Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Thursday, June 9, 2011

படித்ததில் பிடித்தது !!!

ஒரு ஐ.டி துறையை சார்ந்த ஒரு மனிதன் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டர வச்சுகிட்டு ஒரு ஆற்றின் ஓரமா தன்னோட வேலைய அதுல பாத்துட்டுருந்தான்.அப்பொழுது கைத்தவறி அந்த கணினி ஆத்துல விழுந்துருச்சு.அந்த சமயத்துல கடவுள பாத்து வேண்டுறான்,எப்படியாவது கிடைச்சுரனும்னு.அப்படியே வேண்டிட்டு இருக்கும்போது அந்த ஆத்துல இருந்து ஒரு தேவதை வந்து என்ன ஆச்சுனு கேட்டது.இவனும் நடந்த விவரங்கள் எல்லாத்தையும் கூறினான்.உடனே தேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு சின்ன வடிவத்தினால் ஆன ஒரு பென் ட்ரைவ்(pen drive) மாதிரி ஒன்ன எடுத்துட்டு வந்து இதுதானா? அப்படினு கேட்டது,இவன் அதற்கு"இது இல்ல"னு பதிலளித்தான்.உடனே அது திரும்பவும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு "கால்குலேட்டர்(calculator)" மாதிரியான பொருளை கொண்டு வந்து இடுதானா என வினவியது.இப்பவும் மனிதன் "இது இல்ல"னு சொன்னான்.தேவதை மூணாவது முறையும் மூழ்கி இவனுடைய லேப் டாப்(laptop) ப எடுத்துட்டு வந்தது.இந்த முறை மனிதன் இதுதான் என்னுடையதுனு சொன்னான்.நம்ம கதையில வர மனுஷ பய புள்ள இருக்கானே இந்த மாதிரியெல்லாம் நடந்த உடன் அவனோட சிறு வயது நியாபகம் வந்தது.உழவன் ஒருவன் இந்த மாதிரி கோடாரி ஒன்ன ஆத்துல தவற விட்ருவான்,அப்ப தேவதை என்ன பண்ணும்,வெள்ளி ல ஒன்னும்,தங்கத்துல ஒன்னுமா எடுத்துட்டு வந்து கேட்கும்.உழவன் அவனோட கோடாரிய மட்டும் என்னோடதுனு சொன்ன உடனே இவனோட நேர்மைய பாராட்டி அந்த மூன்று கோடாரியயும் அவனிடமே கொடுத்து விடும்.இப்ப இங்க வருவோம்.மனிதன் சொன்னானா,லேப் டாப் மட்டும்தான் என்னோடதுனு.அதற்கு தேவதை லேப்டாப் ப குடுத்துட்டு ஒரு சிரிப்பு சிரித்தது.மனிதன் கேட்டான் ஏன் சிரிக்கிற என்னைய பாத்துனு? தேவதை சொன்னது" நான் முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் காட்டினது பல மில்லியன்,ட்ரில்லியன் குடுத்து வாங்க வேண்டிய எதிர் காலத்துல வரக்கூடிய கம்ப்யூட்டர்"எதுவுமே நமக்குதான் தெரியும்னு இருக்காதனு சொல்லிட்டு மறைந்தது.மனிதனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தன் தவறு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, June 7, 2011

படித்து பாருங்கள்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, November 20, 2010

நகைச்சுவை தொகுப்பு - 1

டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?


தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?

குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல!
மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்!
எப்படி?
ஆம்! என்னுடைய ரேங்க் கார்டைப் பார்த்தே, என் அப்பா வந்து என்னை என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லி விடுவார்!

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?


பாபு: என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்!
கோபு: ம்ம். நீ கொடுத்து வைத்தவன்!
பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!

கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை தொகுப்பு - 2

ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சி நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் வாங்கித் தாருங்கள்!
மாணவன்: ஏன் சார், இந்தியா என்ற பெயர் நல்லா இல்லையா?

மின்னலப் பார்த்தா கண் போய்டும்!
பார்க்கலேன்னா?
வேறென்ன? மின்னல் போய்டும்....

அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!

மாணவன்: சார், செய்யாத விசயத்துக்கு தண்டனை உண்டா?
ஆசிரியர்: இல்லை. ஏன் கேட்கிறாய்?
மாணவன்: நான் வீட்டுப் பாடம் செய்யலை! அதான் கேட்டேன்!

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!

அப்பா (தன் நான்கு வயது மகனிடம்) : உனக்கு தம்பி பாப்பா வேணுமா? இல்ல தங்கச்சிப் பாப்பா வேணுமா?
மகன்: எனக்கு உங்க தங்கச்சியோடப் பாப்பாதான் வேணும்!

அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!

ரெண்டு பேர் ஒற்றுமையா இருக்கிறது எனக்குப் பிடிக்கவில்லை!
ச்சே! நீயெல்லாம் ஒரு மனுசானாயா? ஏன் உனக்குப் பிடிக்கல?
யோவ்! திருடனும், போலீசும் ஒற்றுமையா இருந்தா எப்படியாப் பிடிக்கும்?

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?
மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த படம்தானாம் அது....

என்ன ஆபரேஷன் தியேடேர் வாசலில் மாலை தொங்குது?ஆபரேஷன் ஸக்ஸெஸ்நா டாக்டருக்கு, இல்லேனா பேசண்டுக்கு!

கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா?
மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?
கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு... அதான் கேட்டேன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை தொகுப்பு - 3

தொடர்ந்து சீரியசான பதிவா போட்டதால, ஒரு ஜாலிக்காக இந்த பதிவு. படித்து ரசியுங்கள். சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!!

1) ஒரு பத்து நிமிசம் லேட்டா வந்திருந்தா அவரை காப்பாற்றி இருக்கலாம்.
எப்படி?
டாக்டர் வீட்டுக்கு போய்ருப்பார்..

2) கணவன்: உங்க அப்பா போல் இந்த உலகத்தில் ஒரு முட்டாள் இல்லை.
மனைவி: இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு பத்து வருசம் முன்னாடியே தெரியும்.
கணவன்: எப்படி?
மனைவி: உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வாச்சுருக்காரே... இது ஒண்ணு போதாதா?

3) மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!
ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!
முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!
அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!

4) மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!

SMS-ல் வந்தது!

1) ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும். ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டாண்ட் கூடவே போகுமா?
------ பஸ் ஸ்டான்ட்ல சைக்கிள ஸ்டாண்ட் போட்டு யோசிப்போர் சங்கம்.

2) கடவுள் உங்கள் சந்தோசங்களை அதிகரிக்க செய்யட்டும் தினமும், தங்கத்தின் விலையைப் போல!
மேலும் உங்கள் வருத்தங்களை குறைக்கட்டும், நமிதா ஸ்கர்ட்டைப் போல!!

3) லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான். ----- எப்பூடி..........

4) லவ் என்பது ஏழாவது அறிவு, அது மத்த ஆறு அறிவையும் அழித்து விடும். --- வேறு எங்கும் இந்த தத்துவத்தை இதுவரை எழுதவில்லை!!

5) வாழ்க்கை என்பது 5 ஸ்டார்.
முதலாவது ஸ்டார் “SSLC Girl”
இரண்டாவது ஸ்டார் “+2 Girl”
மூன்றாவது ஸ்டார் “College Girl”
நான்காவது ஸ்டார் “Wife”
டாப் ஸ்டார் “Wife’s Sister”

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை தொகுப்பு - 4

1) பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா டாக்டர்?
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!

2) காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..?

3) அம்மா: என் பையன் தெரியாம ஒரு காயினை முழுங்கிட்டான்!
டாக்டர்: ஒரு ருபாய் காயினா அல்லது இரண்டு ருபாய் காயினா?
அம்மா: அதுதான் தெரியாம முழுங்கிட்டான்னு சொன்னேனே!

4) என்னடி உன் புருஷன் நடு சாமத்துல குழந்தைய கொஞ்சிக்கிட்டு இருந்தாரு?

அதுவா... குழந்தைய இல்லடி.. என்னதான் கொஞ்சிக்கிட்டு இருந்தாரு!

அதுக்கு சமையல் ரூம்தான் கிடைத்ததா?

என்னது? சமையல் ரூமா? அங்க வேலைக்காரிதானே தூங்கிட்டு இருந்தா?!?...

5) போன வாரம் எங்க வீட்டு கிணத்துல என் மாமியார் விழுந்து இறந்துட்டாங்க!

ம்ம்... எங்க வீட்லயும்தான் கிணறு இருக்கிறது! மாமியாரும் இருக்குறாங்க! ... அதுக்கல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்....

அட... எல்லாம் தானே நடக்கும்னு சும்மா இருந்தா எப்படி? நம்ம முயற்சியும் இருக்கணும்தானே!?...


6) அய்யையோ... வயுத்துக்குப் பதிலா முதுகுல ஆபரேஷன் செஞ்சுட்டீங்க டாக்டர்!

யோவ்! ஒன்ன எவன்யா ஆபரேஷன் தியேடேர்ல குப்புற படுக்க சொன்னது?

7) உங்க மாமியார பிழைக்க வைக்க ரொம்ப கஷ்டப் பட்டுடேம்மா!

உங்கள யார் டாக்டர் தேவையில்லாம கஷ்டப்பட சொன்னது?

8) காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா போய்டனும்க!

காதலன்: கண்டிப்பா!.... ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா!....

காதலி: ?!?...

9) மன்னர்: என்ன மந்திரியாரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?
மந்திரி: அது எங்கே பொழிகிறது மன்னா? மக்கள்தான் உங்களை வசைமாரி பொழிகிறார்கள்!!
மன்னர்: ?!?

10) ஒரு குளத்துல 20 எறும்புகள் குளித்துக் கொண்டு இருந்ததாம்! அப்ப ஒரு யானை டக்குனு குளத்துல குதித்ததாம். தண்ணி தெறிச்ச வேகத்துல 19 எறும்புகள் குளத்துக்கு வெளியே வந்து விழுந்ததாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலை மேல ஏறிடுச்சாம். அப்ப கரையில இருந்த 19 எறும்புகளும் கோரசா கத்துச்சாம். என்னன்னு கத்துச்சாம்.....?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
டேய் மாப்ள! அவன அப்டியே தண்ணில போட்டு அமுக்கிப் புடிடா!!!

எப்பூடி?.........

?

?

?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, November 15, 2010

வைரமுத்து அவர்களின் காதலித்து பார் கவிதை





courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, April 14, 2009

பத்து மொக்கை தத்துவங்கள்

தத்துவம் நம்பர்1




காலில் ஆணி


என்னதான் நம்ம காலில் ஆணி இருந்தாலும் அதுல காலண்டர் மாட்ட முடியுமா?

தத்துவம் நம்பர்2



ஆட்டோ

ஆட்டோக்கு ஆட்டோன்னு பேர் இருந்தாலும் மேனுவலா தான் ஓட்ட முடியும்

தத்துவம் நம்பர்3


மெழுகு வர்த்தி

மெழுகுவர்த்தில மெழுகு இருக்கும் ஆனா கொசுவர்த்தில கொசு இருக்காது....

தத்துவம் நம்பர்4

சாலை

சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து

தத்துவம் நம்பர்5




மைசூர்பாகு சாப்ட்டா சுகர் வரும் சுகர் சாப்ட்டா மைசூர்பாகு வராது

தத்துவம் நம்பர்6

ஹைஹீல்ஸ்

எவ்வளவு குட்டையா இருந்தாலும் ஹைஹீல்ஸ் போடலாம்
எவ்வளவு நெட்டைய இருந்தாலும் லோஹீல்ஸ் போடமுடியாது.....

தத்துவம் நம்பர்7



குவார்ட்டர்

குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது

தத்துவம் நம்பர்8

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம் ஆனா
1000 யானை நினைச்சாலும் ஒரு எறும்ப கடிக்க முடியாது...

தத்துவம் நம்பர்9

முடி

குலவி கொட்டுனா வலிக்கும்
தேள் கொட்டுனா வலிக்கும்
ஆனா முடி கொட்டுனா வலிக்குமா?

தத்துவம் நம்பர்10



பேக் கட் ஆனா தைக்கலாம்
துணி கட் ஆனா தைக்கலாம்
கரண்ட் கட் ஆனா தைக்கமுடியுமா?

நன்றி www.thathuvam.com

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net