Sunday, March 20, 2011

வெற்றிலை மருத்துவ குணங்கள்

வெற்றிலை என் நட்டில் தம்புல‌ம் நினைவுக்கு வரும். நாம் இதனை அனைத்துக்கும் நல்ல மற்ற சகுணத்துக்கும் இந்த வெற்றிலை இல்லாமல் நடக்காது. சாப்பிடுவதுக்கு முக்கியமாக கும்பகோணம் வெற்றிலை மிகவும் பிரபலம்.தமிழ்நாட்டில் கும்பகோணம் பகுதியிலும், தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனூர் பகுதியிலும் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இருப்பினும் வெற்றிலை என்றால் கும்பகோணம் தான் என்கிற அளவிற்கு கும்பகோணம் வெற்றிலை பிரசித்தம். வெற்றிலைப் பயிருக்கு பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியம் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.
வெற்றிலையில் கருகருவென்று கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும் இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்த வெற்றிலைக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதால் சித்த மருத்துவத்தில் இது பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் மட்டுமில்லை வெற்றிலை சில சம்பிரதாயங்களுக்காகவும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*


இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது.*

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

***


இதன் மருத்துவ குணங்கள்:


*


வயிற்றுவலி:


*

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.


***

தலைவலி:

*

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.


***

தேள் விஷம்:

*

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.


***


சர்க்கரை வியாதி:

*

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.***அல்சர்:

*

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.


***


வெற்றிலை ஒரு சில நாட்டில் எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்:


*


1. சீனர்கள் வெற்றிலையை இடது கையால் வாங்க மாட்டார்கள். நம் நாட்டிலும் இப் பழக்கம் இருந்து வருகிறது.


*


2. சுமித்ராவில் மனைவியை விட்டுப் பிரிய விரும்பும் கணவன் வெற்றிலையை அவளிடம் கொடுத்துத் "தலாக்" என்று மூன்று தடவை கூறி விட்டால் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம்.


*


3. தூக்கிலிடுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் மியான்மரில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.


*


4. சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகளுக்கு மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல் வராமல் இருக்க அவர்களுக்கு வெற்றிலை கொடுப்பது நெதர்லாந்து நாட்டின் வழக்கம்.


*


5. சண்டை போட்டுக் கொள்பவர்கள் சமாதானம் அடைய வெற்றிலை மாற்றிக் கொள்வது மலேசியா வழக்கம்.


***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சீரகத்தின் மருத்துவ குணங்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு  தெரியுமா?

*
காய்ந்த சீரக விதைகள்சீரகம் வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும், மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது. காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.


***


மருத்துவப் பயன்கள்

*

1.  தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

*


2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

*


3. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

*

 4. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.


*

5. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.


*


6. வாரம் ஒரு முறை   இதைச் சாப்பிடலாம்.  உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.*


7. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.


*

8. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.


*


9. அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.


*


10.   சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

*


11. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

*


12. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

*


13. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.                                                                *
14.   ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
 
 
*
 
15. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.*


16.   சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.*

17. சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.


*

18. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.


*


19. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


*


20. நாட்பட்ட கழிச்சல் தீர மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் தரும். இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, தோல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது,

பசியின்மை, வயிற்றுப்பொருமல்,சுவையின்மை,நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம்+கொத்தமல்லி+சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.


*


21. வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.


*


22.   கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.


*


23. தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.    விக்கலை நிறுத்தும்.


*


24.   சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.

*


15.   " ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"


செய்முறை :

ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்ப்ட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்ப்டலாம்.
மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் தீரும்.
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொது அறிவு துணுக்குகள்

இந்த தகவல்கள் புதிதாகவும், சிலசெய்தி அறியாததாகவும் இருந்ததால் இங்கு பதிக்கிறேன்.
வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள்:
*
1. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.
*
2. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.
*
3. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
*
4. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
*
5. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.
*
6. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.

***
சுறா செய்திகள்:
*

1. கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
*
2.சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.
*
3.சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
*
4.எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
*
5. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
***
நாய்களுக்கு ரத்த வங்கி:
*

1. நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.
*
2.கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.
*
3. தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.
*
4. கிரேக்க மேதையான சாக்ரடீஸýக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
***
தென்னை செய்திகள்:
*

1. தென்னை மரம் 100 ஆண்டு காலம் ஆயுள் என்றாலும், 80 ஆண்டுகளுக்கு மேல் பலன் தராது.
*
2. தென்னை உஷ்ண மண்டல பயிர். அதனால் குளிர் பிரதேசங்களில் விளையாது.
*
3. இலங்கை, மலேசியா, சுமத்திரா (இந்தோனேஷியா), கிழக்கிந்திய தீவுகள் ஆகிய பகுதிகளில் தென்னை மரம் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
*
4. கிட்னி சம்பந்தமான நோய்களையும், மஞ்சள் காமாலையையும் தடுக்க வல்லது இளநீர்.
*
5. அந்தமான் நிக்கோபார் தீவில் தென்னை முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
***
நைல் நதியின் நீளம்:
*

1. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
*
2. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
*
3. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
*
4. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
*
5. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
*
6. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா.
*
7. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை
ஊங்காரக் குருவி.
***
நத்தைகள்:
*

1. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.
*
2. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.
*
3. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
*
4. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
*
5. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
*
6. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.

***

மூளையின் எடை:
*
1. விக்டோரியா ராணிக்கு முடிசூட்டும் போது அவருக்கு 13 வயதுதான்.
*
2. திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ.
*
3. யானையின் மூளையின் எடை 6 கிலோ.
*
4. தேவாங்கு சாப்பிடும் பொருளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் சாப்பிடும்.
*
5. குழி முயல் நீர்ச்சத்து நிறைந்த புல், முட்டைக்கோஸ், காரட், முள்ளங்கிக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் தண்ணீரே அருந்துவதில்லை.

***
முக்கிய அமிலங்கள்:
*

1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
*
2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
*
3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
*
4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
*
5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
*
6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.

***
நன்றி தினமணி.
நன்றி இதை எழுதிய ஆசிரியர்கள்.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Siruvarmani&artid=59716&SectionID=145&MainSectionID=145&SEO=&Title


***


***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யோகா கலை

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.
*
இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்சியைக் கொடுக்கிறது. இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள். தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதன் பெருமையைச் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.
***
யோகா செய்வது யாருக்கு பயன்:
*

கர்ப்பிணிப் பெண்ணொருவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி.

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம் செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.
*
இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.
***
யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா:

*

உட்கார்ந்து எழுந்து, கையைக் காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா. கீழே சற்று விரிவாக வகைப்படுத்தியுள்ளேன்..
*
யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு)
*
இதில் குறிப்பிட்ட யோகா:
*
1. பக்தி யோகா
2. கர்ம யோகா
3. பதஞ்சலி யோகா முறை
4. ஜனன யோகா
5. ஹத்த யோகா
6. குண்டலினி யோகா
*என்று பிரிவுகள் உண்டு...

***
ஒவ்வொன்றையும் விளக்கி வாசகர்களைத் துயிலில் ஆழ்த்த நான் விரும்பவில்லை எனினும், யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது என்பதையும் ஆழமாகப் பதிக்க விரும்புகிறேன்.
*

ஏதாவது புத்தகத்தை வாங்கி யோகா படித்துக்கொள்ளலாம் என்று மணிமேகலைப்பிரசுரத்தின் குண்டலினி யோகம் புத்தகத்தையோ அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ வைத்துப் பழகுவது முழுமையான பலன் தராது. ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்.
*
சக்கரம்,வட்டம் என்று புரியாத விடயங்களைச் சொல்லி பணம் பறிக்கும் கூட்டமும் உண்டு. யோகா என்ற பெயரில் குனிந்து நிமிரவைத்து பணத்தைப் பறித்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள். அதனால் நல்ல தரமான ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது முதற்படியாக இருக்கட்டும்.
*

வெளிநாடுவாழ் இந்திய நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் சொன்னார், பேசாமல் யோகா கற்றுக்கொடுக்கும் தொழிலில் இறங்கப்போவதாக. நான் அவரிடம் வினவியது, நண்பரே உமக்குத்தான் யோகா தெரியாதே, எனக்குத் தெரிந்து நீர் எந்தப் பயிற்சிக்கும் சென்றதில்லையே என்று.
*

அவரின் பதில் என்ன தெரியுமா?
*

"இணையம் எதற்கு இருக்கிறது?" என்பதே. அதனால் தாங்களிருக்கும் நகரில் யோகா கலையைக் கற்றுக்கொடுக்க விரும்புபவர்கள் முறையாகப் பயின்று பிறகு தொடங்க வேண்டும். சென்னையில் கூட யோகாவை தொழிலாக ஏற்க நண்பர்கள் முன்வரவேண்டும். எங்கள் நிறுவனத்தில் யோகாப் பயிற்சியாளரின் சம்பளம் (50 மாணவர்கள் - தலா இரண்டாயிரம் மாதம்) - ஒரு லட்சம் ரூபாய். அவர் எங்கள் நிறுவனம் போல பத்து நிறுவனங்களில் செயற்படுகிறார். ஆக யோகா கலை வெறும் கலை மட்டும் அன்று, உபயோகமாகவும் செயற்படுத்தும் முறை உள்ளது.


***
by- செந்தழல் ரவி
***

நன்றி ரவி.


***


யோகா உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த தயாரா ஆகிட்டிங்கலா நண்பர்களே!
***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்

உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்:

*


ஒரு குழந்தையை ஒரு தாய் ஈன்ற போது ஏற்படும் மகிழ்ச்சியை விட இதுபோல் நாம் செய்தால் பல மடங்கு மகிச்சி நமக்கு ஏற்ப்படும். ஆம்!


*


ஒரு உயிரை காக்கும் மருந்து ( உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம் ) இந்த தொப்புள்கொடி ரத்தில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். இதை அனைவரும் கட்டாயம் முன் வந்து சொய்ய வேண்டும்.


*


இதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. பிலீஸ் நண்பர்களே நாமும் இதில் கை கோர்ப்போம் வாருங்கள்.
இறைவனுக்கும் நன்றி சொல்லுவோம்.


***


இனி இதை பற்றி பார்ப்போம்:


*


சிசுவின் ஜனனம் என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை "பத்திரமாக" இருக்கச் சொல்கிறோம். கரு "நிலைக்க / தங்க" வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.


**
*


இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கை, கால், கண், நாடி, நரம்பு என்று எல்லாமே இந்த Stem cell இல் இருந்து specialise ஆகி உருவானது தான். இப்படி "நாம்" உருவாக காரணமாய் இருக்கும் stem cells இன்னமும் நம் உடம்பில் எலும்பு ஊனில் (Bone Marrow) உற்பத்தியாகிறது. அதனால் தான் சிறுகாயங்கள் தானாகவே "சரியாகிறது". சில சமயங்களில் பலத்த அடி, எலும்பு முறிவு என்றால், தக்க மருத்துவ உதவியும், சரியான கவனிப்பும் இருந்தால், நாளடைவில் எலும்புகள் "ஒட்டிக்கொள்கிறது".*ஆனால் சில நேரங்களில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் பொழுது ஒருவருடைய உடம்பில் இருக்கும் Stem cells இன் அளவு பாதிப்பை சரி செய்ய போதுமானதாய் இருப்பதில்லை. இது மட்டும் இல்லை, நோய்வாய்பட்டவர் மருந்து – மாத்திரை சாப்பிடுவதால் உடம்பில் உள்ள அணுக்கள் பலவீனமாய் இருக்கும் சாத்தியமும் உண்டு. இம்மாதிரி நேரங்களில் சம்பந்தபட்டவருக்கு எலும்பு ஊன் மாற்றுச் சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை கூட வருவதுண்டு.*


எலும்பு ஊன் மாற்று சிகிச்சை செய்வது எளிதில்லை. இருவரின் தசைகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவேண்டும். இல்லயென்றால் நோயாளியின் உயிருக்கே உலை வைத்துவிடும். Donor இடமிருந்து எலும்பு ஊனை அறுவை சிகிச்சை மூலம் தான் எடுக்க வேண்டும் இப்படி எடுத்த எலும்பு ஊனை நோயாளியின் உடம்பில் செலுத்தும் பொழுது நோய்த்தொற்று (infection) வரும் சாத்தியம் உண்டு. லட்சத்தில் ஒரு பங்கு கவனம் சிதறினாலும் ஆபத்தானது.*சரி, இதுக்கும் தொப்புள்கொடிக்கும் என்ன சம்பந்தம்?. கருவுற்ற பெண் நிறைமாதமானதும் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த உடன் தொப்புள்கொடியை அறுத்து பெற்றோர்களிடம் கொடுப்பார்கள். தொப்புள்கொடியிலிருந்து வரும் ரத்தத்தை சில ஆண்டுகள் வரை Medical waste / மருத்துவக் கழிவு என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பாருங்கள்.


*1. இதில் உயிரை உருவாக்கும் திறன் கொண்ட stem cells உள்ளது. இந்த குழம்பிலிருந்து தான் ஒவ்வொரு தசைகளுக்கென தனிபட்ட specialised cells உருவெடுக்கின்றன. ( இது இல்லையென்றால் கர்ப்பம் இல்லை)


*2. தொப்புள்கொடி ரத்தம் பிரசவத்தின் பொழுது மட்டுமே சேகரிக்க முடியும். இதை சரியான முறையில் Cryogeneic freeze in liquid nitrogen என்ற முறையில் பத்திரப்படுத்தினால் எவ்வளவு ஆண்டுகள் போனாலும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.


*


3. இதற்கென எந்த விதமான பிரத்தியேக அறுவைசிகிச்சையும் தேவை இல்லை. பிரசவத்தின் பொழுது தாய்க்கும் சேய்க்கும் எந்த வித தீங்கும் வராமல் தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கலாம்.*


இம்மாதிரி சேகரித்து பாதுகாக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தம், Bone Marrow Donors கிடைக்காமல் தவிக்கும் Advance level நோயாளிகளுக்கு, குறிப்பாக Thalessemia, Diabetis, OestoeArthritis போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சஞ்சீவனியாக திகழும்.***


சில Bone marrow donor's இன் தசை, நோயாளியின் தசைகளுடன் ஒத்துப்போனாலும் (Histological compatiblity அல்லது Tissue Compatiblity) எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு வளரும் தசை ஒத்துப்போகாமல் சிக்கல்களை தரலாம். இதை Graft Versus Host Disease – GVHD என்று சொல்வார்கள். இது எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு, சிகிச்சையின் வீரியத்திலிருந்து மீண்டுவரும் பொழுது தான் தெரியவரும். இப்படி இருப்பின், இதுவரை செய்த முயற்சி எல்லாமே வீண்.


*ரத்த வங்கி போல், தொப்புள்க்கொடி ரத்தத்தை பாதுக்காக தனிப்பட்ட வங்கிகள் உண்டு. இவைகளை Cord Blood Bank என்று சொல்லப்படுகிறது. இவை இரெண்டு வகைப்படும்.

***
Private Cord Blood Bank :-


*


கட்டண முறையில் தொப்புள்கொடி ரத்ததை இங்கு பத்திரப்படுத்துகிறார்கள். இன்று பிறக்கும் சிசுவிற்கு பிற்காலத்தில் தேவை ஏற்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் பெற்றோர்கள் இதை செய்கிறார்கள். இம்மாதிரி தனியார் முறையில் செயல்படுவதால் வருடாந்திர கட்டணம் பல ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை செல்லலாம். உடமையாளர் அனுமதி இல்லாமல் ஒருவரின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரால் பெற முடியாது.


***


Public Cord Blood Bank :-


*


இங்கு எந்த கட்டணமும் இல்லாமல் தொப்புள்கொடி பத்திரப்படுத்தலாம். தேவையானவர்கள் விண்ணப்பத்துடன் அவரவர் தசையின் குறிப்பையும் குடுத்து வங்கியிலிருந்து தொப்புள்கொடி ரத்தத்தை சிகிச்சைக்கு பெற்றுக்கொள்ளலாம்.


***உலகில் எல்லா இடங்களிலும் தொப்புள்க்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகள் இல்லையென்றாலும், முக்கிய நாடுகளில் கண்டிப்பாக உண்டு. காலப்போக்கில் ஊருக்கொரு ரத்தவங்கி போல், தொப்புள்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகளும் விரைவில் வரக்கூடும். உங்கள் சிசுவின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரின் உயிர்காக்கும் என்றால் மனதுக்கு நிறைவு தானே.***


by-- தீபா கோவிந்த்.
www.eelanation.com


***


நன்றி - தீபா கோவிந்த்.


***

இதை படித்ததும் கட்டாயம் உங்களாள் உதவ முடியும் என்ற நம்பிக்கையில் என் நன்றிகள்.
***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.


*


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இந்தியா உருவானது கதை

இந்தியா உருவானது கதை உங்கலுக்கு தெரியுமா?
அப்பரம் எப்படி இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தது , என்பது பற்றி நாம் யோசித்தது உண்டா?

***

இந்தியா உருவானது எப்படி?ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது.

*

மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.

*

மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.

*

13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன.

*

இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்! மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான்.

*

முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை.

*

அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது.

*

இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள்.

*

பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது. ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர்.

*

வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.

*

அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை.ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.


***
இக்கருத்து திரு. தனபால் அவர்கலுடையது.
கீற்று தளத்தில்.

*

ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மன்னர் வம்சத்தினர் ஆண்டிருக்கலாம், ஆனால், காஸ்மீர் முதல், கன்னியாகுமரி வரை ஆன்மிகம், பண்பாடு போன்றவற்றால் வேதகாலம் முதல் ஒரேதேசமாக இருந்தது இந்திய தேசம்.மற்ற எந்த நாகரிகமும் தோன்றாத காலத்தில்,அதாவது உலகில் மற்ற பகுதியில் உள்ளவர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது வேதகால இந்தியர்கள் மட்டுமே மிகச்சிறந்த நாகரீகத்தை வாழ்ந்திருந்தனர்.அந்த மிகச் சிறந்த நாகரீகத்திற்கு சொந்தமானவர்கள் என்று இமயம் முதல் குமரி வரையில் உள்ள அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்வோம்.

***

விடுதலை இராசேந்திரன் .
www.keetru.com
நன்றி கீற்று.

***

என்ன நண்பர்களே படித்தீர்கலா? உங்கள் கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?

***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.

*

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சுனாமி (Tsunami)

சுனாமி நாம் ஆயுட்காலம் முழுவதும் மறக்க முடியாத நினைவுகள். அதனை பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை.சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

***

சுனாமி எப்படி உருவாகிறது?

*
பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின.

*

இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.
எப்படியெல்லாம் வரும் சுனாமி?
*
1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
*
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்
*
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
*
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
*
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
*
6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.
***
சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது:
*
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
*
1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.
*
2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
*
3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.

சுனாமி எச்சரிக்கை அமைப்பு:
*
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.
*
அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது.
*
அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
*
ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

***
சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:
*
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.
*
இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும்.
*
இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்

***
நன்றி ஆக்கம்: viggie
www.kalanjiam.com
***
***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சைக்கிள் பாகங்கள் பற்றி பொது அறிவு

என்னங்க இதுல போய் என்ன இருக்கு. நமக்கு சைக்குல பத்தி தெரியாதா அப்படின்னு நினைக்கிறிங்கலா? நானும் அப்படி தான் நினைச்சேன். ஆனா இந்த தளத்தில் பார்த்ததும் தான் இவ்வளவு விஷயம் இருக்கு என்று தொரிந்து கொண்டேன். அதனால் நம் தளத்தில் பதித்தேன்.

***

சைக்கிள் பாகங்களின் பெயர்கள் தமிழில்:

*

Tube - மென் சக்கரம்
Tyre - வன் சக்கரம்
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்
Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்

*


Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்
Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

*

Chain - சங்கிலி

Chain link - சங்கிலி இணைப்பி

Chain pin - இணைப்பி ஒட்டி

Adjustable link - நெகிழ்வு இணைப்பி

Circlip - வட்டக் கவ்வி

Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்

Handle bar - பிடி செலுத்தி

Gripper - பிடியுறை

Cross Bar - குறுக்குத் தண்டு

*

Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை

Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி

Head light - முகப்பு விளக்கு

Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி

Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி

Front Carrier Basket - பொதி ஏந்தி

Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்

Side box - பக்கவாட்டுப் பெட்டி

*

Stand - நிலை

Side stand - சாய்நிலை

Speedo meter (Odo meter) - வேகம்காட்டி

Fender - வண்டிக் காப்பு

Derailleurs - பற்சக்கர மாற்றி

Peg - ஆப்பு

Air pump - காற்றழுத்தி

Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி

Break shoes - நிறுத்துக்கட்டை

*

Break wire - நிறுத்திழை

Break Lever - நிறுத்து நெம்பி

Front break ankle - முன் நிறுத்துக் கணு

Back break ankle - பின் நிறுத்துக் கணு

Disc brake - வட்டு நிறுத்தி

Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை

Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை

Pedal cover - மிதிக்கட்டை உறை

Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்

*

Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு

Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை

Seat Post - இருக்கை தாங்கி

Baby Seat - குழந்தை இருக்கை

Seat cover - இருக்கை உறை

Leather Seat - தோல் இருக்கை

Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை

Tension washer - மிகுநெருக்கு வில்லை

*

Screw - திருகுமறை

Nut - ஆணி இறுக்கி

Bolt - திருகாணி

Spring - சுருள்

Bush - உள்ளாழி

Lever - நெம்பி

Rust - துரு

Balls - பொடிப்பந்துகள்

Crank - வளைவு அச்சு

Rivet - கடாவு ஆணி

Axle - அச்சு

Spring chassis - சுருள் அடிச்சட்டம்

Nose spring - சுருள் முனை

Fork - கவை

Horn - ஒலியெழுப்பி

Cable - கம்பியிழை

Knuckles - மூட்டுகள்

Clamp - கவ்வி

Ring - வளையம்

Hole - ஓட்டை

Hook - கொக்கி

Spokes - ஆரக்கால்கள்

Spoke guard - ஆரக் காப்பு

Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி

Spanner - மறைதிருகி

Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி

Screw driver - திருப்புளி

Tools - கருவிகள்

Pocket tools - பையடக்கக் கருவிகள்

*

Front Mud Guard - முன் மணல் காப்புறை

Back mud guard - பின் மணல் காப்புறை

Chain Guard - சங்கிலிக் காப்புறை

Dress Guard - ஆடைக் காப்புறை

Gloves - கையுறை

Head set - தலைக்கவசம்

Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி

Bell lever - மணி நெம்பி

Bell cup - மணி மூடி

Bell spring - மணிச் சுருள்

Bell frame - மணிச் சட்டகம்

Bell rivet - மணி கடாவி

Bell fixing clamp - மணிப் பொருத்தி

*

Lock - பூட்டு

Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி

Key - சாவி

Key chain - சாவிக் கொத்து

Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை

Electrical parts - மின்னணுப் பாகங்கள்

Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்

Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்

Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி

Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி

Water bottle - தண்ணீர்க் குடுவை

*

Racing cycle - பந்தய மிதிவண்டி

Mini cycle - சிறு மிதிவண்டி

Mountain cycle - மலை மிதிவண்டி

Foldable cycle - மடக்கு மிதிவண்டி

Wheel chair - சக்கர நாற்காலி

Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி

One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி

High-tech bike - அதிநுட்ப வண்டி

Kid cycle - சிறுவர் மிதிவண்டி

Ladies cycle - மகளிர் மிதிவண்டி

Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி

Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்

Patch - பட்டை

Patching - பட்டை வைத்தல்

Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை

*

Over hauling - முழுச் சீரமைத்தல்

Painting - வண்ணம் தீட்டல்

Lubrication - எண்ணெய் இடல்

Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை

Puncture closure - துளைமூடல்

Puncture lotion - துளைமூடு பசை

Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)

Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை

Lubricant oil - உயவு எண்ணெய்

Waste oil - கழிவு எண்ணெய்***

நன்றி லோடுக்கு பாண்டி.
http://lodukkupandi.blogspot.com/


*******


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.

*

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உயிரினங்களின் பற்றி பொது அறிவு

உயிரினங்களின் விச்சித்திரமன உண்மைகள்:

*


*


1. இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.

*

2. கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.


*

3. நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.

*

4. வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.

*


5. உலகில் எல்லா பிராணிகளும் முன் பகக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.

*


6. உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட இருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளன.பெ‌ண் ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் மு‌ட்டை‌யி‌ட்ட உடனே இற‌ந்து‌விடு‌ம்.

*


7. உல‌கி‌ல் இரு‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் அ‌திக வகைகளை‌க் கொ‌ண்டது ‌மீ‌ன்க‌ள்தா‌ன்.ந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே இற‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் தா‌ய் ந‌ண்டு எ‌ன்ற ஒ‌ன்று இரு‌க்காது.

*


8. உல‌கி‌ல் வாழு‌ம் ‌வில‌ங்குக‌‌ளிலேயே ‌மிக‌ப்பெ‌ரியது ‌நீல‌த்‌தி‌மி‌ங்கல‌ம். இத‌ன் உட‌ம்‌பி‌லிரு‌ந்து 120 பேர‌ல்க‌ள் வரை எ‌ண்ணெ‌ய் எடு‌க்‌கிறா‌ர்க‌ள்.

*


9. சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது.

*


10. அ‌ழி‌வி‌ன் ‌வி‌ளி‌ம்‌பி‌ல் ‌நி‌ற்கு‌ம் உ‌யி‌ரினமாக‌க் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டிரு‌ப்பது இ‌ந்‌திய கா‌ண்டா‌மிருக‌ம்.

***

நன்றி ஈகரை.

www.eegarai.net

***

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

படித்ததில் பிடித்தது ( பொது அறிவு )

நான் படித்து, ரசித்து, சிந்தித்து தெரிந்துக் கொண்டது சில‌. ஆம்! " கற்றது கை அளவு கால்லாதது உலகளவு"

*


1. கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.

*

2. உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.


*

3. சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.

*

4. மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.

*

5. மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

*

6. "வீட்டோ" என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.

*

7. கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.

*

8. கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.

*

9. "குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.

*

10. இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.


*

11. பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.

*

12. இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.

*

13. அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

*

14. மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.

*

15. மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.

*

16. மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.

*

17. மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா.

*

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்:

*

18. வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

*


19. தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

*


20. பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

*


21. பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

*


22. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

*


23. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

*


24. ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

*


25. மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

***நான் படித்து ரசித்தது போல் உங்கலுக்கும் ரசிக்க முடிந்தால் நான் மகிழ்வேன்!

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கைத்தொலை பேசி ( மொபைல் ) பற்றி பொது அறிவு

கைப்பேசி இல்லதா வீடும் கையும் இல்லை. ஒரு சிலர் வீட்டில் அது முக்கிய தனித்துவம் ஆகிவிட்டது. ஆனால் அதனை பற்றி நமக்கு என்ன தெரியும்.

***

இதோ தெரிந்து கொள்வோம் வாருங்கள்:

*

a. 1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

*

b. 1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

*

c. 1954: காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

*

d. 1970: பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

*

e. 1973: மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

*


f. 1979: ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

*

g. 1983: டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

*

h. 1984: விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

*

i. 1989: மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

*

j. 1990: 2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

*

k. 1991: அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

*

l. 1992: மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

*

m. 1996: மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

*

n. 1997: எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

*

o. 2000: இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

*

p. 2001: வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

*


q. 2002: டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.


*

r. 2004: மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

*

s. 2006: மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

*

t. 2007: ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.


***
நன்றி ஈகரை.
***

இது உங்கலுக்கு பயன் உள்ளதாக இருந்தால், இது பற்றி உங்கள் கருத்து!***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள்

தண்ணீர் பஞ்சத்தின் நிலை இனி வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து கவலை படும்நாம், ஏன் அதை தடுக்க, ஒரு வழியும் ( ஒரு சிலர் ) சொய்ய வில்லை.
நமக்கு இயற்கை கொடுத்திருக்கி நிறைய வளங்களை நாம் சரியான முறையில் தான் பயன் படுத்துகிறோமா! நாம் இயற்க்கையின் மடியில் விளையாடிய‌ ( குழந்தையாக ), அனுஅனுவாக மகிழ்ந்து அனுபவித்த இயற்க்கையை நாம் காத்தோமா!
*
நம் தேவைக்கு மட்டும் நாம் அனுபவித்த அந்த அனுபவம் நம் குழந்தைகலுக்கு வாய் வழியாக மட்டுமே சொல்லும் நிலையில் நாம் இருக்கும் இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது.
*
தற்ப்போது அதிகமாக அடிப்படும் செய்தி தண்ணீர் பஞ்சம். அதுவும் நம் இந்திய திரு நாட்டில் இந்த வளம் ஒரு இடத்தில் வாரி இறைத்து, ஒரு இடத்தில் பஞ்சம் என்று வைத்த இயற்க்கையை என்னவேன்று சொல்ல!
*
முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்கிறோமா? நன்றி சொல்ல விட்டாலும் பரவாயில்லை. ( ஏனெனில் அதற்க்கு கூட நமக்கு அவகாசம் இல்லை என்று காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதனுடன் நாமும் நூல் பிடித்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம்.) ஆனால் அந்த வளத்தை நம் குழந்தைக்கலுக்கு விட்டு சொல்கிறோமா? நாம் உபயோகித்த அளவு தண்ணீர் கூட நம் குழந்தைகள் உபயோகிப்பார்களா என்று சிந்தித்தால் எனக்கு தொன்றுவது ஒரு பெரிய‌ கேள்வி குறிதான் எதிர்படுகிறது?
*
இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது. சூற்றுச்சூழல் தான் இதற்க்கு முக்கிய காரணம். இந்த உலகத்தின் மிகப்பெரிய மலை என பெறுமை பட்ட மலை இமயமலை ( எவரஸ்ட்டு ). கம்பீரமாக இருக்கும் இம்மலை தற்ப்போது என்ன ஆகிறது? இனி என்ன ஆகும். நாம் மட்டும் எல்ல வளமும் பெற்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் எண்ணம் நமக்கு ஏன் வந்தது.
*
நாம் வசதியாக இருந்தால் போதும். நம் வீட்டில் எல்லா வசதியும் இருந்தால் போதும் என்று என்னும் எண்ணம் நமக்கு தற்ப்போது மனதில் ஆழமாக பதிந்த வேர். அது வளந்து தான் இந்த நிலையில் நாம் இருக்கிறோம்!
*
இதுப் போல் நம் முன்னோர்கள் எண்ணி இருந்தால் நம் நிலை? யோசியிங்கள் மக்களே!
*
தண்ணீர் வாழ்க்கையில் இன்றி அமையாத நிலை என்று ஆகிவிட்ட‌து. இனி அதை காக்கா நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் அந்த இயற்கை வளத்தை காத்து நம் குழந்தைகள், நம் சந்ததிகள் என்று விட்டு சொல்ல நாம் சில மிக சில விஷயத்தை கையாளலாம்.
*
நாம் தண்ணீரை அதிகம் பயன் படுத்தியே பழகி விட்டதால் அதை திடீர் என்று குறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் அதை குறைக்க சில வழிகள்!
***
தண்ணீரை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்:
*
1. எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம்.
*
2. தண்ணீரை சேமிக்க நாம் நம் குழந்தைகளுக்கு கத்துக்குடுக்கனும்.
*
3. குழந்தைகளுக்கு நம் இயற்க்கையின் அருமையை சொல்லி குடுங்கள்.
*
4. நாம் செய்யும் செயல் தான் குழந்தைகள் பின் பற்றுவார்கள். அதனால் சிறு குழந்தை தான என்று நாம் பிள்ளைகள் தண்ணீரில் விளையாட விட்டு ரசிப்பது, அவர்களையும் நாம் ஊக்குவிகுவது போல் ஆகும். அதை செய்ய விடக்கூடாது.
*
5. நாம் குழாயை சிறிதாக திற‌ந்து உபயோகிக்களாம்.
*

6. என்னதான் நாம் தண்ணீருக்கு காசு குடுத்தாலும் நம் தேவைக்கு மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.
*

7. செடிக்கு சொட்டு நீர் பாசணம் முறையில் நாம் நீர் விட்டால் செடியும் வாடாது. நமக்கு நீர் மீச்சம்.
*

8. வீட்டில் த‌ண்ணீர் தொட்டி நிற‌ம்பி தண்ணீர் கீழே போனால் அதை உட‌னே த‌டுக்க‌ வ‌ழி பாருங்க‌ள். ( எது எதுக்கே யோசிப்போம் இத‌ற்க்கும் யோசித்து முடிவு எடுப்போம் )
*

9. தண்ணீர் கீழே விழும் இட‌த்தில் ஒரு சின்ன‌ தொட்டி க‌ட்டி அதை செடிக‌ளுக்கும், தொட்ட‌துக்கும் அனுப்பும் ப‌டி செய்யுங்க‌ள்.
*

10. வாஷின் மிஷினில் போட்டு துணி துவைக்கும் நாம் அந்த அழுக்கு தண்ணீரை ( இரண்டாவதாக அல்லது முதலாவதகா துணி அலசும் தண்ணீர் ) பிடித்து டாயிலோட்டில் விலாஷ் ப‌ண்ணும் தொட்டியில் ஊற்ற‌லாம்.
*

11. அதே த‌ண்ணீரை வாச‌லில் க‌ழுவ‌ ஊற்ற‌லாம். பிற‌கு ந‌ல்ல‌ த‌ண்ணீர் ஊற்றி க‌ழுவ‌லாம்.
*
12. ஏசியை குறைவாக உபயோகிப்பதால் நாம் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம். ( இது பற்றி எனக்கு சரியாக தெரியலை. இருந்தும் இது சுற்றூ சூழலுக்கு நல்லது )
*

13. குடி நீரையும் நாம் பிடிக்கும் போது அடுத்த குடம் அல்லது வாலி வைக்கும் போது குழாய்யை முடி அல்லது சிறிது நீர் கீழே விட்டு பிடிக்கலாம். ( ஏனெனில் குழாய் மூடிவிட்டால் ஒரு சில இடத்தில் நீர் நின்று விடும் )
*

14. குடிநீர் தொட்டி போல் தான் கட்டாயம் இருக்கும். கீழே விழும் நிறை வீனாக்கமல் செடிக்கு ஊற்றலாம்.

*
15. குளிக்கும் போது கூட நாம் சவரை அல்லது குழாயை முடி பின்பு தேவை எனில் ஓப்பன் பன்னிக்கலாம். நம் வீட்டில் இருக்கும் குழாய்கள் ஒழுகிறதா என்று எப்போதும் பார்த்து சரி செய்யவும்.

***

இன்னும் சில துளிகள்:
*

1. வீட்டில் அனைவரும் கட்டாயம் செடி மற்றும் மரம் வளர்க்கவும்.
*

2. உங்கள் வீட்டில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி இருந்தால் அன்று கட்டாயம் ஒரு செடி நட்டால், கட்டாயம் அதனுடைய பலனை நம் குழந்தைகள் அனுபவிப்பார்கள்.
*

3. வண்டியில் சொல்லும் போது அதில் வரும் புகையை குறைக்க அப்ப அப்ப ( அடிக்கடி ) அதனை சரி செய்து சுற்று சூழலை பாதுகாக்கவும்.
***

இன்னும் நிறைய இருக்கு... சொன்னால் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் இதனை நாம் நம் குழந்தைகலுக்கு சொல்லி குடுத்தால் காட்டாயம் பிள்ளைகள் ஏற்ப்பார்கள்.கட்டாயம் நம் பிள்ளைகள் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் குழந்தை நமக்கு சொல்லிக் குடுக்கும்.
***
இவை நானே எழுதியது.
***
இதை படித்து உங்கள் கருத்து பிலீஸ்.***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இலந்தைப் பழத்தின் மருத்துவ குணங்கள்

இலந்தை பழம், இலை, பட்டையின் மருத்துவ குணங்கள்:

*

இலந்தை பழம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று. ஆனால் அம்மரத்தின் ஓவ்வெரு பாகமும் மருத்துவ குணம் கொண்டவை என்று உங்களுக்கு தெரியுமா?இலந்தை மரப் பட்டையின் குணம்:

*

1. இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர, ஆறாத புண்ணும் ஆறும்.

*
2. இலந்தை இலையையும், பட்டையையும் ஒன்றிரண்டாக இடித்து குளிக்கின்ற நீரில் கலந்து காய்ச்சி குளித்து வர தலைக்குத்தல், குடைச்சல் நீங்கும்.

*

3. இலந்தையைப் பட்டையை இடித்து நீர்விட்டு கஷாயமாக காய்ச்சி குடித்து வர சுரம் தணியும்.

*

4. இலந்தை மரத்தின் வேரை அரைத்து பூச மூட்டு வலி குணமாகும்.

*

5. இதன் வேர்ப்பட்டையை இடித்து பிழிந்தச் சாற்றை 15 மில்லி அளவு குடிக்க மலச்சிக்கல் குணமாகும்.

***

இலந்தை இலையின் மகத்துவம்:

*

1. இல‌ந்தை பழ‌த்‌தி‌ல் ‌நிறைய ச‌க்‌தி‌க‌ள் உ‌ள்ளன. அதே‌ப்போல இல‌ந்தை இலை‌யிலு‌ம் அ‌திக மரு‌‌த்துவ ச‌க்‌திக‌ள் உ‌ள்ளன.

*

2. இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும்.

*

3. இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும்.

*

4. இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

*

5. இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு நீங்கும்.

*

6. இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

*

கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு ( இலந்தை இலை ):

*

1. தற்போதைய காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு கருப்பையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.கருப்பை பிரச்சினையால் மாதவிலக்கு சமயங்களில் அதிக வலி, கரு உருவாகாமை, அ‌‌ப்படியே உ‌ண்டானாலு‌ம் கரு‌ச்‌சிதைவு போன்றவை ஏற்படும்.

*

2. கரு‌ப்பை தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஆ‌ங்‌கில மரு‌த்துவ‌த்தை ‌விட இய‌ற்கை வை‌த்‌தியமே ந‌ல்ல‌ப் பலனை‌த் தரு‌ம். இதற்கு இலந்தை இலை நல்ல மருந்தாக விளங்குகிறது.

*

3. இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன் 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.


*

4. இப்படி செய்து வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி, வலியும் குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்


***

வயிற்றுக் கடுப்புக்கு மருந்து:

*

1. பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.


*

2. இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.

*

3. வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.


***

இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம‌்:

*

1. த‌ற்போது பெரு‌ம்பாலான இளைய தலைமுறை‌க்கு தலையாய ‌பிர‌ச்‌சினையே தலை முடிதா‌ன். தலை முடி உ‌தி‌ர்வது, இள நரை, பொடுகு போ‌ன்றவைதா‌ன்.

*

2. இவை பெரு‌ம்பாலு‌ம், சு‌ற்று‌ச்சூழ‌ல் கெ‌ட்டிரு‌ப்பது ம‌ற்று‌ம் ப‌ணி‌ச் சுமை காரணமாக ஏ‌ற்படு‌கிறது.

*

3. இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.

*

4. இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.

*

5. மேலு‌ம், இள நரை ஏ‌ற்ப‌ட்டது‌ம் மன‌ம் கல‌‌ங்‌கி‌விடாம‌ல், உண‌வி‌ல் அ‌திகமான அளவு க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பி‌ட்டு வர வெ‌ள்ளை முடிக‌ள் ‌மீ‌ண்டு‌ம் கரு‌ப்பாக மாறு‌ம்.

***

இலந்தைப் பழத்தின் நன்மை:

1. இழந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

*

2. இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி ப¦றும்.

*

3. எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.

*

4. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.


*

5. கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.


**

இலந்தை நினைவாற்றலுக்கு உகந்தது:

*
1. தினமும் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.

*

2. இலந்தை பழம் நினைவாற்றலுக்கு ஏற்றது. மாணாக்கர்கள் இலந்தை சாப்பிட்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

*

3. இலந்தைப் பழந்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

*

4. தொடர்ந்து அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றெரிச்சல் ஏற்படும்.

*

5. இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.


*

6. மந்த புத்தியுள்ளவர்கள் இல‌ந்தை‌ப் பழ‌த்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும். ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1_2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும்.

*

7. பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்.


*

8. இ‌தி‌ல் கா‌ல்‌சிய‌ம் ச‌த்து அ‌திகமாக இரு‌ப்பதா‌ல் ப‌ற்க‌ள் ம‌ற்று‌ம் எலு‌ம்புகளு‌க்கு அ‌திக ந‌ன்மைகளை அ‌ளி‌க்‌கிறது.


*

9. எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியும், உடம்புக்கு பலமும் தரும் வகை‌யி‌ல் இ‌ல‌ந்தை பழ‌ம் அமை‌ந்து‌ள்ளது.


*

1o. எ‌ல்லா‌ப் பழ‌ங்களையு‌ம் உணவு‌க்கு மு‌ன்பு தா‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் இல‌ந்தை‌ப் பழ‌த்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.


***

இல‌ந்தை‌யி‌ன் ப‌ண்புக‌ள்:

*


1. இல‌ந்தை பழ‌ம் ம‌ற்ற பழ‌ங்களோடு ஒ‌ப்‌பிடு‌ம்போது விலை மலிவு. ஆனால் அது தரும் பலன்களோ அரிது. 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானதுதான் இந்த இலந்தை.

*

2. இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் எனப்படுகிறது.

*

3. அ‌வ்வளவு ‌சி‌ன்ன பழமாக இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் ‌அடங்கியுள்ள வி‌ட்ட‌மி‌ன்க‌ள் ஏராள‌ம்.

*

4. 100 கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.

*

5. இது உடலு‌க்கு சூ‌ட்டை த‌ணி‌த்து கு‌ளி‌ர்‌ச்‌சியை‌‌த் தர‌க் கூடியது. கு‌ளி‌ர்‌ச்‌சியான உட‌ல் வாகு கொ‌ண்டவ‌ர்க‌ள் ம‌திய வேளை‌யி‌ல் ம‌ட்டு‌ம் இதனை உ‌ண்ணலா‌ம்.


***


நன்றி வெதுப்னியா.
Webdunia.com

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வெளிறிய நாக்கு...?

அப்படீன்னா ரத்தசோகை.. உஷார்:

*


ஜாலிக்காக தோழிகளுடன் "ஜங்க் புட்' சாப்பிடலாம்; ஆபீசில் வேலை...வேலை என்று வெறும் கோக் குடித்து பசியை போக்கிக்கொள்ளலாம். ஆனால், சுறுசுறு...வென இருந்த நீங்கள், திடீரென சோர்ந்து போவீர்கள்; டாக்டரிடம் போனால் ரத்த சோகை என்பார்.

*

அப்புறம் தான், சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற "ஞானோதயமே' வரும் உங்களுக்கு. இப்படி உங்களுக்கு மட்டுமல்ல, "டீன் ஏஜில்' உள்ள பல பெண்களுக்கும் உள்ள பிரச்னை தான்

*


நம் உடலுக்கு வைட்டமின், கனிம சத்துக்கள் தேவை; அதற்கான உணவு வகைகளை சாப்பிட்டால் தான், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும்; அதனால், பல உறுப்புகளுக்கும் போதுமான அளவில் ரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு நீடிக்கும்.

***

ஹிமோகுளோபின் இல்லாட்டி:

*

ரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவு சீராக இருக்க வேண்டும்; அப்போது தான் ரத்தத்தில் முழு ஆக்சிஜன் இருக்கிறது என்று பொருள். உடலில் இரும்புச்சத்து சேர்ந்தால் தான் ஹிமோ குறையாமல் இருக்கும்.உடலில் இரும்பு சத்து சேர வேண்டுமானால், அதற்கான சத்தான உணவுவகைகளை அடிக்கடி சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி சேர்த்தால் தான் ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.


***

என்னென்ன உணவுகள் சாப்பிடனும்:

*


முன்பெல்லாம், ஆண்களை விட, பெண்களுக்கு அதிக அளவில் ரத்த சோகை ஏற்பட்டது. ஆனால், இப்போது "ஜங்க் புட்' உணவுப்பழக்கம் வந்ததில் இருந்து, இளம் பருவத்தினர் இருபாலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். பருப்பு கீரை முதல் புதினா வரை கீரை வகைகள், தானிய வகைகள், தண்டு, பீட்ரூட் போன்ற காய்கறிகள், மீன் உணவுபோன்றவற்றில் இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. டானிக்கோ, மாத்திரைகளோ வேண்டாம்; இவற்றை சாப்பிட்டு வந்தாலே "அயர்ன்' உட்பட மினரல் தட்டுப்பாடே வராது.

***

நாக்கை பாருங்க:

*

ஒருவருக்கு ரத்த சோகை இருப்பதாக சந்தேகித்தால் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்; டாக்டர் பரிசோதிக்கும் போது, கண்கள், நகக்கண்களை பார்த்துச் சொல்வர்; ஆனால், அது கூட போதுமான ஆதாரமாக கருத முடியாது என்று நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர். நாக்கை பார்த்தாலே தெரியும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாக்கு மேற்பரப்பு, கருஞ்சிவப்பாக இருந்தால் முழு ஆரோக்கியம் இருக்கிறது; ரத்தத்தில் பழுப்பு நிறம் கலந்து வெளுப்பேறி இருந்தால் ரத்த சோகை ஆரம்பம் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.***

"டீன் ஏஜ்' யுவதிகளே:

*

ஆண்களை விட, இளம் வயது பெண்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற பெண்களுக்கே உரிய பிரச்னைகளால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. ரத்த சோகையின் முதல் அறிகுறி சோர்வு தான். அடிக்கடி சோர்ந்து விழுவர். ஆனால், ரத்த சோகை என்றே தெரியாமல், தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பர். டாக்டரிடம் போனால் மட்டுமே பிரச்னை பெரிதாகிவிட்டது புரியும்.


***

"ஙே' என்று இருப்பதேன்:

*

சோமாலியா போன்ற ஏழை நாடுகளில், குழந்தைகள், எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருப்பர்; காரணம், இரும்புச்சத்து அறவே இல்லாமல் இருப்பது தான். சாப்பாட்டுக்கே வழியில்லாத நாட்டில் சத்தில்லாததால் குழந்தைகள் மிகவும் நோஞ்சானாக இருக்கும்.

***


உடலில் உள்ள முதுகுத்தண்டு:

*

வடத்தில் உள்ள எலும்பு மஜ்ஜை தான், ஹிமோக்ளோபின் எனபபடும் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் பகுதி. இரும்புச்சத்து இருந்தால் தான் வலுவான சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய முடியும்.அப்படி இல்லாவிட்டால், சிவப்பு அணுக்களில் சக்தி இருக்காது; அதனால் ரத்தம் வலுவிழந்து இருப்பதால், ஆக்சிஜன் குறைந்து காணப்படுகிறது. போதுமான ஆக்சிஜனுடன் ரத்தம் போகாவிட்டால், அந்தந்த உறுப்புகள் வலிமை குறைந்து சோர்ந்து விடுகின்றன.


***


கண்டபடி சாப்பிடாதீங்க:

*

இப்போது இளைய தலைமுறையினரிடம் உணவுப்பழக்கம் மாறி விட்டது. அதனால், அவர்கள் உடலில் வைட்டமின், இரும்பு, மக்னீசியம் உட்பட கனிம சத்து குறைந்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் தான் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். எப்போதுமே, "ஜங்க் புட்' என்று சாப்பிடாமல், சத்தான காய்கறி, பழங்கள், தானிய வகைள் கலந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும், அனீமியா என்ற ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.

***
இது போல் இருந்தால் நாம் வாழ்வு ( நோய் இன்றி ) சிறக்கும். இப்படத்தில் உள்ளது போல் நம் குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
***
ஹலோ டாக்டர்
http://www.dinamalar.com
***

நன்றி தினமலர்.

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net