கேப்டன்: பயமா?எனக்கா? என் தந்தை ,என் பாட்டனார் அனைவரும் கடலில்தான் இறந்தார்கள்.
பயணி:உன் குடும்பத்துக்கு சாவைக் கொடுத்த இந்தக் கடலைப் பார்த்து உனக்கு பயமில்லையா?
கேப்டன்:எதற்காகப் பயப்பட வேண்டும்.எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே?உன் தந்தைஎங்கு இறந்தார்?
பயணி: என் தந்தை படுக்கையில் தான் இறந்தார்.
கேப்டன்:அப்படியானால் உனக்கு படுக்கையைப் பார்த்தால் பயம் இல்லையா?
பயணி: இல்லை.படுக்கை பாதுகாப்பான இடமாயிற்றே.
கேப்டன்:இருக்கலாம்.கடவுள் இல்லாத இடமே கிடையாது.அவர் அருள் கடலிலும் இருக்கலாம்;படுக்கையிலும் இருக்கலாம்.உன் தந்தை படுக்கையில் இறந்தும் கூட உனக்கு படுக்கையைப் பார்த்து பயமில்லை என்றால் எனக்கு ஏன் கடலைப் பார்த்து பயம் ஏற்படப் போகிறது?
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment