Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Tuesday, June 12, 2012

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!!




சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!!

நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம்.

சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது :

கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.

நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள். ( ஆனால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். சாப்பிடுவர்களை பார்த்தால் அவர்கள் முகம் எத்தனை கோணத்தில் போகும் என்று பார்ப்பவருக்கு மட்டும் தான் தெரியும்.இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கோவைக்காய் பற்றி சில துளிகள்:

மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காயின் ச‌த்துக்க‌ள்:

வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.

கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது.நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.

கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால் உதடு வெடிப்பு, வயிற்றுப் புண் ஏற்ப்படும்.ஆனால் நாம் ( நீரிழிவு நோய்யாளிக‌ள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவ‌தால் இந்த‌ சூடு அதிக‌ம் ஏற்ப்ப‌டாது.ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது.

பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.இக்காய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும் அல்லாமல் எல்லரும் சாப்பிட்டலாம்.



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, April 25, 2011

வலிப்பு நோய் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம் !

வலிப்பு நோய் என்றால் என்ன?




மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.


*


வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?

யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

*

இந்த நோய் அறிகுறிகள் யாவை?


இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.

கை, கால் இழுத்தல்

வாயில் நுரை தள்ளுதல்

சுய நினைவு மாறுதல்

உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)

கண் மேலே சொருகுதல்

சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்

திடிரென மயாக்கமடைந்து விழுதல்

கண் சிமிட்டல்

நினைவின்றி சப்பு கொட்டுதல் (வாய் அசைத்தல்)

மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்பு நோய்ன் அறிகுறிகள்.

*

வலிப்பு நோய் எதனால் வருகிறது?

மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)

மூளையில் காச நோய் (Tuberculoma)

தலைக் காயம் (Head Injury)

குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)

மூளை காய்ச்சல் (Brain Fever)

மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போது

மூளையில் புற்று நோய் (Brain Tumer)

உறக்கமின்னை

போதைப் பொருள் உபயோகித்தல்

மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்

*

இது பரம்பரை வியாதியா?

பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரையின் பாதிப்பாகும்.



*

இந்த நோய் எந்த வயதில் வரும்?

இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

*

இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்யப்படும் சோதனைகள் யாவை?

முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பின் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,

EEG: மூளையின் மின் அதிர்வைப் வரைபடமாக்குதல்.

CT Scan: மூளையின் பாகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்தல்.

MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமாக மூலையின் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.




இந்த நோய் உள்ளவர்கள் எனன செய்ய வேண்டும்?

அருகாமையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தித்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றை பரிசோதனைகள் மூலம் அறிந்து மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.

*

எவ்வளவு காலம் மருந்து உட்கொள்ள வேண்டும்?

இது வியாதியின் வகை மற்றும் காரணத்தை பொருத்து மறுபடுகிறது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வேண்டி இருக்கும். பின்னர் தேவையான பா¢சோதனைகளுக்கு பிறகு மருந்துகளை மெல்லக் குறைத்து அதன் பின் நிறுத்த வேண்டும்.

*

இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

தாராளமாக செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்து அவா¢ன் அலோசனைப்படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ளவும்.

*

இந்த நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

தாராளமாக, வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் ·போலிக் ஆசிட் (Folic Acid) என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். கருத்தா¢க்கும் முன் உங்கள் மருத்துவரை அவசியம் சந்திக்கவும்.

*

இந்த நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா?

வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.



**

வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:

தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.

பள்ளி, கல்லு¡¢ மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.

விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.

திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம்

உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.

நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும்.

நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.

**

வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:

உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.

நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளில் நீராடுவது. இவ்வகையினருக்கு இது ஆபத்தான ஒன்று.

தேவையற்ற மன உளைச்சல் கூடாது.

மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.

நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது.

அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.

*

முறையான சிகிச்சை செய்ய வில்லை என்றால்?

ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.


*
ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை
3/60 மெய்யனுர் சாலை
சேலம் - 636 004

***
thanks ஆத்தூர்.
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாம் என்றும் நலமாக வாழ.....

சாதாரண வாழ்க்கை முறையில் நாம் செய்துகொள்ளும் எளிய மாற்றங்களும் நம்மை நோயின்றி நீண்ட காலம் வாழவைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.



நல வாழ்வு குறித்து சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று, உப்பைக் குறைத்தால் பல வியாதிகள் குறையும் என்கிறது.


*

1. உடல் நலமுள்ள ஒருவர் தினமும் 6 கிராமிற்கு குறையாமல் உப்பு சேர்க்கிறாராம். இந்த அளவை 3 கிராமாக குறைத்துக் கொண்டால்இரத்த அழுத்த வியாதி வராது.

*

2. பக்க வாத நோயை 13 சதவீத அளவில் கட்டுப்படுத்தும். இதய வியாதியை 10 சதவீதம் குறைக்குமாம்.

*

3. ஒரு கோப்பை காபி அல்லது டீக்கு 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்க்கிறோம். இதை ஒரு கரண்டியாக குறைத்துக் கொண்டால் தினமும்30 கிராம் சர்க்கரை மிச்சம் பெறும்.

*

4. ஆண்டுக்கு 32 ஆயிரம் கலோரிகள் உடல் எடையில் குறையும். இதனால் உடல் பருமன் மற்றும் பலவியாதிகளை தடுக்கலாம்.

*

5. கொழுப்புடன் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட குறைந்தவிலை பிஸ்கட், கேக், மாவுப்பண்டங்களை தவிர்க்க வேண்டும். இதனால் இதய வியாதிகள் வராமல் தடுக்கலாம்.

*

6. அசைவம் சாப்பிடும் முன்பு சிறிது காய்கறி சாப்பிட்டால் அதிகப்படியான கலோரிகள் கட்டுப்படுத்தப்படும்.

*

7. தொடர்ந்து காய்கறிகள் சேர்த்து வந்தால் மார்பகப் புற்றுநோய் 21 சதவீத அளவு மட்டுப்படும்.

*

8. நாம் நலமான வாழ்வுக்கு சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்து கொள்ளலாமே!


***
நன்றி - தினத்தந்தி.
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கடல் நண்டு ஓடு பக்கவாதத்தை குணப்படுத்தும்!

லண்டன் :




கடல் நண்டின் ஓட்டில், பக்கவாதத்தை குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

***

அமெரிக்கா, இண்டியானா பகுதியிலுள்ள பக்கவாத ஆராய்ச்சி மைய இயக்குனர் ரிச்சர்ட் போர்ஜென் கூறியதாவது:

பக்கவாதத்துக்கு பல்வேறு மருந்துகள் இருந்தாலும், அவை முற்றிலும் குணமாக்குவதில்லை.

*

ஆனால், கடல் நண்டின் ஓட்டில், ஒருவகை ரசாயனம் உள்ளது.

*

ரசாயனமாக இருந்து சர்க்கரையாகும் இந்த பொருளுக்கு, நரம்பு மண்டல பாதிப்புகளை குணமாக்கும் சக்தி உள்ளது.

*

குறிப்பாக முதுகு தண்டு பாதிப்பை முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

*

பக்கவாதத்துக்கு நல்ல மருந்து இல்லாமல்இருந்தது. தற்போது இந்த நண்டு ஓடு எங்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

*

நண்டு ஓட்டில் சேகரமாகக் கூடிய இந்த ரசாயனத்தை, சுத்தமான தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் ரத்தத்தில் செலுத்தினால், ரத்தத்தில் கலந்த பின் இந்த ரசாயனம் சர்க்கரையாகமாறி, முதுகுதண்டில் ஏற்பட்ட பாதிப்புகளையும், நரம்பு மண்டல பாதிப்புகளையும் குணமாக்குகிறது.

*

கினியா பன்றிகளுக்கு இந்த சோதனை செய்து பார்த்ததில், முழு வெற்றி கிடைத்துள்ளது.

*

மனிதர்களுக்கு, இந்த நண்டு ஓடு ரசாயனத்தை செலுத்தி பார்த்து
சோதனை செய்து வருகிறோம்.

இவ்வாறு ரிச்சர்ட் போர்ஜென் கூறினார்.


***

நன்றி - தினமலர்
April 2010

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கிவி (பசலிப்பழம் ) பழம் மருத்துவ குணங்கள்

தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. தமிழில் அதன் பெயர் பசலிப்பழம்.





சுவையும் பயனும்:

இதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

*


உயிர் சத்துக்கள்:

அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

*

ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது:

கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.

*


விட்டமின் சியின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.

***

மருத்துவ குணங்கள்:


கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும்.

*

ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

*

குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார்.

*

முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.

***


கிவி பழ சீன உணவு வகை:



சீன உணவு வகைகளில் பழங்கள் இடம்பெறுவது அதிகமில்லை. ஆனால், சில வேளையில், அதிகம் இனிப்பில்லாத பழங்களைப் பயன்படுத்துவதை காண முடியும்.

*

கிவி பழம், அதிக வைட்டமின் எனும் உயிர்சத்து சி கொண்ட பழ வகையாகும். அதிகமாகச் சாப்பிட்டால், உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.

*

தேவையான பொருட்கள்:


கிவி பழம் 2
கோழி இறைச்சி 300 கிராம்
சிவப்பு நிறமான மிளகாய் 1
சமையல் மது ஒரு தேக்கரண்டி
கறுப்பு மிளகுத் தூள் அரை தேக்கரண்டி
உலர்ந்த தக்காளி மாவு ஒரு தேக்கரண்டி
உப்பு போதிய அளவு
சமையல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி


*


நாம் முதலில், கிவி பழங்கள், சிவப்பு நிறமான மிளகாய், கோழி இறைச்சி ஆகியவற்றை நன்றாக கழிவி சுத்தம் செய்ய வேண்டும்.


கிவி பழங்களின் தோலைக் கவனமாக நீக்கிக் கொள்ளுங்கள். 3 சென்டி மீட்டர் அளவுடைய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

சிவப்பு மிளகாயையும் கோழி இறைச்சியையும் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளுங்கள்.

பிறகு, கோழி இறைச்சி துண்டுகள், சமையல் மது, தக்காளி மாவு, கறுப்பு மிளகுத் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.


அடுப்பின் மீது வாணலியை வையுங்கள். சமையல் எண்ணெயை ஊற்றுங்கள்.

10 வினாடிகளுக்குப் பின், கோழி இறைச்சி துண்டுகளை வாணலியில் போட்டு, வதக்கலாம்.

பிறகு, முறையே, சிவப்பு மிளகாய் மற்றும் கிவி பழத் துண்டுகளை இதில் சேர்க்கலாம். இறுதியில், கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.



கிவி பழம், சிவப்பு மிளகாய், இறைச்சி கோழி ஆகியவை இடம்பெறும் இன்றைய வறுவல் தயார்.


மிளகாய் சிவப்பானது. கிவி பழம் பச்சை நிறமாகும். கோழி இறைச்சித் துண்டுகள் வெள்ளை நிறமாகும். இன்று நாம் தயாரித்த இந்த உணவு வகையின் நிறம் அழகானது.



by- க்ளீட்டஸ், வாணி
***

பப்பாளி & கிவி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

பப்பாளிபழம் - ஒரு கப்
கிவி பழம் - ஒரு கப்
வென்னிலா ஐஸ் கிரீம் - ஒரு ஸ்கூப்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
பப்பாளி & கிவி - அரை கப் (பொடியாக அரிந்தது)
ஐஸ் கட்டிகள் - பத்து துண்டு

செய்முறை:

பப்பாளி, கிவி, ஐஸ் கிரீம், ஐஸ் கட்டிகள், சர்க்கரை, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நல்ல அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி பொடியாக அரிந்து துண்டுகளை போட்டு குடிக்கவும்.


***

நன்றி: தினகரன்.
நன்றி: சீன வானெலி

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு!

நீரிழிவு நோய் எனப்படும் சக்கரை வியாதியால் அவதிப்படும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் இந்நோய்யின் தாக்கம் மருந்து மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்தப் படுகிறது.



எனினும் பூரணகுணம் அடைவது அரிதாகவே உள்ளது. நீரிழிவு வியாதியை கட்டுபடுத்தாத நிலையில் தொடர்ந்து இருக்க நேர்ந்தால் அதனால் ஏற்படும் பக்க அல்லது பின் விளைவுகளில் முக்கியமானது நரம்புகள் பாதிக்கப்படுவதாகும்.

*

நரம்புகள் பாதிக்கப்பட்டால் அதனால் மேலும் பல முக்கியமான உடலின் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நம் உடலில் தொடு உணர்ச்சி, வலி உணர்ச்சி, உடல் அசைவு, நடமாட்டம், உணவு ஜீரணம், பாலியல் செயல்பாடு போன்றவற்றுக்கு தேவையான அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாகின்றன.

*

பெரும்பாலும் இந்த இனிப்புநீர் வியாதி தோன்றிய பின் 10 அல்லது 15 வருடங்களுக்கு பின்புதான் இவ்வாறு நரப்புகள் பாதிக்கப்படலாம். உண்மையில் நீரிழிவு நோயால் நரம்புகளின் பாதிப்பு சரியாக தெரியாவிட்டாலும் சில காரணங்கள் யூகிக்கப்படுகின்றன.

*

நரம்புகளின் மூலமாக தகவல் சமிக்ஞைகள் செல்கின்றன. இதை செயல்படுத்துவது சில இரசாயன மாற்றங்கள். உயர்ந்த இனிப்பு இதன் சம நிலையை பாதித்து செயல் இழக்கச் செய்யலாம். உயர்வான இனிப்பு இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டு பண்ணி விடுவதால் நரம்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைவுபடுகிறது.

*

இதனால் நரம்புகளுக்கு தேவையான பிராணவாயு குறைவுபடுகிறது. அதோடு நரம்புகளை சுற்றியுள்ள சுவர் பகுதியையும், இனிப்பு பாதித்து கெடுக்கலாம். இந்த நீரழிவுநோய் இதர பகுதிகளில் உள்ள நரம்புகளையும் பாதிப்படைய செய்யும். ஆனால் இதில் ஓர் வினோதம் என்னவேற்றால் இந்த நோய் மூளையை அல்லது நரம்பு மண்டலத்தை தாக்குவதில்லை. அப்படி மற்றும் நேர்ந்தால் வீபரிதம்தான்.

*

இந்த நரம்புகள்தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் மின்சார சமிக்ஞைகளை, சிக்கலான கம்பிவலை போல் பரவியுள்ளன. நீரழிவு நோயால் இந்த 'தொலைத்தொடர்பு' வேகம் குறையலாம். செய்தி தவறாகலாம் அல்லது தடைப்படலாம். இவ்வாறு நரம்புகள் கெடுவதை நரம்பு அழற்சி என்றும் கூறுவர்.

**

இது மூன்று வகைப்படும்:

பலநரம்புகள் கோளாறு,

குவிமைய நரம்பு கோளாறு,

தன்னியக்க நரம்புக் கோளாறு எனப்படும்.


இவற்றை விரிவாகப் பார்த்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

***

பலநரம்புகள் கோளாறு(Poly Neuropathy):

உடலின் எல்லாப் பகுதி நரம்புகளையும் இது பாதிக்கலாம். ஆனால் முக்கியமாக கைகளிலும். கால்களிலும் உள்ள பெரிய நீண்ட நரம்புகளைத்தான் கடுமையாகத் தாக்குகிறது. அதிலும் கால்களின் அடிப்பகுதியையும் ஒரேமாதிரி இரண்டு கால்களையும் பாதிக்கும். இதில் கால் அசைவு, நடப்பது போன்றவை பாதிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக உணர்வு குன்றிப்போதல், வலி மதமதப்பு, கூசுதல், CRAMPS என்ற தசைச்சுழுக்கு, போன்றவை காணப்படும்.

*

குவிமைய நரம்புக்கோளாறு(Focal Neuropathy):

இதில் ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்படலாம். அல்லது சில நரம்புகள் பாதிக்கப்படலாம். உடலின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படும். ஒற்றைவகையில் பாதிப்பு கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறும், ஆனால் இந்த வகை தாக்குதல் திடிரென்று ஏற்படும். இதிலும் மதமதப்பு, வலி, பலகீனம் உண்டாகும். இதுவும் எப்பகுதியிலும் ஏற்படலாம். அதாவது முகத்தில் கூட ஏற்படலாம். முகத்தில் கன்னப் பகுதியின் தசைகள் பாதிக்கப்பட்டால் அப்பகுதி செயலற்றும் மறுபக்கம் இழுத்துக் கொண்டும் காணப்படும். இதனால் முக அமைப்பு கோணாலாகும். இவ்வாறு கண் நரம்புகள், கை நரம்புகளும் பாதிக்கப்படும்.

*

தன்னியக்க நரம்புக்கோளாறு(Autonomic Neuropathy):


இந்த நரம்புகள் நாம் எண்ணிப் பார்க்காத வகையில் தாமே செயல்பட்டு வரும். இவை உறுப்புகளை கட்டுப்படுத்துபவை. இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் இவ்வாறு தாக்கப்பட்டால், இந்த உறுப்பு செயலற்றுப் போவதால் நமது கவன்மெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.




பல நரம்புக்கோளாறு, குவிமைய நரம்புக்கோளாறு எப்படி ஏற்படுவது என்பது முந்திய தொடரில் பார்த்தோம். அடுத்தாக தன்னியக்க நரம்புக் கோளாறு பற்றி அறிவோம். என்னவெனில் தாமாக இயங்கும் தன்னியக்க நரம்புகள், நாம் எண்னிப்பாக்காத வகையில் தாமே செயல் பட்டு வரும் உறுப்புக்ளை கட்டுப்படுத்துபவை.

*

இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் நீரழிவால் தாக்கப்படும் போது, இந்த உறுப்புகள் செயலற்றுப் போவதால் நமது கவனமெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.

***

தன்னியக்க நரம்புக் கோளாறு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்:


1. இருதயம், இருதயத்துடிப்பில் மாற்றம் எழுந்து நின்றால் இரத்த அழுத்தம் குறைவு.

*

2. இருதய நரம்புகள் இறந்து போனால் மாரடைப்பின் வலி தெரியாமற் போகலாம்.

*

3. வயிறு, குடல், நரம்புகள் கெடுவதால் ஜீரணம் தடைப்பட்டு அதனால் குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசியின்மை போன்றவை தோன்றுதல்.

*

4. சிறுநீர்ப்பை சரியாக இயங்காமல் எப்போது அது நிறைகிறது என்று தெரியாமல் போகலாம், சிறுநீரும் முழுதாக வெளியேறாத நிலையும் ஏற்படலாம்.

*

5. இதனால் நோய்க்கிருமிகள் தொற்று உண்டாகி சிறு நீரகம் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

*

6. இனிப்பு அதிகம் குறைந்து போனால் அதன் அறிகுறிகளான வியர்வை, நடுக்கம், பரபரப்பு, கண் மங்கிப்போய் தெரியாமல் போதல், அளவுக்கு அதிகமான வியர்வை.

*

இப்படி பலவிதத்தில் இனிப்பு நீர் வியாதி நரம்புகளை தாக்குகின்றன. மனிதர்க்கு நரம்புகள் பாதிப்பு ஏற்படாத வகையில் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் எல்லாவிதமான நடவடிக்கை களையும் துரிதமாக எடுக்க வேண்டும். அதாவது மருத்துவரை அனுகி சிகிச்சை பெறுவது நல்லது.

*

நரம்புகளின் பாதிப்பு சில அறிகுறிகள் மூலமாக தென்படும். அதில் குறிப்பாக கைகள், கால்கள், பாதங்கள் கூசுதலோடு மதமதப்பாகவும், எரிச்சலுடனும், வலி குத்தலுடனும் காணப்படும். தொடு உண்ர்ச்சி மிகுந்து காணப்படும்.

*

இரவில் கால்களில் தசைச்சுளுக்கு உண்டாதல். பாதங்கள், கால்விரல்கள் தரையில் படுவது சரிவர தெரியாது போதல். பாதங்களின் தோல்தடிப்பாதல் புண்கள் வந்து மாறாது இருத்தல். இப்படிபல அறிகுறிகள் காணப்படும் உடனே மருத்துவரை அனுகுவது நன்மையாகும்.

*

துவக்க காலத்திலே வைத்தியம் செய்து, மருந்து மாத்திரை அல்லது ஊசி மூலம் கட்டுப்படுத்திக் கொள்வது நலம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் உண்ணும் உணவில் இனிப்பின் அளவைக் குறைத்து, மாப்பொருள், கொழுப்பு, இனிப்பு பண்டங்கள் இதனையும் தவிர்த்து, தானியங்கள், பழங்கள், கீரைவகைகள் இவற்றை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுதல், இனிப்பு நீர் என்ற சக்கரை வியாதி அதாவது நீரிழிவு நோய் தாக்கத்தில் இருந்து எம் உடலை பாதுகாத்து நீண்ட நாள் உயிர் வாழலாம்.


*

மலேசிய டாக்டர் ஜி.ஜான்சன் கூறிய கருத்துக்கள்


***
நன்றி டாக்டர்
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும் சாப்பிடப் படுவதில்லை. சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம்.



நீங்கள் விரும்பும் படியான ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டுமானால், நீங்கள் சமையலுக்காக வாங்கும் பொருட்கள், அதை நறுக்கும் முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை, சாப்பிடும் முறை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

*

1. ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை உணவை சாப்பிடுங்கள்.

*

2. ஆற, அமர உட்கார்ந்து சாப்பிடுங்கள். மென்று விழுங்குகள். நொறுங்கத் தின்றால் நூறு வயது.

*

3. மிக வேகமாகவோ, ரெம்பவும் மெதுவாகவோ சாப்பிடாதீர்கள். சாப்பிடும்போது பேசுவதும் நல்லதில்லை.

*

4. கோபம், மனவருத்தம், தன்னிரக்கம் என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

*

5. பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

*

6. சாப்பிட்டதும் படுக்காதீர்கள். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துத் தூங்குவதுதான் நல்லது.

*

7. எப்போதும் உணவை வீணாக்காதீர்கள்.

*


8. காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக ஒரு போதும் நறுக்கக்கூடாது. சிறிதாக நறுக் கும் போது, அவைகளில் இருக்கும் சாறு வெளியேறி சத்துக்கள் குறையும்.

*

9. சமையலுக்கு தரமான எண்ணையை பயன்படுத்தவேண்டும். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி சூடாக்குவதற்கு பதில், பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிவிட்டு, அதன் பின்பு எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணையை ஊற்றிய பின்பு அடுப்பில் எரியும் தீயின் அளவை குறைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால், எண்ணையில் இருந்து வெளி யேறும் ரசாயனத்தன்மையின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.

*

10. எலுமிச்சை பழம், நேந்திரம் பழம், பால் போன்ற மூன்றையும் சேர்த்து ஒன்றாக எந்த உணவும் தயாரித்து சாப்பிடக்கூடாது. பாலும், எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்து போகும். ஏத்தன் பழமும் (நேந்திரன்) பாலும் சேர்த்து சாப்பிட்டால், சளித்தொல்லை அதிகரிக்கும்.

*

11. நெய் சேர்க்கும் உணவில் சிலர், தனிச்சுவை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு எண்ணையும் சேர்ப்பார்கள். அப்படி சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

*

12. பாகற்காய், வெந்தயம் போன்றவைகளில் இருக்கும் கசப்பு தன்மையை போக்க எந்த பொருளையும் அதனுடன் சேர்க்காதீர்கள். ஏன் என்றால் அவை இரண்டின் மூலமும் உடலுக்கு தேவையானதே கசப்புதான். அந்த கசப்பை நீக்கிவிட்டு அவைகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லை.

*

13. முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டீன் மிக அதிகமாக இருப்பதால், ஜீரணம் ஆக மிகவும் தாமதமாகும்.

*

14. காய்கறிகளை ஒரு போதும் அதிகமான அளவு எண்ணை சேர்த்து வறுக்கக்கூடாது. காய்கறிகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படும் சூடு அவைகளில் இருக்கும் வைட்டமின், தாதுச்சத்துகளை போக்கிவிடும்.

*

15. தினமும் ஒவ்வொரு நேரமும் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா?

காலையில் பாதி வயிற்றுக்கு உணவும் அதாவது 50 சதவீதம், மதிய உணவு 30 சதவீதம், நான்கு மணிக்கு 10 சதவீதம், இரவில் 20 சதவீதம் என்ற அளவிற்கு உணவு உண்ணவேண்டும்.

*

16. ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்க்கப்படவேண்டும். இதிலிருந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கொழுப்பு, தாதுசத்துக்கள் போன்று உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.

*

17. மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடையில் 7-8 மணிநேரம் இடைவெளி இருந்தால் மாலை நேரத்தில் எலுமிச்சை சாறு, பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிபருப்பு போன்றவைகளை சாப்பிடலாம்.




***
THANKS google
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வெங்காயத்தை எப்படியெல்லாம் நமது உடலுக்கு பயன்படுகிறது !



1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

*

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

*

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

*

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

*

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

*

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

*

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

*

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

*

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

*

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

*

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

*

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

*

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

*

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

*

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

*

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

*

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

*

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

*

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

*

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

*

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

*

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

*

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

*

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

*

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

*

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

*

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

*

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

*

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

*

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

*

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

*

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

*

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

*

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

*

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

*

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

*

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

*

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

*

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

*

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

*

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

*

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

*

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

*

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

*

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

*

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

*

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

*

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

*

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

*

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.


***
THANKS இணையம்
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சூ‌ட்டுட‌ன் டீ குடி‌ப்போரு‌க்கு‌ம் பு‌ற்று நோ‌ய்

சூ‌ட்டுட‌ன் டீ குடி‌ப்போரு‌க்கு‌ம் பு‌ற்று நோ‌ய் வரு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம்




பு‌ற்றுநோ‌ய் பர‌ம்பரை ‌ரீ‌தியாக வர‌க்கூடிய நோ‌ய் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. அ‌தி‌ல்லாம‌ல் பலரு‌ம் த‌ங்களது தவறான பழ‌க்க வழ‌க்க‌ங்க‌‌ளினாலு‌ம் பு‌ற்றுநோ‌யை வரவழை‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

*

பா‌ன்பரா‌க், புகை‌யிலை போ‌ன்றவ‌ற்றை ப‌ய‌ன்படு‌த்துபவ‌ர்களு‌க்கு 1.1 மட‌ங்கு பு‌ற்றுநோ‌ய் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம்.

*

‌பீடி ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு ம‌ற்றவ‌ர்களை ‌விட 1.8 மட‌ங்கு பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து உ‌ள்ளது.

*

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு இர‌ண்டு மட‌ங்கு பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்படு‌ம் அபாய‌ம் உ‌ள்ளது.

*

மது குடி‌ப்போரு‌க்கு பு‌ற்றுநோ‌ய் அபாய‌ம் 1.8 மட‌ங்காக உ‌ள்ளது.

*

அதே‌ப்போல அ‌திக சூ‌ட்டுட‌ன் டீ குடி‌ப்போரு‌க்கு‌ம் பு‌ற்று நோ‌ய் வரு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. இது ம‌ற்றவ‌ர்களை ‌விட 4 மட‌ங்கு அ‌திக‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


***
THANKS "லங்காசிறீ"
***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா!

அன்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குழந்தைகள் நர்சரி பள்ளிக்கு செல்லும் முன் 5000 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கிறது.



இது கல்லூரியில் ஓர் பட்டம் பெறுவதற்கு படிப்பதற்காக செலவிடும் நேரத்திற்கு சமமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. நம் நாட்டிலும் இதே நிலைமைதான் என்பதில் சந்தேகமில்லை.

*

வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது இயலுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகி விட்டது.

***


அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்:

1. குழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்பதானாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன.

*

2. உடல் பருமன், சோம்பேறித்தனம், புதுவித சிந்தனை வளர்ச்சியடையாமை ஆகியவை அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் காணப்படலாம்.

*

3. இக்குழந்தைகளுக்கு பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். எனவே குறைவான நண்பர்களை பெற்றிருப்பர். விரைவிலேயே கண் பார்வை குறைபாடு ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு.

*

4. இக்குழந்தைகளால் படிப்பில் ஆர்வத்தைக் கண்பிக்க இயலாது. பிற்காலத்தில் இவர்கள் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் துன்புறுவர்.

*

5, அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் இவை.


***


தொலைகாட்சி நிகழ்ச்சிகளை முற்றிலும் பார்க்காத குழந்தைகள்:

1. அதே சமயத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை முற்றிலும் பார்க்காத குழந்தைகளுக்கு சில சங்கடங்கள் உண்டாகும்.

*

2. வகுப்பில், பிற இடங்களில் தன் வயதையொத்த குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சில கதாப்பாத்திரங்களைப் பற்றியோ அல்லது கதைகளைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி பார்க்காத குழந்தைகள் எதுவும் புரியாமல் தவிக்கலாம்.

*

3. குழந்தைகளின் தற்போதைய பேஷன் என்னெவென்று தெரியாமலும், பயன்படுத்தும் பொருட்கள் என்னவென்று தெரியாமலும் இக்குழந்தைகள் தவிப்பர்.

*

4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் பல நல்ல பலன்களும் உண்டு. உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் பேச்சுத் திறன் சிறப்பாக வளர்ச்சியடையும், அதிகமான புதிய சொற்களை விரைவாக கற்றுகொள்வர்.


மொழி வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். மேலும் உடையணியும் விதம், பிறரிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் சிறப்பாக இருக்கும்.

*

5. மேலும் குறிப்பிட்ட நன்மைகள் அனைத்தும் குழந்தைகள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.

*

6. அதிகமான வீடுகளில் பெற்றோர் சினிமா நிகழ்ச்சிகளையும் நெடுந்தொடர்களையுமே ஓட விடுகின்றனர். அதனால் குழந்தைகளும் இவைகளையே பார்த்து பெற்றோர்களைப் போல நடந்து கொள்கின்றனர்.

*

7. சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை தவிர்த்து குழந்தைகள் சேனலை அதிகம் பார்க்கும்படி செய்ய வேண்டும். அதிலும் புதிய பொருட்களை உருவாக்குவது, சித்திரம் வரைவது, வாழ்த்து அட்டைகளை உருவாக்குவது, அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் தரும் நிகழ்ச்சிகள், விலங்குகளின் வாழ்க்கையைப் பற்றிய நிகழ்ச்சிகள், பிற நாடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய நிகழ்ச்சிகள், மற்றும் சுற்றுலா தலங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை பெற்றோர் தேர்ந்தெடுத்து குழந்தைகளை பார்க்கச் செய்ய வேண்டும்.

*

8. அவ்வாறு நிகழ்ச்சிகளை தினமும் குறிப்பிட்ட நேரம் பார்க்கச் செய்வது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெற்றோர் செய்யும் உதவியாக அமையும்.

***

குறிப்பு:

1. எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு.

*

2. தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை குழந்தைகளை தினமும் பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும்.

*

3. உங்கள் வீட்டுக்குள் வரும் உலகத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதாக அமையும்.



***
THANKS திண்ணை
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எடை குறைய உணவைத் தவிர்க்கலாமா?

இன்றைய அவசர உலகில் மூன்று வயது குட்டி முதல் முதியவர் வரை அனைவருமே பரபரவென இயங்கிக் கொண்டிருக்கும் சூழல்.



ஆதலால், உணவு, உடை மற்றும் இத்யாதிகள் அனைத்திலுமே பாஸ்ட் கலாச்சாரத்துக்கு மாறிவருகிறோம். அதை போலவே உடலின் ஆரோக்கியமும் வேகமாக கெட்டு வருகிறது. இதன் முதல் படிதான் உடல் குண்டாவது. இப்படி உடம்பு குண்டாகும்போது அது நோய்த்தாக்குதலுக்கு ஏதுவாக அமைகிறது.

*

ஆனால் எல்லாருக்குமே ஒல்லியாக உடம்பு அமையவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பட்டினி கிடந்தால் குண்டு உடல் குறைந்து விடும் என்று நினைப்பது தவறு. இதனால் உடலில் வேறு ஏதாவது நோய் ஏற்படும். ஆதலால் குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.

*

சரியான முறையான உடற்பயிற்சியை செய்து வர வேண்டும். மிகவும் கடினமான பயிற்சிகள் வேண்டாம். எளிமையான பயிற்சிகளை வீட்டில் இருந்தே பண்ணலாம். வீட்டுக்குள்ளேயே நடைப் பயிற்சி செய்யலாம். அதேபோல், வீட்டு வேலைகளுக்கு எவ்வித எந்திரத்தையும் பயன்படுத்தாமல் நீங்களாகவே செய்யலாம்.

*

துணி துவைப்பது, மாவாட்டுவது என உடலை இயக்கும் வேலைகளை செய்யுங்கள். உடற்பயிற்சியை முறையாகத் தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் வலியோ, வேறு விதமான பிரச்சினைகளோ ஏற்படுவதில்லை.

*

உடல் வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் போதும். இதய துடிப்பு உயரும். அதேபோல் சாப்பாட்டு விஷயத்தில் சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.முதலில் நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுங்கள். தினமும் குறிப்பிட்ட அளவை சாப்பிடப் பழகுங்கள். அதாவது ஒருநாள் நன்றாக பசிக்குது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்.

*

இடையில் பசி எடுக்கும்போது... வீணாக சிப்ஸ், பிட்சா என கண்டதையும் வாங்கி சாப்பிடாதீர்கள். பசி எடுக்கும்போதே பழங்கள், ஜூஸ் என்று சாப்பிடுங்கள்.அசைவ உணவு வகைகளை தேர்ந்தெடுத்து குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. அதாவது சிக்கன், மட்டன் வகை உணவுகளில் கொழுப்பு, எண்ணை தவிர்த்து, வேகவைத்து சாப்பிடலாம். மீன் வகையில் பொரித்த... வறுத்த ஐட்டங்களை தவிர்க்கலாம்.


*

தினமும் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து செல்லுங்கள். காலையில் நடப்பது நல்லது... முடியாவிட்டால் அந்தி சாய்ந்த மாலையிலும் நடக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகப்படுத்தலாம்.

*

எக்காரணம் கொண்டும் எண்ணை பொருட்களை சாப்பிடவேண்டாம். குறிப்பாக எண்ணையில் பொரிக்கும் அனைத்து வகைகளையும் தவிர்ப்பதே மிகவும் நல்லது.பால் வகை உணவுகளையும் தவிர்க்கலாம். ப்ரைடு, பப்ஸ், சமோசா போன்ற உணவுகளையும் தவிர்த்து தினமும் வாழைப் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.

*

உங்களுடைய வயது, உயரத்துக்கு தகுந்த எடை எவ்வளவு என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அடிக்கடி உங்களுடைய எடை என்ன என்பதை கவனியுங்கள். கொஞ்சம் கூடினாலும் உடனே குறைக்க முயற்சியுங்கள்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களுடைய உடம்பை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏதாவது மாத்திரை, மருந்து சாப்பிடுவதாக இருந்தால் உங்களுடைய எடை அதிகமாகாமல் டாக்டரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

*

இரவு நேரத்தில் வேலை பார்க்கும் சில பெண்களுக்கு உணவு, உறக்கம் ஆகிய பழக்கம் மாறும். இவர்களுக்கு சீக்கிரமே உடலில் எடை கூடும். இவர்கள் உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.


***
thanks இணையம்
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆப்பிளும்... ஆரோக்கியமும்..!

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும்.



இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.

*

இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

*

பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

*

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.

*

வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.



***
நன்றி - மாலை மலர்
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் !

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.




கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

*

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,


மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


***

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

*

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

*

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

*

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், l மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)

*

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

*

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

*

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.



உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.


ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.


பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.


*

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?



***
thanks adhikaalai 2008
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கேன்சர், நீரழிவு தடுக்க சைவ உணவுகள்

மாரடைப்பு, கேன்சர், டயபடீஸ் (நீரழிவு) உடல் பருமன் ஆகியவற்றைத் தடுக்க சைவ உணவுகள் சிறப்பாக உதவுவதாக அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டு சங்கத்தின் (ஏடிஏ) சார்பில் பால்டிமோர் வெஜிடேரியன் ரிசோர்ஸ் குரூப், ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் இணைந்து உணவுப் பழக்கமும் உயிரைப் பறிக்கும் நோய்களும் பற்றி விரிவான ஆய்வு நடத்தியது.

**

அதன் முடிவுகள் பற்றி உணவியல் துறை பேராசிரியர் வின்ஸ்டன் கிரெய்க் கூறியதாவது:



சைவ உணவுகள் எப்போதுமே ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான வழியாக உள்ளன. ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கின்றன. அதன்மூலம், இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதன் மூலம் உயர் மனஅழுத்தம் தவிர்க்கப்பட்டு, 2ம் வகை டயபடீஸ் வருவது தடுக்கப்படுகிறது.

*

அத்துடன், ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான பல சத்துக்கள் சைவ உணவில் அதிகம் நிறைந்துள்ளன. நார் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் சி, இ, போலேட், கரோடனாய்ட், ப்ளேவனாய்ட் ஆகியவை சைவ உணவில் அதிகம். பாலன்சான சைவ உணவுப் பழக்கத்தை கொண்டவர்களுக்கும், வித்தியாசமான உணவுப் பழக்கத்தை கொண்டவர்களுக்கும் ஆரோக்கிய நன்மைகள் வேறுபடுகிறது.

*

குறிப்பாக, கர்ப்பிணிகள், குழந்தையின் ஆரோக்கியத்தில் சைவ உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பதில் சைவ உணவுகள் அதிகம் உதவுகின்றன. பழங்கள், காய்கறிகள், சோயா, புரோட்டீன், கால்சியம், விட்டமின் டி, கே, பொட்டாசியம் ஆகியவை எலும்புகள் நலனில் அதிக நன்மை செய்கின்றன என்றார்.


***
thanks "லங்காசிறீ"

***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கணைய அழற்சி ( குணமாக்கும் மருந்துகள் )

நோய் அணுக்களால் பாதிக்கப்பட்ட பித்த நீர், கணைய நாளத்தினுள் புகுந்தால் கணைய அழற்சி ஏற்படுகிறது. அல்லது பித்தக் கற்கள் கணையத்தினுள் சென்றாலும் கணைய அழற்சி ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் கணைய அழற்சி பித்தப்பை அழற்சியுடன் இணைந்தே தோன்றுகிறது. கணையப் பகுதியின் மீது அடிபட்டாலும் தாளம்மை நோயின் பின் விளைவாகவும், புளு சுரத்தின் பின் விளைவாகவும் கணைய அழற்சி ஏற்படலாம்.





கணைய அழற்சி மூன்று வகையாகும். அவை :


1. தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி

2. கடுமை குறைவான கணைய அழற்சி

3. நாட்பட்ட கணைய அழற்சி ஆகியவையாகும்.

***

தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி :

பித்தப்பையில் உற்பத்தியாகி இருக்கும் பித்தக்கற்கள் நகர்ந்து சென்று கணைய நாளத்தை அடைகின்றன. அந்தப் பித்தக் கற்களின் கூர்முனை கணையத்தின் உட்பகுதியைக் குத்தினால் குருதி ஒழுகும். எனவே இதனைத் தீவிரக் குருதியொழுகும் கணைய அழற்சி என்கிறோம். பித்தக் கற்கள் கணைய நாளத்தை அடைத்திருக்கலாம் அல்லது கணைய நாளத்தினுள் நாக்குப்புழு உட்சென்று அடைத்துக் கொள்ளலாம்.



அல்லது குடற்புற சுருக்குத் தசையில் வலிப்பு ஏற்பட்டு கணைய அழற்சி உண்டாகலாம். நோயணு நிறைந்த பித்த நீர் கணையத்தை தூண்டிக் கணைய நொதியங்களை கூடுதலாகச் சுரக்கச் செய்கிறது. பித்தக் கற்கள் உராய்வினாலும், பித்த நீர் செறிவின் காரணமாகவும் தோன்றிய குருதியொழுக்கினை, கூடுதலாகச் சுரந்த கணைய நொதியங்கள், தானே சீரணித்து விடுகின்றன. இந்த நொதியங்கள் கணையத்தில் உண்டாகும் கொழுப்புச் சிதைவுகளையும் சீரணித்து விடுகின்றன.

***

நோய்க்குறிகள் :


1. கடுமையான வயிற்று வலி தோன்றும். அதன் கடுமை தாளாது நோயாளர் அதிர்ச்சியுற்று மயக்கமடைவார்.


2. நாடி, விரைவு நாடியாகவும் இழையோடும் நாடியாகவும் இருக்கும்.


3. குருதியழுத்தம் குறையும். கால், கை, முகம் முதலியவை சில்லிட்டு வியர்த்திருக்கும். உதடுகள் நீலித்து இருக்கும்.


4. திடீரென்று நோயாளரின் நினைவு குன்றும்.


5. வாந்தி கடுமையாகவும், தொடர்ந்தும் இருக்கும். வாய்வழியாக உள்ளுக்குள் எது சென்றாலும் சென்ற மறு நிமிடமே வாந்தியாகிவிடும். இந்த அறிகுறிதான் நோயாளரையும் மருத்துவரையும் மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது.


6. பிறகு வயிற்றின் மேற்புற தோலில் நீலநிறத் திட்டுக்கள் தோன்றும்.


7. வயிற்றுத் தசைகள் இறுதிக் கடினமாகத் தோன்றும். ஆனால் அடிவயிறு இளக்கமாக இருக்கும்.


8. குடலின் அலைவு இயக்கம் தானே குறையும்.

***

கடுமை குறைவான கணைய அழற்சி :

கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகள் அத்தனையும் இதற்கும் உண்டு. ஆனால் நோய்க்குறிகளின் கடுமை குறைவாகவும், மெதுவாகவும் தோன்றும். மயக்கம் ஏற்படாது. கடுமையான காய்ச்சல் தோன்றும். இரைப்பையின் மேல்புறம் மென்மையுற்றிருக்கும். இந்நிலை பித்தப்பையழற்சியைப் போன்று தோன்றலாம். இந்த நோயைக் கண்டுபிடிக்க சிறுநீரைச் சோதித்து சர்க்கரையின் அளவு கூடுதலாகவும் நொதியங்கள் கூடுதலாகவும் வெளியேறுவதைக் கண்டு உறுதி செய்து கொள்ளலாம்.


***

நாட்பட்ட கணைய அழற்சி :

நாட்பட்ட கணைய அழற்சி என்பது, திசுக்கள் அழிவுபட்டு, புதிய நார்த் திசுக்கள் வளர்ந்து அவைகளில் சுண்ணாம்புப் படிவுகள் தோன்றி கணையம் தன்னுடைய இயல்புத் தன்மையை இழந்து இருக்கும் நிலையாகும். இதனால் கணையம் இறுக்க முற்றுச் சுருங்கியிருக்கும். கணைய நாளங்கள் அகண்டு இருக்கும். முடிவில் கணையத்தின் அகச்சுரப்பு மற்றும் புறச்சுரப்புப் பணிகளில் கோளாறு ஏற்படுகிறது.

***

காரணங்கள் :

கணைய அழற்சிக்கு நிச்சயமான ஒரே காரணம் எது என்று தீர்மானிக்க இயலவில்லை. எனினும், குடிக்கும் பழக்கம் கணைய அழற்சிக்கு காரணமாக அமைகின்றது. தொடர்ந்து புரதக் குறைவான உணவை மட்டுமே உண்பவர்களுக்கு இந்நோய் தோன்றுகிறது.

***

நோய்க்குறிகள் :


1. நிறைய உணவு அல்லது மது அருந்திய பின்பு திடீரென்று வயிற்றில் தாங்க இயலாத கடுமையான வலி உண்டாகும். இவ்வலி 24 முதல் 48 மணிநேரம் வரை நீடிக்கும்.


2. தரையில் முதுகு படுமாறு வைத்துப் படுத்துக் கொண்டால் வலி சற்றுக் குறையும். வயிற்றின் எல்லா பகுதிக்கும் வலி பரவும். சிலருக்கு தோள்பட்டை மற்றும் முதுகுக்கும் கூட வலி பரவும்.


3. வலியுடன் சேர்ந்து பேதியாகலாம். மலம் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும்.


4. நின்று கொண்டு, முன்புறம் சாய்த்து இரண்டு கைகளையும் முட்டிக்கால் மீது வைத்துக் கொண்டு வாந்தி எடுப்பார்கள். வாந்தி எடுக்கும்போது உண்டாகும் வலியைச் சமாளிக்க இந்த நிலையை நாடுவர்.


5. வயிறு மென்மையாக இருக்கும்.


6. மலம் வெளுத்திருக்கும். நீரில் சர்க்கரை கலந்து சிறுநீராக வெளியேறும்.

***

மருத்துவம் :

பொது :- கொழுப்பு இல்லாத உணவாகக் கொடுக்க வேண்டும். அதிகம் நீருள்ள, குழைந்த அல்லது கடைந்த உணவாகக் கொடுக்க வேண்டும். ஆடை, நீக்கிய பால், புலால், ரசம் மீன், ரொட்டி, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

***

மருந்து :


1. ஐரிஸ்வெர்சிகோலர் :-

கணையப் பகுதியில் கடுமையான வலியும், இனிப்பான வாந்தியும் உண்டானால் இம்மருந்து ஏற்றது. சீரணமாகாத உணவு, நோயினால் ஏற்படும் தலைவலி, வாய் நீரூறல், நாவில் எண்ணெய்ப் பசை ஆகியவை தோன்றும் குறிகளுடன் கூடிய நாட்பட்ட கணைய அழற்சிக்கு ஏற்ற மருந்து இது.


2. அயோடின் :-

நாவில் கசப்பு சுவையுடன் எச்சில் ஊறும். வயிற்றின் இடது மேற்புறத்தில் கொடுமையான வலி இருக்கும். முதுகிலும் வலி இருக்கும். கொழுப்பு கலந்த, நுழைத்த மலம் பெருமளவு பேதியாகும்.


3. பாஸ்பரஸ் :-

மலம் சவ்வரிசி போல, கொழ கொழப்பாகவும், எண்ணெய் கலந்தும் போகும். செரியாத உணவு பேதியாகும். இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக கொழுப்புச் சிதைவு நோயிலும் மலத்தில் கொழுப்புத் திசுக்கள் வெளியேறும். மலம் வெளுத்து இருக்கும். நோயாளர் குருதி சோகையுற்றிருப்பார். இந்த நிலைக்கு இம்மருந்து ஏற்றது.


4. பெல்லடோனா :-

குருதி கசியும் கணைய அழற்சியில் இம்மருந்து வலியைக் குறைக்கிறது. கசிவுறும் குருதியை உறைய வைக்கிறது. இம்மருந்தைத் தொடர்ந்து மெர்க்கூரியஸ் என்ற மருந்தையும் கொடுக்க வேண்டும். திடீர் நோய், திடீர் வலி, திடீர் குருதிப் பெருக்கம் என்ற நோய் நிலைகளுக்கும், பூந்தசையழற்சிக்கும் பெல்லடோனா மிகவும் ஏற்றது.


5. அட்ரோபைன் சல்பேட் :-

இதுவும் கணைய நாளத்தைச் சுருங்கச் செய்து கணையக் குருதிப் பெருக்கத்தைத் தடுக்கிறது. இதைத் தவிர "பான் கிரியாட்டினம்" என்ற மருந்தும், "கல்கேரிணயா பாஸ்" என்ற மருந்தும் நல்ல குணத்தையளிக்கின்றன.




***
நன்றி : டாக்டர் ச. சம்பத்குமார்
மருத்துவ அறிவியல் மலர்
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இல்லத்தரசிகள் & பெண்களும் இனிமையாக வாழ

பெண்களுக்கு வரும் முக்கிய சில நோய்களாக, இதய நோய், மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய், சுண்ணாம்பு சத்து குறைவால் வரும் ஆஸ்டியோ ஆர்த்தரைட்டீஸ், ஆஸ்டியோ போரோசிஸ் ஆகியவை கருதப்படுகின்றன.



குடும்ப பாரம்பரிய நோய்களான ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அதிக கெட்டக் கொ ழுப்பு (எச்.டி.எல்.,), டி.ஜி.எல்., ஆகியவை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி குறைவால் வருபவை. பெண்களுக்கு, இவற்றை பற்றி தெளிவான அறிவு தேவை.

*

பெண்களுக்கு வரும் இதய நோய்கள் பல. 25 வயதுக்கு மேலான பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோ யை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

*

பெண்களில் 28, 30, 35 வயதுடையோர், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். இதில், சில டாக்டர்களின் இளம் மனைவிகளும் அடங்குவர். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சுரக்கும் ஈஸ்டிரோஜன் என்ற ஹார்மோன், இதயத்தை காப்பாற்றுகிறது.


*

இப்போது, பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டு வேலை, வேலைக்கு செல்லும் போது ஏற்படும் போட்டி, வேலை நேரத்தில் ஆண் சகாக்களோடு ஏற்படும் உறவு, உரசல், விரிசல். இதனால் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல், உடல் சோர்வு போன்றவை ஈஸ்டிரோஜனின் இதயம் காக்கும் பணியை தடுப்பதால், மாரடைப்பு வருகிறது.

*

இரவு, பகல் வேலை பளு, மசாலா உணவுகள், குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள், சமூக சேர்க்கையால் மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகிய அனைத்தும், இதய நோய் விரைவில் வர வழி வகுக்கின்றன. பெண்கள், இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்தக்குழாய் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

*

இவைகளில் இரண்டு வகை; ஒன்று, அடைப்பால் ஏற்படும் மார்பு வலி அல்லது மாரடைப்பு; இரண்டாவது வகை, ரத்த நாள சுருக்கம். ஆண்களைப் போல பெண்கள், தெளிவாக நெஞ்சுவலி என்று கூற மாட்டார்கள். “காஸ் அடைக்கிறது, ஜீரண கோளாறு; சாப்பிட முடியவில்லை, ஏப்பம்…’ என்று தான் கூறுவர். இதற்கு, “காஸ் மாத்திரைச் சாப்பிட்டதும் சரியாகி விடுகிறது’ என்று கூறி, சந்தோஷப்படுவர். இது தவறான எண்ணம்.

*

கடந்த 1992ல், கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக நான் இருந்த போது, திருமணமாகி ஒரு குழந்தையுடன் பஞ்சம் பிழைக்க, சேலத்திலிருந்து வந்த 26 வயது பெண்ணுக்கு மாரடைப்பு வந்து, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார்.


*

“கூலி வேலை செய்யும் இளம் பெண்ணுக்கு மாரடைப்பா?’ என்று வாயை பிளக்க வேண்டியதில்லை. மேற்சொன்ன காரணங்களால் வரலாம். சமீபத்தில் நான் சீனா சென்றிருந்தேன். அங்கு, தென் சீனா இன்டர்நேஷனல் போஸ்ட் என்ற பத்திரிகை வெளிவருகிறது. அதில், பெண்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.


*

அவை:


1. 30 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், குடும்பத்தில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, இடுப்பு அளவு அதிகம் உள்ளவர்கள் ஆண்டுதோறும் டி.எம்.டி., எக்கோ, கெட்டக் கொழுப்பு, டி.ஜி.எல்., எச்.டி.எல்., பரிசோதனை செய்ய வேண்டும்.

*

2. ரத்த அழுத்தம், சுகர் பரிசோதனைகள், 18 வயதில் ஆரம்பிக்க வேண்டும். பள்ளியிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

*

3. பெண்கள் உடலிலுள்ள சுண்ணாம்பு சத்து அளவு, எலும்பில் அதன் அடர்த்தி ஆகியவற்றை, 45 வயதிற்கு மேல் கட்டாயம் பார்க்க வேண்டும்.

*

4. ஈஸ்டிரோஜனின் அளவு கண்காணிக்க வேண்டும்.


*

5. இளவயது, 30 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மாரடைப்பை விட, மார்பக புற்று நோய் அதிகம் தாக்குகிறது. கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க, ஆண்டுதோறும், அவற்றுக்குரிய பரிசோதனைகளை மேற்கொண்ட வண்ணம் இருப்பது இன்றியமையாதது. இனிய சகோதரிகளே… ஆரோக்கியமாக வாழ, ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து கொண்டு, வாழ்கவளமோடு!



***
by- ROSE
thanks ROSE
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மூட்டுவலி (Arthritis)

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால்தாங்கலாகத் தான் நடக்கவேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்னை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போதபாம்ஸ் (balm) மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும்போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா? அனேகமாக நீங்கள் ‘ஆர்திரிடிஸ்’ மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.




பருவக் கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்துவிடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

***

ஆர்திரிடிஸ் என்றால் என்ன?


அறிவியலின்படி ‘ஆர்திரிடிஸ்’ என்பது (ஆர்த் : இணைப்புகள் ஐடிஸ் : வீக்கம்) முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கமாகும். முழங்கால் அழற்சி மூலம் வலி, முழங்கால் மடக்க முடியாமை மற்றும் வீக்கம் ஆகியவை முழங்கால் மூட்டில் உண்டாகிறது.

*

இன்றைய நிலையில் 100_க்கும் அதிகமான ‘ஆர்திரிடிஸ்’ நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக ‘ஆர்திரிடிஸ்’ இரண்டு வகையாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

**

1. ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் :


உடலில் இரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும் தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும் இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

**

2. ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் :


இது பொதுவாக மற்றொரு வகை ஆர்திரிடிஸ் நோயாகும். இந்நோய் மேலும் வளரக்கூடியது அல்ல. உடல் எடை அதிகமாகி முழங்கால் மூலமாக அதிக எடையை தாங்கும்போது இந்நோய் முக்கியமாக வருகிறது. நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது. சாதாணமாக மக்கள் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயினால் பாதிக்கப்படுவதால் மூட்டு வலி ஏற்பட்டு, அதிகமாக அசைக்க முடியாத நிலை ஏற்படும். இந்த ஆர்திரிடிஸ் நோய், ரியூமேட்டாய்டு ஆர்திரிடிஸ் போன்று உடலின் உட்புற பாகங்களை பாதிப்பதில்லை. மூட்டுகளை மட்டுமே பாதிக்கிறது.

**

மூட்டு வலி காரணங்கள்:


கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.


1-உங்களுடைய உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடும்போது.

*

2-அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.

*

3-அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி மற்றும் எவ்வித உடற்பயிற்சியும் இல்லாமை ஆகியவை மூலமாக தேவையில்லாத சிரமம்.

*

4-குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதாரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.

*

5-வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.

*

6-சமீபத்திய மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய்வாய்பட்டிருத்தல்.

*

7-ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் இரத்தம் உறைந்து விடுதல்.

*

8-ஏதாவதொரு மூட்டு இணைப்பு சவ்வினில் வீக்எலும்பு மூட்டின் மேற்பகுதியில் சவ்வுப் பகுதி நன்கு மூடப்படா மூட்டு வீக்கம், கீல்வாதம் போன்ற நாள் பட்ட நோய்கள்.


ஆயுஷ் ஆயுர்வேதிக் அறிவியல் மையத்தின் அறிவியலறிஞரும் மருத்துவருமாகிய விஸி பன்சால் ஆயுர் வேத சிகிச்சை வழிமுறை மூலம் இந்நோயை நீக்க முடியும் என்கிறார்.


‘‘ஒருவர் தன்னுடைய வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய தோச காரணிகளை நடுநிலையுடன் வைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம். உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பிலும் திசு மற்றும் செல்லிலும் கூட இம்மூன்று தோசக் காரணிகள் இருக்கின்றன. இல்லையேல் இக்காரணிகளே பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுத்துவிடும்’’ என்றார்.

*

அதிக நடை, நீண்ட தூரம் பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, போதுமான உறக்கமின்மை, குளிர், அதிகமான காற்று, வெப்பமான பகுதிகளில் இருத்தல் ஆகியவற்றின் மூலம் உணவு நன்கு செரிக்கப்படாமல் ‘ஆமா’ என்கிற தேவையற்ற (செரிக்கப்படாத பொருள்) பொருள் உடலில் சேருவதன் வாயிலாக வாதம் அதிகமாகி தலைக்குச் செல்கிறது. உடலில் வாதம் செல்லும்போது கூடவே ஆமா பொருளை மூட்டுகளில் விட்டுச் செல்கிறது. எலும்பு மூட்டு இணைப்புகளில் இவை தங்கி விடுவதால் கால் அசைவின்போது வலி ஏற்படுகிறது. இந்நோய்க்கு ஆமவாதா அல்லது ரிகியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் என்று பெயர்.

*

மற்றொரு வழிமுறையாக மூட்டு இணைப்புகளில் வாதம் அதிகரிக்கும் போது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் வருகிறது. ஆயுர்வேத அறிவியலின்படி இதற்கு சாந்திவாதா என்று பெயர். அதிகமான குளிர், காற்று, வெப்பமான இடங்களில் இருத்தல், அதிக நடை, நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வது, போதுமான உறக்கமின்மை, இவைபோலவே உலர்ந்த, மிருது தன்மையற்ற, நுண்ணூட்டமில்லாத உணவுப் பொருள்களை சாப்பிடுதல் ஆகிய காரணங்களால் வாதம் அதிகரிக்கிறது. அதிக நாடி துடிப்பு வாதத்தை நடுநிலையில் வைப்பதில்லை.

*

இராசயன வலி நிவாரணப் பொருள்கள், களிம்பு, தைலம், பாம்ஸ் ஆகியவை தற்காலிகமாக வலியிலிருந்து நிவாரணமளிக்கிறது. அல்லது வலியை அதிகரிக்கிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை ‘ஆர்திரிடிஸ்’ தோன்றுவதற்கான மூலக் காரணிகளை அழிக்கிறது.

*

ரியூ மேட்டாய்டு மற்றும் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் ஆகிய இரண்டு நோய்களும் சாதாரணமாக ஒருவருக்கு வரும்போது மற்ற வைத்தியத்தில் ஒரே மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆயுர்வேதிக் வழிமுறையில் வெவ்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

*

செரிமான திறனை அதிகரிப்பதன் மூலம் ‘ஆமா’ பொருள் உருவாவது தடுக்கப்பட்டு, ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் நோய் நீக்கப்படுகிறது. இதைப்போலவே வாதத்தைக் குறைப்பதன் மூலம் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயைக் குணப்படுத்தலாம். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயிலிருந்து அதிக நிவாரணம் பெறலாம். ஆனால் ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் நோய்க்கு மசாஜ் மேற்கொண்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். ஆகையால் எவருக்கேனும் மூட்டு வலி ஏற்பட்டால் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு தகுந்த ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

*

அறிகுறிகள் :


இவ்விரு மூட்டு நோய்களையும் சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும்போது அதிக வலியுடன் வெதுவெதுப்பு தன்மை உடலிலிருந்தால் அதை ரியூ மேட்டாய்டு நோய் அறிகுறி என அறியலாம். முக்கியமாக குளிர்காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும்போது அதிக வலி ஏற்பட்டால் அது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் அறிகுறியாகும்.



ரியூமேட்டாய்டு ஆர்த்தரடிஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் வழிகள்:


1-வேகமாக நடத்தல், ஒத்தடம் கொடுத்தல், பசியை தூண்டுதல் மற்றும் கசப்பு தன்மை கொண்ட உணவுகளைச் சாப்பிடுதல், லேசாக பேதி உண்டாக்குதல் மற்றும் உட்புறமாக எண்ணெய் எடுத்துக் கொள்தல் ஆகியவற்றின் மூலமாக வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.


2-இலகுவான உணவினை உட்கொண்டபின் வேகமாக நடப்பதன் மூலம் எளிதில் ஜீரணமடைந்து ‘ஆமா’ உருவாவதை தவிர்க்கலாம்.


3-சூடான சோறு அல்லது சூடான நீரை ஒரு பையில் நிரப்பி வெதுவெதுப்பான சூடு மூலமாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒத்தடம் கொடுப்பது வாதத்தைக் குறைக்கிறது. மேலும் வெதுவெதுப்பான சூடு ஆமாவை கரைக்க உதவுகிறது.


4-பசி உணர்வை தூண்டுதல் மற்றும் கசப்புடன் கூடிய கார உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் செரிமான சக்தியை அதிகரிக்கலாம்.


5-உட்புறமாக எண்ணெய் எடுத்து கொள்வதன் மூலம் அதிக வாதம் குறைக்கப்படுகிறது. உயவுத்தன்மை மூலம் உணவு வழிப்பாதையில் வாயு தொல்லையை நீக்குகிறது. மேலும் வாதத்தை கீழ்நிலைக்குக் கொண்டு வருகிறது.



***


வலியைக் குறைக்க உதவும் வழிகள்:


1-தினமும் காலையில் ஆமணக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ரோஸ்ட் 50 கராடி மீது கல் உப்பை தூவி ஒன்று மட்டும் சாப்பிட வேண்டும். கராடி பசி உணர்வைத் தூண்டுவதோடு ஆமாவை செரிக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய் உயவு தன்மைக் கொண்டிருப்பதால் உணவு மண்டலத்திலுள்ள அசுத்தப் பொருள்களை நீக்குகிறது.

*

2-அஜ்வெய்ன் மற்றும் உலர்ந்த இஞ்சி பவுடர் (ஒரு மேசை கரண்டி) சமமாக சேர்த்து தயாரிக்கப்பட்ட கராடியுடன் மோர் சேர்த்துக் சாப்பிடுதல் அல்லது அதிகமாக சுடு தண்ணீரை குடித்தல் ஆகியவை செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, மூட்டு இணைப்புகளிலுள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.


சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.

*

3-தண்ணீர் பாதியளவு குறையும்வரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிப்பதால் ‘ஆமாவை’ செரிக்க வைக்க உதவுகிறது.

*

4-சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, மூங், பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*

5-பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

*

6-தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30_லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம்.

*

7-தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

**



ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் (சாந்திவாதா) கட்டுப்பாட்டில் வைத்தல் :


1-உயவு தன்மை கொண்ட எண்ணெய்ப் பொருள்களை உட்கொள்ளுதல், ஒத்தடம் கொடுத்தல் மற்றும் வாதத்தைக் குறைக்கும் உணவுப் பொருள்களை உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

*

2-எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உயவுத் தன்மையை ஏற்படுத்தலாம். எள் எண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது மகாநாராயண தைலா போன்ற மருத்துவ எண்ணெய் ஆகியவைகளைக் கொண்டு மசாஜ் செய்யலாம். எலும்பு மூட்டு இணைப்பு பகுதியில் வீக்கமடைந்த பகுதியை குளிர்காற்று நேரிடையாக படாதவாறு துணி அல்லது பான்டேஜ் மூலமாக மறைக்க வேண்டும்.

*

3-எண்ணெய் உபயோகித்த பிறகு நீராவியுடன் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

*

4-தீவிர உணவு கட்டுப்பாட்டின் மூலம் வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

*

5-ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

*

6-இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தை குறைக்கலாம்.

*

7-5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்வதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

*

8-போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்படவேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

*

உடலில் எவ்வித வலியும் இல்லாமல் நிம்மதியாக ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேத சிகிச்சை உங்களுக்கு உதவியாக இருக்கிறது. இச்சிறிய குறிப்புகளை மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழலாம்.



***
nantri .- Kumutham

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெண்களும், மன அழுத்தமும்....

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும்?



அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று.

*

மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது.

*

சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் அடிப்படைக் காரணியாகி விடுகிறது.

*

ஒரு ஆண் தனது மன அழுத்தத்தை கோபத்தின் மூலமாகவோ, அல்லது தனக்கு விருப்பமான ஏதோ ஒரு வழியில் வெளியேற்றி விடுகின்றான். பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.

*

அவள் பெண் என்று கற்காலச் சமூகம் கட்டி வைத்த கோட்டைகளைத் தாண்ட முடியாமல், அதே அட்டவணைக்குள் தான் வாழ வேண்டி இருக்கிறது. இத்தகைய வரையறைகளைத் தாண்டும் போது ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதுவும் சமீப காலமாக அதிகரித்து வரும் மண முறிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநோய் மருத்துவர் ஒருவர்.

*

தனக்குள்ளேயே வெடித்துத் தன்னை அழிக்கும் மனக் கண்ணி வெடி ஒரு ரகமான மன அழுத்தத்தைப் பெண்களுக்குத் தருகிறது என்றால், தொழில் அழுத்தம், பணி சுமை, சுதந்திரமின்மை என பல செயல்கள் வெளியிலிருந்து தாக்குகின்றன.

*

பெண்களின் மன அழுத்தத்திற்கு உடலியல் ரீதியாகவும் காரணங்களும் பல உள்ளன. பெண்களுடைய ஹார்மோன்களின் சமநிலை ஆண்களைப் போல இருப்பதில்லை, வெகு விரைவிலேயே அதிக மாற்றத்தை அது சந்திக்கிறது. இயற்கை பெண்ணுக்கு அளித்திருக்கும் மாதவிலக்கு சுழற்சிகள் இதன் முக்கிய காரணமாய் இருக்கின்றன.

*

தான் பெண்ணாய் பிறந்து விட்டோமே எனும் சுய பச்சாதாபம் பல பெண்களுடைய வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றதாம். அதற்குக் காரணம் சமூகத்தில் ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், சுதந்திரமும் பெண்ணுக்குத் தரப்படவில்லை என்பதும், அதை எடுக்க முயலும்போது அவள் முரட்டுத் தனமான கருத்துக்களால் முடக்கப்படுகிறாள் என்பதுமே.

*

நேரடியான மன அழுத்தம் பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்டது. நம் மீது திணிக்கப்படுபவையோ, நம்மால் உருவாக்கப்படுபவையோ உள்ளுக்குள் உருவாக்கும் அழுத்தம் அது.

*

மகிழ்ச்சியாய் இருக்க முடியாத மன நிலை இத்தகைய மன அழுத்தத்தின் ஒரு முகம். ஆனந்தமாய் சுற்றுலா செல்லலாம் என அழைத்தாலும் சலனமில்லாமல் பதிலளிக்கும் மனம் அழுத்தத்தின் படிகளில் அமர்ந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

*

மறை முகமாய் தாக்கும் மன அழுத்தம் உடல் வலிகளின் காரணமாக வரக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக முதுகுவலி, கழுத்துவலி, வயிற்று வலி என வரும் வலிகள் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கின்றன. நிம்மதியற்ற சூழலையும், பல உபாதைகளையும் தந்து கூடவே மன அழுத்தத்துக்கும் விதையிடுகின்றன.

*

பெண்களுக்கு இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு அவர்களுடைய உடல் பலவீனமும் ஒரு முக்கிய காரணமாகி விடுகிறது.

ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு மன அழுத்தத்தையும் எந்த ஒரு மருந்தும் முழுமையாய் குணமாக்கி விட முடியாது.

*

நம்மைச் சார்ந்து வாழும் சகோதரிகளின் மன அழுத்தத்திற்கான விதை நம் வார்த்தைகளிலிருந்தோ, செயல்களிலிருந்தோ விழுந்து விடாமல் கவனமாய் இருப்பது ஆண்களின் கடமை.

*

பெண்களும் சமூகம் என்பது ஆண்கள் மட்டுமான அமைப்பல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காற்றடித்தால் மூடிக் கொள்ளும் தொட்டாச்சிணுங்கி மனப்பான்மையிலிருந்து தைரியமாக சமூகத்தின் வீதிகளில் பழமை வாதிகளின் எதிர்ப்புகளுக்குப் பலியாகாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

*

புரிதலும், அன்பு புரிதலும் கொண்ட, தேவையற்ற அழுத்தளுக்கு இடம் தராத, சின்ன சுவர்க்கங்களாக குடும்பங்கள் விளங்கினால், மன அழுத்தம் விடைபெற்றோடும் என்பதில் ஐயமேதும் இல்லை.



***
thanks xavi
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கண்வலியும் அதன் தீவிரமும் அ‌றிவோ‌ம் !

க‌ண் வ‌லி எ‌ன்பதை ந‌ம்மூ‌ரி‌ல் மெ‌ட்ரா‌ஸ் ஐ எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள். க‌ண் வ‌லி எ‌ன்பது ஒரு தொ‌ற்று ‌வியா‌தியாகு‌ம். க‌ண்க‌ள் ‌சிவ‌ந்து, க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியேறுவதே க‌ண்வ‌லி‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள்.




க‌ண் இமை‌யி‌ன் ‌உ‌ள்புற‌ம் ஏதோ ஒரு உறு‌த்த‌ல் ஏ‌ற்படு‌ம். க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து லேசாக வெ‌ள்ளை ‌நிற ‌திரவ‌ம் போ‌ன்று வெ‌ளியேறு‌ம். இதுவே க‌ண் வ‌லி‌யி‌ன் ஆர‌ம்பகால அ‌றிகு‌றிக‌ள்.

*

மேலு‌ம், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல், தலைவ‌லி, தூ‌ங்‌கிய‌பி‌ன் க‌‌ண்‌வி‌ழி‌க்கு‌ம் போது க‌ண் இமைக‌ள் ஒ‌ட்டி‌க் கொ‌‌ள்ளுத‌ல், க‌ண்க‌ள் ‌சிவ‌ந்து போத‌ல், க‌ண்களை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள பகு‌திக‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம், க‌ண் எ‌ரி‌ச்ச‌ல், ஒ‌ளியை‌ப் பா‌ர்‌‌க்கு‌ம் போது க‌ண் கூசுத‌ல் போ‌ன்றவை க‌ண் வ‌லி‌யி‌ன் அ‌றிகு‌றிகளாகு‌ம்.

*

க‌ண் வ‌லி எ‌ன்றது‌ம் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் பழைய க‌ண் மரு‌ந்துகளை எடு‌த்து‌ப் போ‌ட்டு‌க் கொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள்.

*

கா‌ற்று மூலமாக க‌ண்க‌ளி‌ல் பா‌க்டீ‌ரியாவோ அ‌ல்லது வைரஸோ பர‌‌வியத‌ன் காரணமாகவே இ‌ந்த க‌ண் வ‌லி ஏ‌ற்படு‌‌கிறது. அதாவது க‌ண்‌ணி‌ற்கு‌ள் வ‌ந்த பா‌க்டீ‌ரியாவை வெ‌ளியே‌ற்று‌ம் உட‌லி‌‌ன் எ‌தி‌ர்‌வினையே க‌ண் வ‌லியாகு‌ம்.

*

க‌ண்‌ணி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌ம் ‌திரவ‌ம் ம‌ஞ்சளாகவோ, ப‌ச்சையாகவோ இரு‌ப்‌பி‌ன் அது பா‌க்டீ‌ரியாவா‌ல் ஏ‌ற்ப‌ட்ட பா‌தி‌ப்பாகு‌ம். வெ‌ள்ளை ‌நிற‌த்‌திலோ, மெ‌ல்‌லிய ‌திரவமாகவோ இரு‌ப்‌பி‌ன் அது வைர‌ஸ் தொ‌ற்றாகு‌ம்.


*

க‌ண் வ‌லி ஏ‌ற்ப‌ட்டது‌ம் மரு‌த்துவரை அணு‌கி க‌ண்ணு‌க்கான மரு‌ந்‌தினை வா‌ங்‌கி பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். க‌ண் வ‌லி குணமாகு‌ம் வரை தொட‌ர்‌ந்து பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது. உ‌ங்க‌ள் க‌ண்களு‌க்கு ஏ‌ற்ற க‌ண்ணாடிகளை பொரு‌த்‌தி‌க் கொ‌ள்வது‌ம் ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ப் பரவாம‌ல் தடு‌க்கு‌ம் வ‌ழியாகு‌ம்.

*

க‌ண் வ‌லி வ‌ந்‌திரு‌க்கு‌ம் போது, ஒருவ‌ர் தா‌ன் பய‌ன்படு‌த்து‌ம் பொரு‌ட்களை ம‌ற்றவ‌ரோடு ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள‌க் கூடாது. த‌னியாக சோ‌ப்பு, டவ‌ல் போ‌ன்றவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். ஒ‌வ்வொரு முறை உ‌ங்க‌ள் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பிறகு‌ம், கையை சோ‌ப்பு போ‌ட்டு‌க் கழுவ வே‌ண்டு‌ம். மேலு‌ம், சோ‌ப்‌பு பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு ‌கிரு‌மி நா‌சி‌னியான டெ‌ட்டா‌‌ல் போடுவது‌ம் ந‌ல்லது.

*

உ‌ங்க‌ள் க‌ண்களை‌த் துடை‌க்க வை‌த்‌திரு‌க்கு‌ம் து‌ணியை த‌‌னியாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌ம், அதனை ‌கிரு‌மி நா‌சி‌னி கொ‌ண்டு துவை‌ப்பது‌ம், பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு பா‌லி‌தீ‌ன் கவ‌ரு‌க்கு‌ள் வை‌த்து அதனை அ‌ப்புற‌ப்படு‌த்துவது‌ம் ‌சிற‌ந்தது.

*

கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது. க‌ண்களை க‌ச‌க்‌கினா‌ல் க‌ண் வ‌லி ‌தீ‌விரமாகு‌ம். க‌ண் ‌வீ‌க்க‌ம், தலை வ‌லி போ‌ன்றவை அ‌திகமாகு‌ம்.

*

இதனால் கண்களின் பாகங்களாகிய கருவிழி, வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

*

கண்வலி வந்தால் சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒளியையும் பார்க்க வேண்டாம். கண்களுக்கு பொருத்தமான கண்ணாடியை போட்டுக் கொள்ளுவது உ‌ங்களு‌க்கு‌ம் ந‌ல்லது, அரு‌கி‌ல் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌ம் ந‌ல்லது.

*

உ‌ங்க‌ள் க‌ண்‌ணி‌ல் மரு‌ந்து ‌விடு‌பவரு‌ம் க‌ண்ணாடி அ‌ணி‌ந்து கொ‌ண்டு மரு‌ந்தை ‌விட வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அவரு‌க்கு‌ப் பரவாம‌ல் இரு‌க்கு‌ம். மரு‌ந்தை ‌வி‌ட்டது‌ம் கையை ந‌ன்கு சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.

*

பலரு‌க்கு‌ம் கண் அழுத்தத்தினால் தலைவலி உண்டாகும். இதனால் இந்த மாதிரியான நேரங்களில் கண் சிவப்பாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்கவும். ஒரு வித வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த கண் நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது.

*

உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியான பொரு‌ட்களை சா‌ப்‌பிடலா‌ம். க‌ண் வ‌லியா‌ல் உட‌ல் அ‌திக உ‌ஷ‌்ண‌ம் அடையு‌ம். எனவே உடலு‌க்கு சூ‌ட்டை ஏ‌ற்படு‌த்து‌ம் உணவுகளை சா‌ப்‌பிட வே‌ண்டா‌ம்.

*

அழு‌க்கான‌த் து‌‌ணிகளை‌க் கொ‌ண்டு க‌ண்களை‌த் துடை‌ப்பதையு‌ம், க‌ண்களை‌ துடை‌த்த ‌பி‌ன் கையை கழுவ மற‌ப்பது‌ம் ‌மிகவு‌ம் தவறு.


*

சுடு‌நீ‌ரி‌ல் நனை‌த்து‌ ‌பி‌ழி‌ந்து டவ‌ல் அ‌ல்லது பரு‌த்‌தியை‌க் கொ‌ண்டு க‌ண்களு‌க்கு ஒ‌த்தட‌ம் கொடு‌க்கலா‌ம். இது க‌ண் அ‌ரி‌ப்‌பி‌ற்கு ச‌ற்று ஆறுதலாக இரு‌க்கு‌ம்.

*

‌சிலரு‌க்கு க‌ண் வ‌‌லியை‌த் தொட‌ர்‌ந்து கா‌ய்‌ச்சலு‌ம் ஏ‌ற்படு‌ம். உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி கா‌ய்‌ச்சலு‌க்கு‌ம் சே‌ர்‌த்து மரு‌ந்து வா‌ங்குவது ந‌ல்லது.

*

க‌ண் வ‌லி ச‌ரியான‌ப் ‌பிற‌கு‌ம் க‌ண்க‌ளி‌ல் கூசு‌ம் த‌ன்மை ஏ‌ற்படு‌ம். இது இய‌ல்பானதுதா‌ன். நாளடை‌வி‌ல் ச‌ரியாகு‌ம்.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.




ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

*

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.


அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

***

எந்த நோய் வராது?

1. ஆஸ்துமா:

மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

*

2. கண் பாதிப்பு:

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

*

3. கேன்சர்:

பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

*

4. இருதய நோய்:

கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

***


எப்படி சாப்பிடணும்?


1. மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

*

2. வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

*

3. உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

*

4. பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

*

5. மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.


***
நன்றி தினமலர்
December 2007
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net