Saturday, February 26, 2011

சிரிப்பே மருந்து

''அந்த வெள்ளாட்டுடன் எங்கே போகிறாய் தம்பி?''என்று கேட்டான் போலீஸ்காரன்.
'இதை வளர்க்க வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன்,'என்றான் பையன்.
''வீட்டிலா?''
'ஆமாம்'
''நாத்தமடிக்குமே/''
'அதனாலென்ன?நாத்தத்தைப் பற்றியெல்லாம் ஆடு கவலைப்படாது.'
**********
''காலம் சென்ற என் மனைவி உண்மையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க  பெண்மணிதான்.''என்று ஒரு பூங்கா பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு,ஒரு வயதானவன்,தன் நீண்ட நாள் நண்பனிடம் சொல்லிக்  கொண்டிருந்தான்.மேலும் அவன் சொன்னான்,''மிகவும் மதப்பற்றுள்ள பெண் அவள்.ஒரு நாள் கூடக் கோவிலுக்குப் போகத் தவறியதில்லை.வீட்டிலும் காலை முதல் இரவு வரை ஒரே பஜனையும்,சங்கீதமும்தான்.''
'அப்படிப்பட்ட நல்ல பெண் எப்படி இறந்து போனார்கள்?'நண்பன் கேட்டான்.
''கழுத்தை நெறித்தே கொன்று விட்டேன்,''என்றான் அந்த வயோதிகன்.
**********
சாலையில் தன் நடுவயதான  மனைவியுடன் சென்று கொண்டிருந்த
கணவன்,அவளிடம் சொன்னான்,''அந்த அழகிய இள மங்கை என்னைப் பார்த்து புன்னகைப்பதைப் பார்த்தாயா?''
மனைவி சொன்னாள்,''இது என்ன பிரம்மாதம்?முதல் தடவை நான் உங்களைப் பார்த்தபோது வாய் விட்டே சிரித்தேனே!''
**********
ஒரு பெண் மருத்துவமனையில் உள்ள விசாரணைப் பகுதிக்கு சென்று கேட்டாள்,''கண்டைனர் லாரியில் அடிபட்ட என் கணவர் எந்த வார்டில் இருக்கிறார்?''அங்கிருந்தவன் சொன்னான்,''அவர் 256,257,258 வார்டுகளில் இருக்கிறார்.''
**********
ஒரு நாய் மூன்று பேருடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை வியப்புடன் கவனித்த ஒருவன் நாயின் திறமையைப் பாராட்டினான். நாயின் சொந்தக்காரர் சொன்னார்,''அதற்கு அவ்வளவு திறமை கிடையாது,''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்  சொன்னார்,''நல்ல சீட்டு அதற்கு வரும்போதெல்லாம் அது தன் வாலை ஆட்டி விடுகிறது.''
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment