`சாமுத்திரிகா லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடி யவை என்று நம்பப் படுவதுண்டு. அந்த வகையில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர் டாக்டர் பிரேம் குப்தா. இவர் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்... பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச் சீராக நீளும் கச்சிதமான மூக்கு இது. நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத் தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர். இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும். இந்த மூக்கு, உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும். பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும். உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள். மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இந்த மூக்கு பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதி யில் அகன்றும் இருக்கும்.
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு இது.
வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு இது.
நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு இது. மூக்கு நுனி வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது
நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு இது. நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.
YOGANANDHAN GANESAN |
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment