Sunday, March 13, 2011

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 2

மார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages)
மார்பகப் புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.

1. முதல் படி நிலை:-



முதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னமும் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2.5 செ.மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.


2. இரண்டாம் படி நிலை:-



அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

3. மூன்றாம் படி நிலை:-



பொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் பரவி உள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

4. நான்காம் படி நிலை:-


இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.


மீண்டும் வரும் புற்று நோய் (Recurrent Cancer)

மீண்டும் வரும் புற்றுநோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

அறுவை மருத்துவம் என்றால் என்ன?

கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனைச் சாலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள படிநிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறும். இந்த மருத்துவம் லோகல் அல்லது சிங்டமிக் முறையாக இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவங்களை பெறுவார். உங்கள் மருத்துவர் மருத்துவ திட்டத்தை உங்களுடன் கலந்து பேசுவார்.

மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது ?

மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கட்டியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயின் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்துவம் என்பது தனிப்பட்டது அல்லது முறைமையானது. ?? ஒன்றோ அல்லது பல இணைந்த மருத்துவத்தை ஒருவர் பெறலாம். உங்கள் மருத்துவ திட்டத்தைப்பற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கிக் கூறுவார்.


லோகல் மருத்துவம்:-

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழித்தலோ கட்டுப்படுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம், அதிரொலி பாய்ச்சும் மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

அறுவை மருத்துவம்:-

அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும். இந்த அறுவை மருத்துவத்தின் பயன்கள், சிக்கல்கள், எதிர்பார்க்கும் முடிவுகள் குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்குவார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment