Saturday, February 26, 2011

இல்வாழ்க்கை

ஞானி கபீரைத்தேடி ஒருவர் வந்தார்.அவர் முகத்தைப் பார்த்த  கபீர்,''உங்களைப் பார்த்தால் உங்களுக்கு இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்று தெரிகிறது.''வந்தவர் ஆச்சரியப்பட்டு அது உண்மை என்றும்,தங்கள் வாழ்க்கை போராட்டமாகவும் நரகமாகவும் இருப்பதாகக் கூறினார்.
கபீர் இதற்கு பதில் சொல்லவில்லை.தன மனைவியை அழைத்து,இருவருக்கும் பால் கொண்டு வரும்படி சொன்னார்.அவர் மனைவி கொண்டு வந்து கொடுத்தார்.இருவரும் அருந்தினர்.வந்தவர் முகம் அஷ்டகோணலாக ஆனது.கபீர் முகம் கோணாமல் அமைதியாகக் குடித்துக் கொண்டிருந்தார்/அந்தப் பாலில் இனிப்பே இல்லை.உள்ளிருந்து அவர் மனைவி,''போதுமா?எல்லாம் சரியாக இருக்கிறதா?''என்று கேட்க ,''போதும்,ருசியாக இருக்கிறது,''என்றார் கபீர்.
வந்தவர் இப்போது கேட்டார்,''என் பிரச்சினைக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே?''கபீர் குவளையைக் காட்டியபடி சொன்னார்,''இதுதான் என் பதில்.குறைகளைப் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போவதே இல்வாழ்க்கைக்கு இனிய வழி.''
எதையும் பெரிது படுத்தாமல்,இதுதான் நடக்க வேண்டும்,இப்படித்தான் நடக்க வேண்டும் என எல்லாவற்றையும் தன விருப்பத்துக்கு வளைக்காமல்.அதன் விருப்பப்படி விட்டுக் கொடுத்துப் போவதே சிறந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment