Friday, March 11, 2011

சிரிக்கலாம் வாங்க !


டெ.கு.டேனியல் வாத்தியாருக்கு எப்போதும் பணமுடை இருந்துகொண்டே
இருக்கும்..இதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஒரு மாணவன், காலாண்டுப்
பரீட்சை விடைத்தாளுடன் ஒரு 100 ரூபாய் நோட்டையும் இணைத்துக் கொடுத்து
விட்டான்..( 1 மார்க்குக்கு 1 ரூ. ன்னு ஸ்கீம் வேறே அறிவிச்சிருந்தான்.)
விடைத்தாட்கள் திருத்தப்பட்டு அவரவருக்கு தரப்படும் போது நம்ம பய பேப்பரோட 94 ரூ. இருந்தது..!!!

 

***

 

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ;
அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன்
உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான்
விட்டுடறேன்..

மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!
தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

 

***

 

 

 டெஸ்க்கு
குட்டி டேனியல் வாத்தியார் கணக்கு பாடம் எடுத்தார்..சிக்கல் மிகுந்த "
அல்ஜீப்ரா" ஒரு மாணவனுக்குப் புரியவில்லை..வெறுத்துப் போய் கேட்டான்.

அய்யா.. இந்த சூத்திரம் நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது..?

டேனியல் ; நிறைய உயிருக்கு சோறு போடுதுப்பா..

மாணவன் ; அப்படியா..?

டேனியல் ; ஆமாம்.. அப்புறம் கணக்கு வாத்தியார் குடும்பம் எல்லாம் எப்படி சாப்பிடுறாங்கன்னு நினைச்சே..!!!!!!!!

 

 

சின்னா ரொம்ப க்யூட். ஆனா அவனுக்கு ஒரு குறை.. அவனோட மக்கு அக்கா மூனாவது
படிக்கறா.. புத்திச்சாலியான தன்னை மட்டும் ஒண்ணாங்கிளாஸ்லே சேத்து
விட்டுட்டங்களேன்னு..
ஒரு தடவை இதை டீச்சர் கிட்டே சொல்லி
வருத்தப்பட்டான். டீச்சர் இதை ஹெட் மாஸ்டர் ட்ட சொன்னாங்க. அவரும் சின்னாவை
தன் ரூமுக்கு அழைச்சுட்டு வரச்சொன்னார்.

ஹெட் ; டீச்சர்.. இவனை என் முன்னால 4,5 கேள்வி கேளுங்க பார்ப்போம்..

டீச்சர் ; 2 ம் 2 ம் எவ்ளோ ?

சின்னா ; 4.

டீச்சர் ; 47 ம் 54 ம் எவ்ளோ ?

சின்னா ; 101.

ஹெட் ; என்ன டீச்சர் இது ? கொஞ்சம் கடினமா கேளுங்க...

டிச்சர் ; என் சட்டைக்குள்ள இருக்கு..உன் சட்டைக்குள்ள இல்லே.. அது என்ன ?

சின்னா ; தாலி..!

டீச்சர் ; உன் பேண்ட்டுல இருக்கு.. என் (சுடி) பேண்ட்டுல இல்லே.. அது என்ன ?

சின்னா ; பாக்கெட் !

டீச்சர் ; உங்கம்மாவும் அப்பாவும் ஏன் தனி ரூம்ல படுத்துக்கறாங்க ?

சின்னா ; எனக்கு ஏ.சி. ஒத்துக்காது..!

டீச்சர் ஏதோ மேலும் கேட்க முற்பட..

ஹெட்
; போதும் டீச்சர்.. இவனை 3 என்ன.. 5 ம் கிளாஸ்லேயே தூக்கிப் போடுங்க..
கடைசி 3 கேள்விக்கு எனக்கே தப்பு தப்பா தான் பதில் தெர்ஞ்சது.. இவன்
ப்ரில்லியண்ட் தான்..!

 


 


--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிக்கலாம் வாங்க !


ஆசிரியர் ; மாணவர்களே ! இன்றைய பாடம் " உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்"..!
ஒரு மனிதன் ஒரு கழுதையை அடித்து இம்சிக்கிறான்..நான் அதைத் தடுக்கிறேன்..
இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் ?

மாணவர்கள் ; ( ஒட்டு மொத்தமாக) சகோதர பாசம்..!



ஆசிரியர் ; மாணவர்களே..நாம் சாப்பிடுவதற்கு முன் இறைவனை வணங்க வேண்டும்..நான் அப்படித்தான் செய்கிறேன்..நீங்களும் செய்வீர்களா..?

மாணவர்கள் ( ஒரே குரலில்) தேவையில்லை சார்..எங்கம்மா நல்லா சமைப்பாங்க..!!!

 

 

***

 

 

ஆசிரியர் ; மாணவர்களே.. எதைச் சொன்னாலும் ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டும்.. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்..
தேவை இல்லாமல் வள வள என்று பேசி மற்றவர்கள் பொறுமையை சோதிப்பவர்களை என்னவென்று சொல்வீர்கள்..?

மாணவன் ; டெஸ்க் குட்டி டேனியல் வாத்தியார்..!

 

***

 

விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் டெ.கு. டேனியல் வாத்தியாருக்கு
பிறந்த நாள். மாணவர்கள் எல்லோரும் பரிசுப் பொருள்களோடு...முதலில் மளிகைக்
கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( லேசாக அழுத்திப்பார்த்து) இது ஜீனிப் பொட்டலம் தானே?
ம.கா.மகன் ;( ஆச்சர்யத்துடன்) அட ஆமா சார்..!

அடுத்து விவசாயி மகன்..
டேனியல் ; இது உளுந்து, பயறு தானே?
வி.மகன் ; ஐய்யோ..எப்படி சார் கண்டு பிடிச்சீங்க..?

அடுத்து பெட்டிக் கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( இலேசாக இருப்பதை உணர்ந்து) இது..படவா சிகரெட் பாக்கட் தானே ?
பெ.கா. மகன் ; ( வெட்கத்துடன்) ஆமா சார்.. நீங்க அநியாயத்துக்கு ப்ரில்லியண்ட் சார்..

அடுத்து நான்.. ( என் வில்லங்கத்தனம் தெரிந்தவர் ஆதலால் ஒரு முறைக்கு இரு முறை தடவிப் பார்த்த பின்)
டேனியல் ; டேய் ராஜா.. இது கேக் தானே..
நான் ; இல்லே சார்.. ( டேனியல், மாணவர்கள் இலேசான அதிர்ச்சி)
டேனியல் ; ( முகர்ந்து பார்த்து) அப்போ இது ஜாங்கிரி தானே..?
நான் ; இல்லே சார்..( அனைவர் முகத்திலும் பேரதிச்சி).
டேனியல்
; ( பரிசுப் பொதியை கிழித்து கையை உள்ளே விட்டு ந்னிரடிப் பார்த்துவிட்டு
பிரகாசமான முகத்துடன்) அடேய் திருட்டுப் பயலே..குலோப் ஜாமூன் தானே..?
நான்
( அப்பாவியாக) இல்லே சார்.. ( இப்போது மானவர்கள் முகத்தில் ஆர்வமும்
நக்கல் சிரிப்பும்.. டேனி. முகத்தில் எள்ளும் கொள்ளும்.) வேறே என்ன
******த்தாண்டா வச்சுத் தொலைச்சிருக்கே..?
நான் ; நாய்க் குட்டி சார்.. லீவு விடறத்துக்கு முந்தியே பேக்கிங் பண்ணிட்டேன்..!
( அன்றுடன் என் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது)

 

--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!'

றவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.

அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது. நான்கு பெண்கள் கூடிவிட்டால் புறணி பேசத் தொடங்கிவிடுவார்கள் என்று சொல்வதுண்டு. ஆண்கள் கூடினாலும் அப்படித்தான். ஆனால் இங்கு நாம் சொல்ல வரும் விஷயம் அர்த்தமற்ற அரட்டையைப் பற்றியதல்ல.

தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.

நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.

பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்... என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.

குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை' என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.

புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.

உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்' என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.

அப்படி இருந்தால்தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.

நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்' என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.

ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.

பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்' என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி..., அப்படியா..., சரி வேற... என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.

அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.

எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 




courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொண்ணுங்க பேச்சை கேக்கணும்னு..


கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife
சொல்ற பேச்சை கேளுங்க..,

லவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர்
சொல்ற பேச்சை கேளுங்க..

கல்யாணமும் ஆகல.. லவ்வரும்
இல்லையா..? No Problem..!!

எதிர்வீட்டு பொண்ணு.,
பக்கத்து வீட்டு பொண்ணு..
இப்படி எதாவது ஒரு பொண்ணு
இருக்கும்ல.. அவங்க சொல்ற
பேச்சை கேளுங்க..

ஏன்னா..
பொண்ணுங்க எது சொன்னாலும்.,
செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!!

( அட., இந்த பொண்ணு ' நியூட்டன் '
கணக்கா இன்னாமா யோசிக்குது..?!! )

நான் சொல்லலே.. பொண்ணுங்க
தொலை நோக்கு பார்வை உடைய
சிறந்த சிந்தனைவாதிகள்னு..

அதனால தான் சொல்றேன்..
பொண்ணுங்க சொல்ற பேச்சை
நாமெல்லாம் கேக்கணும்னு..

" கேக்க மாட்டேன்"னு பிடிவாதம்
பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல
இந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்..

அட நானும் அப்படி பிடிவாதமா
இருந்தவன் தான். இந்த SMS வர்ற
வரைக்கும்..

என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச
அந்த SMS இதோ...

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க
கிளம்பும் போது அவருக்கு கல்யாணம்
ஆகியிருந்தா.. அவரோட Wife என்ன
சொல்லி இருப்பாங்க..?!!

" எங்கே போறீங்க..? "

" யாரெல்லாம் உங்க கூட வர்றா..? "

" எப்போ வருவீங்க..? "

" எங்கே தங்குவீங்க..? "

" என்ன கண்டுபிடிக்க போறீங்க..? "

" எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" உங்களால முடியுமா.? "

" உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? "

" நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? "

" என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? "

" நானும் உங்க கூட வரட்டுமா.? "

கொலம்பஸ் : " ஆணியே புடுங்க வேணாம்..
நான் எங்கேயும் போகல..!! "

இப்ப புரியுதா...? கொலம்பஸ்க்கு
ஒரு Wife இருந்திருந்து., அவரும்
Mrs.கொலம்பஸ் சொல்ற பேச்சை
கேட்டிருந்தா.. இன்னிக்கு..

1. அமெரிக்கா இப்படி எல்லோரையும்
நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..

2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி
போயிருக்காது.

3. Twin Towers இடிஞ்சி இருக்காது..

4. பொருளாதார நெருக்கடி வந்திருக்காது..

இதை எல்லாம் விட முக்கியமா..

5. எனக்கும்., Bill Gates-க்கும் சண்டையோ
& Ego Problem-மோ வந்தே வந்திருக்காது..!!

ஹி., ஹி., ஹி..!!

என்ன.., நான் கரெக்டா பேசறனா.?!!


ஆங்.. மறந்துட்டேனே..!!

" Wish You Happy Women's Day..!! "


--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net