ஜேம்சும் வில்லியம்சும் நண்பர்கள்.ஒருநாள் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சிறு மன வருத்தத்தில் ஜேம்ஸ் வில்லியம்சைக் கன்னத்தில் அறைந்து விட்டான்.இதனால் வருத்தமடைந்த வில்லியம்ஸ்,''எனது உயிருக்குயிரான நண்பன் என்னைக் கன்னத்தில் அடித்து விட்டான்,''என்று கடல் மணலில் எழுதினான்.பின்னர் இருவருக்கும் சமாதானமேற்பட்டது.கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு பெரிய அலையில் வில்லியம்ஸ் கடல் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டான்.உடனே ஜேம்ஸ் கடலில் குதித்து நண்பனைக் காப்பாற்றினான்.வில்லியம்ஸ் அவனுக்கு நன்றி தெரிவித்து பக்கத்திலிருந்த பாறையில்''எனது சிறந்த நண்பன் எனது உயிரைக் காப்பாற்றினான்.''என்று எழுதினான்.ஜேம்ஸ் கேட்டான்,''நான் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதினாய்.ஆனால் உன்னைக் காப்பாற்றியதைக் கல்லில் எழுதுகிறாயே?என்ன காரணம்?''வில்லியம்ஸ் சொன்னான்,''யாராவது உன்னைப் புண்படுத்தினால் அதை மணலில் எழுத்து.ஏனெனில் சிறிது நேரத்தில் அது அழிந்து விடும்.யாராவது நல்ல காரியம் செய்தால் அதைக் கல்லில் எழுத்து.அது என்றும் அழியாது இருக்கும்.''
பொதுவாக நாம் இதற்கு நேர் மாறாகத்தான் செய்கிறோம்.மக்கள் நல்ல காரியத்தை மணலில் எழுதினாற்போல மறந்துவிடுகிறார்கள்.ஆனால் ஒரு கெட்ட செயலுக்கு மாலை போட்டு மனப்புண் ஆறாமல் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment