காடைக்கண்ணி (ஓட்ஸ்)






காடைக்கண்ணி (ஓட்ஸ்) தானியம்

நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம். இதன் தானியம் ஓட்ஸ். இதன் தாவரவியல் பெயர் அவைனா சடைவா(Avina sativa).
இதில் மதம் (Gluten) கிடையாது. ஆகையால் பாண் (ரொட்டி) தயாரிப்பது இயலாதது. ஆனால் ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி (Oatmeal Porridge) ஓர் ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது.

ஓட்ஸ் ஈரட்டி (OAT COOKIES) ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இது கொழுப்புச்சத்து குறைவானது.ஓட்ஸின் பாரம்பரிய தமிழ் சொல் "காடைக்கண்ணி" ஆகும்.
நன்றி தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)
1. ஓட்ஸ் பீற்ற குளுக்கான்கள் ஓரளவு நீரில் கரைய கூடியதாக இருப்பதால் உடல் கொலஸ்திரோலை குறைக்கும், இதய நோய்களை குறைக்கவும் உதவுகிரது.
2. மாவு பொருட்கள், இனிப்பு சம்மந்தமான பொருட்கள் உண்டதும் உடலில் ஏற்படும் கிளைக்காமிக் விளைவை (Glycaemic response)பீற்றா குளுக்கான்கள் குறைக்கிறன. நீரிழிவு நோய் இருப்பவர்கள் ( டைப் 1, டைப் 2 ) சர்க்கரை வகை 2 வியாதி உள்ளவர்களுக்கு இது சிறப்பான ஒரு தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.
3. ஓட்ஸ் காலை உணவாக எடுத்து கொண்டால் சீக்கிரம் பசிக்காது. இதனால் அதிகம் உண்ணாமல் உடல் எடை கூடாது.
4. வைட்டமின் ‘இ’ மற்றும் ‘பி’ காம்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீஷியம் போன்ற தாது உப்புகளும், தமனிகளின் சுவர்களை வலுப்படுத்தும் சிலிக்கான் என்னும் தாதும் நிறைந்து காணப்படுகிறது.
5. இருதயத்திற்கு ஓட்ஸ் லேசான பலமூட்டியாக உள்ளது. கொலஸ்டிராலை கட்டுப்படுத்துகிறது. மூளைக்கும், நரம்புக்கும் ஊட்டம் தருவதால் நல்ல தூக்கம் தரக்கூடியது.
6. இதில் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ‘பி’யும், தாது உப்புக்கள், பொட்டாசியம், பாஸ்பரசும் உள்ளன.
7. ஆங்கிலேயர்கள் அந்த காலத்தில் ஓட்சை குதிரைக்கு உணவாக வழங்கினார்களாம். இதில் இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் வைட்டமின் தாதுக்களால் கால்நடைகள் மிகவும் வனப்பாக வளர்க்கப்பட்டன.
உடல் அழகுக்கும் ஓட்ஸ் மிகவும் நல்லது.
எனக்கு தெரிந்த சில இதோ...
9. ஓட்ஸ்சில் இருக்கும் வைட்டமின் ‘இ’ சத்து சருமத்திற்கு நல்லது.
10. ஓட்ஸ் மீலை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.
11. ஓட்ஸ் என்பது ஜவ்வரிசியைப் போல அரிசி வகையைச் சேர்ந்த ஒரு தானியம். இதில், துரித செரிமானத்திற்கு உதவும் ‘ஃபைபர்’என்ற நார்ச்சத்து உள்ளது.
*
12. எழுந்து நடமாட முடியாமல், வேலை பார்க்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு சாப்பிடும் உணவுப் பொருட்கள் எளிதில் ஜீரணமாகாது.
*
13. ‘ஓட்ஸ்’ ஜீரணத்திற்கு உதவியாவதோடு, வயிற்றைச் சுத்தமாக்கிவிடும். தவிர உடல் வலுப்பெற தேவையான சத்துக்களும் உள்ளன.
*
14. கேன்சர் நோயாளிகள், சீறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஓட்ஸ் கஞ்சிக் குடிப்பது நல்லது.
*
15. பால், சர்க்கரை சேர்த்தும் பருகலாம். கூடுதல் சுவையுடன் இருக்கும்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment