Saturday, February 26, 2011

சமய மறுப்பாளன்

முல்லாவின் புகழ்  மீது பொறாமை கொண்ட  சில பேர் முல்லா,மதத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார் என்றும்
அவர் சமய மறுப்பாளர் ஆகிவிட்டார் என்றும் சுல்தானிடம் வழக்குத் தொடுத்தனர்.சுல்தான் அதுபற்றி முல்லாவிடம் விளக்கம் கேட்டார்.முல்லா உடனே அந்த சபையிலிருந்த முக்கியமான பத்து  புத்திசாலிகளைத் தேர்ந்தெடுக்குமாறு சுல்தானிடம் வேண்டிக்கொண்டார்.பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுப்பதில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.இறுதியில் பத்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அந்த பத்துப்பேரிடமும் எழுதுகோலையும் தாளையும் தந்தார் முல்லா.ஒவ்வொருவரும் கடவுளைப்பற்றி அவர்கள் நினைப்பதை எழுதித்தரக் கூறினார்.பத்துப்பேரும் பத்துவிதமான பதில்களை எழுதித் தந்தனர்.அவற்றை சுல்தானிடம் வாசித்துக் காட்டிய முல்லா,,''இறைவனைப்பற்றி எழுதுவதிலேயே இத்தனை கருத்துவேறுபாடுகள் உள்ள இவர்கள்,நான் சமய மறுப்பாளன் என்ற கருத்தில் மட்டும் ஒன்றுபட்டுள்ளனர்.முதலில் இவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனைப் பற்றிய ஒருமித்த  கருத்துக்கு வரட்டும்.பிறகு அதை நான் ஆதரிப்பவனா,எதிர்ப்பவனா என்பதைப் பற்றிப் புகார் கூறட்டும்.''என்றார்.புகார் கூறியவர்கள் அடங்கிப்போயினர்.
சித்தாந்தங்களோ  அவற்றிடையே உள்ள வேறுபாடுகளோ பிரச்சினை அல்ல. சித்தாந்தவாதிகள்,தம் எண்ணங்களையே கடவுளின் விருப்பமாகச் சித்தரிக்க முயல்கிறார்கள்.நீ அறியாததை,'நான் அறியாதது இது,' என்றே கூறு. அதன் மீது உன் ஊகங்களைத் திணித்துவிடாதே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment