கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும்.
*
பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.
*
1. பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.
*
2. கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
*
3. எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.
*
4. வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.
*
5. சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.
*
6. பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.
*
7. திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்.
*
8. நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
***
நன்றி indg.in
***
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment