Sunday, March 13, 2011

கல்யாண முருங்கைத் தோசை

கல்யாண முருங்கை

இந்த இலையை சில ஊர்களில் முள்முருங்கை என்றும் சொல்லுவார்கள். இவை கொஞ்சம் கசப்பு சுவை கொண்டது.
சளியை முறித்து வெளியேற்றி நுரையீரலைப் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளது.
பெரியவர், சிறுவர் இருவரும் சாப்பிடலாம். சிறுவர்களுக்கு வெல்லம் சேர்த்து செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆய்ந்த இலைகள் - 20

பச்சரிசி மாவு - 250 கிராம்

மலைப்பூண்டு - 6 பல்

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய்ப் பூ - 4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:


1, பூண்டை மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.
2, பச்சை மிளகாய், முருங்கை இலையுடன் சேர்த்து மைய அரைக்கவும்.
3, ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சீரகத்தூள், மிளகு தூள், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
4, அதிலே அரைத்த விழுது, பூண்டு எல்லாம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து,
5, அடுப்பில் தோசை கல் வைத்து தோசை ஊற்றவும்....

குறிப்பு:
எண்ணெய் வேண்டும் எனில் ஊற்றிக் கொள்ள‌வும்...

இவை "பலவகை நோய்களை விரட்டும் பச்சிலை சமையல்" என்ற நூலில் இருந்து எடுத்தது.

ஆசிரியர்; கந்தர்வகோட்டை ராஜேந்திரன்.
பதிப்பாசிரியர்; இராம.சீனிவாசன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment