courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, February 26, 2011
பொய்யன்
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.
Labels:
சிரிக்க சிந்திக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment