courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, January 10, 2011
எப்பூடி?
மாம்பழம்
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
மீன்

உலகம் அழியும்

நாடோடிப்பாடல்
முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன்.
ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு.
ரெண்டு பேர் மொண்டி-ஒத்தன் கையே இல்லை.
கையில்லாத குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி
ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி.
ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை.
ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..
ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு.
ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம்.
ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு.
ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு.
ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு.
ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு.
ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப் பல்லே இல்லை..
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
ஞாபக சக்தி
சரியான கற்றுக் கொள்ளலுக்கு சரியான கவனித்தல் முதலில் அவசியம்.சரியான கவனித்தலுக்கு மனதை வெறுமை செய்வது அவசியம்.சரியாக ஞாபகத்தில் கொள்ளுதல் என்றால் தொடர்ந்து அழுக்குகளை,குப்பைகளை வெளியேற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.மனத்தைக் குப்பைகளால் நிரப்பாதீர்கள்.உங்கள் மனம் எல்லா இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறது.இதனால் தான் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை.மனதில் அவ்வளவு ஆசாபாசங்கள் உள்ளன.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
கொடிய நரகம்
--- ஜீன் பால் சார்த்ரே சொன்ன கதை.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
களைப்பு
அப்போது அந்த வழியே சென்ற சிலர் கலைவாணரை அடையாளம் கண்டு பதட்டத்துடன் வந்து விபத்து பற்றி விசாரித்தனர். அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்து கவலை தெரிவித்தனர்.கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஒன்னுமில்லீங்க.எல்லோருக்கும் களைப்பாய் இருந்தது.எனவே வண்டியை மரத்தில் சாத்தி வைத்து விட்டு நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.''அந்த நிலையில் வேறு யாராலும் இப்படி நிதானமாகப் பேச முடியுமா?அது தான் கலைவாணர்!
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
சிறந்த அறிஞர்
அதற்கு சாக்ரடீஸ் ,''நீங்கள் டெல்பிக்குத் திரும்பச்சென்று,இது நாள் வரை அது சரியாகச் சொல்லியிருந்தாலும்,இம்முறை அது தவறு செய்து விட்டது என்று அதனிடம் கூற வேண்டும்.ஏனெனில் எனக்கு உண்மையில் ஒன்றும் தெரியாது.''செய்தி கொண்டு வந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
அவர்கள் திரும்பச் சென்று தெய்வ வாக்கிடம்,''சாக்ரடீஸ் இதை மறுக்கிறார்.அவர் உலகிலேயே சிறந்த அறிவாளி இல்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறுகின்றார்,''என்றனர்.
இங்கே தான் இந்த சம்பவத்தின் அழகே இருக்கிறது.தெய்வ வாக்கு,''அதனால்தான் அவர் உலகில் தலை சிறந்த அறிவாளியாக இருக்கிறார்.இதில் முரண்பாடு எதுவுமில்லை.''என்று கூறியது.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
தாக்குதல்
இருபது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர்,தனது மனைவியிடமிருந்து மண விலக்கு கேட்க,அவர்களது சிரிப்பை பற்றி கேள்விப்பட்டிருந்த நீதிபதி,காரணம் கேட்டார்.அவர் சொன்னார்,''அவள் என்னை அடிக்கிறாள்.நான் பலவருடங்களாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறேன்.''
நீதிபதி கேட்டார்,''இத்தனைஆண்டுகள் சமாளித்த உனக்கு இன்னும் சில ஆண்டுகள் சமாளிக்க முடியாதா?''
அந்த மனிதர் சொன்னார்,''விஷயம் அதுவல்ல.முதலில் என்னால் அவளுடைய தாக்குதல்களைத் தவிர்க்க முடிந்தது.இப்போது அவள் நன்றாகக் குறி வைக்கிறாள்.கடந்த பத்து ஆண்டுகளாக அவள் மட்டும் தான் சிரிக்கிறாள்.ஆரம்பத்தில் பாதிப் பாதியாக இருந்த பிரச்சினை இப்போது எனக்கு முழு பாதிப்பாக மாறி விட்டது.என்னால் தாங்க முடியவில்லை.நான் ஒரு முழு முட்டாளைப் போல நின்று கொண்டிருக்கிறேன்.இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது.''
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
தாய் மொழி
கோபத்தில் உங்கள் நினைவு உங்கள் வசம் இருப்பதில்லை.மேலும் இது தன் சவாலுக்கு பதில் என்பதை அவன் உணரவில்லை.அவனது மனதின் அடி ஆழத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது அவனது தாய் மொழி தான்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
சகோதரி
மறுநாள் கடுமையான போர் நடந்தது.போரஸ் அலேக்சாண்டரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்ச முனைந்த போது தன் கையிலிருந்த ரக்ஷா பந்தன் கயிறினைக் கவனித்தார்.உடனே ஈட்டியை பின்னோக்கி இழுத்து விட்டுசொன்னார்,''உன் மனைவி என் சகோதரி.அவள் விதவையாகக் கூடாது.''
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
வரம்

பட்டாம் பூச்சி
''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி தானே கிடைக்கும்,''என்றார் குரு.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
கிண்டல்
ரைலேஎவ் தூக்கு மேடை ஏறினான்.தூக்குக் கயிறு மாட்டப் பட்டது.விசையை அழுத்தும் போது திடீரெனக் கயிறு அறுந்து அவன் கீழே விழுந்தான். ரஷ்யாவில் அந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை உண்டு.இது மாதிரி தூக்கில் இட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதைக் கடவுளின் ஆணை என்று கருதி குற்றவாளியை மன்னித்து விட வேண்டும். இதனால் தூக்கிலிருந்து தாம் தப்பி விட்டோம் என்பதை உணர்ந்த ரைலேஎவ்,''பாருங்கள்,,ரஷ்யாவில் ஒரு கயிறைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லை.ரஷ்யாவை ஆள்பவர்களுக்கு எதுவுமே தெரியாது.''என்று கேலியாகக் கூறினான்.ரைலேஎவைத் தூக்கிலிடும் போது நடந்த நிகழ்ச்சியை காவலன் ஒருவன் மன்னனிடம் போய்ச் சொன்னான்.மன்னனும் நடைமுறை கருதி ரைலேஎவை மன்னிக்கும் ஆணையை தயார் செய்யச் சொன்னான்.அப்போது தற்செயலாக,மன்னன்,காவலனிடம்,''ரைலேஎவ் இது பற்றி ஏதாவது பேசினானா ?''என்று கேட்டான். காவலன் அவன் பேசிய விபரத்தைச் சொல்ல மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே மன்னிப்பு ஆணையை கிழித்தெறிந்தான்.அவனை மீண்டும் தூக்கிலிட உத்தரவிட்டான். மறுநாள் ரைநேஎவ் தூக்கிலிடப்பட்டான்.இம்முறை கயிறு ஒன்றும் ஆகவில்லை
நம் வாயிலிருந்து வார்த்தைகள் ஒரு முறை வெளியே வந்து விட்டால் அவற்றைத் திரும்பப் பெற முடியாது.எனவே வார்த்தைகளைக் கவனத்துடன் கையாள வேண்டும்.குறிப்பாகக் கேலி,கிண்டல் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.கேலி செய்யும் போது ஏதோவொரு இன்பம் தோன்றும்.ஆனால் அது தற்காலிகமானது.ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது..
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
நோயின் போது
நோயின் போது, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப் பட்டது போலவும்,தன்னை அடியோடு உலகம் மறந்து போகும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.தான் படுக்கையில் இருக்கும் போது மற்றவர்கள் இயல்பாக இருப்பது குறித்து நோயாளிக்கு ஆத்திரம் வருகிறது.தனக்காக மற்றவர்கள் வருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறான்.வாழ்க்கை தன்னைப் புரிய வைப்பதற்குசில நிகழ்வுகளையும்,தருணங்களையும் ஏற்படுத்துகிறது.உடலில் தோன்றிய நோய் நீங்கக் கூடும்.ஆனால் நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ் நாள் முழுவதும் கூட இருக்கும்.
__எஸ்.ராமகிருஷ்ணன்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
சொல்லாதே

வெற்றி வாகை
**********
கர்நாடக இசைக்கு அப்பெயர் எப்படி வந்தது?
கர்ணம் என்றால் காது.அடகம் என்றால் இனிமை.காதுக்கு இனிமையான இசை என்று பொருள்.
**********
எந்த முடிவை எடுப்பது சரியாக இருக்கும் என்ற குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்
**********
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
திருட்டு

கலங்கிய கண்கள்
இப்போது கலங்கியது எதற்கும் அஞ்சாத சாஸ்திரியின் கண்கள்!
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
விழும் போது
'நான் எழும் போது இந்த சேவல் தான் எத்தனை அன்போடும் நட்போடும் என்னை வாழ்த்துகிறது?'_சூரியன் பூரித்துப் போனது.
மாலை நேரம்.சூரியன் மேற்கே அஸ்தமிக்கத் தொடங்கியது.
''நான் விழுந்து கொண்டிருக்கிறேனே!என்னைத் தாங்க யாரும் வரமாட்டார்களா?எழும் போது வாழ்த்துக் கூறிய சேவல் நண்பன் கூட வரவில்லையே!''_ஏங்கியது சூரியன்.
''எழும் போது தாங்க வருபவன் எல்லாம்
விழும் போது தாங்க வருவதில்லை.''
சூரியன் உணர்ந்து சொல்லியது..
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
சன்மானம்
மன்னர் அமைதியாகச் சொன்னார்,''எனக்குத் தெரிந்து வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் தான் உள்ளது.கஜேந்திரன் என்ற யானை,தன காலை முதலை கடித்த போது,'ஆதிமூலமே,'என்று கூப்பிட்ட போது உடனே பெருமாள் வந்து விட்டார். அப்படியானால் வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் தானே இருக்க வேண்டும்?அவ்வளவு பக்கத்தில் இருந்து வந்த உனக்கு ஒரு பொற்காசு கொடுத்ததே அதிகம்.''
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
சிரிப்பவன்
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
மேலான வாழ்க்கை
மதிலுக்கு அந்தப் பக்கம்,தரையில் ஒரு ரோஜாப் புதர் இருந்தது.ரோஜாக்களின் அழகு,மதில் மேல் இருந்த காட்டு மலர்களின் அழகை மங்க செய்து கொண்டிருந்தன.அவமானப்பட்ட அந்த மலர்கள் கடவுளிடம் ரோஜா மலர்களாக மாற்றும்படி வேண்டிக்கொண்டன.கடவுள் சொன்னார்,''ரோஜாவின் வாழ்க்கை சிரமமானது.புயலடித்தால் வேரோடு ஆடும்.மலர்ந்தால்,பறிக்க வருவார்கள்.இப்போது இருக்கும் பாதுகாப்பான நிலையை ஏன் இழக்க வேண்டும்?''
பக்கத்திலிருந்த வேறு காட்டு மலர்களும் ரோஜாவாகி இன்னல்களை அனுபவிக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டன.அனால் அம்மலர்கள் கடவுளிடம் ஒரு நாள் முழுவதுமாவது ரோஜாவாக மாற வேண்டிக்கொண்டன.
கடைசியில் கடவுள் சம்மதித்துவிட்டார்.மலர்கள் ரோஜாவாக மாறிவிட்டன. உடனே சோதனைகளும் சிக்கல்களும் ஆரம்பமாகிவிட்டன.புயலும் மழையும் அதன் வேர்களையே அசைத்தன.பின் வெயில் அதன் இதழ்களைக் காய வைத்து விட்டன.மழை அடித்து,அதை அடியோடு பெயர்த்துக் கீழே தள்ளி விட்டது.அவை எல்லையற்ற துன்பத்தை அனுபவித்தன.
காட்டு மலர்கள் சொல்லின,''நாங்கள் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.முன்பு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது?சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை பழக்கப் பட்டவையாய் இருந்தன. நம்மால்சமாளிக்க கூடியவை.இப்போது சிக்கலில் வம்பாக மாட்டிக் கொண்டீர்கள்.''
மாறிய ரோஜா ஒன்று சொன்னது,'நீங்கள் மடையர்கள்.பாதுகாப்பான சூழலில் மதில் மேல் காலம் பூராவும் உப்பு சப்பில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் ஆபத்தான சூழலில் ரோஜாவாய் வாழ்வது மேல்.நான் கதிரவனோடு உறவாடினேன்.விண்மீன்களுடன் பேசினேன்.என் ஆன்மாவை நான் பெற்றேன்.பூரண நிறைவடைந்தேன்.நான் முழுதாக வாழ்ந்து விட்டேன்.இப்போது முழுதாக இறக்கப் போகிறேன்.ஆனால்,உங்கள் வாழ்வு,வாழும் மரணம் மட்டுமே.''
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை,மந்தமான,இருண்ட,செத்துப் போன வாழ்வைக் காட்டிலும் மேலானது.ஒளி மயமானது.
__ஓஷோ
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
மணி என்ன?

தூசி

பொன்மொழிகள் --7
**********
பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.
**********
நியாயவான் மக்களின் இதயத்திற்கு அருகில் இருக்கிறான்;
இரக்கமுள்ளவன் கடவுளின் இதயத்திற்கு அருகில் இருக்கிறான்.
**********
வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.
**********
இறைவன் சுமைகளைத் தந்தார்;ஆனால்
தோள்களையும் தந்தாரே.
**********
மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.
**********
அதிருப்தி களுக்கெல்லாம் பெயர் சுயநலமே.
**********
பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.
**********
பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.
**********
''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.
**********
துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;
நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.
**********
முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை.
**********
தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.
**********
ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.
பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.
**********
என்ன நேர்ந்திருந்தாலும் சரி;
எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.
**********
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
யார் காசு?

எதிர்மறை
நரகம் இல்லையென்றால் எல்லாக் குற்றவாளிகளும்,பாவிகளும் சுவர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்?அப்புறம் மகான்கள் எங்கே போவது?ஒழுக்க வாதிகளின் மகிழ்ச்சி ,பாவிகளின் துன்பங்களையே சார்ந்திருக்கிறது. செல்வரின் மகிழ்ச்சி,உண்மையாகவே ஏழைகளின் துன்பத்திலிருந்து தான் முளைக்கிறது.அது பணத்தால் பிறப்பதல்ல.
நல்லவனின் மகிழ்ச்சி,வெறுக்கப்படும் பாவிகளால் உண்டாவது.அது நன்மையால் மட்டும் உண்டானதல்ல.எல்லோரும் நல்லவராகி விட்டால் மகானின் மகிமையும் ஒளியும் மறைந்து போகும்.அவர் சட்டென முக்கியத்துவம் இழந்து விடுவார்.ஒரு வேளை அவர்,பழைய பாவிகளை அழைத்து,தங்கள் பழைய தொழிலைச் செய்யும்படி வேண்டலாம்.
எல்லா ஒழுக்கங்களின் முக்கியத்துவமும் அவற்றின் எதிர்மறையால் உண்டாகின்றன.ஆனால் அவை அவற்றைச் சார்ந்துள்ளன.முழுமையை ஏற்பவர்,நாம் தீமை என்று சொல்வது தீமையின் மறு எல்லை என்பதையும், நன்மை என்பது தீமையின் மறு கோடி என்பதையும் உணர்ந்து கொள்வர்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
அபிப்பிராயம்
உலகில் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசினால் பிரச்சினைகள் ஏது?
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
தன்னம்பிக்கை
அவன் சொன்னான்,''சார்,அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படாதீங்க. எழுப்பிப் பாருங்க.நான் முழிச்சிக்க வில்லைன்னா எப்படியாவது என்னை உருட்டியாவது பிளாட்பாரத்தில் தள்ளி விடுங்க,''
அவரும் சரியென்று சொல்லிட்டார்.காலையில் ரயில் தஞ்சாவூரில் நின்றது.அவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்ற போது திடீரென அந்த ஆள் வந்து இவர் கையைப் பிடித்தான்.விழுப்புரத்தில் இறங்க வேண்டியவன் தஞ்சாவூர் வந்து விட்டான்.அவனுக்கு ரொம்பக் கோபம்.''என்ன சார்,படிச்சுப் படிச்சுச் சொன்னேனே.விழுப்புரம் வந்ததும் என்னை உருட்டியாவது தள்ளி விடச் சொன்னேனே.இப்ப தஞ்சாவூருக்கு வந்து விட்டேனே.இந்நேரம் நான் தஞ்சாவூரில் அவசியம் இருக்க வேண்டுமே,''என்று புலம்பினான்.அந்த தஞ்சாவூர்க்காரர்.எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்ததும் அவனுக்கு இன்னமும் கோபம்.''என்ன சார்,நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன்.நீங்க பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களே?''என்று கேட்டான்.அவர் சொன்னார்,'அதுக்கு இல்லைப்பா.தவறுதலா தஞ்சாவூருக்கு வந்த நீயே இவ்வளவு சத்தம் போடுறியே.....,தவறுதலா நான் ஒருத்தனை விழுப்புரத்திலே வெளியே உருட்டி விட்டேனே,அவன் இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டுக்கிட்டிருப்பான்னு யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன் ...'என்றாராம்.
__தென்கச்சி சுவாமிநாதன்
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
திட்டி விட்டார்களா?
ஒருவர் திட்டினால் நாம் தவறாக நடந்து கொண்டோமா என நம்மை நாமே மனசாட்சியின் துணையுடன் சிந்திக்க வேண்டும்.ஆம் என்றால் அவர் திட்டியது சரிதான் என நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அது உண்மை இல்லாத போதுநாம் ஏன் அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
முன்பின் தெரியாத ஒருவர் திட்டினால்நம் அருமை தெரியாதவர் என அதைப் புறக்கணிக்க வேண்டும்.மிக வேண்டியவர் திட்டினால் அதன் பின்னே மறைந்திருக்கும் அக்கறையைபெரிது படுத்திப் பார்க்க வேண்டும். தவிர திட்டிய பாணியையும்,திட்டப்பயன் படுத்திய வார்த்தைகளையும் பெரிது படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.
தன தாயைப் பற்றித் திட்டியவனை வெட்டி விட்டு எத்தனை பேர் சிறை செல்கிறார்கள்?தன தாயைப் பற்றி நன்கு அறிந்தவன் கொலை செய்யும் அளவுக்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்?
தெரிந்தவர்கள் திட்டினால் பதிலுக்கு மல்லுக்கு நிற்கக் கூடாது.நடந்த சம்பவத்தைப் பற்றி தண்டோரா போட்டு திட்டியவன் காதுக்கு வேறு விதமாகச் செய்தி போய் விடக் கூடாது.திட்டியவர் தணிந்து வருவார்.அப்போது நம் பக்கத்து நியாயம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
இந்த முறையைக் கையாண்டால் நம் மீது அவர்களுக்கு அன்பு வளர நாம் வழி வகுத்து விட்டோம் என்று பொருள்.
--லேனா தமிழ்வாணன்
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
அதிசய எண்
ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை ஒன்பதால் பெருக்கி வரும் விடையை இந்த அதிசய எண்ணுடன் பெருக்குங்கள்.விடை நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணின் வரிசையாக இருக்கும்.
1x9x12345679=111111111
2x9x12345679=222222222
3x9x12345679=333333333
4x9x12345679=444444444
5x9x12345679=555555555
6x9x12345679=666666666
7x9x12345679=777777777
8x9x12345679=888888888
9x9x12345679=999999999
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
பொறுமையாக யோசி
தகப்பனுக்குத் தலை சுற்றியது.இது மகனை ஒரேயடியாக விரட்டும் வழி என்று தோன்றியது.விற்ற ஆட்டை எப்படி வீட்டுக்குக் கொண்டு வருவது?இருக்கும் ஆடுகளை விற்றால் ஒரு மாத உணவுக்குப் பணம் கிடைக்குமே?மூவருடைய சாப்பாட்டுக்கு வரும் அளவிற்கு எப்படி விற்பது?
மகன் ஆடுகளைக் கூட்டிக் கொண்டு யோசித்துக் கொண்டே சந்தைக்குப் போனான்.திடீரென ஒரு யோசனை.அதன் படி செய்தான் வெற்றியும் கண்டான்! அப்படி என்ன செய்தான்?
ஆடுகளை ஓட்டிக்கொண்டு போய்,சந்தையில் அவற்றின் கம்பளியை மட்டும் மூவரின் உணவுத் தேவைக்கு வரும் அளவிற்குக் கத்தரித்து அதை விற்று மூவருக்கு உணவு வாங்கிக் கொண்டு,கையில் பணம் ஏதும் மீதமில்லாமல் ஆடுகளையும் அழைத்துக் கொண்டு திரும்ப வந்தான்.
பொறுமையாக யோசித்தால் எந்த சோதனையையும் சந்திக்கலாம்!
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
புனிதம்

வேஷ்டி

அழுகை

பேசுதல்
பேசுதல் =பொருள் கெடாமல் பேசுதல்
கூறுதல் =கூறு படுத்திச் சொல்லுதல்
பகர்தல் =அழகாகப் பேசுதல்
சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்
பொழிதல் =இனிமையாகப் பேசுதல்
இயம்புதல் =அழுத்தமாகப் பேசுதல்
அருளுதல் =தவத்தில் சிறந்தோர் பேசுதல்
அறைதல் =தொடர்பில்லாமல் பேசுதல்
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
சாப்பாடு
அருந்துதல் =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)
உண்ணல =பசி தீர உட் கொள்ளல்
உறிஞ்சல் =வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல்
குடித்தல் =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)
தின்னல் =சுவைக்காக ஓரளவு தின்னுதல்(முறுக்கு)
துய்த்தல் =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்
பருகல் =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்
விழுங்கல் =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வலி உட்கொள்ளல் (மாத்திரை)
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
போய் விடும்
தாயோடு அறுசுவை போகும்.
தந்தையோடு கல்வி போகும்
குழந்தைகளோடு பெற்ற செல்வப் பெருமை போகும்.
செல்வாக்கு உற்றாரோடு போகும்.
உடன் பிறந்தாரோடு தோல் வலிமை போகும்.
பொன் தாலி அணிந்த மனைவியோடு எல்லாமே போய் விடும்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
ஷா அதி
**********
ஒருவன் இதயத்தைத் துன்புறுத்தும் செய்தியை நீ அறிந்திருந்தால் மௌனமாக இரு.மற்றவர்கள் அந்த செய்தியைத் தெரிவிக்கட்டும்.வசந்தத்தின் செய்தியை குயில் தெரிவிக்கட்டும்.மற்றதை ஆந்தையிடம் விட்டுவிடு.
**********
சந்நியாசியைப் பார்த்து அரசன் கேட்டான்,''என்னிடம் வெகுமதி பெரும் நோக்குடன் என்றேனும் என்னை ஞாபகப் படுத்திப் பார்த்ததுண்டா?'' சந்நியாசி சொன்னார்,'ஞாபகம் உண்டு.எப்பொழுது என்றால் நான் ஆண்டவனை மறந்தபோது.'
**********
வேதனையுடனே இருவர் இருந்தனர்.ஒருவன் செல்வம் இருந்தும் அனுபவிக்காதவன்;மற்றவன் அறிவு இருந்தும் பயன்படுத்தாதவன்.
**********
மரணமே,உனக்குக் கோடி வந்தனம்!
நீ யாருக்கு இரக்கம் காட்டினாலும் அவர்களின் துக்கம் அனைத்தும் ஓடி விடுகிறது.சுக துக்கம்,மத மாச்சர்யம் இவற்றை ஒரு நொடியில் ஒரேயடியாய் அழித்து விடுகிறாய்.உலகம் இதைத்தான் பெரும் பயணம் என்கிறது.
ஏ மரணமே,உனக்குக் கோடி வந்தனம்!
**********
பக்திமான் ஒருவர் கண்ட கனவில் அரசன் சொர்க்கத்திலும்,துறவி நரகத்தில் இருப்பதாகவும் தெரிந்தது.முரண்பட்ட இந்நிலைக்கு அவர் பெரியவர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார்.
பெரியவர் சொன்னார்,''துறவியிடம் காட்டிய அன்புக்குப் பரிசாக அரசனுக்கு சொர்க்கம் வழங்கப்பட்டது.அரசனிடம் கொண்டிருந்த தொடர்புக்குத் தண்டனையாக துறவிக்கு நரகம் தரப்பட்டது.''
**********
கோடைக்காலத்தில் பழுத்துக் குலுங்கும் மரம் குளிர் காலத்தில் ஒரு இலை கூட இல்லாமல் ஆகி விடுகிறது.இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாத ஊதாரி,தனக்கு ஒரு கஷ்டம் வரும் என்பதை மறந்து விடுகிறான்.
**********
துறவி ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டார்,''ஆண்டவனே,கொடியவர்கள் மீது கருணை வையுங்கள்.ஏனென்றால் நல்லவர்கள் மீது ஏற்கனவே கருணை காட்டி விட்டீர்கள்.நல்லவர்களாக அவர்களைப் படைத்ததே அந்தக் கருணையால் தானே!''
**********
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
இறந்தவன்

சாப்பாட்டு ராமன்

பெறுமானம்
ஞானி ;நீங்கள் ஒரு பாலைவனத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள்.கடுமையான தாகம்.எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.தாகத்தால் நாவறட்சி.அப்போது ஒருவன் ஒரு அழுக்குப் பாத்திரத்தில் அழுக்குத் தண்ணீருடன் வந்து அதைக் கொடுக்க பாதி நாட்டைக் கேட்டால் என்ன செய்வீர்கள்?
அரசன்; சந்தேகம் என்ன?தண்ணீரை வாங்கி பாதி நாட்டைக் கொடுப்பேன்.
ஞானி; சரி,அந்த அழுக்கு தண்ணீரைக் குடித்ததால் வியாதி வந்து யாராலும் குணப்படுத்த முடியாத நிலையில்,யாராவது ஒருவர் அதைக் குணப்படுத்தும் மூலிகையைக் கொண்டு வந்து அதற்கு ஈடாக மீதி நாட்டையும் கேட்டால் கொடுப்பீர்களா?
அரசன்; கட்டாயம் மீதி நாட்டைக் கொடுத்து மூலிகையைவாங்குவேன்.
ஞானி; அப்படியானால்,கேவலம் ஒரு பாத்திர அழுக்கு நீரும்,ஒரு மூலிகைச் செடியுமே பெறுமானமுள்ள உங்கள் நாட்டைக் குறித்து உங்களுக்கு ஏன் கர்வம்?
அரசன் வெட்கத்தினால் தலை கவிழ்ந்தார்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
ஓரெழுத்து வார்த்தை
அ =எட்டு ஆ =பசு ஈ =ஒரு பூச்சி உ =சிவன் ஊ =தசை
ஐ =ஐந்து ஓ=மதகு நீர் தாங்கும் பலகை கா =சோலை கு =பூமி
கூ =பூமி கை =கரம் கோ =அரசன் சா =இறப்பு
சே =அழிஞ்சில் மரம் சோ =மதில் தா =கொடு
து =பறவை இறகு தே =நாயகன் தை =ஒரு மாதம்
நா -நாக்கு நௌ =மரக்கலம் பா =பாட்டு பூ =மலர்
வை =வைக்கோல் பே =மேகம் பை =பாம்புப் படம் மா =மாமரம்
மீ= ஆகாயம் மூ =மூன்று மை =அஞ்சனம் யா =அகலம்
வீ=பறவை தீ =நெருப்பு து= உணவு
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
நினைத்த எண் எது?
அதனை தொடர்ந்து அதே எண்ணை மீண்டும் எழுதி ஆறு இலக்க எண்ணாக ஆக்குங்கள்.
அதை ஏழு கொண்டு வகுங்கள்.
வந்த விடையை பதினொன்றால் வகுங்கள்.
கிடைத்த எண்ணை பதிமூன்றால் வகுங்கள்.
இப்போது கிடைத்த விடை நீங்கள் முதலில் நினைத்த எண்.சரிதானா?
உதாரணம்;
மூன்று இலக்க எண் = 369
மீண்டும் எழுதினால் = 369369
ஏழு கொண்டு வகுத்தால்= 52767
பதினொன்றால் வகுத்தால் = 4797
பதிமூன்றால் வகுத்தால் = 369
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
மரம்
மரமது மரத்தில் ஏறி மரமதை தோளில் சுமந்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வலைமனை வரும்போது
மரமது கண்ட மாதர் மரமோடு மரம் எடுத்தார்.
இதன் பொருள்;
மரமது மரத்தில் ஏறி =அரசன் (அரச மரம்) மரத்தினால் செய்த தேரில் ஏறி
மரமதைத் தோளில் சுமந்து =மூங்கில் மரத்தை வளைத்து செய்யப்பட வில் அம்புகளை சுமந்து வேட்டைக்குப் போகிறான்.
மரமது மரத்தைக் கண்டு=அரசன் ஒரு வேங்கையை(வேங்கை மரம்)
பார்த்தான்.
மரத்தினால் மரத்தைக் குத்தி=மரப்பிடி கொண்ட ஈட்டியால் அவ்வேங்கையைக் குத்திக் கொன்றான்.
மரமது வழியே சென்று=காட்டு வழியே தொடர்ந்து சென்றான்.
வலைமனை வரும்போது=அரண்மனை திரும்பும் போது
மரமது கண்ட மாதர்=அரசனை,அரசனின் தேரைப் பார்த்த மக்கள்
மரமோடு மரம் எடுத்தார்=ஆலத்தி(ஆல்,அத்தி)எடுத்தனர்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
ஒப்புமை

மாக்கியவெல்லி
*ஆள்பவன் தேவைக்குத் தகுந்த மாதிரி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*ஒரு அரசன் நம்பிக்கை வைப்பதிலும் செயலாற்றுவதிலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமாக நம்பிக்கை வைத்து ஏமாந்து போகவும் கூடாது:அதிக சந்தேகம் கொண்டு திறமையற்றவனாகவும் கூடாது.
*தங்களை அன்பு காட்டச் செய்கின்றவனுக்கு குற்றம் செய்வதைக் காட்டிலும்,அச்சமுறச் செய்பவனுக்கு குறைவாகவே குற்றம் இழைப்பது மனிதர் இயல்பு. ஏனெனில் அன்பு மனிதர்களின் சுய நலத்தில் எழுவது. நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள்.அது நின்று போனதும் அன்பும் அறுந்து போகும்.ஆனால் தண்டனை,பயத்தால் ஏற்படக் கூடியதால் எப்போதும் அவர்கள் உள்ளத்தை விட்டுப் போகாமலிருக்கும்.
*பிறருடைய சொத்துக்களை மட்டும் பறித்துக் கொள்ளக் கூடாது.தங்கள் தந்தை இறந்ததைக் கூட எளிதாக மக்கள் மறந்து விடுவர்.ஆனால் சொத்தை இழப்பதை மட்டும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
*செழிப்பு இல்லாத நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலற்று சுறுசுறுப்பாகவும் ஒற்றுமையாகவும் வறுமையைத் தவிர்க்கப் போராடும் குணமுள்ளவர்கள் ஆகவும் இருப்பர் .வளமான நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலுடன் இருப்பர்.அங்கு உழைப்பைப் பெருக்க சட்டங்கள் மூலம் தான் கட்டாயப் படுத்த வேண்டும்.
*ஒரு நாட்டில் குடியாட்சியை நிறுவியவர்கள் தலைமுறை இருக்கும் வரை தான் அது ஒழுங்காக நடக்கும்.அதற்குப் பிறகு கட்டுப்பாடற்ற தன்மை மிகுந்து பொது நலத்திற்கும் தனியார் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் படியான நிலைமை ஏற்படும்.
*வதந்திக்கும் குற்றச்சாட்டிற்கும் பெரிய வேற்றுமை இருக்கிறது.வதந்தியை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.நேருக்கு நேர் பழி சுமத்த
வேண்டியதில்லை.எனவே வதந்தியை எளிதாக ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும்.குற்றச்சாட்டோ,பொறுப்பானவர்கள் முன்னிலையில் சான்றுகளுடன் தான் ஏற்றுக் கொள்ளப்படும்.பொதுவாக குற்றம் சாட்ட வழியில்லாத இடங்களில் தான் வதந்தி பெரும்பாலும் பரப்பப்படுகிறது.
*மனிதர்கள் போராடி தேவைகளைப் பெற்றபின் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள்.
*பெரும்பாலான மக்கள் தங்கள் கௌரவத்தைக் காட்டிலும் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.
*தங்கள் ராஜ்ஜியத்தை இழக்கக் கூடிய யாரும் அதைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உறுதியை மீறி நன்றிகெட்ட தனமாகவும் குறை கூறத் தக்க நிலையிலும் நடந்து கொள்வார்கள்.அச்சமுற்ற நிலையிலுள்ள யாரும் நம்பிக்கைக்கு அருகதை அற்றவர்களாகவே இருப்பார்கள்.
*சூழ் நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விருப்பப்பட்டபடி நடத்த முடியாது.அவர்கள் நியாயமாகத் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் நம்பப்பட மாட்டார்கள்.அவர்கள் நிம்மதியாக வாழ மற்றவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் .
*மனிதர்கள் தங்கள் மனப்போங்கின் படியும் குணத்தின் படியும் செயலாற்றுகிறார்கள்.ஆனால் இன்னொரு புறத்தில் காலமும் சூழ் நிலையும் மாறிக் கொண்டே இருக்கிறது.தன போக்கின் படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள் காலத்திற்கும் சூழ் நிலைக்கு பொருந்தி விடுகின்ற போது அந்த மனிதன் தன காரியத்தில் தான் எதிர் பார்க்கும் பலனை அடைகிறான்.பொருந்தாத போது அவன் தோல்வி அடைகிறான்.அதனால் தான் மனிதனுக்கு ஒரு நேரம் அதிர்ஷ்டமும் மற்றொரு நேரம் துரதிருஷ்டமும் உண்டாகின்றன.
.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
மேகங்கள்
மகன் சொன்னான்,''அப்பா!நீங்கள் சொல்வது உண்மைதான்.ஆனால் உங்கள் வாழ்விலிருந்து ஒன்று தெரிந்து கொண்டேன்.செல்வமிருந்தால்,உங்களுக்கு எந்த வகைத் துன்பம் வேண்டுமோ,அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.இது நல்ல விஷயமல்லவா?நீங்கள்மகிழ்ச்சியாய் இல்லை என்பது எனக்குத் தெரியும்.ஆனால் உங்களுக்குப் பிடித்த துன்பத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்.ஏழைக்கு இந்த வாய்ப்பு ஏது?அவனது துயரம் சூழ்நிலையால் அவன் மீது சுமத்தப் பட்டது.அதை அனுபவிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.பணக்காரனின் துன்பத்திற்கும் ஏழையின் துன்பத்திற்கும் இது தான் வேறுபாடு.ஏழை தனக்கென வாய்த்த மனைவியால் மட்டுமே துன்பப்பட வேண்டி வரும்.ஆனால் பணக்காரன் எந்தப் பெண்ணால் துன்பம் வேண்டுமோ,அவளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதி பெற்று விடுகிறான்.இது ஒரு முக்கியமான,மகிழ்ச்சியான விஷயம் அல்லவா?''
ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்,இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.எனக்கு இன்பம் தருவது உங்களுக்கு துன்பமாக இருக்கலாம்.ஒரு கோடி ரூபாய் என்னிடம் இருந்து அதில் ஒரு பாதியை உங்களிடம் நான் இழந்து விட்டால்,ஐம்பது லட்சம் இருந்தும் கூட எனக்கு துக்கமே உண்டாகிறது.ஒன்றுமே இல்லாதிருந்த உங்களுக்கு ஐம்பது லட்சம் கிடைத்தவுடன்,உங்களுக்கு மகிழ்ச்சியில் பைத்தியமே பிடித்து விடும். எப்படியோ நாமிருவரும் பொருளாதார ரீதியில் ஒரே நிலையில் தான் இருக்கிறோம்.ஒவ்வொருவர் கையிலும் ஐம்பது லட்சம்.நான் சுவரில் தலையை மோதிக் கொண்டு கதற நீங்கள் ஆனந்த வசப்பட்டு கொண்டாடி மகிழ்கிறீர்கள்.
ஆனால் நினைவில் வையுங்கள்!உங்கள் மகிழ்ச்சி நீடிக்காது.கிடைத்தது போய் விடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.அது போல என் துக்கமும்மெல்லக் கரைந்து போகும்.ஏனென்றால் இழந்தவன் அதைச் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான்.
வாழ்க்கை வழிகள் விசித்திரமானவை.என் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சியாகாது.என் துயரமும் உங்கள் துயரம் ஆவதில்லை.இன்றைய என் மகிழ்ச்சி கூட எனது நாளைய மகிழ்ச்சியாவதில்லை.இன்றைய கணத்தின் மகிழ்ச்சி அடுத்து தொடரும் என்று சொல்ல வழியில்லை.இன்ப துன்பங்கள் வானில் நகரும் மேகங்களைப் போல.அவை வரும் போகும்.