courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, February 28, 2011
தகப்பன்
ஜென் மாஸ்டர் ஹாக்யுன் அவர்களினால் கவரப்பட்ட ஒரு வியாபாரி அவருக்கு அவ்வப்போது நிதிஉதவிகளையும் பரிசுகளையும் கேட்காமலே கொடுத்து வந்தான்.அவனுக்கு ஒரு பெண் இருந்தாள்.அவள் அவ்வீட்டு வேலைக்காரனை குடும்பத்தினருக்குத் தெரியாமல் காதலித்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள்.குழந்தையின் தகப்பன் யார் என்று கோபத்துடன் வியாபாரி கேட்டபோது பயந்துபோன அந்தப்பெண் ஹாக்யுனைக் கை காட்டிவிட்டாள்.அதிர்ந்துபோன வியாபாரி,கோபத்துடன் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு ஹாக்யுனிடம் சென்று அவரை எவ்வளவு தரக்குறைவாகப் பேசமுடியுமோ,அவ்வளவு பேசிவிட்டு,குழந்தையை அவர் மடியில் விட்டுவிட்டு வந்துவிட்டான்.ஹாக்யுன் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை.பதில் எதுவும் பேசவுமில்லை.அவர் அந்தக் குழந்தையை எடுத்து தன குழந்தைபோலவே கொஞ்சினார்.இதைப் பார்த்த ஊர் மக்களும் ஹாக்யுன் தவறு செய்திருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.இப்போது ஊரில் யாரும் அவரை மதிப்பதில்லை ஆனால்அது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஒரு நாள் கடுங்குளிரில் குழந்தையைத் தோளில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று உணவுக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.அவர் அந்த வியாபாரியின் வீட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது இக்காட்சியை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த வியாபாரியின் மகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.உடனே தன தந்தையிடம் சென்று நடந்த உண்மைகளை அப்படியே சொல்லிவிட்டாள்.வியாபாரிக்கோ மிகுந்த வருத்தம் ஏற்பட்டது ஒன்றும் அறியாத ஒரு ஞானியை அவதூறுக்கு உள்ளாக்கி விட்டோமே என்று கதறினான்.நேரே அவர் இருக்கும் இடம் சென்று அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து,குழந்தையை அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டான்.ஹாக்யுன் கேட்டார்,''என்ன,குழந்தைக்கு வேறொரு தகப்பன் கிடைத்து விட்டானா?''
Labels:
ஜென் கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment