கலிபா அல் மாமுன் அழகான அரபுக் குதிரை ஒன்று வைத்திருந்தார்.ஓமா அதை வாங்க ஆசைப்பட்டான்.அதற்கு ஈடாக பல ஒட்டகங்களும்,பெரும் பணமும் தருவதாகச் சொன்னான்.எனினும் மாமுன் அதற்கு இணங்க வில்லை.எப்படியாவது அந்தக் குதிரையை அடைய வேண்டும் என்று ஓமா முடிவு செய்தான்.மாமுன் குதிரையில் வரும் பாதையில் அவன் அழுக்கு உடைகளுடன் குப்புற விழுந்து கிடந்தான்.அந்த வழியாக வந்த மாமுன்,இரக்கப்பட்டு அவனைத் தூக்கினார்.ஓமா,'அய்யா,நான் பல நாள் பட்டினி.நிற்கக் கூட முடியவில்லை.'என்றான்.மாமுன் அவனைத் தூக்கி குதிரையின் மீது உட்கார வைத்தார்.மறுகணமே குதிரையில் பறந்தான்,ஓமா. திகைத்துப்போனகலிபா சட்டென்று சுதாகரித்துக் கொண்டார்.அவர்,''நில்.ஒரு கணம் நில்.நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப்போ.''என்றார் உரத்த குரலில்.குதிரையில் சென்றுகொண்டே ஓமா என்னவென்று கேட்டான்.''உனக்கு இந்த குதிரை எப்படிக் கிடைத்தது என்று எவரிடமும் சொல்லாதே.அப்படி நீ சொன்னால்,ஒரு வேலை உண்மையாகவே யாராவது உடல் நலமின்றி சாலையோரம் விழுந்து கிடந்தால் கூட மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய அஞ்சுவார்கள்.''என்றார் அல் மாமுன்.
தனது குதிரை தன்னை ஏமாற்றிக் களவாடப்பட்டது என்பதைப் பற்றிக்கூட மாமுன் கலங்கவில்லை.மக்களிடையே இதுபோன்ற செய்தி பரவினால்,மற்றவர்களுக்கு உதவு செய்பவர்களும் செய்யாமல்போய்விடக்கூடுமே என்று தான் வருந்தினார்.
----சூபி கதை.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment