Monday, February 28, 2011

அசுத்தம்

முகம்மது நபிகள் ஒரு நாள் காலை ,பிரார்த்தனை செய்ய ஒரு வாலிபனையும்  அழைத்து சென்றார்.அவன் இதுவரை மசூதிக்கு சென்றதில்லை.திரும்பி வரும்போது,தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் குறிப்பிட்டு,''நாயகமே,இந்த  பாவிகளைப் பாருங்கள்.இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இது பிரார்த்தனைக்கு செல்ல வேண்டிய நேரம் இல்லையா?''என்றான்.உடனே முகம்மது ஆகாயத்தை நோக்கி ,''மிகவும் வருத்தப்படுகிறேன்,''என்றார்.அவர் யாரிடம் வருத்தம் தெரிவித்தார் என்று அந்த இளைஞன் கேட்டான்.அதற்கு நபிகள்,''இன்று ஒரு நாள் பிரார்த்தனை பண்ணி விட்டதால் உன்னையே ஒரு ஞானி போலவும் மற்றவர்களெல்லாம் பாவிகள் எனவும் கருதிக் கொண்டு விட்டாய்.உன்னை என்னோடு அழைத்து சென்றதால் என் பிரார்த்தனை அசுத்தமாகி விட்டது.ஆகவே நான் அதற்காக கடவுளிடம் வருத்தம் தெரிவித்தேன்.நான் மறுபடியும் மசூதிக்கு செல்ல வேண்டும்.என்னுடன் நீ வராதே,''என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment