**********
குழந்தைகள்எதைக்கண்டாலும்குதூகலப்படுகின்றனர்.பரவசமடைகின்றனர். காரணம்,அவர்களின் மனதில்எதைப் பற்றிய கற்பனைகளும் இல்லை.அவர்கள் நிஜத்தை நேரிடையாக எதிர் கொள்கின்றனர்.நாம் ஒன்றைப் பற்றிக் கேள்விப்படும்போதே,நமது மனம் அது பற்றி அதீதக் கற்பனைகள் செய்யத் துவங்கி விடுகிறது.அதனால்,அதன் பின்னர் நேரில் பார்க்கும்போது அது எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும்,நம் மனதால், நிறைவை அடைய முடிவதில்லை.
**********
பணம்,பொருள்,புகழ்,இவற்றை அடையும் வேட்டை,ஆயுள் முழுவதும் தொடர்கிறது.ஆனால் இவற்றை அடையும் வரை இருந்த வேகம்,அடைந்தபின் அவனிடம் வடிந்துபோய்,அப்படி அடைந்தவற்றின் மீது ஒரு சலிப்பு கூட ஏற்படுகிறது.
**********
ஞானம் பெற்றபலரும் ஆலயங்களிலோ,வழிபாட்டுத் தளங்களிலோ,அன்றாடம் தொழும் பக்திமானாக இருந்தது இல்லை.ஆலயப்பணி,இறைவன்தொண்டு என்றெல்லாம் ஈடுபடும் பலரிடம் உள்ளூர ஊடுருவிப் பார்த்தால்,அகந்தை கொப்பளிக்கக் காணலாம். தாங்கள் புனிதமானவர்கள் என்ற செருக்கு இவர்களுடன் சேர்ந்து கொண்டு விடுகிறது.இயற்கை என்றுமே மனிதனின் புறச் சூழ்நிலைகளைப் பார்ப்பதில்லை.அவன் மனதை மட்டுமே பார்க்கிறது.
**********
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment