Sunday, March 13, 2011

பழமொழிகள்

உலகப் பழமொழிகள்


* துன்ப‌ப் பற‌வைக‌ள் உன் த‌லைக்கு மேலே வ‌ந்து வ‌ட்ட‌மிடுவ‌தை நீ த‌விர்க்க‌ முடியாது. ஆனால் அவை உன் கூந்த‌லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம‌ல் த‌டுக்க‌ முடியும்.
- சீன‌ப் ப‌ழ‌மொழி.

* இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.- கொரியா.

* வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.- டச்சுப் பழமொழி.

* தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.-பிரான்ஸ்.

* மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும். -இங்கிலாந்து.


* இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும். - ரஷ்யா.


* கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி. -ஜெர்மன்.


* அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.- ஜெர்மனி.


* பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது. -இத்தாலி.


* ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் -யூகோஸ்லோவியா.

*அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம்.

*அடக்கமே பெண்ணுக்கு அழகு.

*அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

*அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம்.

*அழையாத வீட்டுக்கு விருந்தாளி போகாதே.

*அரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது.

*ஆரிய‌க் கூத்தாடினாலும் காரியத்தில் க‌ண்வை.

*ஆப‌த்தும் ச‌ம்ப‌த்தும் யாருக்கும் உண்டு.

* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.

* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.

*தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.

*நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.

* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.

* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.

*கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.

* ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.

* ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.

* நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.

* திருப்தியான பறவையும் பசி மிகுந்த பறவையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியாது.

* நிலம் சூடாக இருக்கும்போது புழு மண்ணிலேயே இருந்து விடுகிறது.

* மிக மிக வேகமாக ஓடு. நீ இருமுறை ஓடுவாய்.

*மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மன சாட்சி.

* தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம். மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்.

*குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.

*அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!

* நல்ல உரையாடல் நல்ல படுக்கையைவிட மேலானது.

* ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.

* பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம் அவர்கள் விற்பனைக்கு உரிய பொருள்கள்.

* பெண் குழந்தைகள் உன் முழங்கால் அளவிற்கு வளர்ந்து விட்டால் அவர்களின் சீதனப் பெட்டிகள் மார்பு அளவு இருக்க வேண்டும்.

* தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.

*உடல் சிறைபட்டுக் கிடந்தாலும் குறைந்த பட்சம் மனம் சுதந்திரமாக இருக்கிறது.

*மனிதனுக்குச் சிறந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணால் கிடைக்கின்றன.

*முள்ளின் மேலிருந்து பாடினாலும் மலர் மீதிருந்து பாடினாலும் குயில் இன்மையாகவே பாடுகிறது.

* நீ ஒரு நாட்டில் நுழையும்போது அங்கு விலக்கப்பட்டவைகள் என்னவென்று விசாரித்துக்கொள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment