Wednesday, December 29, 2010

அரை ஸ்பூன் சர்க்கரை போதும் டென்ஷன் பஞ்சாய் பறக்கும்

தலையை பிய்த்து கொள்ள வைக்கும் டென்ஷனான நேரங்களில் கொஞ்சம் சர்க்கரை சாப்பிட்டால் டென்ஷன் பஞ்சாய் பறந்து விடும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஒஹியோ மாநில ஆராய்ச்சியாளர்கள்.மன உளைச்சல் அதிகம் ஏற்படும் போது உடல், மனம் மட்டுமின்றி மூளையும் களைப்படைகிறது. இதனால் வேறு எந்த வேலையைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து உடனடியாக வெளிவர உடனடி மருந்து சர்க்கரை தானாம். இந்த ஆராய்ச்சிக்காக அதிகப்படியான டென்ஷன் பாதிப்புக்குள்ளான சுமார் 2000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மூளை செயல்பாடுகளை கண்காணித்தனர். இவர்களை 2 பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினருக்கு மன உளைச்சல் அதிகமாகும் போது சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த தண்ணீரை கொடுத்தனர். இன்னொரு பிரிவினருக்கு இது கொடுக்கப்படவில்லை. இதில் சர்க்கரை கொடுக்கப்பட்டவர்கள், உடனடியாக தங்கள் கவலையில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டது.

அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், டென்ஷனை குறைக்கும் எளிய வழியை கண்டுபிடிக்க ப்ரட் புஷ்மன் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வெளியாகி உள்ள தகவல் தான் இது. இது குறித்து ப்ரட் புஷ்மன் தெரிவித்தவை:
டென்ஷன் பாதிப்பில் இருக்கும் போது நிம்மதியின்றி இருப்போம். தூக்கம் வருவதும் கடினம். மருந்து மாத்திரைகளும் உடனடி பலன் தராது. அத்தகைய சமயங்களில் சர்க்கரை நிச்சயம் கை கொடுக்கும். அரை ஸ்பூன் சர்க்கரை மூளை செயல்பாட்டை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கும். டென்ஷன் உடனடியாக மறைந்து விடும். சர்க்கரை ரத்தத்துடன் கலந்து குளுகோசாக மாறி மூளைக்கு செல்கிறது. குளுகோஸ் கிடைத்தவுடன் மூளை வலுவாக செயல்பட்டு சுறுசுறுப்பாகிறது.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 





courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

என்றும் உன் நினைவுகளோடு



 என்றும் உன் நினைவுகளோடு

 என் உயிரே ...!
உன் நினைவுகளோடு
உறைந்துகொள்கிறேன்
உனக்காக .........!

எரிந்துகொள்ளும் தீயில்
எரிவதாக ........
உணர்கிறேனடா
அந்நேரங்களில் ...!

கருகிப் போவதற்கு
சருகல்ல காதலனே....!
நம் காதல் ..!
இது .......
கலியுகத்திலும் வாழும்
காதல் காவியமடா..!

காலம் பிரித்ததாக....
கலங்காதே காதலா...!
பிரிவுகளில் தானடா...
உறவுகளின்
ஆழம் புரியும் ...!

ஆழக்கடல் கடந்த
நீள நினைவுகள் எல்லாம்....
கனவுக்குள் வந்து
மீளவும் உன்னோடு.....
பாலம் அமைக்குதடா..!

என் ஆசைக் காதலனே..!
உன் தலையணை
அருகே தானா................
என் நினைவுகளைப்
புதைத்து வைத்திருக்கிறாய் ...!

உன் நினைவுகளோடு
நிதமும் இருப்பதால் .......
நித்திரை கொள்வதில்
இல்லையடா......
எனக்கு நிம்மதி .!

உன் நினைவுவலி வந்து
என் நெஞ்சில்முள்ளாய்
தைக்கலாம்..கண்ணே ....!.
வலிகளிலும்........
ஒரு சுகம் இதுதானடா..!

உணவுகளில் விருப்பமற்று
கண்ணீரில் தினம் குளித்து
கண்ணே .....நீ
இருந்துவிடாதே ....!
உயிர்வாழ வேண்டுமடா ...
நம் காதல்...!

எந்நேரமும் .......
உன் மீது தானடா....
என் ஞாபக அலைகள் ....!
அது ...
தேசம் கடந்து வீசுமடா ..
தேனிலவு உனைப் பார்க்க ...!

உன் உயிர் சுமந்த
காற்று வந்து ...
என் உணர்வுகளில்
தீக்குளிக்க ......

மீண்டும் உன் முதல்பார்வை
ஆண்டு பல கழிந்து
அள்ளி முத்தமிட ....
அணைத்துக் கொள்கிறேன்
உன் நினைவுகளை....!! 



காதல், சொந்தம், நட்பு.

இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தல் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு  ...

............................................................

நீ இருக்கிறாய் 

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

............................................................ 

 காதலும் சுமையா? 

நினைவுகளில் நெஞ்சம் சுழல்கிறதே
ஒரு நொடியில்
விழிகளில் அடை மழையே.
முகம் பார்த்த கண்கள்,
உந்தன் முகம் தேடுதே..
முடியாமல் இதயமதிலே
கானல் வரி பாடுதே.
பிரிவேதுமில்லாமல் காதல்
உணர்வேது நெஞ்சமே..

பார்கின்ற பொழுதுகளில்
எந்தன் மனம் தான் தடுமாறவில்லை.
பழகிய நாட்களுமே..
உடன் கரை தான் சேரவில்லை..
மனம் கொண்ட வலிகள் அதிலே
சொல் இறகாகினாய்.
மனம் உலர்கின்ற வார்தைக்கும்
மொழி சூடி உறவானாய்
வலிகளை நினைத்தால் காதலும் சுமையா?

............................................................ 

  உன் மௌனத்தில் அடக்கி விடுகிறாய்..

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......
............................................................

  தோல்வி

தோல்வி எனக்கு புதிதல்ல
அதனாலதான் அவனை
மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது - கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன் 

............................................................

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!

                                
-வைரமுத்து



அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

படித்ததில் பிடித்தது


"வெறுத்த" ஒருவரையே மறக்க முடியாத போது...
          "விரும்பிய" ஒருவரை எப்படி மறப்பது..!!!

*******************************************************************************

          மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே ..
             ஒருவேளை
          மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும் 
          என் பாழாய்ப்போன மனது..

*******************************************************************************

          கஷ்டத்தை நினைத்து கவலைபட்டால்
          கவலையும் உன்னை  கஷ்டப்படுத்தும்

*******************************************************************************

     
 
    
ஒரு " ஆண் " மதிப்படைகிறான் ...
         எப்போது தெரியுமா...?
         ஒரு " பெண் " அவனுக்காக கண்ணீர் சிந்தும்போது தான்..!!!

*******************************************************************************

        இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை
              நம் துயரங்கள் கூட 
*******************************************************************************




--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரி சிரி சிரிசிரி சிரி

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்நான்...இத சொல்லியே ஆகனும்....





question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think

இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு

பாடல்:

முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே !


                        ************     ***********


கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.


மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.

மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்


                       **************      **************


ம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!

எப்படி?
நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!



துக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !



னைவி: என்னங்க நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. நான் போகாத இடத்துக்கு என்ன அழைச்சுகிட்டு போறீயா?

ணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்!


றிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால சிம்பு படத்த பாத்தா அப்பவே சாவு !


 
                                *******          ********

 
ம்ம தமிழ் படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் RDX அந்நியன் முன்னாடி பேசினால் அவர் என்ன சொல்லுவாரு வாங்கப் பார்க்கலாம்


"சிட்டிசன்"
(கோர்ட் சீன்)
ஜித்: அத்திப்பட்டினு ஒரு ஊர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு?
நீதிபதி RDX: எருமையாகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உங்களுக்கு?
ஜித்: தெரியாதே...
நீதிபதி RDX: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு...


"காக்க காக்க"

ஜீவா: அவளைத் தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளைத் தூக்கினா உனக்குத் தாண்டா வலிக்கும்... அவ 120 கிலோ டா...


"கௌரவம்"

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு... அதனால பறந்து போயிடுச்சு...
த்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகாம பின்ன என்ன நீந்தியா போகமுடியும்?


"நாயகன்"

மல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!
டிராபிக் போலீஸ்: அவன் போறப்ப கிரீன் சிக்னல், இப்ப ரெட்!



"வல்லவன்"
சிம்பு: நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்னு ஆசைப்படற... நான் அம்பானியாவே ஆகணும்னு ஆசைப்படறேன்!
மக்கள்: இந்தக் கொடுமையெல்லாம் கேட்க்ககூடாதுன்னு தாண்டா அம்பானி போயிட்டாரு!

"தவசி"
விஜயகாந்த் : புயல் அடிச்சுப் பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சுப் பொழைச்சவன் இல்லடா!!!
ளவரசு: நீங்க அடிச்சுப் பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படத்தத் தியேட்டர்ல பார்த்துப் பொழைச்சவங்க யாரும் இல்லையாம்!!

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net