பேராசை கொள்ளும்படி நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிரீர்கள்.அது ஒருபோதும் எந்த இன்பத்தையும்தராது..அது வன்முறையானது.அழிவு பயப்பது.புத்திசாலி மனிதன் பேராசை கொள்வதில்லை.மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி அவர் சாதாரணமாக வாழ்கிறார்.ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு என்பதை அவர் அறிவார்.அவர் ஒரு போதும் பிறருடன் ஒப்பிடுவதேயில்லை.ஒருபோதும் தன்னை மேல் என்றோ ,கீழ் என்றோ அவர் எண்ணுவதில்லை.அவர் ஒருபோதும் உயர்வு மனப்பான்மையாலோ,தாழ்வு மனப்பான்மையாலோ துன்புறுவதில்லை.ரோஜாவை தாமரையுடன் எப்படிஒப்பிட முடியும்?எல்லா ஒப்பீடுகளின் துவக்குமுமே தவறாக உள்ளன.ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய தனியழகு கொண்டிருக்கிறார்.இவற்றை ஒப்பிடுவது சாத்தியமில்லை.
அப்படியானால் பேராசை கொள்வதன் பொருள் என்ன?உன்னை விட நானே உயர்வாக இருக்க வேண்டும் என்பதே பேராசையின் பொருள். மற்றவர்களை விட நான் உசத்தி என்பதை நான் நிரூபித்தாக வேண்டும்.இதற்காக நீ ஏன் புத்தியை இழக்க வேண்டும்?
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment