உலகத்தில் அதிசயங்கள் நமக்கு தெரியாமல் நிறையவே உள்ளது...
அவற்றைத் தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் வாருங்கள்...
இவை தினமலர் சிறுவர் மலரில் 2007, ஜனவரி 26ம் தேதி அன்று வெளிவந்தது....எனக்கு இது மிகவும் பிடித்த அறிவு பூர்வமாண விசயமாக இருந்தது....
அவை இதோ
அதிசயங்களின் அணிவகுப்பு!
புதிய 7 உலக அதிசயங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்டர் நெட்டில் நடந்தது. 200 இடங்களில் தொடங்கிய இந்த தேர்தல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற பல இடங்களை தள்ளி, கடைசி 21 இடங்களில் நின்ற அதிசய இடங்களின் தகவல்கள் இதோ.
அக்ரொபொலிஸ்:
உலக நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் கிரேக்க நாட்டின் பழமையான கட்டிடம் இது.புனிதப் பாறை என கிரேக்கர்கள் கருதும் ஒரு பாறை மீது கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் யுனெஸ்கோவின் சின்னத்திலும் இடம் பெற்றுள்ளது.
ஆலம்பரா:
ஸ்பெயின் நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா இடமாகக் கருதப்படும் இந்தக் கோட்டை 9ம் நூற்றாண்டின் மூர் வம்ச மன்னனான முகமதின் அரண்மனையாக இருந்தது.
13 ஹெக்டேர் நிலப்பரப்பில், உலகின் ஒட்டு மொத்த கலை அழகையும் நிரப்பி இந்த அரண்மனையை உருவாக்கியுள்ளார் மூர் முகமது.
அங்கோர் வாட்:
ஆதிகாலத்தில் இந்தியாவிற்கும் கம்போடியாவிற்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாம்... அந்த உறவுக்கு இன்றுள்ள ஒரே சாட்சி இந்தோனேஷியாவில் உள்ள அங்கோர்வாட் தான்.இந்த கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களை விட அழகு வாய்ந்தவை.
சிசென் இட்சா:
நம்ம ஊர் காஞ்சிபுரத்தை போல மெக்சிகோவின் புகழ்பெற்ற கோயில் நகரம் இது.எகிப்து பிரமிடுகளுக்கு இணையாக குகுல்கன் பிரமிட், ஆயிரம் கால் மண்டபம், பிரமாண்ட விளையாட்டரங்கம் ஆகியவற்றை கொண்ட பழங்கால கலைப் பொக்கிஷம் இது.
மாச்சு பிச்சு:
" மேகங்கள் உரசும் நகரம் " என்று இதை பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம்.பெரு நாட்டில் உள்ள ஒரு பிரமாண்ட மலையில் மீது 15 ஏக்கர் பரப்பளவில் இந்த மலை நகரம் அமைக்கப்படுள்ளது.
15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டாலும் 1911ம் ஆண்டில் ஹிராம் பிஸ்ஹாம் என்பவரால் தான் இந்த மலைநகரம் உலக மக்களுக்கு தெரியவந்தது.
கிறிஸ்ட் ரிடீமர்:
கால்பந்துக்கு இணையாக பிரேசிலில் புகழ்பெற்ற மற்றோரு விஷயம் இங்குள்ள கிறிஸ்து சிலை.இரு கைகளை விரித்து 38 மீட்டர் உயரத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்த சிலை ரியோ டீ ஜெனிரோவின் அழகுக்கு வைரக் கீரீடம்.
கியோமிசு ஆலயம்:
ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரம், அரண்மனைகளுக்கும் ஆலயங்களுக்கும் பெயர் பெற்றது.
அதிலும் அரண்மனையை ஒட்டியுள்ள கியோமிசு ஆலயம் அலாதியானது.
ஜப்பானிய கலைநயத்தின் புகழ் சொல்வதாய் விளங்குகிறது.
இதன் முக்கிய பகுதிகள் தங்க தகடுகளால் வேயப்பட்டுள்ளமை, இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
ஈஸ்டர் ஜலண்ட் சிலைகள்:
சிலி நாட்டில் உள்ள ஈஸ்டர் தீவுகளில் ஜேக்கப் ராகோவின் என்பவரால் 1722ல் இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டவை.இந்த சிலைகள், சராசரியாக 25 மீட்டர் உயரமுள்ளவை. மிக அழகானவை. ஆனால், யாருடையது என்று மட்டும் தெரியவில்லை.
ஹசியா சோபியா:
6ம் நூற்றாண்டின் துருக்கியை ஆண்ட ஜஸ்டினியன் என்ற மன்னன். தன் சக்தியையும், சாம்ராஜ்யத்தின் ஆற்றலையும் உணர்த்த கட்டிய மாளிகை தான் ஹசியா சோபியா.
பிற்காலத்தில் இந்த கட்டடத்தின் அமைப்பை பின்பற்றியே மசூதிகள் கட்டப்பட்டதாகச் சொல்கின்றனர். இப்போது இந்தக் கட்டடம் மியூசியமாக உள்ளது.
கிரம்ளின் மாளிகை:
செஞ்சதுக்கத்துக்குப் பின்னால், கம்பீரமாக நிற்கும் கிரம்ளின் மாளிகை, ஒரு காலத்தில் ஜார் மன்னர்களின் அரண்மனையாக இருந்தது.
இன்றைக்கு இது ரஷ்ய அதிபர்களின் அலுவலகம். காலம் மாறினாலும் ஆட்சி மாளிகையாகவே இருக்கிறது.
நியூக்வாஸ்டீன் கோட்டை:
19ம் நூற்றாண்டில் ஜெர்மனியை ஆண்ட லட்விக் என்ற மன்னனுக்கு மலை மீது ஒரு பிரமாண்ட கோட்டையை எழுப்பும் ஆசை வந்தது.
இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் இரும்புக் கரத்தால் மக்களை அடக்கி, இந்த கனவுக் கோட்டையைக் கட்டி முடித்தார்.
360 அறைகளை கொண்ட இந்த கோட்டையைக் கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆனதாம்.
சீனப் பெருஞ்சுவர்:
எதிரிகளின் தாக்குதலைத் தடுக்க, அரசர்கள் அன்று கட்டிய பெருஞ்சுவர், இன்றும் அந்நாட்டின் புகழை பாடுகின்றது.
நிலவில் இருந்து உலகைப் பார்த்தால், இந்த சுவர் மட்டும் தான் தெளிவாகத் தெரியும்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment