Monday, February 28, 2011

சிறந்த அறிவுரை

ஒரு ஞானி ஒரு அரசனிடம்,''நீ ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தால் நான் ஒரு சிறந்த அறிவுரை தருவேன்,''என்றார்.அரசனும் பொற்காசுகளைக் கொடுக்க ,ஞானி சொன்னார்,''எந்த ஒரு செயலையும் ,அதன் முடிவு என்னவாயிருக்கும் என்று யோசிக்கும் முன் செய்யாதே,''அரசருடன் இருந்தவர்கள் அனைவரும் இந்த சாதாரண அறிவுரைக்கா ஆயிரம் பொற்காசுகள் என்று கூறி நகைத்தனர்.அரசனோ,''இதில் சிரிக்கஒன்றுமில்லை.எதையும் யோசித்து செய்ய வேண்டும் என்கிறார் ஆனால் தினசரி வாழ்வில் நாம் நிறைய விசயங்ககளை அதன் விளைவு என்னவென்று யோசிக்காமல் செய்து அவதியுறுகிறோம்.எனக்கு இந்த அறிவுரை மிகவும் பிடித்துள்ளது,''என்றார். அதனால் அரசர் பல இடங்களில் ஞானி சொன்ன வாசகங்களை எழுதி வைக்க ஏற்பாடு செய்தார்.
சில மாதங்களுக்குப்பின் ஒரு சதிகாரன் அரசனைக் கொல்லத் திட்டமிட்டான். அவன் அரச வைத்தியனுக்கு லஞ்சம் கொடுத்துஅரசனுக்கு அவன் ஒரு விஷ ஊசி போட ஏற்பாடு செய்தான்.வைத்தியனும் அரசனுக்கு விஷ ஊசியை போடப்போகும்போது அந்த அறையில் எழுதப்பட்டிருந்த ஞானியின் அறிவுரை கண்ணில் பட்டதால் அதைப் படித்தான்.உடனே அவன் யோசனை  செய்தான்,''நான் இக்காரியத்தை செய்தால் பின் விளைவு என்னவாகும்?சதிகாரன் மன்னன் ஆனால் ரகசியம் வெளியே போகக் கூடாது என்பதற்காக என்னைக் கொல்லலாம்.''அவனுடைய தடுமாற்றத்தைக் கவனித்த அரசன் என்னவென்று கேட்டார்.உடனே வைத்தியன் நடந்த உண்மை அனைத்தையும் சொல்லி விட்டான்.சதிகாரன் உடனே பிடிக்கப்பட்டான்.அரசன் உடனே முன்னால் ஞானியின் அறிவுரையைக் கேலி செய்த அனைவரையும் அழைத்து கேட்டான்,''நீங்கள் இப்போது ஞானியின் ஆலோசனை குறித்து கேலி செய்வீர்களா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment