courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, February 28, 2011
களைப்பு
ஜென் மாஸ்டர் ஹாக்யுன் ஒரு முறை இரண்டு சாதுக்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.முதலில் ஒரு சாது தான் சுமந்து வந்த சுமையை ஹாக்யுனைக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டார்.அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை தன சுமையுடன் சேர்த்து சுமந்து வந்தார்.ஆனால் அவர் முகத்திலிருந்த மலர்ச்சி கொஞ்சமும் குறையவில்லை.அவர் உல்லாசமாக வருவதைப் பார்த்தஇன்னொரு சாதுவும் தனக்கு உடல் நலம் இல்லாதிருப்பதாகவும் தன்னுடைய சுமையையும் அவர் எடுத்து வர வேண்டும் என்று வேண்டினார்.இப்போதும் ஹாக்யுன் மறுப்பேதுமின்றி அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சுமந்து வந்தார்.மூன்று பெரும் தொடர்ந்து பயணிக்கையில்,வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டதால் அவர்கள் படகில் செல்ல நேர்ந்தது.படகில் ஏறியதும் களைப்பு மிகுதியால் அவர் உடனேஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். திரும்ப அவர் விழித்தபோதுஉடனடியாக அவருக்கு பயணத்தைப் பற்றிய ஞாபகம் வரவில்லை. ஒரு துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து,சுற்றிலும் பார்க்கையில்,உடன் வந்த இரு துறவிகளும்,படகோட்டியும்,முழுக்க வாந்தி எடுத்த நிலையில் இருந்தனர் அவர்கள் இவரை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.பின்னர்தான் அவர் நடந்தது என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்.அவர் தூங்கிய சிறிது நேரத்தில் ஒரு பெரும் புயல் வந்து படகைப் பயங்கரமாக ஆட்டியுள்ளது. அதன் பாதிப்பால் தாங்க முடியாத அளவிற்கு படகோட்டியும் இரு சாதுக்களும் வாந்தி எடுத்து உடல் நலம் பாதிக்கப் பட்டனர்.ஆனால் ஹாக்யுன் மிகுந்த களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .
Labels:
ஜென் கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment