Monday, October 11, 2010

ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்

ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,'' என்கிறார் சிவகாசி மாறன்ஜி.
தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், சுக்கு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம்.
செய்முறை: நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை  பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.
மருத்துவ பயன்கள்:
வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.
இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். தயாரிப்பில் சந்தேகம் இருந்தால் தாய்வழி இயற்கை உணவகத்தை 93674 21787 தொடர்பு கொள்ளலாம்.



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாழ்க்கை இன்பத்திற்கு...!

`உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா? நீங்கள் உங்கள் வாழ்வில் யாரையாவது மிக முக்கிய முன்னோடி மனிதராக கருதி, அவரை பின்பற்றி வாழ விரும்புகிறீர்களா? அந்த முக்கியமான மனிதர் வேறு யாருமல்ல அது நீங்கம் தான்! இதை நீங்கள் உணர்ந்தீர்களானால், உங்கள்வாழ்க்கை சுகமாக அமையும்' என்கிறார், முற்போக்குச் சிந்தனையாளர் சித்ரா ஜா. தொடர்ந்து அவரது சிந்தனைக் கருவூலங்கம் உங்கள் கவனத்திற்கு...


1. `நான் நல்லவனா?' -இந்தக் கேள்வியை உங்களுக்குள்ளே அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள்.`உங்களுக்குள் இருக்கும் சுயநலம் தான் உங்களை உங்களிடமிருந்தே தூரமாக்குகிறது!' என்பதை நீங்கள் விடையாகக் கொண்டால், அந்த எண்ணம் உங்களை முதிர்ச்சியுற்ற பண்பாளனாக பரிமளிக்கச் செய்யும். எந்த ஒரு அர்த்தமற்ற பொருளையும் பிறரிடமிருந்து எதிர்பார்த்து நிற்கும் எண்ணத்தை மாற்றி அமையுங்கள்! இலவசம் இனிது என்ற சிந்தனை உங்களை இன்னொருவரை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளிவிடும்.


2. சிலர் தங்களால் முடிகிற காரியத்தை செய்ய முயலாமல் நொண்டிச்சாக்கு சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவ்வாறே உங்களிடமும் எந்த ஒரு காரியத்திற்கும் நொண்டிச்சாக்கு சொல்லும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடுங்கள்!


3. வாழ்க்கை போக்கில் சில தடைகள் உங்களை மேற்கொள்ள பார்க்கலாம். தடைகளைத்தாண்டி வாழ்க்கையை முன்நடத்திச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த ஏதாவது ஒரு சிறு குற்றத்திற்காக உங்கம் மனதை வீணாக அலட்டிக்கொள்ளாமல் சுதந்திரமாக செயல்படுங்கள்.


4. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டு மனதை வருத்திக் கொண்டிருக்காதீர்கள்.


5. உங்கம் முயற்சி அல்லது முயலாமை குறித்து அதிகநேரம் சிந்தித்து காலவிரயம் செய்யாதீர்கள்.


6. `ஒரு காரியத்தை செய்து முடித்தபிறகு `அதை அப்படிச் செய்திருக்கலாமே... இதை இப்படிச் செய்திருக்கலாமே..!' என்று மாறிமாறி சிந்தித்து, குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.


7. உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் அதன் விளைவுக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்பதில் தெளிவாயிருங்கள். ஏதேனும் தவறு நேர்ந்தால் நீங்களே பொறுபேற்றுக் கொள்ளுங்கள். பிறர் மீது பழிபோடும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.


8. உங்கள் வாழ்வில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நல்ல சந்தர்பத்தையும் நழுவ விடாமல், அதனை முழுமையாக பயன்படுத்துங்கள்.


9. கடந்த கால சிந்தனைகளில் அதிக நேரம் ஆழ்ந்து விடாமல் நடப்பு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவை நல்லபடியாக நடப்பதற்கு, முழுக்கவனத்துடன் செயல்படுங்கள்.


10. முன்னேற்றம் பற்றியே எப்போதும் சிந்திங்கள். சிலநேரங்களில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் கண்டு ஒருபோதும் பின்னோக்கி போய்விடாதீர்கள்.


11. அறிந்தோ, அறியாமலோ யாருக்கேனும் உங்களால் சிறு தீங்கு நடந்திருந்து அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்தால், அதை உடனே கேட்டு விடுங்கள். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போடாதீர்கள்.


12. உங்கள்  வாழ்வில் நிகழும் எல்லா செயல்களுக்கும் நீங்கள்தான் காரணம் என்பதை பகுத்துணர்ந்து கொள்ளுங்கள். பிறர்மீது பழிபோடுவது முட்டாள்தனமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


13. சந்தேகம் ஏற்படுகிற காரியங்களில் `நாம் செய்வது சரிதானா? சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறோமா?' என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள்-8

ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.
வீழ்ச்சி அடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.
**********
வெற்றி தலைக்கும் ,தோல்வி இதயத்திற்கும்
செல்லாது பார்த்துக்கொள்.
**********
காலம் என்பது........
நம்பிக்கைகளின் தொட்டில்;
ஆசைகளின் கல்லறை;
முட்டாள்களுக்குக் கற்றுத் தரும் குரு.
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்.
**********
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
**********
இளமையாக இருக்கும் போது ரோஜா மலர்கள் மேல் படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மேல் படுக்க நேரிடும்.
**********
செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கும்;
ஆளைப் பார்த்து எடை போடக் கூடாது.
**********
பரவசத்தோடு பார்;எல்லாம் பரவசமாகும்!
எல்லாமே பார்க்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.
**********
பயம் எப்போதும் எலியைக் கூடப் புலியாகக் காட்டும்.
**********
மனிதனுடைய பெரிய பிரச்சினை அடுத்த மனிதன் தான்.
கூடவே இருந்தாலும் பிடிக்காது;இல்லாவிட்டாலும் பயம்.
**********
தன கோபத்துக்கு மரியாதை இல்லை என்று தெரிந்தால்
யாரும் கோபப் படுவதில்லை.
**********

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net