Saturday, February 26, 2011

சற்றே நகுக

ஒரு விருந்தில் ஒருவர் அருகிலிருந்தவரிடம் கேட்டார்,''அந்த மூலையில் மிகவும் உரக்கப் பேசிக்கொண்டிருக்கும் அசிங்கமான பெண்மணி யார்?''
''அவள் என் மனைவி.''
''நான் அவரைச் சொல்லவில்லை ,அவர்  அருகில்  இருக்கும்  பெண்ணைக்  குறிப்பிடுகிறேன்.''
''அவள் என் சகோதரி.''
**********
ஆங்கிலத்தில் அகராதியைத் தயாரித்த சாமுவேல் ஜான்சனைச் சந்தித்த இரண்டு பெண்மணிகள் அவரிடம்,''நீங்கள் கெட்ட வார்த்தைகள் எதையும்  உங்கள்  அகராதியில் சேர்க்காதது குறித்து மகிழ்ச்சி,''என்றனர்.உடனே ஜான்சன் கேட்டார்,''ஏன் நீங்கள் அவற்றைத் தேடினீர்களா?''
**********
ஒரு பணியாள் தன்னுடைய செல்வந்தர் எஜமானிடம்,''நீங்கள் என்னை முழுசா நம்பலை.அதனால் வேலையை விட்டு நின்னுக்கிறேன்,''என்றான். அவர்,''நீ எப்படி அப்படி சொல்லலாம்?சாவிக்கொத்தையே உன்னை நம்பி மேஜையின் மேலே தானே வச்சிட்டு வெளியே போகிறேன்,''என்றார். பணியாள்,''உண்மைதான்.ஆனால் ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?''என்றான்.
**********
ஒரு இளைஞன் ஒரு பெண்ணை நேசிப்பதாகக் கூறினான்.அவன் நண்பன் கேட்டான்,''என்ன,முதல் பார்வையிலேயே காதலா?''இளைஞன் சொன்னான்,''இல்லை இது இரண்டாவது பார்வையில் நிகழ்ந்தது.''  எனென நண்பன் விளக்கம் கேட்க அவன்  சொன்னான்,''முதல் முறை பார்த்தபோது அவள் பணக்காரப்பெண் என்று தெரியாது.''
**********
ஒரு பெண் மருத்துவரிடம் சென்று,''என் கணவர் தூக்கத்தில் ஏதேதோ பேசுகிறார்.''என்று சொன்னார்.மருத்துவர் ,''இந்த மாத்திரையைக் கொடுங்கள்.அவர் ஆழ்ந்து தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும்.''என்றார்.அந்தப்பெண் சொன்னாள்,''டாக்டர்,அவருக்குத் தூக்க மாத்திரை  வேண்டாம்.நான் தூங்காமல் இருக்க ஏதாவது மாத்திரை கொடுங்கள்.ஏன்என்றால் அவர் தூக்கத்தில் பேசுவது, முழிச்சிக்கிட்டு இருக்கும் போதுபேசுவதைவிட சுவாரசியமா இருக்கு.''
**********
ஒரு பேச்சாளர் சிறப்பு விருந்தினரை வானளாவப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.ஐந்து நிமிடம் கழித்து அந்த சிறப்பு விருந்தினர்,எழுந்து,''தயவு செய்து என்னைப் புகழாதீர்கள்,''என்றார்.அருகிலிருந்தவர்,''ஏன் ஐந்து நிமிடமாக ஒன்றும் சொல்லாமல் இப்போது சொல்கிறீர்கள்?''என்று கேட்டார்.அதற்கு அவர் சொன்னார்,''நானே அதில் மயங்கி மெய் மறந்துவிட்டேன்.அதனால்தான்.''
**********
ஒரு சிறுவனின் அருகில் ஒரு அழகிய நாய் இருந்தது.அங்கு வந்த அவன் நண்பன் கேட்டான்,''உன் நாய் கடிக்குமா?'''கடிக்காது,''என்று பதில் வந்தது.நண்பன் உடனே அந்த நாயின் நெற்றியில் கை வைத்ததும் அந்த நாய் அவனை கடிக்காத குறையாய் உறுமி அவன் மீது பாய்ந்தது.வெலவெலத்துப்போன நண்பன் ''உன் நாய் கடிக்குமா என்று கேட்டேன்.நீ ஏன் அது கோபக்கார நாய் எனச் சொல்லவில்லை?''என்று கேட்டான்.அவன் சொன்னான்,''என நாய் சாதுவானது அது என் வீட்டில் இருக்கிறது.இது என் நாய் இல்லை வேறு யாருடையதோ?''
**********
                                        இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு என்ற நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment