மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில் தான் இருக்கிறது.எல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச்செய்து கொண்டே போனால்,எந்த மகிழ்ச்சியும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது.ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ அது மாதிரி திருப்தியற்ற மனம் உடையவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி வந்தாலும் அது தங்காது.அவர்களின் மனம் சோக மயமாகவே இருக்கும்.தன்னிடம் இல்லாததை நினைத்தேதுன்பப்படும்.வாளியில் உள்ள ஓட்டையை அடைத்து விட்டால் தண்ணீர் ஊற்றியதும் நிரம்பி விடுவதுபோல மனதில் இருக்கும் கரும் புள்ளிகளை அழித்து விட்டால் மகிழ்ச்சி நிரம்பும்.''இது கிடைத்தால் தான் என் மனம் மகிழ்ச்சி அடையும்,''என்று மண்டைக்குள் சில விஷயங்களை நம் மனது ஏற்றிக் கொள்கிறது.அவைதான் மனதின் கரும்புள்ளிகள்.
--சுவாமி சுகபோதானந்தா.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment