னியா.
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தூக்கமின்மையால் ஏற்ப்படும் கோளாருகள்

ஒரு நாள் இரவு சரியாகத் தூங்கவில்லையென்றாலே மறுநாள் முழுவதும் உடல் அசதி நம்மை எந்த ஒரு பணியையும் நன்றாகச் செய்ய அனுமதிக்காது.ஆனால் தொடர்ந்து பல இரவுகள் அல்லது விட்டுவிட்டு இரவுத் தூக்கத்தை, பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது பிரச்சனை காரணமாகவோ, தவிர்ப்பவர்களுக்கு பல உடல் சிக்கல்கள் ஏற்படும் என்று மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது.

*

இரவில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தடையற்ற, ஆழ்ந்த உறக்கமே நல்ல உடல் நிலையை உறுதி செய்யக் கூடியது என்று கூறும் அவர்கள், தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுகளையும் பட்டியலிடுகின்றனர்.

*

இரவு சாப்பிட்ட உணவுச் செரியாமை, குறட்டை விடும் நிலை உருவாதல், கால்களுக்கு ஓய்வின்மையால் மறுநாள் நிலவும் உடல் அசதி, பகல் நேரத்தில் உறக்கம் தோய்ந்த முகம், கோவப்படுதல், நினைவு சக்தி குறைதல் ஆகியன மட்டுமின்றி, மன நலத்தையும் பாதிக்கக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள்.

*

அதுவும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

*

8 மணி நேர ஆழந்த உறக்கம் வெற்றிக்கான முக்கியத் தேவை, ஏனெனில் அதுவே நமது உடல், மனத் திறமைகளை அதிகரிக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கூறுகின்றனர்.

***

தூங்குவது எப்படி?இரவில் நல்ல தூக்கம் அவசியம் என்பதை மருத்துவம் மட்டுமல்ல, ஆன்மீகமும் வலியுறுத்துகிறது. இரவு உணவுப் பிறகு உடனடியாக படுக்கைக்குச் செல்லாமல், வீட்டின் முற்றத்திலோ அல்லது (ஆபத்தற்ற) தெருவிலோ சிறிது நேரம் உலவி விட்டு பிறகு வந்து படுத்துறங்க வேண்டும் என்று ஆன்மீக வழிகாட்டிகள் கூறுகின்றனர்.

*

தூங்குவதற்கு முன் நம் மனதில் தோன்றும் சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல், ‘இதற்கு மேல் என் உடலின் ஓய்விற்கான நேரம் இது’ என்று கூறிவிட்டு, மனதை அமைதிப்படுத்திவிட்டு படுக்கையில் சாய வேண்டும் என்கிறார் அன்னை ( ஸ்ரீ அரவிந்தர் ).

*

ஸ்ரீ அரவிந்தரோடு ஆன்மீக முயற்சி மேற்கொண்ட அன்னை, இரண்டு கால்களையும் நன்கு நீட்டிக்கொண்டு, மல்லாந்து படுத்து, சிறிது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தியப் பிறகு கண்ணயர வேண்டும் என்றும், இதனை பழக்கப்படுத்தினால் அதுவே நல்லுறக்கத்தை தருமென்றும் கூறுகிறார்.

*

சித்த வைத்திய நிபுணர்கள், இரவு உணவிற்குப் பிறகு குறைந்து இரண்டு மைல் தூரமாவது நடந்துவிட்டு வந்து படுத்தால் உடல் நலம் கூடும் என்று கூறுகின்றனர். மதிய நேரத்தில் 15 முதல் 30 நிமிடம் வரை தூங்குவதை நல்லது என்று கூறும் சித்த வைத்தியர்கள், ஒரு நாள் இரவு முழுமையாக கண் விழித்தாலோ அல்லது பணியில் ஈடுபட்டாலோ அதனால் உடலில் ஏற்படும் பாதிப்பு சரியாவதற்கு 6 மாதங்கள் ஆகும் என்று கூறுகின்றனர். எனவே இரவு தூக்கத்தை தவிர்ப்பது உடல் நலத்தின் மீது நாம் காட்டும் அக்கறையாகும்.

*

குறிப்பாக வீட்டில் இருக்கும்போது இரவு நேரத்தில் கணினிப் பணிகளை செய்வதோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதோ உடலிற்கும் மனதிற்கும் பெரும் தீங்கிழைக்கக் கூடியது என்கின்றனர்.

*

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... போன்ற இனிமையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவதும் நன்றே.

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உடல் நலக் குறிப்புகள் ( TIPES )


சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கு வழிகள்?

கொழுப்பு கொலஸ்டிரால், வித விதமான எண்ணெய்ப் பொறியல் முதலியவற்றை அதிகம் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் எளிதில் சேரும். மேலும் தினமும் பத்து டம்ளர் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவரான சூசன் லார்க் அல்லோபதி மருத்துவம் பார்ப்பவர்.

*
இவரோ இந்திய மூலிகை மருந்துகளையே சிறுநீரகக் கற்களுக்குச் சக்தி வாய்ந்த மருந்துகள் எனக் கண்டுபிடித்துள்ளார். இவற்றுள் மஞ்சள், டான்டெலின் (மலர்ச்செடி), ஆர்ட்டி சோக் (முள்ளினச்செடி) என இவை மூன்றும் முக்கியம் என்கிறார். இவை கூட்டு மாத்திரைகளாக விற்கப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘ஈ’ அகிய மாத்திரைகளை அதிக டோஸ் கொடுத்துக் குணப்படுத்துகிறார்.

*
உங்கள் உணவில் 50% ஆவது பழங்களும் காய்கறிகளும் இடம் பெற்றால் சிறுநீரகக் கற்கள் உருவாகாது என்கிறார் இவர்.

***

கண்ணாடி அணிவதைத் தடுக்க முடியும்!

முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி (இஞ்சி), இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இரண்டு பொடிகளையும் மூலிகை மருந்துக் கடைகளில் பெறலாம்.

*
தினமும் காலையும் மாலையும் ஒரு தேக்கரண்டி இந்தப் பொடியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் அருந்தி வரவும். இல்லையெனில் இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்தோ சேர்க்காமலோ அருந்தலாம்.

*

இது ஓர் உடல்நலம் காக்கும் அரிய பானம். குறிப்பாக, கண்ணாடி அணிந்திருப்பவர்கள் இந்த ஆரோக்கியப் பானத்தை அருந்தி வருவது நல்லது. இத்துடன் தினமும் கேரட்டுகள் இரண்டு முறை, பாசிப்பருப்புப் பாயசம் ஒரு முறையும் அருந்தி வரவேண்டும்.

*

பச்சைப்பட்டாணியோ அல்லது கொண்டைக் கடலையோ தினமும் உணவில் சேரவேண்டும். ஆரோக்கிய பானம், கேரட் சாறு, பருப்பு கொண்டைக்கடலை மூலம் செரிமான சக்தி உடலில் மிகச் சரியாக நடைபெறுகின்றது.

*

அப்போது இந்த உணவுகளின் மூலம் அதிகம் சேரும் வைட்டமின் ‘சி’யும், வைட்டமின் ‘ஏ’யும் உடலில் நன்கு கிரகிக்கப்படுவதால் மைனஸ் 3 முதல் 4 வரை லென்ஸ் அணிந்துள்ள கண்ணாடிக் காரர்கள் சில மாதங்களிலேயே கண்ணாடி இன்றி எளிதில் படிக்கலாம்.

*

கண்களில் அக்கு பிரஷர் சிகிச்சை செய்யும் முறையைக் கற்றுக்கொண்டால் எளிதில் படிக்கலாம். பார்வைத்திறன் மேலும் நன்கு அதிகரிக்கும்.

***

தங்கப்பானம் அருந்துங்கள்!

தங்கத்தாது உடலுக்கு நல்லது. 15 முதல் 30 கிராம் எடையுள்ள வளையல்கள், சங்கிலிகள் அழுக்கு, எண்ணெய்ப்பசை இல்லாமல் நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
*
தங்கத்தின் எடை குறைந்தது 15 கிராம் இருக்க வேண்டும். இந்தத் தங்கத்தை நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வையுங்கள். மூன்று டம்ளராக குறைந்ததும் எடுத்து தர்மாஸ் ஃப்ளாஸ்க்கில் உற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
*
காலையில் இந்தத் தங்கப்பானத்தை ஒரு டம்ளர் அருந்துங்கள். மூச்சுக்குழல், நுரையீரல்கள், இதயம், மூளை முதலியவற்றிற்குச் சிறந்த டானிக் இது. இரத்தக் கொதிப்பு மூட்டுவலி, புற்றுநோய், இதய அடைப்பு முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.
*
தங்கத்தாது சேர்ந்த இந்தத் தண்ணீர் ஆறினாலும் 1/2 டம்ளர் வீதம் ஆறுநாட்கள் வரையில் இந்தத் தண்ணீரை அருந்தலாம். பிறகு மறுபடியும் தயாரித்துக் கொள்ளலாம்.
*
மன அழுத்தம், தோல்நோய், போலியோ, மூட்டுவலி, முதலியவற்றிற்கு 60 கிராம் செம்புத்தகடை நன்கு சுத்தம் செய்து இதே போல் 4 டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து மூன்று டம்ளராக வற்றியவுடன் எடுத்து வைத்து அருந்தி வரவேண்டும். நரம்பு மண்டலத்திற்கான சத்துநீர் இது.
*
இந்த முறைகளைக் கண்டுபிடித்த மும்பை டாக்டர் தேவேந்திர டோரா ஜீரண உறுப்புகளையும் சிறுநீரகத்தையும் பலப்படுத்த முப்பது கிராம் வெள்ளித்தகடு ஆபரணத்தை இதே முறையில் வெந்நீரில் கொதிக்க வைத்து அருந்தச் சொல்கிறார்.
*
இந்த மூன்று தாது உப்புக்கள் சேர்ந்த இந்தத் தண்ணீர் குறிப்பிட்ட உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு பலப்படுத்திவிடும். இதனால் நோய் குணமாகி உறுப்புகளும் பலமாகி விடும்.
*
ஒருவருக்கு ஒரு பானமே போதும். ஆரோக்கியமாக உள்ளவர்களும், பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களும், எழுத்தாளர்களுக்கும் தங்கத்தாதுவில் பலப்படுத்தப்பட்ட தங்க நீர் மிகவும் நல்லது.

***

சிகரெட்டை விட எளிய வழி!

டெக்ஸர்ஸ் புற்று நோய் மருத்துவ மையம் சிகரெட் பழக்கத்தைவிட ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளது. அது என்ன?
*
நீங்கள் உண்மையிலேயே சிகரெட் பிடிப்பதை நிறுத்த விரும்பினால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முதலில் மேற்கொள்ளவும். இடையில் அந்த நினைவு வந்தால் உடனே 12 மணிக்கு குடிக்கலாம் என்று சற்று உரத்துச் சொல்லுங்கள்.
*
இந்த இடைவெளிப்படி புகைத்தால் நான்கு வாரங்களில் சிகரெட் எண்ணிக்கை குறையும். தினமும் 3, 4 சிகரெட் மட்டுமே பிடிப்பவர்கள் காலையில் அல்லது மாலையில் என்று ஒரே ஒரு சிகரெட் மட்டும் புகைத்து வந்தால் போதும்.
*
இவர்களும் விரைவில் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்பதால் இந்த வழியில் புகைக்கு விடை கொடுக்கலாம்.

***

சாப்பாட்டைக் குறைக்க எளிய வழி!

ரெஃப்ரிஜிரேட்டரின் வெளியேயும், உள்ளேயும் நீலநிறம் இருக்க வேண்டும். நீலநிற விளக்கு ரெஃப்ரிஜிரேட்டரின் உள்ளே எரிந்தால் இயற்கையான உணவுப் பொருட்கள் நீல ஒளியில் பார்க்கும் போது பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும்.
*
சாப்பிடும் தட்டு சிறியதாகவும் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது சிவப்புநிற உடையை சீருடையாக அணிந்துவந்தால் சாப்பிடும் எண்ணம் குறைந்து, உடல் பருமனும் குறைய ஆரம்பிக்கும்.
*
சாப்பாட்டுக்கு முன்பு எலுமிச்சை அல்லது தக்காளி சாறு சாப்பிடுவது பசியை மட்டுப்படுத்தும், வண்ணங்கள், எண்ணங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களால் உணவு சாப்பிடுவது எந்த விதமான விருப்பு வெறுப்பின்றியும் குறையும்.

***

திறமை பெருக ஓர் எளிய வழி!

பள்ளி, கல்லூரி மாணவர்களில் மிகவும் திறமைசாலியாக உருவாக சூயிங் கம் சாப்பிட்டபடியே ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கேட்டால் போதுமாம்.
*
ஜெர்மனியில் எர்லான் ஜென் பல்கலைக்கழகத்தின் அறிவுத்திறம் பற்றிய ஆய்வாளர் சைக்ஃப்ரைட் லெஹரல் என்பவர், சூயிங்கம் சாப்பிட்டபடியே விரிவுரை கேட்ட மாணவர்கள் மற்ற மாணவர்களைவிட 40% கூடுதலாக தகவல்களைப் பெற்றிருந்தனர் என்கிறார்.
*
காரணம், சூயிங் கம் சாப்பிடும்போது மூளை தொடர்ச்சியாக ஆக்ஸிஜனைப் பெற்றுக்கொண்டே இருப்பதுதான் என்கிறார். இப்பழக்கத்தினால் முன்பைவிடத் திறமைசாலியாக ஒருவர் உருவாகிவிடுவாராம்.
*
வேலைபார்ப்பவர்களும், தொழில் செய்பவர்களும், கலைஞர்களும் இந்த சூயிங் கம் முறையை வேலை செய்யும்போது பின் பற்றலாம் என்கிறார் இந்த ஜெர்மனியர்.

***

குளிர்காலத்தில் சரியான உணவைப் பெற ஓர் எளிய வழி!

மிகவும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மண்ணீரலும் வயிறும் சரியாகக் செயல்பட்டாலும் ஏதேனும் பிரச்னையைக் கொண்டு வந்துவிடும்
*
இந்த நிலையில் குளிர்காலத்தில் சோளம், தினைமாவு, எள், இஞ்சி, பனைவெல்லம் முதலியவற்றை நன்கு சேர்த்து வந்தால் மண்ணீரலும் வயிற்று உறுப்புகளும் நன்கு பலப்பட்டுச் செயல்படும்.
*
குளிர்காலத்தில் அளவோடு சாப்பிடப்படும் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் முதலியவற்றால் இந்த உறுப்புகள் பழுதுபடாமல் இருக்கும். இது ஆயுர்வேதம் தரும் குறிப்பு.

***

ஜாக்கிங் மூலம் நல்ல உடல் நலன் பெற ஓர் எளிய வழி!

முதலில் 55 கஜதூரத்தை மட்டும் 4 தடவை மெல்லோட்டம் மூலம் நடங்கள். பிறகு இதே தூரத்தை 4 முறை சாதாரண நடை நடக்கவிடுங்கள். இந்த முறையில் மாற்றம் செய்யாமல் ஆறுவாரம் நடக்கவும்.
*
பிறகு 110 கஜ தூரத்தை 45 விநாடிகளில் மெல்லோட்டம் செய்து கடக்கவும். இதை ஒருவாரப் பயிற்சிக்குப் பிறகு 110 கஜ தூரத்தை 30 விநாடிகளில் கடக்கவும். கூடுதலாகவோ குறைவாகவோ செய்ய வேண்டாம்.
*
நம் கால்பாதங்களில் முக்கியமான 52 வகையான நரம்புகள் வந்து முடிகின்றன. இவை மெல்லோட்டம் செய்ய நன்கு தயார் ஆகும். இதற்குப் பிறகு ஒரு ஆறுமாதத்திற்கு ஒரு மைல் தூரத்தை ஒன்பது நிமிடங்களில் கடக்கும்படி மெல்லோட்டம் செய்யுங்கள்.
*
பிறகு வாழ்நாள் முழுவதும் ஒன்பது நிமிடங்கள் மட்டும் மெல்லோட்டம் செய்து வந்தால் போதும். அக்குபிரஷர் சிகிச்சைபோல 52 வகையான நரம்புகளும் உடலை முழுப் பாதுகாப்பில் வைத்திருக்கும். டெக்கான் ஹெரால்டு தரும் தகவல் இது.

***

நன்கு தூங்க இரவில் குறைவான உணவு நல்லதா?

தினசரி இரவில் 8 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாம். 7,000 பேர்களை 10 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரிய வந்தது.
*
பகல் நேரத்தில் சோம்பலால் வரும் தூக்கம் இந்த எட்டுமணி நேரக்கணக்கில் சேராது. 4 வயதுக்கு மேற்பட்டவர்களின் இரவு நேரத் தூக்கம் 8 மணி நேரத்திற்குள் இருக்கட்டும்.

***

கொழுப்பைத் தவிர்க்கலாமா?

நாம் பிறக்கும் போது நமது மூளை 60% கொழுப்பாக இருக்கும். அதுவும் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தால் ஆனதாக இருக்கும். இது இருந்தால்தான் நமது மூளை ஞாபக சக்தியுடன் திகழும். மன அழுத்தம் ஏற்படாது.
*
குறிப்பாக, எல்லா நிகழ்ச்சிகளும் மறந்து போகும் வியாதியான அல்ஜிமெர்ஸ் என்பது வராது. உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு இது. ஆனால், மீன், முட்டை முதலியவற்றிலிருந்து கிடைக்கும் நல்ல கொழுப்பு மூளைக்கும், இதயத்திற்கும் நன்மையையே செய்கின்றன.
*
சைவ உணவுக்காரர்கள் முருங்கைக் கீரை, பச்சைப்பட்டாணி, வல்லாரைக்கீரை, வள்ளிக்கிழங்கு முதலியவற்றின் மூலம் இதே அளவு ஞாபக சக்தியையும் மூளைத் திறனையும் பெறலாம். மன அழுத்தத்தை காரட் ஒன்றே குணப்படுத்திவிடும். தேவையான மன உறுதியையும், சிந்திக்கும் திறனையும் பாதாம் பருப்பு தந்துவிடும்.

***

சர்க்கரையைக் குறைக்கும் சாறு!

காரட் சாறுடன் பசலைக்கீரைச் சாறும் சேர்ந்து அருந்தி வந்தால் நீரிழிவு நோயாளிகள் சிரமமின்றி வாழலாம். காரட்டில் தோல் மற்றும் கண்களுக்கும் நலம் செய்யும் வைட்டமின் ‘ஏ’ இருக்கிறது.
*
மேலும் காரட்டில் உள்ள கால்சியம் இரத்தத்தைச் சுத்தப்படுத்திவிட வல்லது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ‘பி’ குரூப் வைட்டமின்களும் காரட்டில் அதிகமாக இருக்கிறது.
*
இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பசலைக்கீரையில் அதிக அளவில் உள்ள மக்னீசியமும் வைட்டமின் ‘சி’யும் இரத்தக் குழாய்களைக் நன்கு பராமரிப்பதால் இவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு இதயத் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இல்லை.
*
இந்த இரண்டு சாறு வகைகளையும் மிக்ஸியில் தயாரித்த உடனேயே அருந்த வேண்டும். ஆரோக்கியத்திற்கு இந்தச் சாறு ஓர் அற்புதமான மருந்தாகும்.

***

அதிக நேரம் டி.வி. பார்க்கலாம்!

30, 40 வயதுக்காரர்கள் ஒரு நாளில் பாதி நேரத்தை டி.வி. முன் உட்கார்ந்து கழிப்பதாக வருந்த வேண்டாம். லண்டனில் உள்ள ராயல் இலவச மருத்துவமனைப் பள்ளி ஒன்று மத்திய வயதுக்காரர்களை ஆராய்ந்தது. ஆராயப்பட்ட 5,000 பேர்களும் மிகவும் எளிமையான உடற்பயிற்சியை குறைந்த நேரமே செய்ததால் இதயம் சம்பந்தமான அபாயங்கள் நீங்கி தங்கள் வாழ்நாளை இப்போதும் நீடித்துக் கொண்டுள்ளார்கள்.
*
உங்கள் வீட்டில் உள்ள சுவர்க்கெடிகாரத்தைப் பார்த்தபடியே மூன்று நிமிடங்கள் மெல்லோட்டம் (Jogging) செய்யுங்கள். பிறகு 20 நிமிடங்கள் நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்யுங்கள்.
*
டி.வி.யின் முன்பாக உட்காரும் முன்பு உங்களின் எல்லா வேலைகளையும் பாக்கி வைக்காமல் படுசுறுசுறுப்பாகப் பார்த்து முடித்து விடுங்கள்.

***

ஒற்றைத் தலைவலியை தடுக்க முடியும்!

வாயுத் தொந்தரவு, செரிமானமின்மை முதலியவை இருந்தால் சாப்பாட்டிற்குப் பிறகு பால் சேர்க்காத சுக்குக் காப்பியை அருந்தவும்.
*
உங்கள் சமையலில் இஞ்சியைத் தினமும் சேர்த்து வந்தால் வீட்டில் எவருக்கும் ஒற்றைத் தலைவலியே வராது. இஞ்சி சேர்ந்த ரசம், குழம்பு இரத்த ஓட்டத்தை தடை செய்யாமல் பார்த்துக் கொள்வதால், மூளைக்கு நன்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடுகிறது.
*
ஒற்றைத் தலைவலி இருந்தாலும் உடனே போய்விடும். புது மணமக்கள் முதல் குழந்தை பிறக்கும் வரை தினமும் ஒரு வேளையாவது சுக்கு காபி குடித்து வந்தால் தலைத் தீபாவளியைக் குழந்தையுடன் கொண்டாடலாம்.

***

சோயா சாப்பிடுங்கள்!

சோயா மொச்சையில் இருந்து கிடைக்கும் புரதம், இதய நோய்களை அணுகுண்டுபோல் தகர்த்துக் குணமாக்குகிறது. கெடுதல் தராத கொலாஸ்டிரலையும் இது அதிகப்படுத்தி தருவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.
*
எல்சித்தன், கால்சியம், இரும்பு போன்ற முக்கியமான சத்துப் பொருட்களும் சோயாவில் உள்ளன. சிலருக்கு சோயா பிடிக்காது.
*
எனவே, சப்பாத்தி செய்யும்போது கோதுமை மாவுடன் சோயா மாவையும் 25% அளவு என்ற கணக்குப்படி சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி சுடவும். இது திட்டமிட்ட பரிபூரணமான உணவாக உண்மையில் திகழ்கிறது.


***
நன்றி தமிழ்வாணன் தளம்.
***


"வாழ்க வளமுடன்"


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பழங்கள் சாப்பிடும் முறை :)

எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.அந்த வகையில் பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்:

1. காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

*

2. பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும்.

*

3. ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

*

4. மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது.5. ஆகையால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.

*

6. பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை மிக்சியில் அரைத்து ஜூஸாக குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது பழத்தின் முழு பலனைத் தராது.

*

7. பழங்களை ஜூஸாக குடிப்பதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடும்போதுதான் நார்ச்சத்தும் கிடைக்கிறது. சத்தும் முழுமையாக கிடைக்கிறது.


***

நன்றி வெதுப்னியா.

***"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தக்காளியின் மருத்துவ குணங்கள்!

தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும்.இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.

*

ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.

***

புற்று நோய்,இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி:


புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ்நாளை அதிகரிக்கும் கருஞ்சிவப்பு தக்காளியை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.தாவரங்கள்,அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர்,நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து,கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர்.தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து,கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.

*

"பி53"என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால்,புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில்,கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

*

இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன.ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது.இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.

*

சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட்களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக்காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

*

ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

***

தக்காளியின் மருத்துவ குணங்கள்:1. இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

*

2. காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.

*

3. மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

*

4. முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.

*

5. இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.

*

6. மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

*

7. சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வாடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.


*

8. சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.

*

9. தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

*

10. தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

*

11. கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

*

12. தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.

*

13. மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

*

14. இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன.

*

15. இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

*

16. தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

*

17. கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

*

18. குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

*

19. அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.

*

20. வைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

*

21. மற்றும் வைட்டமின் ‘பி’யும் ‘சி’யுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் ‘டி’கூட இருக்கிறது.

*

22. தக்காளியில் இத்தனை நல்ல குணங்கள் இருப்பதால் கூடுமானவரைப் பெரியோர்களும் வளரும் குழந்தைகளும் நிறைய தக்காளி சாப்பிடுவது நல்லது.

**


by- நன்றி றெனி


***
நன்றி "இ.த.உலகம்"
நன்றி விக்கிபீடியா
நன்றி நிலாமுற்றம்.
***"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா? ( or ) ஒரு கப் சூப் நல்லதா?

இப்போது குளிர்பானங்கள் அருந்துவது ஒரு ஃபாஷனாகி விட்டது! இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும்!

குறிப்பாக, விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாக பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே, விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், உண்மையில் இந்தத் குளிர்பானங்கள் உடலுக்கு கேடுதான் விளைவிக்கிறது.

*


இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில், டின்னில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது.

*

கலரில் உள்ள பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.

*

கலர் பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும், சல்ஃபர்டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர்டையாக்ஸைடு, ஒரு நச்சு முறிவு மருந்துதான்.

*

நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து கலர் அருந்தியதும் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஓருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க் கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன.

*

அடிக்கடி கலர் அருந்துகிறவர்கள் தங்களுக்கு அடிக்கடி சோர்வும், விரக்தியும், வெறுப்பும் உள்ளதா என்பதை பரிசோதிக்கவும். அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் கலர் மூலம் சேர்ந்த சல்பர்டையாக்ஸைடே காரணம்.

*

பானங்கள் நறுமணமாக இருக்க, காஃபைன் சேர்க்கப்படுகிறது. கோலா பானங்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறது. இந்த அளவு, நாம் தினமும் அருந்தும் காபி, தேநீர் போன்றவைகளில் உள்ள அளவிற்குச் சமம்.

*

காஃபைன், உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது.

*

கோலா கலர் பானம் ஒரு முறை சாப்பிட்டதும் வரும் புத்துணர்ச்சி நாம் ஒரு நாளில் மூன்று கப் காபி அருந்தியதற்கு சமம். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பாட்டில் கோலா கலர் அருந்தினால் மத்திய நரம்பு மண்டலம் பலவீனம் அடையும்.இதனால் தூக்கமின்மை, நரம்புக் கோளாறு, எரிச்சல், வயிற்றுப்பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒரு விதப் பதட்டம் முதலியன ஏற்படுகின்றன.

*

சிறுநீர்ப் பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறுவிதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் கலர் அருந்தும் தம்பதிகளுக்கு பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.

*

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கலர் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் என்ற கலரை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.

*

இந்த வண்ணச் சாயம் தோலிற்கு அலர்ஜியைத் தந்து, உடலில் வீக்கம், மூக்கு ஊற்றுதல் (கடுமையான ஜலதோஷம்), கண்கள் சிவப்பாக மாறுதல் ஆகிய விளைவுகளை ஈர்ற்படுத்துகின்ர்றான்.

*

சிவப்பு நிற பானங்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஸாஃப்ட் டிரிங்க் பானங்களின் நிறத்துக்கு சேர்க்கப்படும் இந்த சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை, சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றிவிடுகிறது.

*

எனவே, அடுத்த முறை கலர் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். உடலுக்கு நன்மை செய்யும் பானங்கள் இவை மட்டுமே!

***

மருத்துவம் ( ஒரு கப் சூப் ):

ஆஸ்துமாவுக்கு ஒரு கப் சூப்!

ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை 180 மில்லி தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். ஆறியதும் கொஞ்சம் மிளகு தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு முதலியன கலந்து அருந்தவும். தினமும் ஒரு வேளை அருந்தினால் போதும். ஆஸ்துமா கட்டுப்படும்.

**


கொலட்ஸ்ட்ராலுக்கு ஒரு கப்!

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கிறது என்றால் கொத்துமல்லிக் காபி அருந்தவும். இல்லையேல் கொத்துமல்லியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்தத் தண்ணீரை அருந்தவும். தினமும் ஒரு டம்ளர் போதும். இதனால் கொலஸ்ட்ராலும் குறையும். சிறுநீரகங்களும் சிறப்பாக வேலை செய்யும். குடிக்காரர்கள் இந்த முறையில் பயன்படுத்தினால் குடிபழக்கத்தின் மீதான நாட்டம் குறையும்.

**


மலட்டுத்தன்மையைக் குணமாக்கும் சூப்!

250 மில்லி பசும்பாலில் பதினைந்து கிராம் அளவு முருங்கைப் பூவைப்போட்டுக் காய்ச்சவும். முருங்கைப் பூவும் பாலும் கலந்த இந்த சூப்பைத் தினமும் ஒரு மாதம் கணவனும் மனைவியும் அருந்தி வந்தால் மலட்டுத்தன்மை இருவருக்கும் மறையும். இருவரும் மதியம் முருங்கைக்காய் சாப்பிட்டு வந்தாலும் இது தொடர்பான அனைத்து பலவீனங்களும் மறையும்.

***

by - கே.எஸ்.சுப்ரமணி.
நன்றி தமிழ்வாணன்.காம்

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பக்கவாதத்தைக் குணமாக்கும் சோயாபீன்ஸ், கொண்டை கடலை.

சோயாபீன்ஸ் மற்றும் வெள்ளைக் கடலையில் (கொண்டை கடலை அல்லது மூக்கு கடலை) உள்ள சத்துகள் ஸ்டிரோக் எனப்படும் பக்கவாதம் உள்ளிட்ட வாதம் தொடர்புடைய நரம்பியல் நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று தெரிய வந்துள்ளது.
உணவில் அதிகளவில் சோயாபீன்ஸ், கொண்டைக் கடலை உள்ளிட்ட புரதச் சத்துகள் நிறைந்த பயறு வகைகளை எடுத்துக் கொள்வதால், அவற்றில் காணப்படும் இஸோஃப்ளே வோன் பக்கவாத நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

*


மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த வகை பயறுகளை கொடுப்பதால், அவர்களுக்கு நல்ல குணம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.மூளையின் நரம்பு மண்டலத்தில் இரத்தம் பயணிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாலேயே பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு இரத்தம் சென்று வருவதில் ஏற்படும் பாதிப்பினாலேயே இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

*


எனவே உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துவோர், பயறு வகைகளுடன் கூடிய சமச்சீர் உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

***

நன்றி வஞ்ஜீர்.

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

இரத்தத்தில் சேரும் அதிக கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களை குறுகலாக்கி ("அதீரோஸ்குளோரோசிஸ்'), அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இ ரத்தத்தில் கொழுப்பு சத்து சேருவதற்கும் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள், கீழ்க்கண்டவாறு உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்:-

1• எண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி-பால் கோவா, முந்திரி, தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.

*

2• வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

*


3• கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

*


4• பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.

*


5• ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.

*


6• தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது.

தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

*


7• எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

*


8• அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது.

*


9• முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

*

சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாயந்த தரத்துடன் இருக்கின்றன.

*

எனவே, தீய கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (Unssaturated Fat) முட்டையில் உள்ளன’ என்கிறார் டாக்டர் டொனால்ட் மெக்மைரா.

*


10• இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாம், ஆனால் அதை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்டு சாப்பிடலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே .

*


11• மாமிசத்திலுள்ள தோல்கள் மற்றும் கொழுப்பை, சமைப்பதற்கு முன்னர் நீக்கிவிட வேண்டும்

*


12• மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம். கொழுத்த மீன் சாப்பிடுவது கொலெஸ்ட்ரால், ரத்த அழுத்தம், ரத்த உறைவதை பெருமளவு குறைத்து இதயத்தைப் பாது காக்கிறது. குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும்.

*


13• அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

*


14• கொட்டை வகைகள்:

முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.

*


15• வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது


16• பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.

*


17• ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்

*


18• எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.

*


19• கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.

*


20• டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.

*


21• பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.

*


22• வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.

*


23• உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.

*

24• இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*


25• நார்ச்சத்து காய்கறிகள்:

நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.

*


26• ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.

*


27• வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது -நல்லது

***

உணவு வகையில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு

* மூளை - 2000 (mg /100gm)
* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)
* சிறுநீரகம் (Kidney)-375 (mg /100gm)
* கல்லீரல் (Liver)-300 (mg /100gm)
* வெண்ணெய் -250 (mg /100gm)
* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)
* லோப்ஸ்டெர்-200 (mg /100gm)
* இறால் (Shrimp)-170 (mg /100gm)
* இருதயம்-150 (mg /100gm)
* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)
* இளம் ஆட்டிறைச்சி (Lamb) -70 (mg /100gm)
* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)
* கோழியிறைச்சி-62 (mg /100gm)
* பாலாடைக் கட்டி (chedder cheese) -100 (mg /100gm)
* குழைவான பாலாடைக்கட்டி (cheese Spread) -70 (mg /100gm)
* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)
* Margarine (2/3 விலங்கினக் கொழுப்பு, 1/3 தாவர கொழுப்பு)-65 (mg /100gm)
* மயோனஸ் (1 மேசைக் கரண்டி)-10 (mg /100gm)
* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)
* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)
* நிறைக் கொழுப்புப் பால்பொடி (1 குவளை)-85 (mg /100gm)
* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)
* பிரெட்-1 (mg /100gm)
* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)
* சாக்லேட் பால்-90 (mg /100gm)***

by Sathik Ali

***"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?

நம் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க நம் உடலே உற்பத்தி செய்யும் பல்வேறு பொருட்களில் ஒன்று தான் இந்த கொலெஸ்ட்ரோல் (Cholestrol).

*

இது வெண்மை நிறத்திலான கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசிமாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் , பித்த நீர், வைட்டமின் D மற்றும் உடலின் பல்வேறு முக்கிய புரதச் சத்துகள் , திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் தேவையானது.

***

கொலஸ்ட்ரால் எங்கிருந்து கிடைக்கிறது?

கொலெஸ்ட்ரோல் பொதுவாக இரண்டு விதங்களில் உடலில் சேர்கிறது.

*

1. நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.

*

2. 25% கொலஸ்ட்ரால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கிடைக்கிறது.
கொலெஸ்ட்ரால் வகைகள்:


நம் இரத்தத்தில் 'கொலெஸ்ட்ரால்' மற்றும் 'டிரைகிளிஸெரைட்ஸ்' (Triglycerides) ஆகிய இரண்டு வித கொழுப்புகள் உள்ளன.

டிரைகிளிஸெரைட்ஸ் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒருவிதக் கொழுப்பே! இது நம்முடைய அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு வழங்குகின்றது. கொலெஸ்ட்ரோலைப் போலவே இரத்தத்தில் டிரைகிளிசெரைடுகள் அதிக அளவில் இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகப் படுத்திவிடும்.

*


கொலெஸ்ட்ரோல் புரதங்களுடன் இணைந்து ஒரு லிப்பொ ப்ரொடீன் ஆகி, அதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறது. லிபோபுரோட்டீன்கள் என்பவை இரண்டு வகைகளாகும்.

*

அவை:

1. குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிப்போ புரோட்டின் (LDL)

2. அதிக அடர்த்தியுள்ள (High density) லிப்போ புரோட்டின் (HDL)

***


அடர்த்திக் குறைவான லிப்போ புரோட்டீன் (LDL):


இது 'தீய கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த (LDL) அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும்போது, இருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும் இரத்தக் குழாய்களின் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொள்கிறது.காலப் போக்கில் இரத்தக்குழாய்களை குறுகச் செய்கிறது

*


அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):

இது 'நல்ல கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை தமனியிலிருந்து அகற்றி பின் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறது. இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதவன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.

*


மிகை கொலெஸ்ட்ரோல் எவ்வாறு பாதிக்கிறது?

தேவைக்கு அதிகமாக உருவாகும் கொலெஸ்ட்ரோல் தமனிக் குழாய்களின் உள் சுவரில் ஒட்டிக் கொள்ளும. நாளடைவில் சிறிது சிறிதாகச் சேர்ந்து இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களின் உள் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றது. இதனால் குறைவான இரத்தத்தை இருதயம் பெறுகிறது.

*

அதனால் இரத்ததில் கலந்துள்ள 'ஆக்ஸிஜன்' (Oxygen) எனும் பிராண வாயு தேவையான அளவு இதயத்துக்குக் கிடைக்காது.இதன் காரணம் இதயத்தின் செயல் பாடு பாதித்து Angina எனும் நெஞ்சு வலி ஏற்படலாம். தொடர்ந்து இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது தடை பட்டால் heart attack எனும் மாரடைப்பு ஏற்படுகிறது.

*

சில நேரங்களில் இந்தக் கொழுப்புச் சில்லுகள் இடம் பெயர்ந்து கட்டிகளாக இரத்தக் குழாய் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்திவிடுவதும் உண்டு.அல்லது இந்த கொழுப்புக் கட்டிகள் உடைந்து அதனால் இரத்தம் உறைந்து இரத்தக்குழாய்களில் தடையுண்டாக்கும். அதன் விளைவாக நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது.

*

அளவைவிட அதிகமான கொலெஸ்ட்ரோலின் விளைவாக சீறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உட்பட டெமென்ஷியா (மறதி நோய்),பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.அதிக கொலஸ்டராலுக்குக் காரணம் என்ன?

•அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்

•அதிக மாமிச உணவு உண்பது

•அதீத உடற்பருமன் (Obesity)

•உடல் இயக்கக் குறைவான பணிகள்.

•உடற் பயிற்சியின்மை

•அதிக தூக்கம்

•புகைப் பழக்கம்

•மன அழுத்தம்

•மதுப் பழக்கம்

•சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்.

•கருத்தடை மாத்திரைகள்.

•வயோதிகம்

•பரம்பரை -உங்கள் பெற்றோர்களுக்கு மிகை கொலெஸ்ட்ரால் இருக்குமானால் அதற்கு காரணமான ஜீன்களை நீங்களும் பெற்றிருக்கக் கூடும்.

***

இரத்தத்தில் அதிக அளவில் கொலெஸ்ட்ரோல் இருப்பதன் அறிகுறிகள் என்ன?

பொதுவாக எந்த ஓர் அறிகுறியையும் அது ஏற்படுத்துவதில்லை; ஆகையால்தான் அது "அமைதியான உயிர்க்கொல்லி" என்று அறியப்படுகிறது.

*

உடல் பருமன் இல்லாதவர்களுக்கு இரத்தத்தில் கொலெஸ்ட்ரால் அதிகம் இருக்காது என்று சொல்ல முடியாது. யாருக்கும் வரலாம். இரத்த சோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.20 வயதுக்கு மேல் ஒவ்வொரு 5 வருட இடைவெளியிலும் இரத்தத்தை சோதனை செய்வது நல்லது.

*

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலை எப்படி தீர்மானிப்பது?

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

அதிலும் 'லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்' (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

*

இதன் வாயிலாக

•இரத்தத்திலுள்ள மொத்த கொலெஸ்ட்ரோல்
•LDL (தீய) கொலெஸ்ட்ரோல்
•HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்
•டிரைக்ளைஸெரைட்ஸ்
ஆகியவற்றின் விபரங்களை அறியலாம்.

**

இரண்டு விதமான அளவுகோல்கள் மூலம் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்படுகின்றது.

1.எடையின் அடிப்படையில். அதாவது ஒரு டெசி லிட்டரில் உள்ள மில்லி கிராம் (mg/dl) எண்ணிக்கையளவு முறை.

2.மூலக்கூறு எண்ணிக்கையளவு (molecular count) அதாவது ஒரு லிட்டரில் உள்ள மில்லிமோல்கள் (mmol/L) முறை.
உங்களது கொலெஸ்ட்ரோல் பரிசோதனையில் இந்த இரு விதங்களில் எவ்விதத்தில் உங்கள் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்பட்டது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


1) மொத்த கொலெஸ்ட்ரோல்:

200 mg/dl க்கும் குறைவாக (5.2 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு

200–239 mg/dL ------------------------------ --- எச்சரிக்கைக் கோடு
239 mg/dL க்கு மேல் ------------------------ ----அதிகம்

*

2) LDL (தீய)கொலெஸ்ட்ரோல்:

130 mg/dl க்கும் குறைவாக (3.37 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு

130–159 mg/dL ------------------------------------------ --- எச்சரிக்கைக் கோடு
160–189 mg/dL ------------------------------------------- --- அதிகம்.
189 mg/dL க்கு மேல் ------------------------------------------ - -- மிக அதிகம்

*

3) HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்:

40 mg/dl க்கும் குறைவாக (1.0 mmol/L க்கும் குறைவாக) --இதய நோய் வர சாத்தியம் இருக்கிறது

40 mg/dl முதல் 60 mg/dl (1.0 mmol/Lமுதல்1.54 mmol/L) -- அதிகம் (நல்லது)
60 mg/dL(1.54 mmol/L) க்கு மேல் --- இதய நோயிலிருந்து பாதுகாப்பு

*

4) டிரிக்ளைஸெரைட்ஸின் இயல்பான அளவு :

150 mg/dl க்கும் குறைவாக (1.69 mmol/L க்கும் குறைவாக)

*

நம் உணவில் உள்ள கொழுப்புச் சத்து வகைகள் (Fats) :

திடக் கொழுப்புகள் (saturated):

முக்கியமாக, மாமிச உணவு வகையில் இருந்து திடக் கொழுப்பு வகைகள் கிடைக்கின்றன. Hydrogenated எண்ணெய்களில் இந்த வகை திடக் கொழுப்புகள்தாம் 'தீய' (LDL) கொலெஸ்ட்ரொலை இரத்தத்தில் அதிகப் படுத்துவது.

*

திடக் கொழுப்புகளை உள்ளடக்கிய உணவு வகைகள் :

பால், வெண்ணெய், இறைச்சி, பாமாயில், தாவர நெய்.

***

திரவக் கொழுப்புகள் (1) (polyunsaturated):

எண்ணெய், விதை மற்றும் தானிய உணவுப் பொருட்களிலிருந்து திரவக் கொழுப்புகள் உருவாகின்றன. திரவக் கொழுப்புகள் LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை இரத்தத்திலிருந்து குறைத்து, இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவை. ஆயினும், திரவக் கொழுப்புகள் நம் இரத்தத்தில் கூடிவிட்டாலும் அவை HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலைக் குறைத்து விடக்கூடும். ஆகையால் கீழ்க்காணும் திரவக் கொழுப்பு வகைகளை அதிகமாகவுமில்லாமல் குறைவாகவுமில்லாமல் நடுநிலை அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

*

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய் உணவு வகைகள் :

தேங்காய் எண்ணெய்,சோள எண்ணெய் (Corn oil), சூரியகாந்திப்பூ எண்ணெய் (Sunflower oil), ஸாஃப்பூ (Safflower) எண்ணெய், ஸோயாபீன் எண்ணெய் (Soya been oil).

**

திரவக் கொழுப்புகள் (2) MonoUnsaturated:

மோனோஅன்ஸேச்சுரேடெட் எனும் திரவக் கொழுப்புகள் தானிய வகைகளில் அதிகம் கிடைக்கின்றன. பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு வகைகள் பேன்றே மொனோஅன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளும் இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவையாகும்.
*
ஏனெனில் அவை நம் இரத்தத்திலுள்ள LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை குறைத்து HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. ஆயினும் இவற்றையும் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் உட்கொள்ளவேண்டும்.

*

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய்/தானிய உணவு வகைகள் :
ஓலிவம் எனும் ஜைத்தூன் எண்ணெய், கனோலா canola எண்ணெய், பாதாம், முந்திரி, வேர்கடலை, பிஸ்தா பருப்பு போன்றவை.

***

அமிலக் கொழுப்பு:

ஒமேகா-3 (Omega 3 acids) எனும் கொழுப்பு அமிலங்கள் இன்னொரு வகை பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்புவகை ஆகும். இவை முக்கியமாக மீன் எண்ணெயில் கிடைக்கின்றன. இவையும் இருதய நோய்கள் உருவாவதைக் குறைப்பவையாகும்.

*

அமிலக் கொழுப்பு மீன் வகைகள் :

TUNA (ஐலா/கும்பலா) KING FISH (வஞ்சிரம்/ஐகுரா), SALMON கெண்டை, SARDINES சூடை/மத்தி போன்ற மீன்கள்.

*

நீரகக் கொழுப்பு (Hydrogenated):

பாலி அன்ஸேச்சுரேடெட் அல்லது மொனொ அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளுடன் கலந்து நீரகக் கொழுப்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் நீரகக் கொழுப்பு, திடநிலைக்கு மாற்றம் பெறுகிறது. இந்த முறை மூலம் அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளை ஸேச்சுரேடெட் கொழுப்புகளாக அது மாற்றுகிறது. அவசர (fast food) உணவுகளில் நீரகக் கொழுப்பு உபயோகிக்கப் படுகின்றது.

**

தாவர எண்ணெயால் கொலெஸ்ட்ரால் கூடுமா?

பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் கொலெஸ்ட்ரோல் இல்லை.
கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்.
*
ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

**

எந்த சமையல் எண்ணெய் உடல் நலத்திற்கு சிறந்தது?

1. கனோலா எண்ணெயில் அதிக அளவில் மொனொஸெடுரேடெட் கொழுப்பு உள்ளது.

2. சோள எண்ணெய், சூரியகாந்திப்பூ (Sun flower) எண்ணெய், ஸஃப்போலாப்பூ (Saffola) எண்ணெய் மற்றும் ஸோயாபீன் (Soya bean) எண்ணெய்களில் அதிக அளவில் பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு உள்ளது.

3. இயற்கையாகக் கிடைக்கும் தேங்காய் எண்னெயும் இதயத்துக் நல்லது தான்.

***

'கொலெஸ்ட்ரோல்' அளவைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

சரியான உணவைத் தேர்ந்தெடுத்தல்:

ஸேச்சுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.பட்டினி கிடப்பது என்பது இதன் பொருளல்ல.

*

தவறாத உடற்பயிற்சி:

ஒவ்வொருவரும் போதிய உடல் அசைவு ஏற்படும் வகையிலான பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. அதனால் நல்ல கொலெஸ்ட்ரோல் (HDL) அதிகரிக்கும்; தீய கொலெஸ்ட்ரோல் (LDL) குறையும்; அளவுக்கு அதிகமான உடலின் எடையைக் குறைக்கவும் உதவும்.

எந்த உடற்பயிற்சியையும் தொடங்கும் முன் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

*

புகைப் பழக்கத்தைக் கைவிடுதல்:

புகைப் பழக்கம் இருதய நோய்கள் மற்றும் இதர கேடுகளின் அபாயத்தை இரட்டிக்கச் செய்கிறது. இது நல்ல கொலெஸ்ட்ரொலை (HDL) குறைக்கிறது. தீய கொலெஸ்ட்ரொலை (LDL) அதிகரிக்கிறது.

*

மன அழுத்தத்தைக் (stress) கட்டுப்படுத்துதல்:

மன அழுத்தம் என்பது காலப்போக்கில் கொலெஸ்ட்ரோல் அளவினைக் கூட்டுவதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத்தம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. உதாரணமாக, சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது தங்கள் மனதை நிலைப்படுத்திட கொழுப்புகள் கலந்துள்ள நொறுக்குத்தீனி கொறிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அவற்றில் உள்ள அதிக அளவிலான திடமான (saturated fats) கொழுப்புகள் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.

***

மருத்துவம்

ஓரளவிற்கு கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு முக்கியமாகத் தேவை. அதுவே அளவிற்கு மீறினால் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். கொலஸ்ட்ரால் அளவுக்கதிகம் இருந்து ,அதோடு

•உயர் இரத்த அழுத்தம் (140/90 mg/dL அல்லது அதற்கு மேல்)
•சர்கரை நோய்.
•முதுமை -ஆண் 45 க்கு மேல் பெண் 55 வயதுக்கு மேல்
•பரம்பரை ஜீன் - குடும்பத்தில் தந்தை,சகோதரன் யாருக்கவது 55 வயதுக்கு முன் , அல்லது தாய், சகோதரி யாருக்காவது 65 வயதுக்குமுன் இதய நோய் தாக்கியிருந்தால்.
•உடல் இயக்கமின்மை, உடல் பருமன்,
•புகை, மது போன்ற பழக்கம் போன்ற காரணங்கள் இருந்தால் எல்லாம் சேர்ந்து இதயத்தை பதம் பார்ப்பதில் கை கோர்த்துக் கொள்ளு(ல்லு)ம்.

*

கொலெஸ்ட்ரால் அதிகம் இருந்தும் மேல் கண்ட பிற காரணங்கள் இல்லாததால் இதயம் பழுது படாமல் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. இருந்தாலும் தலைக்கு மேல் கத்தி தான் .

*

இங்குக் கூறப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிகாட்டும் விஷயங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் கொலெஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க எளிதாக இருக்கும்.

*

இவற்றுள் எதுவும் பயனளிக்காத நிலையில் உள்ளவர்கள், தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். அவருடைய ஆலோசனையில் மாற்றமின்றி அவர் தருகின்ற மருந்துகளை அதே அளவில் உட்கொள்ள வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும்.

*

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பல் வேறு மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் எல்லமே பக்க விளைவுகள் உள்ளது. அதிக விலையுள்ள இம் மருந்துகள் கொலெஸ்ட்ராலைக் குறைப்பதில் உண்மையாகப் பலன் தருவதில்லை என்ற கருத்துக்களும் உண்டு.

*

எல்லா மருந்துகளும் தற்காலிகமாக கொலெஸ்ட்ரால் அளவை ஓரளவு கட்டுப் படுத்த மட்டும் தான் உதவும் . நிரந்தர தீர்வு சரியான உணவுப்பழக்கமும் உடல் உழப்புமே.
போதுமான தண்ணீர் தினமும் அருந்துவது கூட இதயத்தைக் காக்கும்

***

"அளவுக்கு மி்ஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது கொலஸ்ட்ராலுக்கு நன்றாக பொருந்தும்.


***

thnk by Sathik Ali

***"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்!

கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.

*

அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.

*
கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.

*

மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.

*

இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

*

மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

*

தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும்.***

நிம்மதியாக தூங்க சிறந்த வழி:


1. இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி.

*

இதனால், தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்

***

tank - www.z9tech.com

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிரிட்ஜில் எந்த காயை, எவ்வளவு நாள் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்?

பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால்,
அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.

*

அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான "பிரிட்ஜ்' என்பதை யாராலும் மறுக்க முடியாது.

*


வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது.

*

பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம்.

*

இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம், பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல்.

***


உணவுப் பொருட்கள் உணவு பிரஷ்ஷாக இருக்கும் காலம்:

பழங்கள்:


திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்

****


காய்கறிகள்:


புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
காளான் 1-2 நாட்கள்

***


அசைவ உணவுகள்:


வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்
சமைத்த மீன் 3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்
உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்
சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்

***


பால் பொருட்கள்:


பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்


மோர் 2 வாரங்கள்
தயிர் 7-10 நாட்கள்

*


காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.


***

நன்றி தினமலர்!

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெண்ணுக்கு இளமை எதுவரை? ( டாக்டர் கௌசல்யா நாதன் )

இது தொந்தியால் ஏற்படும் பிரச்சினையைச் சொல்லும் டாக்டர் கௌசல்யா நாதன். மாடிப்படியேறுவது தொடங்கி, உட்கார்ந்து, எழுந்து கொள்வதற்குக்கூட மூச்சு முட்டும். காரணம், நம் உடல் பருமன்.
உடல் பருமனுக்கான காரணங்கள், அதைத் தவிர்ப்பதற்கான விஷயங்கள் குறித்து இங்கே நமது கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் கூறியிருப்பவர் டாக்டர் கௌசல்யா நாதன். சென்னையிலிருக்கும் அப்பல்லோ மற்றும் மலர் மருத்துவமனைகளில் வயது நிர்வாக மருத்துவ நிபுணரான டாக்டர் கௌசல்யா இனி உங்களுடன்…

*

பொதுவாகவே நம் பெண்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நாளுக்கொரு கடவுளுக்கு விரதம் இருப்பார்கள். விரதம் இல்லாத நாட்களிலும் சராசரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் உணவு உண்பதில் ஆர்வம் காட்டாமல்தானே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு உடல் பருமன் ஏன்?

விரதம் இருக்கும் நாட்களிலும் பழங்கள் சாப்பிடலாம். பாயசம், சூப்.. என ஏதாவது குடிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் இருந்தால், நம் உடலில் ஹார்மோன்களின் சுழற்சி சமச்சீராக இருக்காது.

*

வயிற்றில் சுரக்கும் அமிலங்களால் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. 18 முதல் 40 வயது நிலைகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலோர்க்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது.

***


“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று ஒüவையார் கூறியது தெரிந்தோ என்னமோ.. இன்றைய இளம் பெண்கள் குண்டாகி விடக்கூடாது என்பதில் ரொம்பக் கவனமாக இருந்து, அநியாயத்திற்கு மெலிதான உடல்வாகுடன் இருப்பது சரியா?

குண்டாகி விடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காகப் பிறர் பரிதாபப்படும் அளவுக்கு மெலிந்து போய்விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை, அந்தந்த வயது நிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டும்.
*
ஒருபக்கம் வீட்டில் தயாராகும் உணவுகளைக் குண்டாகிவிடுவோம் என்ற காரணத்துக்காகத் தவிர்க்கும் இன்றைய இளம் பெண்கள், துரித வகை உணவுகள், ஏற்கனவே தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸô, பாஸ்தா, குளிர்பானங்கள்…,

*

என நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத உணவுகளை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பழக்கங்களிலும் இன்றைய இளம் பெண்கள் தகுந்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மாதிரியான உணவுப் பழக்கங்கள் அவர்களை நிச்சயம் உடல் பருமன் பிரச்சினையில்தான் கொண்டு போய்விடும்.

***


உடல் பருமன் இந்தியாவில் மட்டுமே உள்ள பிரச்சினையா அல்லது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினையா?

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் 60 சதவீதத்தினருக்கு இந்த உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் 40 சதவிதத்தினருக்கு இருக்கிறது.

***


உடல் பருமனுக்கு தைராய்ட் பிரச்சினை முக்கியக் காரணமா?

அதுவும் ஒரு காரணம். தைராய்ட் பிரச்சினையைத் தவிர, பெண்களுக்கு வரும் பாலிசிஸ்டிக் ஓவரிஸ் நோய், மெனோபாஸ் காலங்களும் உடல் பருமன் நோய்க்கான இதர காரணங்கள்.

***


இது பரம்பரையாகத் தொடரும் நோயா?

பெரும்பாலும் உடல் பருமனுக்குப் பரம்பரை தொடர்பான காரணங்களும் இருக்கின்றன. இது தவிர, தூக்கமின்மை, ஒருவர் எந்தமாதிரியான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியம்.

*

ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் பணியிலிருப்பவர்களுக்கும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நோய் அதிகம் இருக்கிறது. இதுதவிர, மன அழுத்தம், பதட்டத்தில் இருப்பதும்கூட உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

***


இது வயதினால் வரும் கோளாறா?

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி பொதுவாக 40 வயதை நெருங்கும் போது கொஞ்சம் சதை போடும்தான். ஆண்களை விட பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் பருவம் முடியும்போது, சமச்சீரற்ற ஹார்மோன் பெருக்கத்தால் இடுப்பு, தொடை பகுதிகளில் சதை அதிகளவு போடும். வயதை ஒரு காரணமாகச் சொல்லலாமே தவிர அதுவே காரணமாகிவிடாது. சின்னச் சின்ன குழந்தைகளுக்குக்கூட உடல் பருமன் நோய் இருக்கிறது!

***


இந்த நோயிலிருந்து எப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்?

ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 8-லிருந்து 10 டம்ளர் தண்ணீரை அருந்துங்கள். சில பெண்கள் இரவுப் பொழுதில் எதுவும் சாப்பிடாமல் தூங்குவார்கள். சில பேர் சாப்பாடு பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, இருப்பதை எல்லாம் சாப்பிட்டு முடிப்பார்கள். பட்டினியாகப் படுப்பதும் தவறு. அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டுப் படுப்பதும் தவறு.

*

ஒருசிலர் தலைவலி முதல் எந்தப் பிரச்சினை வந்தாலும் மருத்துவர்களை நாடாமல் அவர்களாகவே ஏதாவது மருந்து மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொண்டு சமாளித்து விடலாம் என்று நினைப்பார்கள். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

*
அடிக்கடி இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உடல் பருமனை வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது மாதிரி அமைந்துவிடும். மாதத்திற்கு ஓரிரு முறை தரமான இனிப்பு வகைகளை, ஐஸ் க்ரீமை ருசிக்கலாம்.
*
காபி, டீக்கு சர்க்கரைப் போட்டு குடிப்பதைவிட வெல்லம் போட்டுக் குடியுங்கள். மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை விட்டொழிப்பது நல்லது.
*
சுத்திகரிக்கப்பட்ட கார்போ-ஹைட்ரேட் உணவுகளான மைதா, கோதுமை, பாசுமதி அரிசி போன்றவற்றையும், நொறுக்குத் தீனிகளான நூடுல்ஸ், பீட்ஸô, சிப்ஸ் போன்றவற்றையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.


***


சில ஹெல்த்-சென்டர்களில் உடல் பருமனைக் குறைக்க மூன்று வேளை உணவுக்குப் பதில், ஐந்து வேளை உணவு உண்ணும் முறையைப் பரிந்துரைப்பது சரியா?

மூன்று வேளை உணவு; இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்னும் அடிப்படையில் அப்படி சொல்லியிருப்பார்கள். பொதுவாக 90 கிலோவிலிருந்து 130 கிலோ எடை வரை இருப்பவர்களுக்கென்று பலவிதமான குணப்படுத்தும் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

*

அதில் இதுவும் ஒன்று. நீங்கள் சாப்பிடும் உணவு குறித்த நேரத்தில் சக்தியாக மாற்றப்பட வேண்டும். உணவின் மூலமாகக் கிடைக்கும் கலோரி எரிக்கப்பட வேண்டும். உடல் உழைப்பு இல்லாத நேரத்தில் நம் உடலில் தங்கும் அதீத கொழுப்பு உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

***


பரதநாட்டியம் கற்றுக் கொண்டு பாதியில் நிறுத்தி விடுவது, விளையாட்டில் ஈடுபட்டு பாதியில் நிறுத்திவிடுவது போன்ற காரணத்தால் கூட உடல் குண்டாகிவிடுமா?

எட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு பரதநாட்டியம் ஆடியிருப்பீர்கள் அல்லது ஒரு கேம் டென்னிஸ் ஆடியிருப்பீர்கள். நாளடைவில் விளையாட்டை, நடனத்தை உங்களால் தொடரமுடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

*

அப்போது என்ன ஆகும்? பரதநாட்டியம் ஆட மாட்டீர்கள். ஆனால் வழக்கம் போல் எட்டு இட்லியைச் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற உணவைப் பழகிக் கொண்டீர்கள் என்றால், அதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்குப் பாதி விடை கிடைத்துவிடும்.

***


“பெண்ணுக்கு இளமை எதுவரை? பிள்ளைகள் இரண்டு பெறும் வரை..’ என்கிறது கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இளமை மனதுக்கா, உடலுக்கா? என்பதை நாம் யோசிக்க வேண்டும். அகத்தின் அழகுதான் முகத்தில் தெரிகிறது. நம் மனதை எந்தளவுக்குப் பக்குவமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வயதின் காரணமாகப் புற அழகில் எத்தனையோ மாறுதல்கள் நடக்கும்தான்.
*
30 வயதிலிருப்பவர்கள் 50 வயதானவர்களைப் போல் தளர்ந்து போய், சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.

*

30 வயதிலிருப்பவர்கள் அந்த வயதுக்குரிய அழகுடனும், தெளிவுடனும் இருந்தாலே போதும்.

*

பெண்களுக்குத் தன்னம்பிக்கைதான் என்றைக்கும் அழகு.

***

by-Visitor Blogs
நன்றி Visitor Blogs

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வயிற்றுக்குல் என்ன ( உணவு ) இட வேண்டும்

இன்றைய அவசர உலகில் மனிதன் அறிவைத் தேடுவதற்கு நேரத்தையும், கவனத்தையும், பணத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் மிகவும் முக்கியமானத் தேவையான ஆரோக்கியமான உடலைப் பேணும் அக்கறை பெரும்பாலானவர்களிடம் இல்லை.ஆரோக்கியமான உணவு, அளவான உடற்பயிற்சி போன்றவை மனிதனின் உடலை மட்டுமல்ல மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

*

இன்று குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பது ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகிவிட்டது. இங்கிலாந்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் தொன்னூறு கிலோ எடையுடன் இருந்த செய்தி இங்கிலாந்து ஆரோக்கிய இதழ்களில் அதிர்ச்சியாய் அலசப்பட்டது.

*

இந்தியாவிலும் குழந்தைகள் தாறுமாறாக எடை அதிகரிப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், பெரியவர்களைத் தாக்கும் நீரிழிவு போன்ற நோய்கள் இன்று சிறு வயதினரையும் தாக்குவதாகவும் மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

*

இன்றைக்கு இந்தியாவின் பரவியிருக்கும் மேல் நாட்டு உணவுப் பழக்கவழக்கங்களும், இன்றைய வாழ்க்கை முறையுமே இதன் முக்கிய காரணமாக இருக்கின்றன.

*

ஓடி விளையாடு பாப்பா என்பதெல்லாம் பாட நூலில் படித்ததுடன் சரி என்னும் நிலமை தான் இன்றைய நகர்ப்புறக் குழந்தைகளுக்கு. சதுர அடிகளில் தீப்பெட்டி போன்ற அறைகளில் வாழும் இவர்கள் பெரும்பாலும் கணினி விளையாட்டையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ தான் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார்கள். உடலுழைப்பைத் தரும் பொழுதுபோக்குகள் பெருமளவு குறைந்து விட்டன.

*

கிராமங்களிலெல்லாம் ‘கல்லைத் தின்றால் கூட கரையும் வயது’ என்று இளைஞர்களைச் சொல்வார்கள். ஏனெனில் அந்த வயதினர் உண்ணும் எந்தப் பொருளாக இருந்தாலும் அது அவர்களுடைய கடின உழைப்பினால் கரைந்து உடலோடு கலந்து விடுகிறது. வயலிலும், காடு மேடுகளிலும் உழைப்பவர்கள் சராசரியாக ஒரு நாள் பத்து கிலோ மீட்டர் தொலைவாவது நடந்து விடுகிறார்கள். நடத்தல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது அவர்களுக்கு.

*

இன்றைய நகர்ப்புற வாழ்க்கை அப்படியல்ல. இப்போது இலகுவான உணவு உட்கொண்டால் கூட அது கரையாமல் உடலில் கொழுப்புச் சத்தாகத் தேங்கிவிடும் அபாயம் உண்டு. காரணம் உடல் உழைப்பு இல்லை. வீட்டிலிருந்து வெளியே இறங்கியவுடன் வாகனம், அலுவலகம் விட்டதும் வீட்டுக்கு வாகனம். வீட்டுக்குள்ளே கட்டிப் போட தொலைக்காட்சி, கணினி. மொத்தத்தில் இருக்கைச் சிலைகள் போல இருக்கும் வாழ்க்கை.

*

கிராமப் புறங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு வாழ்க்கையே உடற்பயிற்சியாகி விடுகிறது. எனவே அவர்கள் தனியாக உடற்பயிற்சி செய்யத்தேவை இல்லை என்றாகிறது. நகர்ப் புறங்களைப் பொறுத்தவரையில் உடற்பயிற்சியை ஒரு பணியாக எடுத்துச் செய்ய வேண்டி இருக்கிறது.

***

உடல்பருமன் சுட்டு எண்:


ஆரோக்கியமான உடல் உயரத்துக்கும் எடைக்கும் இடையே ஒரு சூத்திரத்தைக் கொண்டு இயங்குகிறது. உடல்பருமன் சுட்டு எண் என்று இதை அழைக்கிறார்கள். உங்கள் எடையை உங்கள் செண்டீ மீட்டர் உயரத்துடன் இரண்டு முறை வகுத்து பத்தாயிரத்துடன் பெருக்கும்போது கிடைக்கும் எண்ணே உடல் பருமன் சுட்டு எண். ( உடலின் எடை) / ( உயரம் செமீ x உயரம் செமீ ) x 10000.

*

இந்த விதியின் படி 18.5 க்கும் 25க்கும் இடைப்பட்ட சுட்டு எண் உங்களுக்கு வருகிறது என்றால் நீங்கள் அதிக எடை கொண்டவர் அல்ல. நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொண்டவர் என்று பொருள். அதற்கு மேல் எனில் உடல் எடை அதிகம் என்று அறிந்து கொள்ள வேண்டும். இந்த அளவு 35 ஐ விட அதிகரித்தால் ஆரோக்கியக் குறைவுக்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனவும், இந்த எடை மிக மிக அதிகமானது என்பதையும் உணர வேண்டும். அதை சாதாரண நிலைக்குக் கொண்டு வர முயலவேண்டும்.

*

பீட்சா, சிப்ஸ், கோக், பெப்ஸி, சாக்லேட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற வகையறாக்களை உண்ணும் போது நமது உடலில் அதிகப்படியான கலோரிகள் தேங்குகின்றன. இவற்றை உண்டு விட்டு அதிக உடலுழைப்பைச் செலுத்தாத போது இந்த கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து விடுகின்றன. இப்படிச் சேரும் கொழுப்பே ஆரோக்கியத்துக்கு எமனாக மாறிவிடுகிறது.

***


சிறந்த உணவுப் பழக்கம்:


தேவையான சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை, தேவையான நேரத்தில், தேவையான அளவுக்கு உண்பதே சிறந்த உணவுப் பழக்கம் எனலாம்.

*

1. நாம் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியமான காரணியாக ஏதேனும் பரம்பரை நோய்கள் இருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வது அவசியம். சர்க்கரை நோய் போன்ற பரம்பரை நோய்கள் இருக்கும் குடும்பத்தினர் சற்று எச்சரிக்கையுடன் அத்தகைய உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

*

2. இந்தியர்களின் உணவுப் பழக்கம் பெரும்பாலும் தானியங்களைச் சார்ந்தே உள்ளது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில் புரதச் சத்து அதிக அளவில் கிடைக்கிறது. கால்சியம், இரும்பு போன்ற சத்துக்களும் இதில் கிடைக்கின்றன.

*

3. தானியங்களைப் போலவே புரதச் சத்துக்கு பருப்பு வகைகளும் துணை செய்கின்றன. கடலை, துவரை, உளுத்தம், பாசி , பட்டாணி, துவரம் பருப்பு போன்ற பலவகைப் பருப்புகள் புரதச் சத்துக்குப் பயன்படுகின்றன.

*

4. முந்திரி, பாதாம், தேங்காய் , நிலக்கடலை, பிஸ்தா, தேங்காய் போன்றவற்றில் கொழுப்பு சத்து அதிகம் எனவே குறைத அளவு பயன்படுத்துவது பயன் தரும்.

*

5. கொழுப்பு சத்து வெண்ணெய், நெய், வனஸ்பதி, தாவர எண்ணை போன்றவற்றில் கிடைக்கிறது. கொழுப்பு உடலில் சேர்வது பலவகையான இன்னல்களை உருவாக்கும். எனவே நாம் உண்ணும் உணவில் கொழுப்பு சத்து ஐந்து முதல் பத்து சதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

*

6. பழங்களில் உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உள்ளன.

கொய்யா, நெல்லிக்காய், திராட்சை போன்றவை வைட்டமின் சி தன்மையை அதிகம் கொண்டுள்ளன.

வாழைப்பழங்களில் கார்போ கைட்டிரேட் அதிகம்.

உலர்ந்த பழங்களில் இரும்புச் சத்து அதிகம்.

ஆப்பிள் பழம் நார்ச்சத்து மிகுந்தது. ஆப்பிள் எளிதில் செரிமானமாகி விடும் உணவாகவும் இருப்பதால் உடலுக்கு நல்ல சத்து கிடைக்கிறது.

*

7. நுரையீரலை வலுப்படுத்தவும், பசியைத் தூண்டவும், இரத்தம் தூய்மையாக்கல், பித்தத் தன்மை மாற்றுதல் போன்ற பல தன்மைகளை நெல்லிக்காய் கொண்டுள்ளது.

*

8. கீரை வகைகளே ஆரோக்கிய உணவு என்றதும் நம் கண்களுக்கு முன்னால் வரும். கீரையில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம் போன்ற பல சத்துகள் உள்ளன. கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பலனளிக்கும்.

*

9. கிழங்குகள் முக்கியமாக கார்போஹைடிரேட் அதிக அளவில் கொண்டிருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கில் கால்சியம், உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, காரட்டில் கரோட்டீன் என பல சத்துகள் இவற்றில் அடங்கியுள்ளன. காய்கறிகளையும் அதிக அளவில் பயன்படுத்துதல் பயனளிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

*

10. பாலில் புரதச் சத்து அதிகம். கொழுப்புச் சத்து குறைவு. மீன்களில் ஏராளமான புரதம், கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை இறைச்சியைப் போல கொழுப்புச் சத்து அதிகம் இல்லாததால் பெருமளவு விரும்பப்படுகிறது. இறைச்சி புரதச் சத்து மிகவும் அதிக அளவில் உண்டு.

*

11. அவ்வப்போது உண்ணா நோன்பு இருப்பது நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது என்று இன்றைய மருத்துவம் சொல்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு சொன்ன பெருமை நமது இந்தியப் பாரம்பரியத்துக்கு உண்டு.

*

12. சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகள் உயிர்ச்சத்து ( வைட்டமின் ) மாத்திரைகள் உட்கொள்வது உடலுக்குக் கேடு என்றும், அதற்குப் பதிலாக அந்த சத்து உள்ள இயற்கை உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

*

13. வைட்டமின் எ நமது திசு வளர்ச்சி, பல் அமைப்பு ஒழுங்கு, கண்பார்வை போன்றவற்றுக்குத் தேவையானது. இந்த சத்து குறையும் போது மாலைக் கண்நோய் தாக்கலாம், தோல் தனது மிருதுவான தன்மை இழத்தலும் வைட்டமின் எ குறைபாடின் விளைவுகளே. ரெடினால், கரோடெனாய்ட் எனும் இரண்டு சத்துக்களில் வைட்டமின் எ இருக்கிறது. இது காய்கறிகள், பப்பாளி, பூசணிக்காய், ஆடு, மாடு, நெய், முட்டை போன்றவற்றில் இது கிடைக்கிறது.

*

14. வைட்டமின் டி – யைப் பொறுத்தவரை எலும்பை வலுவாக்கும் கால்சியம் இதில் இருக்கிறது. மீன் எண்ணை, முட்டையின் மஞ்சள் கரு, பால் வெண்ணெய், நெய் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் இ – திசுக்களின் நிலைத்தன்மைக்குப் பயன்படுகிறது. இது காட்டை வகைகளில் அதிகமாக கிடைக்கிறது.

*

15. வைட்டமின் சி, ஒரு இன்றியமையாத சக்தி. மூட்டு வீக்கம், ஈறுகள் பலமின்மை, உடல் பலவீனம், எரிச்சல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், ரத்த சோகை போன்ற பல நோய்களுக்கு இந்த சத்து குறைபாடு காரணமாகி விடுகிறது. எலுமிச்சை, ஆரஞ்ச், நெல்லிக்காய், முட்டைகோஸ் போன்றவற்றில் இந்த சத்து உண்டு. சமைக்காமல் உண்ணும்போது இந்த சத்து நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

*

16. பப்பளிப்பழம் போலிக் அமிலம், இரும்புச் சத்து, காப்பர், பொட்டாசியம் என பல சத்துகளை உள்ளடக்கியது. மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காகவே உதாசீனப்படுத்தப் படும் பப்பாளிப் பழம் தென்னமெரிக்கா போன்ற நாடுகளில் ஆரோக்கியப் பழம் என்று அழைக்கப்படுகிறது.

*

17. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சமைக்காத உணவுகளையும் உண்ண வேண்டும். காய்கறிகளை வெட்டி சாலட் செய்வது, பழங்கள் உண்பது போன்றவற்றினால் சத்து முழுமையாக மனிதனுக்குக் கிடைப்பதுடன் உடலும் சுறுசுறுப்படைகிறது. நிறைய தண்ணீர் குடிப்பதும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும்.

*

18. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனை விட இன்றைய மனிதன் இயற்கையை விட்டு விலகிச் சென்றிருப்பதே பல நோய்கள் நெருங்கி வந்திருப்பதன் காரணம் என்பதைப் பல ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

*

19. ஒரு நாளைக்கு எத்தனை கலோரி சத்து தேவை என்பதைக் கணக்கிடவும் ஒரு சூத்திரம் இருக்கிறது. அதாவது நமது உடல் எடையை பத்தால் பெருக்கி, அதனுடன் நமது உடல் எடையை இரண்டு முறை கூட்டி வரும் தொகை நமக்குத் தேவையான கலோரியின் அளவு.

*

20. அதாவது 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதருக்கு ( 70 *10 = 700, 700+ 70+70 = 840) 840 கலோரிகள் தேவை. ஒரு சிறு பாட்டில் கோக் குடிக்கும்போது உடலில் சேரும் கலோரியின் எடை சுமார் 100 என்பது கவனிக்கத் தக்கது.

*

21. பெண்களுக்குத் தேவையான கலோரி இதிலிருந்து சற்று வேறுபடும். (உடல் எடை x 10) + உடல் எடை. அதாவது எழுபது கிலோ எடையுள்ள ஒரு பெண்ணுக்கு 770 கலோரிகள் தேவைப்படுகின்றன. நல்ல உடல் உழைப்பைச் செலுத்தும் நபர்கள் அதிக அளவில் கலோரிகளை உட்கொள்ளலாம்.

*

22. ஒரு கைப்பிடி அளவு வறுத்த கடலையை சும்மா உண்ணும்போது நீங்கள் உடலில் சுமார் இருநூறு கலோரிகளைச் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயணத்தின் போதோ, தொலைக்காட்சி பார்க்கும் போதோ கொறிப்பதனால் ஏற்படும் தீமைகளைக் குறித்த விழிப்புணர்வு அவசியம்.

*

23. இந்த கலோரி அளவைப் பார்த்து உண்பது பலவேளைகளில் நமக்கு முடியாமல் போகலாம். பொதுவாகப் பார்க்கும்போது, தானிய வகைகள் அதிகமாகவும், காய்கறிகள் பழங்கள் அதைவிட சற்றுக் குறைவாகவும், எண்ணை , இறைச்சி போன்ற கொழுப்புச் சத்துகள் மிக மிகக் குறைவாகவும் பயன்படுத்தும் போதும், அதிக அளவில் சாப்பிடாத போதும் நமக்குத் தேவையான கலோரிகளை மட்டுமே நாம் பெறுகிறோம்.

*

24. ஆரோக்கியமான வாழ்வுக்கு உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்விகள் இவைதான். என்ன உண்ணவேண்டும், எப்போது உண்ண வேண்டும், எங்கே உண்ண வேண்டும், எவ்வளவு உண்ண வேண்டும்.

*

25. நம்முடைய வாழ்வில் கலந்து விட்ட நோய்களுக்கு மருத்துவரைத் தேடி ஓட வேண்டிய தேவையை விட்டு விட்டு நம்முடைய அன்றாட வாழ்வின் உணவுப் பழக்கத்தை சற்றே சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலமாக மிகப் பெரிய நோய்களைத் தவிர்க்க முடியுமெனில் அதைவிடச் சிறந்த வழி ஏது.***

( தமிழ் ஓசை நாளிதழ் களஞ்சியம் இணைப்பிதழில் வெளியான நண்பர் சேவியர் கட்டுரை இது. வாழ்த்துக்கள் நண்பரே!)

***


நன்றி அலசல்.
http://xavi.wordpress.com/2007/03/24/foodhabit/

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net