Sunday, March 13, 2011

டிப்ஸ் டிப்ஸ்



எனக்கு தெரிந்த நான் செய்யும் டிப்ஸ்!!!!

1. சாவிக் கொத்தில் நாம் அடிக்கடி பயன் படுத்தும் சாவியில் நெயில் பாலிஷ் சிறிது தடவினால் பளிச்சென்று நமக்கு தெரியும். அவசரத்தில் தடுமாற வேண்டாம்.

2. ஊசியில் நூலை கோப்பது பேரும் பாடு. அதை தவிர்க்க நூல் நுனியை சோப்பு கட்டியில் அழுத்தி எடுத்தால் நூல் ஈசியாக ஊசியில் நுழையும். சேய்து பாருங்கோ.

3. நாம் எழுமிச்சை பழத்தை பிழிந்து அந்த தோலை தூக்கி எரியாமல் அதை எடுத்து குளிர் சாதன பெட்டியில் வைத்தால் அதில் ஏற்ப்படும் கெட்ட வாடை நீங்கிவிடும்..

4. மழைக்காலத்தில் ஒரு சில நேரத்தில் பாசி பிடித்து விடும். அதை அக‌ற்ற‌ அந்த‌ இட‌த்தில் சிறிது க‌ல் கோல‌மாவை தூவுங்க‌ள். பிற‌கு பிர‌ஷ்ஷால் தேயித்தால் ப‌ளிச்சுன்னு ஆகிடும்.

5. ரோஜாச் செடியில் வாழைப்ப‌ழ‌த் தோலை ந‌றுக்கிப் போட்டால் செடியும் ந‌ன்றாக‌ வ‌ள‌ரும். பூக்க‌ள் உங்க‌லை பார்த்து சிரித்து உங்க‌லுக்கு ந‌ன்றி சொல்லும்.

6. மிக்ஸியை விட‌ கிரைண்ட‌ரை அதிக‌ம் உபயோகித்தால் க‌ர‌ண்ட்டு மிச்ச‌ம். மிக்ஸியீ அதிக‌ம் க‌ர‌ண்டை ஈழுக்கும்.

7. முருங்கை ம‌ர‌த்தைக் வீட்டின் கொல்லைப் புற‌த்தில் வைப்ப‌தை விட‌ வீட்டில் முன் புற‌ம் வைத்தால் ம‌ர‌ம் செழிப்ப‌க‌ வ‌ள‌ரும். அதிக‌ம் காய்க்கும். ஏனெனில் அங்குதான் வண்டி சொல்லுகிரது. அதனால் ஏற்ப்படும் நில அதிரிவுர் தான் காரணம்.

8. கமலா ஆரஞ்சு பழம் மேல் தோல் சொர சொரப்பாக பார்த்து வாங்கனும்.

9. சாத்துக்குடி தோல் வழுவழுப்பாக இருக்கும்படி பாத்து வாங்கனும்.

10. நாம் கோலம் போட்டு கலர் போடும் முன்பு மைதாவை கஞ்சி போல் ( கன்சி வைத்து ) செய்து கலர் தூவும் இடத்தில் பஞ்சியால் தேய்த்து பின்பு தூவினால் காற்றிலும் பறக்கது. சீக்கிரத்தில் அழியாது.

11. கிருஷ்ண ஜெயந்தில் கண்ணன் கால் போடும் போது தரை வெள்ளையாக இருந்தால் பளிச்சுன்னு தெரியாது. அதனால் அரிசி மாவில் கொஞ்சம் மைதா மாவு, கேசரி பவுடர் போட்டு கலந்து கால் வைத்தால் பளிச்சுன்னும் இருக்கும். அழகு கொஞ்சும். சீக்கிரம் அழியவும் அழியாது.

12. நோயாளிக்குப் பயன்படும் வெந்நீர்ப் பையிலொ சிறிது உப்பு சேர்த்தால் அதிக நேரம் வெந்நீர் சூடு குறையாது.

13. டிஷ்யூ பேப்பரில் மூக்கு கண்ணாடியைத் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.

14. ஒருசிலர் அஜினோமோட்டோ என்ற உப்பு அதிகம் சேர்க்கின்றனர். அது உடலுக்கு நல்லது இல்லை. அதை சேர்ப்பதால் நரம்பு சம்மதமான நோய்கள் வருகிற‌து என்று கண்டரிய பட்டு உள்ளது. அதனால் குறைவாக உபயோகிக்கவும்.

15. வெள்ளி பாத்திரம் அல்லது ஆபரணம் வைக்கும் கவர் அல்லது பெட்டியில் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி கறுப்பாகாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment