Wednesday, December 2, 2009

குழந்தை வளர்ப்பு

கடுமையான விமரிசனங்களோடுவளர்க்கப்படும் குழந்தை எதையும் மட்டம் தட்டி ஒதுக்கக் கற்றுக் கொள்கிறான்.
நையாண்டி செய்து வளர்க்கப்படும் குழந்தை எதைக் கண்டும் வெட்கி ஒதுங்க ஆரம்பிக்கிறான்.
அவமான உணர்ச்சியோடு வளர்க்கப்படும் குழந்தை ,குற்ற உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகிறான்.
பொறுப்போடு வளர்க்கப்படும் குழந்தை ,நிதானத்தோடு இருக்கிறான்.
சரியான தூண்டுதலோடு வளர்க்கப்படும் குழந்தை ,தன்னம்பிக்கையோடு திகழ்கிறான்.
தக்க பாராட்டுதல்களுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லவற்றை ரசிக்க கற்றுக் கொள்கிறான்.
நியாய உணர்வோடு வளர்க்கப்படும் குழந்தை நேர்மையைக் கடைப் பிடிக்கிறான்.
பாதுகாப்போடு வளர்க்கப்படும் குழந்தை மற்றவர்களை நம்பப் பழகுகிறான்.
தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தன்னையே புரிந்து கொண்டவனாக இருக்கிறான்.
அன்பு,நட்பின் அர்த்தம் புரிந்து வளர்க்கப்படும் குழந்தை நிஜமான அன்பைக் கொடுக்கவும் ,பதிலுக்கு அதைப் பெறவும் தெரிந்து கொள்வதால் ஆயுசு முழுவதும் நிம்மதியாக இருக்கும் வழியைத் தெரிந்து கொள்கிறான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆண்டவா!

என்னால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எனக்குக் கொடு.
மாற்றக்கூடியதை மாற்றும் தைரியத்தை எனக்குத்தா.
மாற்றக்கூடியது எது ,மாற்ற முடியாதது எது என்பதைப் பாகுபடுத்தும்
தெளிவை எனக்குத்தா,ஆண்டவனே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உண்மையான பாசம்

அப்பாவுக்கு வயது 108.மகனுக்கு வயது 90.இருவரும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.அப்பா முன் கோபி.சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார்.ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார்.ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது மகன் கண்ணீர் விட்டு அழுதார்.
''இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?''என்று தந்தை கேட்ட போது மகன் சொன்னார்,''அப்பா,இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும்.நானும் பொறுத்துக் கொள்வேன்.இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை.ஐயோ,உங்கள் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்று எண்ணித்தான் அழுதேன்.''
---சீனக்கதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விலை மிகுந்த பொருள்

பாரசீக மொழியில் அழியாக் காவியங்களை எழுதியவர் மௌலானா ஜாமி.அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவைத் தாளிட்டுக் கொள்வார்.வெளியே போகும் போது கதவைத் திறந்து வைத்து விட்டுச் செல்வார்.இவ்வாறு செய்வதற்குக் காரணம் கேட்ட போது ,''வீட்டினுள் இருக்கும் போது அதற்குள் விலை மிகுந்த பொருள் நான் தான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பதவி ஆசை

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?''எனக் கேட்டான்.''வராது''என்றான் அமைச்சன்.வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போதுகடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.அவனோ,''மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.''