Saturday, February 26, 2011

சோகம்

எந்த சம்பவமும் நம்மை சோகப்படுத்துவதில்லை.ஆனால் உண்மைகளை ஏற்க மறுத்துவிட்டு நம் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கற்பனையில் மூழ்கும் போதுதான் சோகம் படிப்படியாக நம்மைக் கவ்விக் கொள்கிறது.குறிப்பிட்ட ஒரு சம்பவம் நம் சிந்தையைக் கிளறிவிட சோகம் ஏற்படுகிறது.நிறைவேறாத விருப்பு வெறுப்புகள் ஏராளமாக இருப்பதால் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரும் சோகப்படுகிறார்கள்.ஒரு காரியம் நிறைவேறாது என்று  தெரிந்தவுடன்  முயற்சியைக்  கைவிடுகிறோம் .அது நமக்குள்ளே புதைந்துபோய் சோகத்திற்கு வித்திட்டு விடுகிறது.உண்மைகளை ஏற்க மறுப்பதே பல பிரச்சினைகளுக்குக்  காரணமாக அமைகிறது.கசப்பான முடிவுகளைத் தள்ளிப் போடுவதற்கு என்ன காரணம்?இனிமையான சூழ்நிலைகளை மட்டுமே மனம் விரும்புகிறது.இது குழந்தைத்தனமான பக்குவமற்ற  பார்வை.நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை இழப்பது தான் வாழ்க்கையில் பெரிய சோகம்.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தேவையில்லாமல் கவலைப்பட்டு போலி வாழ்க்கை வாழ்வது அதைவிடப் பெரிய சோகம்.நாம் எதிர்பார்த்த முடிவு கிடைத்துவிட்டால் அதை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்.எதிர்பார்ப்பிற்குக் குறைவாகவோ,மாறுபட்டோ இருந்தால் நாம் ஒடுங்கி உடைந்து போகிறோம்.முடிவு எப்படியிருந்தாலும் ஒரே மன நிலையில் இருப்பதுதான் கர்ம  யோகிக்கு அடையாளம்.
                                                             --சுவாமி தயானந்த சரஸ்வதி 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment